சிதறல்கள்

தினதந்தி ஒரு இந்திய எதிர்ப்பு பத்திரிகை அதே நேரம் “தமிழகத்தை கெடுக்கும் பத்திரிகை” என எதற்காக சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான்

Image may contain: 3 people, people smiling
————————————————————————————————————————————–

டிரைவரை தன் கட்சியில் இருந்து நீக்கினார் தீபா

எவ்வளவு பெரும் முக்கிய முடிவு இது?, இதனால் என்னென்ன விளைவெல்லாம் ஏற்படும் என நினைத்தால் அச்சமாக இருக்கின்றது

இந்த விவகாரத்தால் பங்கு சந்தை சரிந்து மேலும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்காமல் இருக்கட்டும்

பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான்: தமிழிசை சௌந்தரராஜன்

ஆமாம் திமுக லெவல் அப்படித்தான், ஆனால் பாஜக அளாவிற்கு மசூதி இடிப்பது, அகில இந்திய கலவரங்களை நிகழ்த்துவது போன்றவற்றையா திமுக செய்ய முடியும்? முடியவே முடியாது

நான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பையினையே கொடுத்தவன், என் ஆட்சியில் இந்த பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியினை விட மோசமாகிவிட்டது.

யா அல்லாஹ், இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாதிகளை விட என் ஆட்சிக்கு அச்சுறுத்தலாகிவிட்டார்கள், அவர்களை மன்னிக்காதே

Image may contain: 1 person, standing
———————————————————————————————————————————–

ஒரத்தநாடு டாஸ்மாக்கில் ஓசி சரக்கு கேட்ட டிடிவி கட்சி ஒன்றிய செயலாளர் கைது.

இனி அக்கட்சி “ஓசிகுடி’ கட்சி என அழைக்கபடும்

————————————————————————————————————————————-

நல்ல மறவர் சாதியினர் இருந்தால் இந்த கருணாஸை அவர்களே அடித்து கட்டி வைத்திருப்ப்பார்கள்

ஆனால் பொதுநலமும், சமூக அமைதியும் விரும்பும் ஒரு மறவர் கூட தமிழகத்தில் இல்லை என்பதுதான் சோகம்

ஆனால் கருணாஸ் பேசியது ஒன்றும் புதிதல்ல, ” ராமராதபுரத்து மறத்திகள் எடுக்கும் பருத்தி, விருதுநகர் நாடாத்திகள் காதிலும் கழுத்திலும் தங்கமாக தொங்குகின்றது..” என்ற முத்துராமலிங்க தேவர் வார்த்தைகளின் தொடர்ச்சி அது

கருணாஸ் பேசியதற்காக ஆளாளுக்கு பொங்குகின்றார்கள், அவரை பிடித்து உள்ளே போட வேண்டும் என்றெல்லாம் சீறுகின்றார்கள்

இது ஒன்றும் தமிழகத்திற்கு புதிதல்ல, நாடார் சமூகத்திற்கும் புதிதல்ல‌

அன்று முத்துராமலிங்க தேவரே “சாணாபயலை முதல்வராக்குகும் அளவுக்கு நாடு கெட்டுவிட்டது, சாணன் புத்தி தெரியாதா? மாநிலம் உருப்படுமா?” என பகிரங்கமாக கேட்ட மாநிலம் இது

ஆனால் அவருக்கு குருபூஜை, கருணாசுக்கு செருப்படி

உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் – கருணாஸ் விளக்கம்

அது உணர்ச்சி வசம் அல்ல, கொழுப்பெடுத்து பேசிய திமிர் பேச்சு மிஸ்டர், அதை எல்லாம் வருத்தம் தெரிவித்து சமாளிக்க முடியாது

பிரதமர் ஆனாலும் இம்ரானின் கிரிக்கெட் வெறி போகாது

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் இன்னும் வெல்லாத பாகிஸ்தான் அதனை விட முக்கிய பதக்கத்தை பெற்றுவிட்டது

ஆம், இந்திய வாலிபால் அணியினை அது வென்றுவிட்டது. இதனால் பாகிஸ்தானியருக்கு ஏக மகிழ்ச்சி. ஆயிரம் தங்க பதக்கம் கூட இந்த மகிழ்ச்சியினை அவர்களுக்கு கொடுக்காது

இனி கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் எழக்கூடும்

அவர்களின் பிரதமர் சும்மா அல்ல, பயிற்சியாளராகவும் ஜொலித்தவர்

பாகிஸ்தானின் அன்வார் போன்றவர்களை திணறடித்ததற்காக வாக்கர் யூனுஸை அணிக்கு கொண்டுவந்தார், பின் அந்த வாக்கர் யூனிஸ் பந்தை அட்டகாசமாக நொறுக்கியதற்காக இன்சமாமினையும் உள்ளே கொண்டுவந்தார்

அப்படியான கிரிக்கெட் நுணுக்கம் தெரிந்தவர், இப்பொழுது பிரதமர்

என்னதான் பதவிக்கு வந்தாலும் ரத்தத்தில் கலந்தது மறக்குமா?

முதல்வர் ஆனாலும் கலைஞர் எழுதி குவிக்கவில்லையா? முதல்வர் பதவியிலும் ராமசந்திரனும், ஜெயாவும் அட்டகாசமாக நடிக்கவில்லையா

அப்படி பிரதமர் ஆனாலும் இம்ரானின் கிரிக்கெட் வெறி போகாது, அது பெரும் கிரிக்கெட் அணியினை உருவாக்கும் என்கின்றது பாகிஸ்தானின் கிரிக்கெட் செய்திகள்

இம்ரான் கான் – 2

Image may contain: 1 person

எனது தாயாரின் பெயரில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட மறுபடியும் அணிக்குள் வருகிறேன் என அவர் வந்து கொஞ்ச காலத்திலே அவரின் அன்னை பிரிந்தார், 1992 உலககோப்பை போட்டியும் வந்தது,

நல்ல அணியோடுதான் களமிறங்கினார், ஆனால் விட்ட இடத்தை பிடிக்க வெஸ்ட் இண்டீசும், சாம்பியன் ஆஸ்திரேலியாவும், பலமுறை இறுதிபோட்டிக்கு வந்து தவறாமல் கோப்பையை விட்ட இங்கிலாந்தும், வலிமையான தென் ஆபிரிக்கா மற்றும் மார்ட்டின்குரோவின் நியுசிலாந்து என பல அணிகளின் முன்னால் தொடக்கத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை.

ஒன்று மூக்கில் குத்தியது என்றால் அடுத்தது கன்னத்தில் அறைந்தது, இன்னொன்று வயிற்றிலே குத்தியது, தொடக்கத்தில் அடிவாங்கியது பாகிஸ்தான்.

ஆனால் அன்னையை வணங்கும் ஒருவனுக்கு எல்லா பாக்கியமும் கிடைக்குமல்லவா?, இம்ரானுக்கும் கிடைத்தது,

மழை மற்ற இன்னபிற உதவிகளில் அரையிறுதிக்கு வந்தது அணி, எதிரணி நியுசிலாந்து, ஏளனமாக பார்த்த குரோவ், எளிதாக ஜெயிக்கலாம் என எண்ணி ஆடாமல் இறுதிபோட்டிக்கு ஓய்வெடுக்க சென்றார். ஆனால் இன்சமாமின் விஸ்வரூபம் நியுசிலாந்தை நொறுக்கி இறுதிஆட்டத்திற்கு முன்னேற்றிற்று.

இறுதியாட்டத்தில் இன்சமாமும், மியாண்டட்டும் நொறுக்க , வாசிம் அக்ரமும் தாக்க முதல் முறையாக பாகிஸ்தானுக்கு கோப்பை கிடைத்தது.

பாகிஸ்தான் வரலாற்றிலே மிக மகிழ்ச்சியான நாட்களில் அதுவும் ஒன்று, பல மாதங்கள் கொண்டாடினர், இம்ரான்கான் மாபெரும் மக்கள் விருப்பமானார், தாயாரின் புற்றுநோய் மருத்துவமனையும் வளர ஆரம்பித்தது.

இன்று அது நல்ல முறையில் பல கிளைகளோடு செயல்படுகின்றது.

மாபெரும் திருப்தியோடு விடை பெற்றார், மங்காத புகழோடு இருந்தவருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டது, 1994ல் ஜெமிமா எனும் லண்டன் அழகியை காதலித்து மணந்தார்

உலக பெண்கள் ஜெமிமாவை பொறாமையால் பார்க்க, பாகிஸ்தான் மக்கள் வெறுப்பாய் கண்டனர், காரணம் பெரிதாக ஒன்றுமில்லை ஜெமிமா ஒரு யூதபெண், அவரின் தந்தை இஸ்ரேலுக்கே தூண், அவ்வளவு பணம், என்ன இருந்தாலும் எப்படி? இந்திய பெண் என்றால் கூட ஏற்றிருப்பார்கள் ஆனால் யூதச்சியை எப்படி?

ஒரு முஸ்லிம் நாட்டில் இது ஏற்புடையது அல்ல, ஒரே நாளில் மக்கள் மனதில் சரிந்தார், ஜெமிமா இஸ்லாமுக்கு மாறினாலும் நிலை சுமுகமாக இல்லை, எனினும் தனது செல்வாக்கில் கட்சி தொடங்கினார், பெனசிரும், நவாசும் அவ்வப்போது ராணுவமும் மோதிய நாட்டில் சரிந்த செல்வாக்கை மீட்க முடியவில்லை.

லண்டனின் சுதந்திர பணக்கார பெண்ணை, பெஷாவரில் முக்காடு போட்டுகொண்டு வாழ சொன்னால் எப்படி?, அவ்வப்போது லண்டன் போன ஜெமிமா ஒரேடியாக போய்விட்டார், அதாவது விவாகரத்து.

அவர் போன நேரமோ என்னமோ இம்ரான் கானுக்கு மக்கள் செல்வாக்கு கூடிற்று, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது, பென்சிரும், நவாசும் தமிழக அரசியல்வாதிகளின் பாகிஸ்தான் பிம்பம் . மனம் வெறுத்த மக்கள் மாற்றுவழி தேடினர், இடையில் முஷாரப் வேறுவந்து அமர்ந்து நாற்காலியை விடாமல் பிடித்துகொண்டார்,

பின்னர் ஒரு வழியாக தேர்தல் நடக்க இருக்க,பெனாசிரும் பரலோகம் போனார், அனுதாப ஓட்டில் வந்த அவரின் கணவர் அள்ளினார் அள்ளினார் கஜானா ஓட்டையாகும் வரை அள்ளினார், பின்னர் நவாஸ் செரிப் அவரும் “ஜனநாயக” கடமையை சரியாக செய்கிறார். காணாத குறைக்கு கொசுகூட்டமாய் தீவிரவாதம், சில கடந்தை வண்டு போல ஆபத்தானவை.

பின் பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் கொஞ்சம் நம்பிக்கையளிப்பவர் ஆனார், லண்டனில் படித்து கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர், மக்கள் அவர் பின்னால் திரண்டார்கள், அவர் ஆணையிட்டவுடன் லட்சகணக்கான மக்கள் பாராளுமன்றத்தை முற்றுகை இட தாயரானார்கள்.

குழப்பமே தலைவிதி எனும் பக்கத்துநாட்டில் இப்பொழுது இம்ரான்கான் வலிமையான எதிர்கட்சி தலைவர் ஆனார். பெரும் பாரம்பரியமிருந்தும் ,கூடவே பென்சரின் படுகொலை அனுதாமிருந்தும் அந்த கட்சியை மக்கள் புறக்கணித்தால் என்ன கொடுமையான ஆட்சியை பெனசிரின் கணவர் நடத்தியிருப்பார்??

பாகிஸ்தானின் குறிப்பிடதக்க அரசியல்வாதி இம்ரான்கான், நவாஸ் ஷெரிப்பினை தவிர பாகிஸ்தானில் இன்று அறியபட்ட முகம் ஆவது அவருக்கு எளிதானது.

இதில் சறுக்கமாக 3ம் திருமணாம் செய்தார், ஒரு காலத்தில் ஆயிரகணக்கான பெண்களால் விரட்டபட்டு, யூதபெண்ணே இஸ்லாமாக மாறி வரும் அளவிற்கு பெரும் பிரபலமாக இருந்த அந்த இம்ரான்கான், அன்றே சரியான திருமணத்தை செய்திருந்தால் நிலமை இவ்வளவு சிக்கல் ஆகியிருக்காது

கிட்டதட்ட 65 வயதை கடந்த அவருக்கு இப்பொழுதுதான் நேரம் கூடி வந்திருக்கின்றது

உறுதியாக சொல்லலாம் அந்த யூதபெண் விவகாரமே அவரின் பெரும்புகழை முதலில் சறுக்க செய்தது, இரண்டாம் திருமணமும் சரியில்லை

சொந்த வாழ்க்கையில் தடுமாறிகொண்டிருந்த அவருக்கு இப்பொழுது நேரம் உச்சத்தில் இருக்கின்றது

நவாஸ் ஷெரிப்பை வீழ்த்தி தனிபெரும் தலைவராக உருவெடுத்துவிட்டார், ஆயினும் அவரின் ராணுவ ஆதரவு அச்சம் தருவது

ராணுவத்தின் ஆதரவாளராகவே அவர் வெற்றிபெற்றார், ஆட்சியிலும் அமர போகின்றார்

இந்தியாவுடன் காஷ்மீர் விவகாரத்தை தீர்ப்பேன் என அவர் சொல்லியிருப்பது நல்ல விஷயம், தீர்த்துவிட்டால் சரி

எனினும் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்றால் நிச்சயம் சிரமமே

ஆனால் இன்று பாகிஸ்தானின் தனிபெரும் தலைவராக அவர் உருவாகிவிட்டார் என்பது மறுக்கமுடியாத உண்மை

ஒரு கிரிக்கெட் வீரனாக வாழ்வினை தொடங்கி பெரும் ரசிகைகளை சம்பாதித்து வாழ்வில் பெரும் சிக்கல்களை சந்தித்தித்து, முன்பு பாகிஸ்தானின் கிரிக்கெட் முகமாக இருந்து, இன்று பாகிஸ்தானின் அரசியல் முகமாக ஆகிவிட்ட இம்ரான்கானுக்கு வாழ்த்துக்கள்

மனிதரின் அழகு பெண்களுக்கு பிடித்திருக்கலாம், அவரின் பவுலிங் ஸ்டைல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்திருக்கலாம்

அவரின் அரசியல் பாகிஸ்தானியருக்கு பிடித்திருக்கலாம்

ஆனால் அவரிடம் உள்ள மிகசிறந்த குணம் தாய்பாசம், அந்த தாயின் மீதான அன்பே அவர் அடைந்த வெற்றிகளுக்கும், சறுக்கினாலும் அவர் உச்சம் அடையவும் பெரும் காரணம்

முற்றும் 

இம்ரான் கான் – 1

Image may contain: 1 person, smiling

“காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா ஒரு அடி முன்வந்தால், பாகிஸ்தான் இருஅடி முன்னோக்கி நகரும்” : இம்ரான்கான் பேட்டி

போய்யா, நீர் ஒரு அடி எடுத்து வைத்தால் ராணுவம் உமது தலையில் 3 இடி இடிக்கும்

“பருவத்தே பயிர்செய்” என்பார்கள், “காற்றுள்ள பொழுதே தூற்று” என்பார்கள், ஆனால் பருவத்தில் செய்தாலும் செய்யாவிட்டாலும் தனக்கான இடத்தில் விதி ஒருவனை அமர்த்தியே தீரும் என்பதற்கு இம்ரான்கான் பெரும் எடுத்துகாட்டு

உரிய காலத்தில் செய்யாத எதுவும் பின்னாளில் பெரும் சிக்கலாகிவிடும் என்பதற்கு பாகிஸ்தானின் இம்ரான்கான் கடந்த வருடம் வரை உதாரணம், இன்றோ காட்சிகள் மாறிவிட்டன, அவர் தவ‌றவிட்ட காலங்களை மீண்டும் விதி அவருக்கே கொடுத்து உயரத்தில் நிறுத்திவிட்டது

மனிதர் அக்காலத்தில் கொண்டாடபட்ட விதம் கொஞ்சமல்ல, பெண்களிடம் அவருக்கு இருந்தது போல இன்னொரு நடிகனுக்கோ விளையாட்டு வீரனுக்கோ கொஞ்சமுமில்லை

பிரிட்டன் இளவரசி டயானாவின் வரவேற்புக்கு கொஞ்சமும் குறைவில்லாதது இம்ரான்கானுக்கு பெண்களிடையே இருந்த கிரேஸ்.

அன்று அவருக்கு இருந்த வரவேற்பும் கொண்டாட்டமும் பாகிஸ்தானிலும், உலகளாவிய பெண்கள் வட்டாரத்திலும் இருந்த அளவு இன்னொருவருக்கு இன்றுவரை இல்லை

கொஞ்சம் அவரின் வாழ்வினை பார்க்கலாம்

இந்தியா தானும் ஒரு வலுவான அணி என நிருபித்தவேளை, மிக ஆச்சரியமாக எல்லோரும் கபில்தேவை பார்த்துகொண்டிருந்த வேளையிலே கடைகண்ணால் இன்னொருவரையும் குறும்பு கண்ணால் பார்த்து ஒரு புன்னகை இழையோட கேட்டார்கள்,

“யார் அவர்?”

ஒரு விமர்சகர் சொன்னார் “அவர் தான் பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான், பெரிய பட்டதாரி ஆனால் கிரிக்கெட் பிரியர், அவரை பார்த்தீர்களா? மாடலிங் செல்லவேண்டியவர்தான் செல்லவில்லை, இன்று இந்தியா கோப்பைய வென்றுவிட்டதல்லவா? இனி அவரும் பாகிஸ்தானுக்கு கோப்பையை பெற்று கொடுக்காமல் ஓயமாட்டார்”,

இம்ரான் கானும் அதே மனநிலையில் தான் இருந்தார், ஆனால் வெளிகாட்டவில்லை, அமைதியாக களத்தை விட்டு வெளியேறினார், ஆனால் பலரின் இதயங்களில் அன்றே குடியேறினார்

கிரிக்கெட் ஆர்வம் பரவ ஆரம்பித்தது, போட்டிகள் பெருகின, தொலைகாட்சி பெருகியது, அவரும் உலகெங்கும் தெரிய ஆரம்பித்தார்,

இந்தியாவிலும் அவர் பாகிஸ்தானி என்பதை மறந்து டிவியியை பார்த்து எதிரணி என்பதையும் மறந்து “இதோ இம்ரான்கான்” என கத்த‌ ஆரம்பித்தனர்,.

உலக பெண்கள் எல்லாம் தேட ஆரம்பித்தனர், அதுவும் லண்டன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகைகளுக்கெல்லாம் அவரை பிடித்து போயிற்று. உலகெல்லாம் பிரபலமானார் கான்

அந்த கால கட்டங்கள் பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுதம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தது, பல வகையான சிக்கல்களை சமாளிக்க மக்களின் கவனத்தை திருப்ப ஒரு விஷயம் தேவை பட்டது, அதற்கான முகமாய் யாரையாவது தேடும் பொழுதுதான், பசு நெய்யாக கறந்தது போல இம்ரான்கான் கிடைத்தார்,

கடுமையான விளம்பரம் பாகிஸ்தானுக்குள் அவரது முகத்திற்கு கொடுக்கபட்டது, அதற்கு சற்றும் குறையாத விளம்பரங்களை வெளிநாட்டு பத்திரிகைகளும் கொடுத்தன.

சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், மனிதர் அழகன் தான், வெள்ளையர் என்றும், ஆசியர் என்றும் சொல்லமுடியாத ஒரு சாயல், தோள்வரை நீண்ட முடி, தீர்க்கமான கண்ணும், கூர் மூக்குமாய் ரோஜா நிறமுமாய் அவரை கண்டவர்கள் ஒரு கணம் நின்றுவிட்டுத்தான் செல்வார்கள்.

1980 , 90களில் பலர் கவனித்திருக்கலாம், டி.வியில் கிரிக்கெட் பார்க்கும் பொழுது நீங்கள் பார்த்திருக்கலாம், இம்ரான் பிடறி முடி அசைய ஓடிவந்து பந்துவீச துள்ளும் பொழுது, சில பெண்களின் உதடுகள் ஒட்டி பிரியும் (எங்கேயும், எப்போதும்,சங்கீதம் சந்தோசம் பாடலில் ஜெயபிரதாவை நினைத்து கொள்ளுங்கள்), இதை கவனிக்கும் சில பெருசுகள் அவசரமாக கிரிக்கெட்டினை பழிப்பதோ அல்லது இளம்பெண்ணை அணைந்த அடுப்பு பக்கம் அனுப்புவதோ நடக்கும்,

அனுப்பிவிட்டு நம்மிடம் மெதுவாக கேட்பார்கள், “யார்ல இவன், பையன் அழகாத்தான் இருக்கான்”.

தமிழகம் மட்டுமல்ல, உலகெல்லாம் அப்படித்தான் சொல்லி கொண்டிருந்திருக்கின்றார்கள். ஆச்சரியமாக கிரிக்கெட் விளையாட நாடுகளில் கூட அவர் தேடபட்டிருக்கின்றார்

சார்ஜாவோ, லண்டனோ,மெல்போர்னோ, மொகாலியோ எங்கு பாகிஸ்தான் ஆடினாலும் அவருக்காக ஒரு தனி கூட்டம் சேர ஆரம்பித்தது, அவர் கையில் பந்தினை எடுத்தால் விசிலும் கைதட்டலும் பறந்தது. அந்த உற்சாகத்தில் இம்ரான் ம்ட்டையும் எடுத்து விளாசி ஆல்ரவுண்டர் ஆனார்.

இந்தியா உலககோப்பை வென்ற சாம்பியன், சாம்பியனை வீழ்த்தினால் தாங்கள் தானே சாம்பியன். அதன் பின்னர் இந்திய பாகிஸ்தான் போட்டிகளில் அணல் பறக்கும். முந்தைய இங்கிலாந்து ஆஸ்திரேலிய மோதல் பின்னுக்கு சென்று இந்தியா பாகிஸ்தான் அணி மோதல் ஒரு போராகவே மாறிற்று.

இதற்கு தீனி போட புது பணக்கார அமீரகம் சார்ஜா கோப்பை வேறு தொடங்கிற்று, அணல் பறக்கும், கபில்,சிரிகாந்த என இந்த பக்கமும் இம்ரான் கான், மியாண்டட் என அந்த பக்கமும் சிங்கமும் புலியும் அதிகம். பெரும்பான்மை ஆட்டங்களில் பாகிஸ்தானுக்குதான் வெற்றி, காரணம் மைதானம் முழுக்க ஒலிக்கும் குரல் “இம்ரான் கான் ஐ லவ் யூ.. இம்ரான் டைகர் யு கேன்”, இன்னும் ஏராளம்.

ஒரு முறை கடைசி பந்தில் 4 ரன் என்ற நிலையில், சிக்சர் அடித்து கலக்கினார் ஜாவித் மியாண்டட், இன்னும் பரம எதிரி இந்தியாவுடன் அறிமுக போட்டியிலே கலக்கினார் வாசிம் அக்ரம் (சிரிகாந்திடம் கேளுங்கள் சொல்லுவார் 🙂 ),

இப்படி பலபேர் இடையில் வந்தாலும், எந்த இடைஞ்சலுமின்றி தனக்கான தனி இடத்தில் நின்றார் இம்ரான்கான்.

அது பூட்டோவின் பாகிஸ்தான், கிட்டதட்ட ஒரு பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வந்தார் இம்ரான்கான். உலக பெண்களின் கனவு கண்ணன் பட்டம் வேறு, ஒரு பேட்டியில் அவரே கூச்சத்தோடு சொன்னார் “ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 காதல் கடிதங்கள் வருகின்றன”.

(ஒரு நாளைக்கு குறைந்தது 2000..அதுவும் தானாக…சுக்கிரன் எங்கு இருந்திருக்கிறார் பார்த்தீர்களா? அன்று இணையம் இல்லை இமெயில் இல்லை, முகநூல் , டிவிட்டர், கைபேசி என எதுவும் இல்லை. இருந்திருந்தால் கணக்கு இன்னும் எகிறியிருக்கும்)

எப்படியும் ஒரு மனிதனுக்கு சோதனை காலம் வருமல்லவா?, 1987ல் கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு உலககோப்பை பெற்றுதருவார் என நம்பியிருந்தனர் பாகிஸ்தானியர், ஆனால் விதி வேறு வடிவில் விளையாடியது.

உலகம் கொண்டாடிகொண்டிருந்த அவருக்கு, அரேபிய இளவரசிகள் வரை சம்பந்தம் பேசபட்ட அவருக்கு விதி மாறிற்று, அவரின் தாயாருக்கு புற்றுநோய் தாக்கியது, முதன் முறையாக மனம் உடைந்தார், உடைந்த மனத்தோடு விளையாட முடியுமா?, எழுச்சி கண்ட ஆஸ்திரேலியா கோப்பையை பெற்றது மிக முக்கிய காரணம் டேவிட் பூன், புது பிளேயர் ஸ்டீவ் வா. வெஸ்ட் இண்டீசின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று.

மனம் வெறுத்தார் இம்ரான்கான், தோல்வி கூட அவ்வளவுபாதிக்கவில்லை, அவரது ரசிகர் கூட்டம் என்ன அவரது ஆட்டத்தையா ரசித்தது? அவரைத்தானே ரசித்தது. கோடிக்கணக்கான ரசிகைகளையும், இன்னும் கிரிக்கெட் உலகத்தையே கண்கலங்கவிட்டு ஓய்வினை அறிவித்தார்.

உண்மையில் அவரது தாய்பாசம் சாதாரணமானதல்ல, எவ்வளவு பெரிய பிரபலம்?, ஒரு வார்த்தை சொன்னால் உங்கள் அம்மாவை பார்த்துகொள்ள நான் தயார் என எத்தனை பெண் டாக்டர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் (நிற்கவும் செய்தனர்), ஆனால் வெல்லமுடியாத நோயில் வீழ்ந்த தாயின் இறுதிகாலத்தில் கூட இருக்க மனிதர் ஆசைபட்டார், சகலத்தினையும் துறந்தார்.

கிரிக்கெட் உலகம் அவரை வழி அனுப்பி வைத்தது, ஆனால் பெண்கள் உலகம் அவரை சுற்றிகொண்டே இருந்தது, காரணம் இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானின் தேசிய வழக்கமான ராணுவபுரட்சி ஏற்பட்டது, ஜென்ரல் ஜியா உலஹ‌க் அதிபரனானார், இம்ரான் கானோ முத்துபட ரஜினி போல கிட்டதட்ட சாமியார் ஆயிருந்தார், தாயாரும் இறுதிகட்டத்தினை எட்டினார்கள்.

ஜியா உல்கக் ஒரு முரடர், பூட்டோவையே அசால்ட்டாக தூக்கி தொங்கவிட்டவர், தொங்க என்றால் தூக்கில் இட்டவர். மக்களுக்கு தன்னை பிடிக்காது என்பது அவருக்கே தெரியும், அதனால் என்ன? மக்களுக்கு பிடித்த ஒருவருக்கு நாம் நண்பராகிவிட்டால் முடிந்தது பிரச்சினை என நினைத்தார், வேறு என்ன வழி? அதுவேதான் இம்ரான் கானை தேடினார்.

நீங்கள் ஏன் மறுபடி கிரிக்கெட் ஆடகூடாது, வாருங்கள். கிட்டதட்ட அது உத்தரவு.

இம்ரான் கானுக்கோ மற்றுமொரு ஆசை வந்தது, புற்றுநோயின் சிகிச்சைக்காக உலகெங்கும் தாயோடு சென்றபொழுதுதான் பாகிஸ்தானில் நவீன சிகிச்சை மையம் இல்லை என்ற உண்மை அது. அதனால் புற்றுநோய் மருத்துவமனை கட்டும் ஆவலில் இருந்தார்

லண்டன் படிப்பு, பணம் கொட்டும் கிரிக்கெட், ஏராளமான ரசிகைகள், உல்லாச வாழ்க்கை என இருந்தவருக்கு தனது பாசமான தாயின் நோய் சமுகத்தின் சில கோரமுகங்களை காட்டிற்று, மனிதர் புத்தரின் நிலைக்கு வந்திருந்தார்.

ஆனால் ஜெனரல் ஜியா புறா, போஸ்ட், பத்திரிகை, அமைச்சர்கள் என சகல தூதுக்களையும் விட்டுகொண்டிருந்தார். அவருக்கு தேவை இம்ரான்கான் மீண்டும் வரவேண்டும் மக்கள் பாகிஸ்தான் அரசியலை கவனிக்க கூடாது

36 வயதினை கடந்திருந்தார் இம்ரான்கான் ஆனால் ஆள் அப்படியே இருந்தார், கிரிக்கெட்டில் சிரமான வயதுதான், ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம். அனுபவமான மியாண்டட், அதிரடி இளம்வீரர் இன்சமாம், அற்புதவீரர் அன்வார், உலகின் சிறந்த புவுலர்கள் அக்ரம்,வாக்கர் யூனுஸ் எல்லோரும் அழைக்கின்றார்கள், போய் ஆடலாம்.

ஆனாலும் இம்முறை தனக்காக அல்ல, நாட்டிற்காக அல்ல, தனது தாய்க்காக, அவரது பெயர் காலமட்டும் பாகிஸ்தானில் நிலைத்திருப்பதற்காக ஏதாவது செய்யவேண்டும், அதற்காகவாவது ஆடலாம், அறிவித்தார் மறுபடியும் இணைகிறேன்.

நம்புகின்றீர்களொ இல்லையோ அதன் பின் உலகில் பாகிஸ்தான் விளையாட இருந்த ஸ்டேடியத்தில் காலி இருக்கைகள் இல்லை, எல்லாம் ஹவுஸ்புல்.

இவ்வளவிற்கும் டீகோ மாரடோனா, விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற உலகை மிரட்டிய வீரர்கள் இருந்தும், இம்ரான்கானின் ஆட்டத்திற்கு அவ்வளவு ரசிகைகள் குவிந்தார்கள் “ஒரு வார்த்தை கேட்க 2 வருசம் காத்திருந்தேன்” என ஆடிக்கொண்டிருந்தார்கள்.

தொடரும்..

இம்ரான் கான் 2

Image may contain: 2 people

எனது தாயாரின் பெயரில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட மறுபடியும் அணிக்குள் வருகிறேன் என அவர் வந்து கொஞ்ச காலத்திலே அவரின் அன்னை பிரிந்தார், 1992 உலககோப்பை போட்டியும் வந்தது,

நல்ல அணியோடுதான் களமிறங்கினார், ஆனால் விட்ட இடத்தை பிடிக்க வெஸ்ட் இண்டீசும், சாம்பியன் ஆஸ்திரேலியாவும், பலமுறை இறுதிபோட்டிக்கு வந்து தவறாமல் கோப்பையை விட்ட இங்கிலாந்தும், வலிமையான தென் ஆபிரிக்கா மற்றும் மார்ட்டின்குரோவின் நியுசிலாந்து என பல அணிகளின் முன்னால் தொடக்கத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை.

ஒன்று மூக்கில் குத்தியது என்றால் அடுத்தது கன்னத்தில் அறைந்தது, இன்னொன்று வயிற்றிலே குத்தியது, தொடக்கத்தில் அடிவாங்கியது பாகிஸ்தான், ஆனால் அன்னையை வணங்கும் ஒருவனுக்கு எல்லா பாக்கியமும் கிடைக்குமல்லவா?, இம்ரானுக்கும் கிடைத்தது,

மழை மற்ற இன்னபிற உதவிகளில் அரையிறுதிக்கு வந்தது அணி, எதிரணி நியுசிலாந்து, ஏளனமாக பார்த்த குரோவ், எளிதாக ஜெயிக்கலாம் என எண்ணி ஆடாமல் இறுதிபோட்டிக்கு ஓய்வெடுக்க சென்றார். ஆனால் இன்சமாமின் விஸ்வரூபம் நியுசிலாந்தை நொறுக்கி இறுதிஆட்டத்திற்கு முன்னேற்றிற்று.

இறுதியாட்டத்தில் இன்சமாமும், மியாண்டட்டும் நொறுக்க , வாசிம் அக்ரமும் தாக்க முதல் முறையாக பாகிஸ்தானுக்கு கோப்பை கிடைத்தது.

பாகிஸ்தான் வரலாற்றிலே மிக மகிழ்ச்சியான நாட்களில் அதுவும் ஒன்று, பல மாதங்கள் கொண்டாடினர், இம்ரான்கான் மாபெரும் மக்கள் விருப்பமானார், தாயாரின் புற்றுநோய் மருத்துவமனையும் வளர ஆரம்பித்தது.

இன்று அது நல்ல முறையில் பல கிளைகளோடு செயல்படுகின்றது.

மாபெரும் திருப்தியோடு விடை பெற்றார், மங்காத புகழோடு இருந்தவருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டது, 1994ல் ஜெமிமா எனும் லண்டன் அழகியை காதலித்து மணந்தார்

உலக பெண்கள் ஜெமிமாவை பொறாமையால் பார்க்க, பாகிஸ்தான் மக்கள் வெறுப்பாய் கண்டனர், காரணம் பெரிதாக ஒன்றுமில்லை ஜெமிமா ஒரு யூதபெண், அவரின் தந்தை இஸ்ரேலுக்கே தூண், அவ்வளவு பணம், என்ன இருந்தாலும் எப்படி? இந்திய பெண் என்றால் கூட ஏற்றிருப்பார்கள் ஆனால் யூதச்சியை எப்படி?

ஒரு முஸ்லிம் நாட்டில் இது ஏற்புடையது அல்ல, ஒரே நாளில் மக்கள் மனதில் சரிந்தார், ஜெமிமா இஸ்லாமுக்கு மாறினாலும் நிலை சுமுகமாக இல்லை, எனினும் தனது செல்வாக்கில் கட்சி தொடங்கினார், பெனசிரும், நவாசும் அவ்வப்போது ராணுவமும் மோதிய நாட்டில் சரிந்த செல்வாக்கை மீட்க முடியவில்லை.

லண்டனின் சுதந்திர பணக்கார பெண்ணை, பெஷாவரில் முக்காடு போட்டுகொண்டு வாழ சொன்னால் எப்படி?, அவ்வப்போது லண்டன் போன ஜெமிமா ஒரேடியாக போய்விட்டார், அதாவது விவாகரத்து.

அவர் போன நேரமோ என்னமோ இம்ரான் கானுக்கு மக்கள் செல்வாக்கு கூடிற்று, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது, பென்சிரும், நவாசும் தமிழக அரசியல்வாதிகளின் பாகிஸ்தான் பிம்பம் . மனம் வெறுத்த மக்கள் மாற்றுவழி தேடினர், இடையில் முஷாரப் வேறுவந்து அமர்ந்து நாற்காலியை விடாமல் பிடித்துகொண்டார்,

பின்னர் ஒரு வழியாக தேர்தல் நடக்க இருக்க,பெனாசிரும் பரலோகம் போனார், அனுதாப ஓட்டில் வந்த அவரின் கணவர் அள்ளினார் அள்ளினார் கஜானா ஓட்டையாகும் வரை அள்ளினார், பின்னர் நவாஸ் செரிப் அவரும் “ஜனநாயக” கடமையை சரியாக செய்கிறார். காணாத குறைக்கு கொசுகூட்டமாய் தீவிரவாதம், சில கடந்தை வண்டு போல ஆபத்தானவை.

இன்று பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் கொஞ்சம் நம்பிக்கையளிப்பவர், லண்டனில் படித்து கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர், மக்கள் அவர் பின்னால் திரள்கின்றார்கள், அவர் ஆணையிட்டவுடன் லட்சகணக்கான மக்கள் பாராளுமன்றத்தை முற்றுகை இட தாயராகின்றனர், நவாஸ் செரீப் தவிக்கத்தான் செய்கின்றார்.

குழப்பமே தலைவிதி எனும் பக்கத்துநாட்டில் இப்பொழுது இம்ரான்கான் வலிமையான எதிர்கட்சி தலைவர், பெரும் பாரம்பரியமிருந்தும் ,கூடவே பென்சரின் படுகொலை அனுதாமிருந்தும் அந்த கட்சியை மக்கள் புறக்கணித்தால் என்ன கொடுமையான ஆட்சியை பெனசிரின் கணவர் நடத்தியிருப்பார்??

பாகிஸ்தானின் குறிப்பிடதக்க அரசியல்வாதி இம்ரான்கான், நவாஸ் ஷெரிப்பினை தவிர பாகிஸ்தானில் இன்று அறியபட்ட முகம் அவர்தான்

அவர் இப்பொழுது 3ம் திருமணம் செய்திருக்கின்றாராம், ஒரு காலத்தில் ஆயிரகணக்கான பெண்களால் விரட்டபட்டு, யூதபெண்ணே இஸ்லாமாக மாறி வரும் அளவிற்கு பெரும் பிரபலமாக இருந்த அந்த இம்ரான்கான், அன்றே சரியான திருமணத்தை செய்திருந்தால் நிலமை இவ்வளவு சிக்கல் ஆகியிருக்காது

கிட்டதட்ட 65 வயதை கடந்த அவருக்கு இப்பொழுதுதான் காலம் கடந்தபின் ஞானம் வந்திருக்கின்றது.

உறுதியாக சொல்லலாம் அந்த யூதபெண் விவகாரமே அவரின் பெரும்புகழை முதலில் சறுக்க செய்தது, அதிலிருது இன்னும் முழுமையாக அவர் எழவில்லை, இனி அதெல்லாம் மாறலாம்

அடிக்கடி பாகிஸ்தானை பார்த்துகொள்ள வேண்டும் காரணம் அவர் நமது பக்கத்துவீட்டுக்காரர், பங்காளி வேறு. சும்மா அல்ல மகா கோபக்காரர், “என்றாவது ஒரு நாள் உன்வீட்டுக்குள்ள கோடு போடுவேண்டா..” என சவால் விட்டு கொண்டிருபவர். எனவே அந்த வீட்டில் என்ன நடக்கின்றது என பார்த்துகொள்வதில் ஒன்றும் தவறில்லை.

முற்றும்

இம்ரான் கான் 1

Image may contain: 1 person, smiling

“பருவத்தே பயிர்செய்” என்பார்கள், “காற்றுள்ள பொழுதே தூற்று” என்பார்கள்

உரிய காலத்தில் செய்யாத எதுவும் பின்னாளில் பெரும் சிக்கலாகிவிடும் என்பதற்கு பாகிஸ்தானின் இம்ரான்கான் பெரும் உதாரணம்

மனிதர் அக்காலத்தில் கொண்டாடபட்ட விதம் கொஞ்சமல்ல, பெண்களிடம் அவருக்கு இருந்தது போல இன்னொரு நடிகனுக்கோ விளையாட்டு வீரனுக்கோ கொஞ்சமுமில்லை

பிரிட்டன் இளவரசி டயானாவின் வரவேற்புக்கு கொஞ்சமும் குறைவில்லாதது இம்ரான்கானுக்கு பெண்களிடையே இருந்த கிரேஸ்.

இன்று விஜயகாந்த் போல தோற்றுபோன அரசியல்வாதியாக இருந்தாலும் அன்று அவருக்கு இருந்த வரவேற்பும் கொண்டாட்டமும் பாகிஸ்தானிலும், உலகளாவிய பெண்கள் வட்டாரத்திலும் இருந்த அளவு இன்னொருவருக்கு இன்றுவரை இல்லை

கொஞ்சம் அவரின் வாழ்வினை பார்க்கலாம்

இந்தியா தானும் ஒரு வலுவான அணி என நிருபித்தவேளை, மிக ஆச்சரியமாக எல்லோரும் கபில்தேவை பார்த்துகொண்டிருந்த வேளையிலே கடைகண்ணால் இன்னொருவரையும் குறும்பு கண்ணால் பார்த்து ஒரு புன்னகை இழையோட கேட்டார்கள், “யார் அவர்?”

ஒரு விமர்சகர் சொன்னார் “அவர் தான் பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான், பெரிய பட்டதாரி ஆனால் கிரிக்கெட் பிரியர், அவரை பார்த்தீர்களா? மாடலிங் செல்லவேண்டியவர்தான் செல்லவில்லை, இன்று இந்தியா கோப்பைய வென்றுவிட்டதல்லவா? இனி அவரும் பாகிஸ்தானுக்கு கோப்பையை பெற்று கொடுக்காமல் ஓயமாட்டார்”,

இம்ரான் கானும் அதே மனநிலையில் தான் இருந்தார், ஆனால் வெளிகாட்டவில்லை, அமைதியாக களத்தை விட்டு வெளியேறினார், ஆனால் பலரின் இதயங்களில் அன்றே குடியேறினார்

கிரிக்கெட் ஆர்வம் பரவ ஆரம்பித்தது, போட்டிகள் பெருகின, தொலைகாட்சி பெருகியது, அவரும் உலகெங்கும் தெரிய ஆரம்பித்தார்,

இந்தியாவிலும் அவர் பாகிஸ்தானி என்பதை மறந்து டிவியியை பார்த்து எதிரணி என்பதையும் மறந்து “இதோ இம்ரான்கான்” என கத்த‌ ஆரம்பித்தனர்,.

உலக பெண்கள் எல்லாம் தேட ஆரம்பித்தனர், அதுவும் லண்டன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகைகளுக்கெல்லாம் அவரை பிடித்து போயிற்று. உலகெல்லாம் பிரபலமானார் கான்

அந்த கால கட்டங்கள் பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுதம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தது, பல வகையான சிக்கல்களை சமாளிக்க மக்களின் கவனத்தை திருப்ப ஒரு விஷயம் தேவை பட்டது, அதற்கான முகமாய் யாரையாவது தேடும் பொழுதுதான், பசு நெய்யாக கறந்தது போல இம்ரான்கான் கிடைத்தார்,

கடுமையான விளம்பரம் பாகிஸ்தானுக்குள் அவரது முகத்திற்கு கொடுக்கபட்டது, அதற்கு சற்றும் குறையாத விளம்பரங்களை வெளிநாட்டு பத்திரிகைகளும் கொடுத்தன.

சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், மனிதர் அழகன் தான், வெள்ளையர் என்றும், ஆசியர் என்றும் சொல்லமுடியாத ஒரு சாயல், தோள்வரை நீண்ட முடி, தீர்க்கமான கண்ணும், கூர் மூக்குமாய் ரோஜா நிறமுமாய் அவரை கண்டவர்கள் ஒரு கணம் நின்றுவிட்டுத்தான் செல்வார்கள்.

1980 , 90களில் பலர் கவனித்திருக்கலாம், டி.வியில் கிரிக்கெட் பார்க்கும் பொழுது நீங்கள் பார்த்திருக்கலாம், இம்ரான் பிடறி முடி அசைய ஓடிவந்து பந்துவீச துள்ளும் பொழுது, சில பெண்களின் உதடுகள் ஒட்டி பிரியும் (எங்கேயும், எப்போதும்,சங்கீதம் சந்தோசம் பாடலில் ஜெயபிரதாவை நினைத்து கொள்ளுங்கள்), இதை கவனிக்கும் சில பெருசுகள் அவசரமாக கிரிக்கெட்டினை பழிப்பதோ அல்லது இளம்பெண்ணை அணைந்த அடுப்பு பக்கம் அனுப்புவதோ நடக்கும்,

அனுப்பிவிட்டு நம்மிடம் மெதுவாக கேட்பார்கள், “யார்ல இவன், பையன் அழகாத்தான் இருக்கான்”.

தமிழகம் மட்டுமல்ல, உலகெல்லாம் அப்படித்தான் சொல்லி கொண்டிருந்திருக்கின்றார்கள். ஆச்சரியமாக கிரிக்கெட் விளையாட நாடுகளில் கூட அவர் தேடபட்டிருக்கின்றார்

சார்ஜாவோ, லண்டனோ,மெல்போர்னோ, மொகாலியோ எங்கு பாகிஸ்தான் ஆடினாலும் அவருக்காக ஒரு தனி கூட்டம் சேர ஆரம்பித்தது, அவர் கையில் பந்தினை எடுத்தால் விசிலும் கைதட்டலும் பறந்தது. அந்த உற்சாகத்தில் இம்ரான் ம்ட்டையும் எடுத்து விளாசி ஆல்ரவுண்டர் ஆனார்.

இந்தியா உலககோப்பை வென்ற சாம்பியன், சாம்பியனை வீழ்த்தினால் தாங்கள் தானே சாம்பியன். அதன் பின்னர் இந்திய பாகிஸ்தான் போட்டிகளில் அணல் பறக்கும். முந்தைய இங்கிலாந்து ஆஸ்திரேலிய மோதல் பின்னுக்கு சென்று இந்தியா பாகிஸ்தான் அணி மோதல் ஒரு போராகவே மாறிற்று.

இதற்கு தீனி போட புது பணக்கார அமீரகம் சார்ஜா கோப்பை வேறு தொடங்கிற்று, அணல் பறக்கும், கபில்,சிரிகாந்த என இந்த பக்கமும் இம்ரான் கான், மியாண்டட் என அந்த பக்கமும் சிங்கமும் புலியும் அதிகம். பெரும்பான்மை ஆட்டங்களில் பாகிஸ்தானுக்குதான் வெற்றி, காரணம் மைதானம் முழுக்க ஒலிக்கும் குரல் “இம்ரான் கான் ஐ லவ் யூ.. இம்ரான் டைகர் யு கேன்”, இன்னும் ஏராளம்.

ஒரு முறை கடைசி பந்தில் 4 ரன் என்ற நிலையில், சிக்சர் அடித்து கலக்கினார் ஜாவித் மியாண்டட், இன்னும் பரம எதிரி இந்தியாவுடன் அறிமுக போட்டியிலே கலக்கினார் வாசிம் அக்ரம் (சிரிகாந்திடம் கேளுங்கள் சொல்லுவார் 🙂 ), இப்படி பலபேர் இடையில் வந்தாலும், எந்த இடைஞ்சலுமின்றி தனக்கான தனி இடத்தில் நின்றார் இம்ரான்கான்.

அது பூட்டோவின் பாகிஸ்தான், கிட்டதட்ட ஒரு பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வந்தார் இம்ரான்கான். உலக பெண்களின் கனவு கண்ணன் பட்டம் வேறு, ஒரு பேட்டியில் அவரே கூச்சத்தோடு சொன்னார் “ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 காதல் கடிதங்கள் வருகின்றன”.

(ஒரு நாளைக்கு குறைந்தது 2000..அதுவும் தானாக…சுக்கிரன் எங்கு இருந்திருக்கிறார் பார்த்தீர்களா? அன்று இணையம் இல்லை இமெயில் இல்லை, முகநூல் , டிவிட்டர், கைபேசி என எதுவும் இல்லை. இருந்திருந்தால் கணக்கு இன்னும் எகிறியிருக்கும்)

எப்படியும் ஒரு மனிதனுக்கு சோதனை காலம் வருமல்லவா?, 1987ல் கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு உலககோப்பை பெற்றுதருவார் என நம்பியிருந்தனர் பாகிஸ்தானியர், ஆனால் விதி வேறு வடிவில் விளையாடியது.

உலகம் கொண்டாடிகொண்டிருந்த அவருக்கு, அரேபிய இளவரசிகள் வரை சம்பந்தம் பேசபட்ட அவருக்கு விதி மாறிற்று, அவரின் தாயாருக்கு புற்றுநோய் தாக்கியது, முதன் முறையாக மனம் உடைந்தார், உடைந்த மனத்தோடு விளையாட முடியுமா?, எழுச்சி கண்ட ஆஸ்திரேலியா கோப்பையை பெற்றது மிக முக்கிய காரணம் டேவிட் பூன், புது பிளேயர் ஸ்டீவ் வா. வெஸ்ட் இண்டீசின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று.

மனம் வெறுத்தார் இம்ரான்கான், தோல்வி கூட அவ்வளவுபாதிக்கவில்லை, அவரது ரசிகர் கூட்டம் என்ன அவரது ஆட்டத்தையா ரசித்தது? அவரைத்தானே ரசித்தது. கோடிக்கணக்கான ரசிகைகளையும், இன்னும் கிரிக்கெட் உலகத்தையே கண்கலங்கவிட்டு ஓய்வினை அறிவித்தார்.

உண்மையில் அவரது தாய்பாசம் சாதாரணமானதல்ல, எவ்வளவு பெரிய பிரபலம்?, ஒரு வார்த்தை சொன்னால் உங்கள் அம்மாவை பார்த்துகொள்ள நான் தயார் என எத்தனை பெண் டாக்டர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் (நிற்கவும் செய்தனர்), ஆனால் வெல்லமுடியாத நோயில் வீழ்ந்த தாயின் இறுதிகாலத்தில் கூட இருக்க மனிதர் ஆசைபட்டார், சகலத்தினையும் துறந்தார்.

கிரிக்கெட் உலகம் அவரை வழி அனுப்பி வைத்தது, ஆனால் பெண்கள் உலகம் அவரை சுற்றிகொண்டே இருந்தது, காரணம் இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானின் தேசிய வழக்கமான ராணுவபுரட்சி ஏற்பட்டது, ஜென்ரல் ஜியா உலஹ‌க் அதிபரனானார், இம்ரான் கானோ முத்துபட ரஜினி போல கிட்டதட்ட சாமியார் ஆயிருந்தார், தாயாரும் இறுதிகட்டத்தினை எட்டினார்கள்.

ஜியா உல்கக் ஒரு முரடர், பூட்டோவையே அசால்ட்டாக தூக்கி தொங்கவிட்டவர், தொங்க என்றால் தூக்கில் இட்டவர். மக்களுக்கு தன்னை பிடிக்காது என்பது அவருக்கே தெரியும், அதனால் என்ன? மக்களுக்கு பிடித்த ஒருவருக்கு நாம் நண்பராகிவிட்டால் முடிந்தது பிரச்சினை என நினைத்தார், வேறு என்ன வழி? அதுவேதான் இம்ரான் கானை தேடினார்.

நீங்கள் ஏன் மறுபடி கிரிக்கெட் ஆடகூடாது, வாருங்கள். கிட்டதட்ட அது உத்தரவு.

இம்ரான் கானுக்கோ மற்றுமொரு ஆசை வந்தது, புற்றுநோயின் சிகிச்சைக்காக உலகெங்கும் தாயோடு சென்றபொழுதுதான் பாகிஸ்தானில் நவீன சிகிச்சை மையம் இல்லை என்ற உண்மை அது. அதனால் புற்றுநோய் மருத்துவமனை கட்டும் ஆவலில் இருந்தார்

லண்டன் படிப்பு, பணம் கொட்டும் கிரிக்கெட், ஏராளமான ரசிகைகள், உல்லாச வாழ்க்கை என இருந்தவருக்கு தனது பாசமான தாயின் நோய் சமுகத்தின் சில கோரமுகங்களை காட்டிற்று, மனிதர் புத்தரின் நிலைக்கு வந்திருந்தார்.

ஆனால் ஜெனரல் ஜியா புறா, போஸ்ட், பத்திரிகை, அமைச்சர்கள் என சகல தூதுக்களையும் விட்டுகொண்டிருந்தார். அவருக்கு தேவை இம்ரான்கான் மீண்டும் வரவேண்டும் மக்கள் பாகிஸ்தான் அரசியலை கவனிக்க கூடாது

36 வயதினை கடந்திருந்தார் இம்ரான்கான் ஆனால் ஆள் அப்படியே இருந்தார், கிரிக்கெட்டில் சிரமான வயதுதான், ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம். அனுபவமான மியாண்டட், அதிரடி இளம்வீரர் இன்சமாம், அற்புதவீரர் அன்வார், உலகின் சிறந்த புவுலர்கள் அக்ரம்,வாக்கர் யூனுஸ் எல்லோரும் அழைக்கின்றார்கள், போய் ஆடலாம்.

ஆனாலும் இம்முறை தனக்காக அல்ல, நாட்டிற்காக அல்ல, தனது தாய்க்காக, அவரது பெயர் காலமட்டும் பாகிஸ்தானில் நிலைத்திருப்பதற்காக ஏதாவது செய்யவேண்டும், அதற்காகவாவது ஆடலாம், அறிவித்தார் மறுபடியும் இணைகிறேன்.

நம்புகின்றீர்களொ இல்லையோ அதன் பின் உலகில் பாகிஸ்தான் விளையாட இருந்த ஸ்டேடியத்தில் காலி இருக்கைகள் இல்லை, எல்லாம் ஹவுஸ்புல்.

அவரது ரசிகைகளோ “ஒரு வார்த்தை கேட்க 2 வருசம் காத்திருந்தேன்” என ஆடிக்கொண்டிருந்தார்கள்.

தொடரும்…