கவிஞன் கண்ணதாசன்

கண்ணதாசன்

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்.
முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும்.
குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர்.
இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும்.
அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த இந்தியபிரச்சினைகளையும் ஒரே பாடலில் விளக்கிய பெருமை அவருக்கு உண்டு.
இந்து மதத்திற்கு கண்ணன் அருளியது பகவத் கீதை என்றால், கண்ணதாசன் கொடுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். இரண்டும் இந்து மதத்தின் மாபெரும் அடையாளங்கள்.
பத்திரிகை,மோசடி அரசியல், அவமானம்,துரோகங்கள், தீராத கடன் தொல்லை என பல துன்பங்களும் அவரே தேடிகொண்ட போதை பழக்கத்தின் பாதிப்புகளும் தாண்டியே இவ்வளவு பிரகாசித்திருக்கின்றார் என்றால், அவரது மொத்த திறமை எவ்வளவு இருந்திருக்கும்.
எல்லாம் வெறுத்து, ஆன்மீகத்தில் கலந்து இனி என் வாழ்வு எழுத்துலகமே என அவர் புத்துணர்ச்சி பெற்றபொழுது பாவம் உடல்நிலை இடம்கொடுக்கவில்லை, அந்த சூரியனின் சில கதிர்கள் மட்டுமே உலகிற்கு தெரிந்தது.
மதுப்பழக்கமும்,போதை பழக்கமும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அழிக்கும் என்பதற்கு அவரது வாழ்வு பெரும் எடுத்துகாட்டு.
அவரே சொன்னது போல “ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழகூடாது என்பதற்கு எனது வாழ்வு பெரும் உதாரணம்”
வனவாசமும் மன்வாசமும் அக்கால மோசடி அரசியலை அப்படியே படம்பிடித்து காட்டும் வரலாற்று கல்வெட்டுக்கள்
( அவைகளில் எல்லாம் கவிஞர் மிகபடுத்தி எழுதினார் என்பவர்கள் உண்டு, ஆனால் “நெஞ்சுக்கு நீதி” மட்டும் அப்படியே அனைத்து பாகமும் உண்மையாம்  )
தனது வாழ்வினை திறந்த புத்தகமாக்கி, தான் கண்ட நல்லவர்களையும், துரோகிகளையும் அப்படியே புட்டுவைத்த ஒரே தமிழக திரை,அரசியல் பிரபலம் கண்ணதாசன் மட்டுமே. பெரும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் வரும் பக்குவம் இது.
தமிழ்சாதியில் “நல்ல தமிழ்” கவிஞர்களுக்கு மட்டும் ஆயுள் குறைவு,
பாரதி,பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் வரிசையில் கண்ணதாசனும் இடம்பிடித்ததுதான் கொடுமை.
கவிதையோ, பாடலோ அவை அழகுணர்ச்சியோடு அமையவேண்டும், விஷயத்தை மறைமுகமாக புரியவைக்கவேண்டும், மொழியை கையாளும் வார்த்தை ஜாலங்களும், வர்ணனைகளும் மிக அவசியம், அதாவது கேட்பவர்கள் புரிந்துகொண்டு கவிஞன் காட்டும் சூழ்நிலைக்கு அப்படியே செல்லவேண்டும்.
வெகு சிலருக்கு மட்டுமே அந்த வரம் சாத்தியம், கண்ணதாசனும் அவர்களில் ஒருவர்.
இன்று தமிழக கவிதை உலகம் உலகிற்கே தெரியும் முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுபோக்கு என என்னவெல்லாமோ சொல்லிகொண்டு, நவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், இடையநவீனம் இன்னும் என்ன இம்சைகள் எல்லாமோ கவிதை என சொல்லபடுகின்றது.
வரிகளை பிரித்துவைத்து எழுதினால் அது கவிதையாம், உவமை இல்லை, இலக்கணமில்லை, வர்ணனை இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, அர்த்தமும் இல்லை.
கேட்டால் முடியை சிலுப்பிகொண்டோ அல்லது பெண்கவிஞர்கள் தலையை கோதிகொண்டோ சொல்வார்கள், இது உங்களுக்கு என்ன அர்த்தமோ அதனை எடுத்து கொள்ளுங்கள், 10 அர்த்ததிற்கு மேல் வருமாம்.
ஆக சிறந்த காளமேகமே இருபொருள்தான் சொலமுடிந்த கவிதைகளை சொன்னான், இவர்கள் செய்யும் இம்சை தாளமுடியவில்லை, அதுவும் ஒரு மாலைநேர இளம்சிகப்புக்கு ஒரு பெண்கவிஞர்(அப்படி சொல்லிகொள்பவர்) கொடுத்த வர்ணனையை கேட்டால் ஒரு மாமாங்கம் சோறு உள்ளே செல்லாது, அவ்வளவு அருவெறுப்பான உவமை அது.
எப்படியும் விரைவில் மானமிக்க தமிழன், தமிழை நேசிக்கும் தமிழன், முதல்வராகும் பொழுது முதல் காரியம் இந்த கவிஞர்கள் இனி கவிதை எழுதமாட்டார்கள் என உறுதிமொழிவாங்குவார் என்ற ஆசை இருக்கின்றது, டாஸ்மாக் கூட இரண்டாம் பட்சம்தான்.
தமிழின் அழகை அழிப்பதில் முதல்காரணம் இந்தவகை கவிஞர்கள்.
தமிழக சாதிசங்கங்களின் எண்ணிக்கையை விட இவர்கள் தமிழகத்தில் அதிகம்.
இப்படியான காலங்களில் அடிக்கடி கண்ணதாசன் நினைவுக்கு வருவார், இந்த கவிஞன் மட்டும் ஐரோப்பாவில் உலகில் பிறந்திருந்தால் இன்று உலக கவிஞனாக அவனை கொண்டாடியிருப்பார்கள், பாவம் தமிழனாய் பிறந்துவிட்டான்.
“இல்லையொரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க‌
இங்குவந்து ஏன்பிறந்தாய் செல்வமகனே”
என்ற கவிஞரின் வரி அவருக்கே பொருந்தும்.
இன்று கண்ணதாசனின் நினைவுநாள்.
தமிழ் அறிந்த, தமிழ் சிறப்பறிந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அல்லது எல்லா பிரச்சினை சூழலுக்கு மிக அற்புதமான பாடல்களை எழுதிய ஒரு கவிஞன் உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது கவியரசர் மட்டுமே.
தமிழகத்தின் மிக சிறந்த கவிஞர் என்றவகையில் அவருக்கு அழியா இடமுண்டு, ஒரு காலமும் மறைந்துபோகாத கவிதை கல்வெட்டு அவர்.
அவர் மிகவும் நேசித்த கண்ணனுக்கு அவர் பாடிய பாடலை ஒரு முறை கேளுங்கள், அக்கவிஞன் தேனில் குழைத்து தந்த பலாப்பழத்தின் ஒரு சுளை
“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்”
எந்த மதத்தவராயினும் உருகுவார்கள், ஏன் கம்சனுக்கே தமிழ்தெரிந்தால் அப்பாடலுக்காக கண்ணனை கொண்டாடுவான்.
“ஜோதிமணி பெட்டகமே, சுடரொழியே கண்மணியே ஆதிமகனாய் பிறந்த அருதவமே” என இயேசுவிற்கு பாடல் பாடவும் அவர் தவறவில்லை
இன்றும் இயேசுவின் திருவுருவத்தை பார்க்கும்பொழுதெல்லாம் “வானளந்த திருக்குமரா, மனிதகுல மருத்துவனே” எனும் கண்ணதாசனின் வரிகள் வந்து போகும்
தேவமாதாவினை பார்க்கும்பொழுதெல்லாம் “தாயிருக்க பிள்ளை சாகும் சங்கடம் கொஞ்சமோ, சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ” எனும் வரிகளே நினைவுக்கு வரும்
எப்படிபட்ட கவிஞன் அவர்.
எமனுக்கும் தமிழ் தெரிந்திருக்கும், ஆனால் விதிக்கு தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் இவ்வளவு விரைவில் அழகிய தமிழ்கவிதையை கொண்டுசென்றிருக்காது.
ஆனாலும் அவர் வரிகளில் சொல்வதென்றால்
“நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” , அவருக்கு அழிவே இல்லை.
அவரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வதில் தமிழ் அறிந்தவர்கள் எல்லோரும் பெரும் மகிழ்ச்சிகொள்வதில் வியப்பு ஏதுமில்லை.
தந்தை இறந்தபொழுது கவிஞரின் பாடல்களே ஆறுதலாயின, மகனுக்கு அவரின் பாடல்களே தாலாட்டும் ஆகியிருக்கின்றன‌
தமிழின் அழகை வாழ்வியல் தத்துவத்தோடு அவர் போல் திரையுலகில் இன்னொருவன் சொல்ல பிறந்துதான் வரவேண்டும்
அந்த இரண்டாம் கம்பனுக்கு, 64ம் நாயன்மாருக்கு, மாபெரும் சித்தனுக்கு, கண்ணனின் ஆழ்வாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
(குஷ்பூவிற்கு அவர் பாடல் எழுதவில்லை என்றாலும், அன்றே குஷ்பூவிற்கு பொருந்தும் மிக அழகான பாடலை சாவித்திரிக்காய் எழுதினார் கவிஞர்
“ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ , உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ” எனும் பாடலது
அப்பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் குஷ்பூவிற்கு எக்காலமும் பொருந்தும், அதனால் சங்கத்தின் சார்பாக கவிஞனுக்கு பெரும் அஞ்சலி)
[ October 18, 2018 ]
Image may contain: 1 person

இலங்கையின் தந்திரம் மகா நுட்பமானது

Image may contain: 2 people, people smiling, beard

 

என்ன சொல்லுங்கள், இந்த இலங்கையின் தந்திரம் மகா நுட்பமானது

புலிகளை ஒழிக்க அமெரிக்காவின் உதவி தேவைபட்டபொழுது நெருங்கினார்கள், அமெரிக்காவும் நிரம்ப உதவியது. ரசாயாண ஆயுத சிக்கல்,போர்குற்றம் வராமல் இலங்கையினை காத்துகொண்டதில் அமெரிக்க பங்கு அதிகம்

எப்படி நெருங்கினார்கள் என்றால் 1991ல் வளைகுடா போரின்பொழுது இந்தியவிமான நிலையத்தில் அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் வழங்கியதை ராஜிவ் கண்டிக்க அது தடைபட்டது

அப்பொழுது “பிளிஸ் கம் ஹியர்” என வலிய அழைத்து எரிபொருள் கொடுத்தது இலங்கை

அப்பொழுது கைகேயி போல வரம் வாங்கிய இலங்கை பின் அந்த வரத்தை புலிகளை அழிக்க பயன்படுத்தியது

இப்பொழுது புலிகள் இல்லை, ஒரு பொட்டுவெடி கூட வெடிப்பதில்லை

இந்நிலையில் சட்டென ஈரானுடன் கைகோர்த்துவிட்டது இலங்கை. இலங்கைக்கு ஏராளமான எரிபொருளை கொடுக்கின்றது ஈரான்

இலங்கையும் தன் தேயிலை எல்லாம் ஈரானுக்கு கொடுக்கின்றது

இப்பொழுது தடைவிதித்த காலத்தில் கூட தைரியமாக ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இலங்கை, அதன் உச்ச மத தலைவரை அழைத்து விருந்தெல்லாம் கொடுக்கின்றது

அவரும் கொழும்பு வந்து அமெரிக்கா ஒழிக, அது சனியன், அது திருந்தாது என்றெல்லாம் சொல்லிகொண்டிருகின்றார், இலங்கை அதிபரும் சிரிக்கின்றார்

இது டிரம்ப் கோஷ்டிக்கு கண்களை சிவக்க வைக்கின்றது

இனி பாருங்கள், அமெரிக்காவில் மே 17, 18 எல்லாம் அணல் பறக்கலாம், பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என பிரபல வெளிநாட்டு பத்திரிகை எழுதலாம், இங்கும் பலர் பயங்கர வேடிக்கை காட்டலாம்

 

நோபல் இலக்கியத்திற்கான பரிசு இந்த ஆண்டு வழங்கபடாதாம்

நோபல் பரிசில் இலக்கியத்திற்கான பரிசு ஒன்றும் உண்டு, அது இந்த ஆண்டு வழங்கபடாதாம்

காரணம் பரிசுக்கான நபரை தேர்ந்தெடுக்கும் குழு மதுரை பல்கலைகழக நிர்மலா தேவி விவகாரம் போல பல பாலியல் புகாரில் சிக்கிகொண்டது

இதனால் இந்த வருடம் விருது இல்லை என அறிவித்துவிட்டார்கள்

இதனால் மனுஷ்யபுத்திரனுக்கு நோபல் இல்லை என சாரு நிவேதிதாவும், அவருக்கும் நோபல் இல்லை என்பதில் மனுஷும் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றனர்

இருவருக்குமே நோபல் இல்லை என்பதில் ஜெயமோகனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி

 

பாரதியின் தமிழ் பற்றும் , பாரதிதாசனின் தமிழ் வெறியும்…

பாரதிக்கு தமிழ்பற்று இருந்தது, அதை விட அதிகமாக தேசாபிமானம் இருந்தது

 

பாரதியின் தாசன் என சொல்லிகொண்டிருந்தவருக்கு தமிழ்வெறிதான் இருந்தது,

அதுவரை மெல்லிய பூ எடுத்துவீசுவது போன்றிருந்த தமிழ் கவிதைகள், பாரதிதாசன் காலத்திலே கல்லெடுத்து வீசுவது போல் மாறின‌

100% முழு தமிழ் உணர்வாளர்களுக்கு அவர் பெரும் கவிஞராக தெரிவதில் நியாயமிருகின்றது

ஆனால் பாரத்திக்கு இருந்த பெரும் இந்திய அபிமானமும், பெரும் பெருமிதமும் பாரதியின் தாசன் என சொல்லிகொண்டவருக்கு சுத்தமாக இல்லை

பாரதிதாசன், இந்த ஈழத்து காசி ஆனந்தன் எல்லாம் ஒரே வகை என்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.

அந்த காசியானந்தன் வகையறாக்கள் பாரதிதாசனை போற்றுவார்கள், அதில் பாரதி பெயரும் இழுக்கபடுவதுதான் பாரதி எனும் மகா கவிஞனுக்கு இழுக்கு

அவர் சுப்புரத்தினமாகவே நீடித்திருக்கலாம்

ஜெயமோகனுக்கு ஓளவையார் தாசியாகிவிட்டார்

Image may contain: 1 person, close-up“என்னை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை? 4 பேர் காரிதுப்பினால்தானே நான் முற்போக்கு எழுத்தாளன்..” என நினைத்துவிட்டு எழுதிவிட்டார் ஜெயமோகன்

பெண் கல்வி பற்றி தொடங்கி இப்படி எழுதிவிட்டார்

//ஔவையார் பாணர் குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் விறலியராக ஆடிப்பாடுபவர்கள். அதாவது தாசிகள். ஆண்டாள் ஆலயப்பணிசெய்த உயர்குடியினர். காரைக்காலம்மையார் வணிகக்குடியினர்//

வைரமுத்துவிற்கு நன்றி சொல்லிவிட்டு ஆண்டாளை உயர்குடி ஆக்கிவிட்டார், காரைக்காரலமையாரை விட்டுவிட்டார்

ஆனால் ஓளவ்வையார் சிக்கிவிட்டார்

Image may contain: 2 people, people standingஆம், ஒளவ்வையாரை தாசியாக்கிவிட்டார் ஜெயமோகன், இனி தமிழ் உணர்வாளர்கள் தூங்கமாட்டார்கள், அவர்களுக்கு வேலை கிடைத்தாயிற்று

பொதுவாக ஒளவையார் பற்றி பல குழப்பங்கள் உண்டு, முருகப்பெருமான் சுட்ட பழம் கொடுத்த ஒளையார் வேறு, மூதுரை பாடிய ஓளவையார் வேறு, அதியமானுக்கு ஆதரவாக போர் தவிர்த்தவர் வேறு என பல குழப்பம் உண்டு

ஒளையார் என்பது மூத்த மகளிரை சொல்லும் சொல்லாக இருக்கலாம் , அவ்வா என்றால் இன்றும் தெலுங்கில் பாட்டி என்றே பொருள் என்பதால் மிகுந்த வயதுடைய பாட்டி , சுருக்கமாக பாட்டி சொல் என முடிவு செய்தார்கள்

இந்த ஜெயமோகனுக்கு ஓளவையார் தாசியாகிவிட்டார்,

இனி “எரிதழல் கொண்டுவா, ஜெயமோகனை எரித்துவிடுவோம்” என செந்தமிழர் கிளம்புவார்கள்

முப்பாட்டன் முருகன் பழம் கொடுத்தது தாசிக்கா? என ஒரு கூட்டம் கிளம்பலாம்

விஷயம் பற்றி எரியலாம்

கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் அருகே ஒளையாருக்கு சிறிய கோவில் உண்டு, அங்கு சென்று இப்பொழுதே மன்னிப்பு கேட்டுவிடுவது ஜெயமோகனுக்கு நல்லது

 
 

உலக புத்தக விழா

Image may contain: text

உலக புத்தக விழாவாம், தலை சிறந்த புத்தகங்களை எல்லோரும் வரிசைபடுத்துகின்றார்கள்

எனக்கு தெரிந்து மிக சிறந்த தத்துவ புத்தகங்களில் பைபிளின் சீராக் ஆகமும், திருக்குறளும் என்றுமே நம்பர் 1. அர்த்த சாஸ்திரம் இன்னும் சூப்பர்

மாக்கிய வல்லியின் அரசியல் வழிகாட்டும் புத்தகம் மிக சிறந்தது

அலெக்ஸ்டாண்டர் காலத்து குறிப்புகளை, ரோமர் காலத்து குறிப்புகளை எழுதிய அந்த அறிஞர்களின் புத்தகங்கள் அற்புதமானவை

இந்தியாவினை தேடிவந்த யுவான் சுவாங், மார்க்கோ போலோ முதல் வாஸ்கோடகாமா வரை எழுதிய புத்தகங்கள் பெரும் விஷயம் போதிக்கும்

மானிடத்தை வாழ வைக்கும் மகா முக்கிய புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ் முக்கியமானவர், லெனின், ஹிட்லரின் எழுத்துக்களும் முக்கியமானவை

உலகளாவிய புத்தகங்கள் அந்த வகையில் ஏராளம், சில அரேபிய எழுத்தாளர்கள் பின்னி எடுத்திருபபர்கள்

தமிழக புத்தகங்களில் தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் என வரிசை பெரிது, தமிழின் அழகினை சொன்ன கம்பராமாயணம் என அந்த வரிசை பெரிது

இந்த நூற்றாண்டு காலத்தில் பாரதியிலிருந்து வரிசை தொடங்குகின்றது, அட்டகாசமான எழுத்தாளன்

அதன் பின் அண்ண, கலைஞர், கண்ணதாசன் என பெரும் வரிசை உண்டு, அதுவும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பெரும் காவியம்

கல்கியும், சாண்டில்யனும் ஜாம்பவான்கள்

ஜெயகாந்தனின் எழுத்துக்கள் செவிட்டில் அடித்துவிட்டு போகும் ரகம், அதனை வாசித்தபின் இருக்கை விட்டு எழும்புவது கூட சாத்தியமில்லை, அடித்து போட்டது போல இருக்கும்

இவர்களுக்கு பின்னால் தமிழின் பெரும் புத்தகங்களை கொடுத்தவர்கள் சுஜாதா, மதன், ஆசான் பா. ராகவன்

வைரமுத்து கள்ளிகாட்டு இதிகாசத்தில் தனித்து நின்றவர், பாலகுமாரன் சோழமன்னர்களை பற்றி எழுதிய உடையார் மகா சிறந்த புத்தகம்..

ஆர்.முத்துகுமார் அரசியல் புத்தகங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்

இன்றைய இளம் தலைமுறையில் குறிப்பிட்டு சொல்ல கூடிய அசாத்திய எழுத்தாளர் இருவர், ஒருவர் எழுத்து பேரரசர் முகில் சிவா, இன்னொருவர் சரவணன் சந்திரன்

இவர்கள் வயதால் இளையவர்கள், இன்னும் காலம் இருக்கின்றது, தொடக்கம் அட்டகாசம் இனி வருங்காலம் என்ன வைத்திருக்கின்றது என தெரியவில்லை

கண்ணதாசனுக்கும், கலைஞருக்கும் பின் ரசிக்க கூடிய எழுத்து சுஜாதாவிடம் இருந்தது, ராகவன், முகிலிடம் இருக்கின்றது

நல்ல எழுத்தாளன் தகவல்களை, வரலாறுகளை, கணிப்புகளை வாசிப்பாளனுக்கு தந்துவிட்டு செல்ல வேண்டும். அவன் பல்துறை வித்தகனாக இருக்க வேண்டாம், ஆனால் அதனை பற்றிய அறிவும் தேடலும் இருக்க வேண்டும்

எல்லா துறைகள் பற்றியும் ஞானம் இருந்தாலொழிய நல்ல எழுத்தாளன் உருவாகவே முடியாது, மொழியறிவும் முக்கியம்..

எழுத்து பா.ராகவன், சுஜாதா போல இருக்கவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது

காரணம் எழுத்தாளன் என்பவன் தேனி, அவன் எல்லா விஷயங்களை படித்து எழுத வேண்டியவன், தேடி தேடி படித்து அந்த விஷயங்களை சமூகத்திற்கு தன் பாணியில் கொடுப்பவன்

அவனே பயனுள்ள எழுத்தாளன்,

அதனை விட்டும் சும்மா மல்லாக்க படுத்து, கனவிலே கதை எழுதி, ஏதோ புரியாமல் சொல்லி நான் இலக்கியவாதி என்பவன் இன்னொரு வகையே தவிர முழு எழுத்தாளன் அல்ல, அல்லவே அல்ல‌

அதனால்தான் பாரதி, கண்ணதாசன், கலைஞர், சுஜாதா, மதன், ராகவன், முகில் சிவா எல்லோரையும் வியந்து பார்க்க வேண்டி இருக்கின்றது

பெண்கள் வரிசை இல்லையா என்றால் ஓவையாரின் பாடல்கள் அற்புதம், நல்ல பெண் கவிஞர்

அதன் பின் மு.வைத்தியநாயகி என்றொரு பெண் எழுத்தாளர் உண்டு, அதன் பின் சல்மா போன்றவர்கள் உண்டு

கவிஞர் தாமரை கவிஞர்கள் வரிசை, அந்த வரிசையில் இன்று அவர்தான் கவிப்பேரரசி, கவிராணி

ஊழல் அரசியல் கட்டுரையினை அதிரடியாக எழுதும் சவுக்கு சங்கர் மிக திறமையான எழுத்தாளர் என்றால், சினிமா செய்திகளில் தனி கோலோச்சும் அந்தணன் மிக சிறந்த ரசனையான எழுத்தாளர், அவரை படித்தால் நரசிம்மராவ் கூட சிரித்துவிடுவார், அவ்வளவு ரசனை

நெல்லைக்காரர் எழுத்தில் “சுகா” தனியிடம், பாபநாசம் படத்து வசனங்கள் அதனை உறுதிபடுத்தின, மகா ரசனை அது, நெல்லை மண்ணுக்குரியது

உலக புத்தக தினத்தில் என் நினைவுக்கு வரும் விஷயங்கள் யூத ஞானிகள் முதல் வரலாற்று குறிப்பெடுத்தவர்கள், வள்ளுவன், இளங்கோ, பாரதி, தெய்வ எழுத்தாளன் கண்ணதாசன், ராஜாஜி, கிவாஜ என பலர் நினைவுக்கு வருகின்றார்கள்

சைவ சித்தாந்த கழகத்தில் அற்புதமான தமிழ் புத்தகங்கள் உண்டு

சுஜாதா கண்ணுக்குள் மின்னுகின்றார்

கலைஞரின் பல புத்தகங்கள் வந்து போகின்றன, கொங்கு தமிழில் பெரியார் எழுதிய புத்தகங்களும் உண்டு, அண்ணாவின் புத்தகம் உண்டு

மதனின் எல்லா புத்தகங்களும் அட்டகாச ரகம், அரசியல் விமர்சனத்தில் சோ ராமசாமியினை மிஞ்ச முடியாது, மனிதர் இல்லா சோகம் தாக்குகின்றது.

ஜெயமோகன் ஒரு சுரங்கம் போல, சில நேரம் தங்கம் வரும், வைரம் வரும், அவ்வப்போது வெள்ளி வரும், இரும்பு வரும், ஆனால் பெரும்பாலும் மணல் வரும்

இன்றைய தேதியில் சிலரின் புத்தகங்களுக்காக காத்திருக்க வேண்டுமென்றால் அதில் பா.ராகவன் முதலிடம்

சடையப்ப வள்ளல் கம்பனை பாதுகாத்தது போல காக்கபட வேண்டிய எழுத்தாளர் அவர், ஆனால் இந்த உலகம் அவரை திரை, சின்னதிரைக்கு எழுத்தாளனாக்கி வைத்திருக்கின்றது

கல்கியே படாதபாடுபட்ட தமிழகத்தில் இதெல்லாம் ஆச்சரியமில்லை, ஒரு சடையப்ப வள்ளலின் கொள்ளுபேரன் கிடைத்தால் பா.ராகவன் பெரும் தொண்டு புத்தகதுறைக்கு அற்றுவார்

முகிலின் புத்தகங்களும் எதிர்பார்ப்பை தூண்டுபவை, அகம் புறம் அந்தப்புரம், வெளிச்சத்தின் நிறம் கருப்பு, சரித்திர பயணம் என அவரின் புத்தகங்கள் வாவ் ரகம்

மதன் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை, ஏன் என தெரியவில்லை, ஆனால் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது

ஆட்டோமான் சாம்ராஜ்யம் பற்றி, இஸ்ரேலிய மோஷே தயான் பற்றி தமிழில் இன்னும் புத்தகம் இல்லை, மதனோ, ராகவனோ அல்லது முகில் சிவா எழுதினால் நன்றிகள் கோடி…

ஒரு உண்மையினை ஒப்புகொள்ள வேண்டும், மிக சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் யாரென்றால் ஈழ தமிழர்கள், அந்த புலி, தமிழ்தேசிய அலப்பறைகளை விடுங்கள், இவர்கள் வேறு வகை

புத்தகங்களின் இன்றைய வடிவங்களான இணையத்தில் எழுதுகின்றார்கள், தமிமும் உலக விஷயங்களும் அப்படி கொட்டி எழுதுகின்றார்கள், அவர்கள் தமிழர்கள் என்பதில் மிக்க பெருமை அடையலாம்

தமிழ் எழுத்துக்களில் அவர்கள் எழுதும் தளம் ஜொலிக்கின்றது, கலையரசன் போன்றோர் எல்லாம் ஜெயகாந்தனுக்கு சமம், சந்தேகமின்றி சொல்லலாம்

ரிஷி என்றொருவர் “விறுவிறுப்பு” எனும் இணையபத்திரிகை நடத்தினார், உளவுதுறைகளின் முகங்களை சொல்லி கிழித்தார், அற்புதமான எழுத்து உண்மைகள் அவை, சீமானை முதலில் “அங்கிள் சைமன்” என சொல்லியதே அவர்தான்

சுஜாதா இடத்தினை அவர் நிரப்பும் வாய்ப்பு இருந்தது, அந்த ஆழ்வார்கள் பாடல் மட்டும் இருந்தால் அவர்தான அடுத்த சுஜாதா..

என்ன ஆனாரோ தெரியவில்லை, சொல்லாமல் சன்னியாசம் வாங்கிவிட்டார் , உளவுதுறை அழுத்தமாக இருக்கலாம். ஆனால் அவர் எழுதாததும், அவரின் தலைமறைவும் தமிழ் எழுத்துலகிற்கு பெரும் இழப்பு,அந்த‌ ஆசாமிக்காக தினமும் சாமியிடம் வேண்டிகொண்டிருக்கின்றேன்.

உறுதியாக சொல்லலாம், எழுத்தாளன் என்பவன் தேடி தேடி தேன் எடுப்பவன், அப்படி பல புத்தகங்களை படித்து இனிப்பாக , திகட்டாமல், போரடிக்காமல் படிக்க கொடுப்பவர்கள் எனக்கு தெரிந்து இவர்கள்

நான் கற்ற கைமண் அளவில் இவர்கள் எல்லாம் வருகின்றார்கள், வராத கடலளவில் இன்னும் பலர் விடுபட்டிருக்கலாம், அவர்களை படிக்கும் நேரம் வரும்பொழுது அவர்களும் பட்டியலில் இணையலாம்

வாழ்வில் தனிமையே விதியாக விதிக்கபட்ட ஒரு சபிக்கபட்ட விதி எனக்கு, பெரும்பாலும் தனிமைதான், சிறுவயதிலிருநதே அப்படித்தான்

அந்த தனிமையில் என்னோடு பேசியவர்கள், இன்னும் பேசிகொண்டிருப்பவர்கள் , இன்னும் பேசபோவது புத்தகங்கள்தான்

மனதில் தங்கிய சிலவற்றை சொல்லிவிட்டேன், இன்னும் சொல்லவேண்டியவை ஏராளம் உண்டு

புத்தகம் என்பது கடந்த காலத்தை நிகழ்காலத்தில் காட்டும் கண்ணாடி, அனுபவ அணைகட்டு, சிந்தனையின் விளக்கு

புத்தகம் சிதறிகிடக்காத வீடு வீடே அல்ல, வீட்டில் இருக்க வேண்டிய மகா முக்கியமான அறை புத்தக அறை. இருக்க வேண்டிய அவசியமான பொருள் குறைந்தது 100 புத்தகங்கள்

இப்பொழுது நம் கண்ணில் பட்டுவிட கூடாத புத்தகங்களில் இந்த பழனிச்சாமியின் எழுச்சி உரை, புன்னகை போராளி போன்ற புத்தகங்கள் வருகின்றன, காலம் வரை அப்புத்தகத்தில் விழித்துவிடாத விதி வேண்டும்

இப்பொழுது ரசித்த மிக நல்ல எழுத்து எதுவென்றால் மீன்குழம்பினை சுவையாக்குவது எப்படி என்பதையும், ஹைதரபாத் பிரியாணியினை சமைப்பது எப்படி என்பதையும் சிலர் துல்லியமாக எழுதியிருக்கின்றார்கள்

இப்போதைக்கு பிடித்த எழுத்து அதுதான்

 

கம்பன் கழகங்கள் தமிழகத்திலும் பெருகிட வேண்டும்

Image may contain: 1 person

மலேசியாவில் கம்பன் கழகம் உண்டு, அடிக்கடி கம்பன் புகழைபாடுவார்கள்

இலங்கை கொழும்பிலும் கம்பன் கழகம் உண்டு, கம்பன் சொன்ன வாழ்வியல் நெறிகள் என வள்ளுவனுக்கு அடுத்து அவனை கொண்டாடுகின்றார்கள்

ஆஸ்திரேலியா முதல் பல நாடுகளில் கம்பன் கழகமும் அவனுக்கு விழாக்களும் நடத்தபடுகின்றன‌

தமிழின் சுவையினை சாறு பிழிந்து கொடுத்தவன் என உலகெலாம் அவனை தமிழர் கொண்டாடுவது போலவே முன்பு தமிழகத்திலும் கொண்டாடியிருக்கின்றனர்

எதுவரை? இந்த திராவிட அழிச்சாட்டியம் தலையெடுக்கும் வரை

அவர்கள் அதுவரை கொண்டாடிய கம்பனை பழித்தார்கள், காரணம் கம்பனை பற்றி சொன்னால் கம்ப ராமாயணம் வரும், ராமன் வருவான்

இந்த ஒரு காரணத்திற்காக அந்த கம்பனை விமர்சித்தார்கள், கிழித்தெறிந்தார்கள்

“கம்ப ரசம்” எனும் கீழ்தரமான இலக்கியம் எழுதி கம்பனை கொச்சைபடுத்தினார் அண்ணா, அவரின் அடிபொடிகளும் அதனையே செய்தனர்

கலைஞர் சில இடங்களில் கம்பனை சொன்னார் அத்தோடு சரி

அதன் பின் ராமசந்திரன் ராமனாகவும், ஜெயா சீதையாகவும் போற்றபட்டு பின் என்னவெல்லாமோ ஆயிற்று

திராவிட கும்பல் தொடங்கிவைத்த கம்பன் புறக்கணிப்பில் கம்பனை தமிழகம் மறந்தே விட்டது

ஆனால் திராவிட கும்பல் பாதிப்பு இல்லா வெளிநாட்டு தமிழர்களிடம் கம்பன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான், நம்மை விட அவனை அவர்கள் அட்டகாசமாக கொண்டாடுகின்றார்கள்

இதனால் அவர்கள் தமிழும் அதன் அழகும் நம்மை விட பன்மடங்கு நன்றாய் இருக்கின்றது

திராவிட கும்பல் எவ்வளவு தூரம் கடவுள் புறக்கணிப்பிற்காக அழகிய தமிழ் இலக்கியங்களை கொச்சைபடுத்தி இருக்கின்றன என்பதை சில இடங்களில் உணரமுடிகின்றது

அவர்கள் பாதிப்பில்லா வெளிநாட்டு தமிழர்கள் கம்பனையும் அவன் தமிழையும் அப்படி கொண்டாடுகின்றார்கள், அழகாகத்தான் இருக்கின்றது

வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து இப்படி தமிழக தமிழர்கள் நல்ல விஷயங்களை கற்க வேண்டும்

ஆனால் பிரபாகரன், சயனைடு குப்பி, தற்கொலை படை என ஆபத்தானதை கற்று இன்னும் மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது தமிழகம்

இதனிலிருந்து தமிழரை மீட்டல் வேண்டும்

கம்பன் கழகங்கள் தமிழகத்திலும் பெருகிட வேண்டும், தமிழும் அதன் சுவையும் வளரவேண்டும்

ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை

எப்பொழுதும் யாராவது ஒரு தொடர் எழுதுவார்கள், பத்திரிகை உலகில் அது சகஜம்

ஆனால் தினமணியில் Pa Raghavan புதிதாக ஒரு தொடர் எழுதுகின்றார், விஷயம் ஆன்மீகம் துறவு தத்துவம் பற்றியது.

உண்மையில் இந்து மத தத்துவம் மிக உயர்ந்தது, ஆழமிக்கது. துறவு என்பதற்கும் ஆன்மீகம் என்பதற்கும் அது வகுத்திருந்த எல்லையும் ஆழமும் உயரமும் பெரிது

சிக்கல் என்னவென்றால் யாரும் பாமரருக்கு புரியும் வகை சொல்லவில்லை

எமக்கும் துறவில் ஆசை இருந்தது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை ஒரே மகனை ஏற்காது என்றார்கள். பெற்றோருக்கும் விருப்பமில்லை

சரி காதலில் தோற்றால் துறவறம் செல்லலாம் என தோற்கும் காதலாக செய்தாலும் அடுத்த காதல் வந்ததே தவிர துறவு வரவில்லை

நான் துறவியாக பெரும் விருப்பம் கொண்டவன் என் பெரியப்பா, ஒரே காரணம் சொத்துகள் அவர் வசமாகும் என்பது ஆனாலும் அந்த சண்டாளனும் துறவினை ஒழுங்காக போதிக்கவில்லை

நல்ல குருவும் இல்லை, துறவு புரியவுமில்லை. நாம் துறவியானால் பெரியப்பனுக்கு சொத்து போய்விடும் ஒரு சென்ட் கூட அந்த சண்டாளனுக்கு செல்ல கூடாது எனும் தீவிரமான முடிவெடுத்ததால் துறவுக்கு துறவு சொல்லி ஆயிற்று

ஆனாலும் அவ்வப்போது தேடுவதுண்டு, எல்லா மதங்களின் வாயிலிலும் தேடியிருகின்றேன்

பல சித்தாத்தங்களை படித்தால் பைபிளின் பழைய ஏற்பாடு முழுக்க யூதருக்கானது, புதிய ஏற்பாடு ஒரு மாதிரி பயமுறுத்துவது அதாவது கிறிஸ்துவினை ஏற்காவிட்டால் உனக்கு நரகம் என்பது

பைபிளின் சங்க திருவுரை ஆகமம் என்பதும் , தமிழக சித்தர்களின் பாடலும் வேறல்ல, இரண்டும் சொல்ல வருவது வாழ்க்கை என்பது காற்றை கையில் பிடிப்பதற்கு சமம்

மாபெரும் ஞானி சாலமோனே அதனை சொல்லியிருக்கின்றார்

இதை தவிர பைபிளில் உருப்படியாக படித்த ஆன்மீகம் ஏதுமில்லை

இஸ்லாம் ஒரே கடவுளை போதித்தாலும் யூத சாயல் நிரம்ப இருந்தது

துறவு என்றால் என்ன என்பதை இந்துமதம் எப்படி சொல்லியிருக்கின்றது என தேடினால் ஒன்றும் புரியவில்லை

ஆனால் முதன் முதலில் புரியும்படி ஆண்மீகத்தை போதித்தவர் விவேகானந்தர்

தமிழில் கிருபானந்தவாரி ஓரளவு சொன்னார், பழைய காஞ்சி மகான் சந்திரசேகரன் இன்னும் கொஞ்சம் விளக்கி இருந்தார்

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் இந்துக்களில் எல்லா நதிகரையினையும் தொட்டது, அது துறவை பற்றி மேலோட்டமாக சொன்னது

அந்த வரிசையில் தினமணியில் Pa Raghavan
” யதி” என்றொரு தொடரை எழுதுகின்றார்

துறவு என்பது அடைவது அல்ல உணர்வது என்ற ஒற்றை வரியில் தொடர் டாப் கியரில் எகிறுகின்றது

இந்து மத அபிமானிகள், ஆன்மீக தேடல் கொண்டவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய விஷயம் அது.

(இந்த ஜக்கி, நித்தி , பாபா ராம்தேவ் பேசுவது எல்லாம் ஆன்மீகமே அல்ல, அது வியாபாரம் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல‌)

விவேகானந்தராக, இரண்டாம் கண்ணதாசனாக ஆன்மீக தொடர் எழுதும் குருநாதருக்கு வாழ்த்துக்கள்

ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை, அப்படியும் புரியாவிட்டால் யார் எழுதியும் புரியாது

இது மிகபெரும் தொடராக வரும் என்கின்றார்கள், கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் தொடர்ந்து எழுதபோகின்றார்

அந்த எல்லாம் வல்ல பரம்பொருள் அவருக்கு எல்லா பலனும், நிரம்பிய ஞானமும் அருளட்டும்

 
 

சென்னையில் பார்த்த புத்தக கண்காட்சி

No automatic alt text available.

சென்னையில் பார்த்த விஷயங்களில் குறிப்பிடதக்கது புத்தக கண்காட்சி

மிக அழகான, நேர்த்தியான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். மிக பொருத்தமான இடமும் கூட.

உள்ளே நுழைந்தால் அது ஆயிரம் நூலகங்களை கவிழ்த்துபோட்ட கூடமாக இருந்தது, அத்தனை விதமான புத்தகங்கள் குவிந்து கிடந்தன. கிட்டதட்ட 700 ஸ்டால்கள் இருந்தன‌

இத்தனை பதிப்பகங்கள் உண்டு என்பது அன்றுதான் புரிந்தது.

ஒவ்வொரு புத்தகமும் வாங்க தூண்டியது, ஒரு கண்டெய்னரை கொண்டுவந்து அப்படியே அள்ளிபோட்டு செல்ல மனம் சொல்லத்தான் செய்தது. முடிந்த அளவு குறிப்பிட்ட புத்தகம் சுமார் 20 வாங்கினேன்

புத்தகத்தின் விலை அதிகம் என சொல்லமுடியாது. மிகபெரும் உழைப்பினை கோரிய புத்தகங்கள் ரூ.500 ஆயிரம் என்ற அளவில் இருந்தது மனதை பாதித்தது

உதாரணத்திற்கு நிலமெல்லாம் ரத்தம் புத்தகத்திற்கு Pa Raghavan உழைத்த காலம் 10 ஆண்டுகள், பட்டிருக்கும் பாடுகள் ஏராளம் அதன் விலை வெறும் 500ரூபாய்

அகம் புறம் அந்தபுறம் புத்தக தயாரிப்பிற்கு Mugil Siva பிறந்த உடனே படிக்க ஆரம்பித்திருக்க வேண்டும் அந்த புத்தகம் வெறும் ஆயிரம் ரூபாய்

இப்படியாக பெரும் களஞ்சியங்கள் எல்லாம் சல்லி விலையில் குவிந்திருந்தது, ஒரு பயணமோ அல்லது குடும்பமாக உணவகமோ செல்வதற்கோ பெரும் தொகை தேவைபடும் காலமிது, அதனை ஒப்பிடும்பொழுது இந்த புத்தக விலை நிச்சயம் பெரும் குறைவு

18ம் தேதி மதியம் சென்றபொழுது கூட்டம் அவ்வளவாக இல்லை, நிதானமாக ஒவ்வொரு ஸ்டாலாக சென்று ஒரு சுற்று முடித்தோம். சுற்றும்பொழுதே புத்தங்களை குறித்தாயிற்று பின் அடுத்த சுற்று செல்லும்பொழுது அள்ளியாயிற்று

உலகின் எல்லா சிறந்த நூல்களின் தமிழாக்கமும் இருந்தது, பழம் தமிழ் இலக்கியங்கள் இருந்தன, பக்தி இலக்கியம் இருந்தது, உலக வரலாறு முதல் உலக்கை தத்துவம் வரை கொட்டி கிடந்தது , எல்லா துறைகளுக்கும் எல்லா எழுத்தாளர் எழுதியதும் இருந்தது

புத்தகம் கைக்கு வந்ததும் வாசிக்க தொடங்கினேன் கண்ணதாசனின் மனவாசம் முதலில் கையில் வந்தது

மனிதர் கலைஞரை வனவாசத்தில் திட்டினார் என்பர் சிலர், ஆனால் காமராஜரையே பெரும் வசவில் மனவாசத்தில் திட்டியிருக்கின்றார் கண்ணதாசன், ஏன் என்றால் அவர் அப்படித்தான் “யோவ் நீர் குழந்தைய்யா” என கலைஞர் சொன்ன வரியும் அதில் இருக்கின்றது.

காமராஜரை கண்ணதாசன் அப்படி தூற்றியிருக்கும் வரிகள் ஆச்சரியத்தை கொடுத்தது, ஈவிகேஸ் சம்பத்தை கடலில் கரைத்த பெருங்காயமாக காமராஜர் மாற்றிவிட்டார் என்ற அந்த கோபத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை

மனவாசத்திற்கு அடுத்து Rajathi Salma “இரண்டாம் ஜாமத்து கதைகள்” வாசித்தாகிவிட்டது, பொதுவாக நாவல் வாசிக்கும் பழக்கமில்லை, கற்பனையினை ஏன் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமே அது

ஆனால் அமெரிக்க பல்கலைகழகத்தில் ஏன் அப்புத்தகத்தை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கி வாசித்தால் புத்தகம் அதிர வைக்கின்றது.

இப்படி எல்லாம் அந்த சமூக பெண்கள் நிலை குறித்து எழுதமுடியமா? எழுதிவிட்டு நிம்மதியாக இருக்க முடியுமா? என பல கேள்விகளை எழுப்பியது அந்த நாவல்

நாவல் எழுப்பும் பல கேள்விகள் சாதாரணம் அல்ல, அம்மணி நிச்சயம் நெருப்பாற்றினை நீந்தி இருக்க வேண்டும்

அதனை வாசித்து முடித்ததும் தோன்றிய விஷயம் ஒன்றுதான், ஏதேனும் பண கஷ்டம் வந்தால் இந்நாவலை ஈரானிய அரேபிய மொழியில் எழுதி ஈரான் அரசுக்கும், ஐஎஸ் இயக்கத்திற்கும் அனுப்பி ஆளை காட்டிவிட வேண்டியதுதான், நிச்சயம் பல மில்லியன் தருவார்கள்.

அந்த அளவு பெரும் தீ மூட்டும் விஷயம் அதில் இருக்கின்றது. அடக்கபட்ட பெண்களின் வலியினை சொல்ல இதனை விட இன்னொரு நாவல் இனி வராது.

Rajathi Salma தமிழத்து “தஸ்லிமா நஸ் ரீன்” என்பதில் சந்தேகமில்லை, அவரை பின்பு சந்தித்து புத்தகம் பற்றி சொன்னபொழுது வழக்கமான சிரிப்போடு கடந்து சென்றார், “எவ்வளவு சிக்கலை கடந்தேன் தெரியுமா?” எனும் விரக்தி அச்சிரிப்பில் இருந்தது

Savukku சங்கரின் “உளவு ..அரசியல்.. கைது” புத்தகம் பரபரப்பாக விற்றது, நிச்சயம் அந்த சாதாரண அரசு ஊழியன் பெரும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நின்றது பெரும் விஷயம். அவர் புத்தகத்தை படித்தபொழுது “விசாரணை” படம் பார்த்தது போலே இருந்தது

தன்னுடைய மிகபெரும் போராட்டத்தை அவர் சொன்னாலும் கிட்டதட்ட 25 ஆண்டுகால தமிழக அரசியலும் அதில் சுருக்கமாக வருவதுதான் ஹைலைட்

முகிலின் செங்கிஸ்கான் அதிரவைத்தார், மனிதருக்கு எங்கிருந்துதான் நேரம் கிடைக்குமோ தெரியாது

இப்படியாக சென்னையின் இரவுகளில் இப்புத்தகங்களை படித்துவிட்டு 20ம் தேதி மறுபடியும் புத்தக கண்காட்சிக்கு சென்றாயிற்று, விடுபட்ட புத்தகங்களை வாங்கியாயிற்று

முதன்முறை Kennedi M G அழைத்து சென்றார், இரண்டாம் முறை Senthil Kumar Krishnan கூட வந்தார். “அண்ணே நல்ல புக்கா சொல்லுங்கண்ணே..” என அவர் அரித்துகொண்டே இருந்தார்

புத்தக கண்காட்சியிலும் பலருக்கு நம்மை தெரிந்தது, மிக அருகில் வந்து நீங்கள் தானே ஸ்டான்லி ராஜன் என்றார்கள், அவர்கள் கையில் கத்தி, வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு இல்லாததை உறுதிபடுத்திவிட்டு ஆம் என்றேன், இத்தனை பேருக்கு எப்படி எம்மை தெரிகின்றது என்ற ஆச்சரியமும் இருந்தது

20ம் தேதி சனிகிழமை நல்ல கூட்டம், அலை அலையாக வந்தார்கள், பார்ப்பதற்கு மகிழ்வாக இருந்தது அதில் இளைஞர் கூட்டமும் மிகுந்து இருந்தது மகிழ்ச்சி, தமிழகம் விரைவில் அறிவார்ந்த சமூகமாக மாறும் என்ற ஒளி அங்கு தெரிந்தது

இந்த புத்தக சந்தை எல்லா நகரங்களிலும் நடத்தபட்டால் இன்னும் நல்லது

இந்த கண்காட்சியில் எதிர்கொண்டது ஒரே ஒரு சிக்கல், அதாகபட்டது பதிப்பகம் வாரியாக ஸ்டால் வைத்திருந்தார்களே தவிர குறிப்பிட்ட எழுத்தாளரின் புத்தகத்தை தேட மகா சிரமமாயிற்று

எங்கிருந்தோ வருபவர்களுக்கு பாலகுமாரன், ஜெயகாந்தன், இன்னும் பல ஜாம்பவான்களின் புத்தகத்தை எந்த பதிப்பகம் வெளியிடும் என எப்படி தெரியும்?

உதாரணத்திற்கு ஜெயகாந்தன் புத்தகங்களை தேடினால் மீனாட்சிக்கு போ என்றார்கள், மீனாட்சியில் சென்பகா போ என்றார்கள் இப்படியாக போய் கொண்டே இருந்து கடைசியில் ஜெயகாந்தனை எழுப்பி கேட்கும் அளவு வெறுத்துவிட்டது

ஆக இக்கண்காட்சியில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் புத்தகம் எங்கு கிடைக்கும் என ஒரு பட்டியல் வைத்திருந்தால் இன்னும் நலம், அடுத்தமுறை அந்த பாப்பாசியோ பப்பாளியோ அதனை செய்யும் என் எதிர்பார்க்கலாம்

நிச்சயம் மிக மிக வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரிய வகையில் கண்காட்சி நடந்தது, ஒவ்வொரு புத்தகமும் புதையலாக தெரிந்தது

நிச்சயம் அங்கு வந்து புத்தகம் வாங்கிய எல்லோரும் பேறுபெற்றோர்

தேனிபோல பல விஷயங்களை தேடி எழுதிய அந்த எழுத்தாளர்கள் , அவர்களுக்கு ஆதரவு கொடுத்த பதிப்பகத்தார், கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் என எல்லோருக்கும் மனதில் நன்றி சொல்லியபடி கிளம்பியாயிற்று.

இன்னும் வாங்க வேண்டிய புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றது, அடுத்த வருடம் வாங்க வேண்டும் அதோடு தங்க தலைவி குஷ்புவின் போராட்டமும் தைரியமும் நிறைந்த‌ வாழ்வினை புத்தகமாக எழுதி இதே புத்தக கண்காட்சியில் வைத்து அவர் புகழை பரப்பியே தீரவேண்டும் என்ற சபதத்துடன் சங்கம் விடைபெற்றது.

குஷ்பு பற்றி இன்னும் புத்தகம் இல்லா தமிழ் புத்தக உலகம் எப்படி நிறைவு பெற்றதாக சொல்ல முடியும்? அதனை நிறைவாக்கும் பொறுப்பினை சங்கம் தன் தோளில் சுமக்க ஆரம்பித்தாயிற்று

(மேற்சொன்ன புத்தகங்களை வாசித்தபின் அங்கு நேரமில்லை, இப்பொழுது ஒவ்வொரு புத்தகமாக கடந்து செல்கின்றேன். அற்புதமான விஷயங்கள் திகைக்க வைக்கின்றன, கலைஞரின் நெஞ்சுக்கு நீதியும் அவரின் அற்புதமான பதில்களும் கொண்டாட வைக்கின்றன‌

ஒவ்வொரு புத்தகம் கடக்கும்பொழுதும் பின்னர் பகிர்ந்துகொள்கின்றேன்.)

 

சென்னை புத்தக கண்காட்சி 2018

No automatic alt text available.

சென்னையில் புத்தக கண்காட்சி நடக்கின்றது, புத்தகம் என்பது மனிதனை செதுக்கும் விஷயம், அந்த சம்பவங்கள் காட்சிகளுக்குள்ளே உங்களை அழைத்து செல்லும். புத்தகம் படிக்க படிக்க சிந்தனை பெருகும், இந்த உலகமே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக படும், வாழ்வு போரடிக்காது

ஒரு நல்ல‌ புத்தகம் வாசிப்பது என்பது பலநூறுபேரிடம் மனதுவிட்டு பேசுவதற்கு சமம், அவ்வளவு அனுபவத்தை கொடுக்கும்

நல்ல புத்தகம் போல தோழனுமில்லை, மனதிற்கு மருந்துமிலை, மகிழ்வுமில்லை வழிகாட்டியுமில்லை

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி, தமிழகம் அறிவார்ந்த சமூகமானால் கொண்டாடபட்டிருக்க வேண்டும்

ஊடகங்கள், செய்திதாள்கள், ரேடியோக்கள் எல்லாம் அதனை மிகபெரும் அளவில் பிரபலபடுத்தியிருக்க வெண்டும்

ஆனால் அவற்றில் என்ன நடக்கின்றது? போலி அரசியல் பரபரப்பு, நாடக சினிமா வெளியீட்டு செய்தி என அது ஏதோ செய்து கொண்டிருக்கின்றது. இவை எல்லாம் இம்மக்களுக்கு அந்த ஊடகம் செய்யும் துரோகங்கள்

பாம்பு கூட பழைய எற்பாட்டில் மனிதனுக்கு அறிவு வரவேண்டும் என ஆசைபட்டதாம், இவர்களுக்கு அந்த ஆசை கூட இல்லை

புத்தக கண்காட்சி நிறைந்து வழிய வேண்டிய சமூகத்தில் திரையரங்கும் அரசியல்கூட்டமும் நிரம்பி வழிந்தால் இச்சமூகம் சரியில்லை என்றே பொருள்

பாரதி சாகும்பொழுது 4‍ பெரும், ஜெயகாந்தன் சாகும்பொழுது 40 பேர் என கூடிய சமூகம் இது. இங்கு புத்தக கண்காட்சிக்கு வரவேற்பு இருக்கும் என்றால் எப்படி??

எதிர்பார்ப்பது நிச்சயம் தவறுதான்.

ஆனால் நம் கடமையினை நாம் செய்வோம், முடிந்தவர்கள் அனைவரும் நிச்சயம் இப்பொங்கலுக்கு அங்கு செல்லுங்கள், குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் நீங்கள் செய்ய வேண்டிய பெரும் கடமை நல்ல புத்தகங்களை அடையாளம் காட்டுவது

ஆசிரியர்களுக்கும் இக்கடமை நிச்சயம் உண்டு

ஆக பெற்றோர்களே வருங்கால தலைமுறையாவது நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ள அவர்களை அழைத்து சென்று புத்தகம் வாங்க பயிற்றுவியுங்கள்

விரைவில் சென்னை வரும்பொழுது நிச்சயம் ஓடிசென்று நல்ல புத்தகங்களை வாங்க வேண்டும்

எமது அபிமானத்திற்குரியவர்கள் வரிசையில் பழைய எழுத்தாளர்கள் புத்தகம் எல்லாம் வாசித்தாயிற்று. சுஜாதா , மதன் போன்ற ஜாம்பவான்களின் புத்தகம் விடுபட்டிருக்கின்றது வாங்க வேண்டும்

கலைஞரின் அட்டகாசமாக அரசியல் கவிதைகள் புத்தகமாக உண்டு என செய்தி, அப்படி இருந்தால் வாங்க வேண்டும் கிடதட்ட 80 ஆண்டு தமிழகம் அதிலே வந்து அமர்ந்துவிடும்

ஜெயா பற்றிய வாசந்தி புத்தகம் வாங்கும் திட்டம் உண்டு, முகிலின் பல புத்தகங்களும், சொக்கனின் மொஸாட்டும் முதலிடத்தில் இருக்கின்றன‌

காவல் கோட்டம் போன்ற புத்தகங்களும் வாங்க வேண்டும், பெரியாரின் புத்தகங்கள் நல்ல விஷயம். ஆனால் இன்றிருக்கும் திராவிட எழுத்தாளர்கள் எல்லாம் பெரும் பொய்யினை எழுதுவதால் அப்பக்கம் செல்லும் திட்டமில்லை, அதனை வாசித்தால் நாமே நம் தலையில் மண் அள்ளி போடுவதற்கு சமம், ஒரு குறுகிய வட்டத்திலே இருப்பார்கள். பெருந்தன்மை என்பது அதில் வராது

அதில் பாமரன் என்பவரின் எழுத்து மட்டும் தனித்து நிற்கும், தமிழகத்து உண்மையான பெரியாரிஸ்ட் அவர்தான். அதுவும் அவர் கம்யூனிச அபிமானி, உண்மையான திராவிட போராளி இன்று இருப்பதில் அவர் ஒருவர்தான். அவர் புத்தகம் இருந்தால் நிச்சயம் வாங்க வேண்டும்

Pa Raghavan எல்லா புத்தகமும் வாங்கி குவித்துவிட வேண்டும், தங்கம் என தெரிந்தபின் அது என்ன டிசைனில் இருந்தால் என்ன? விட கூடாது

Saravanan Chandran புத்தகங்கள் நன்றாய் இருக்கும் என்கின்றார்கள் , அவரின் பதிவுகள் அட்டகாசம் அதனால் அவரின் புத்தகங்களும் சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

பெண் எழுத்தாளார்களில் Rajathi Salma புத்தகம் படிக்க வேண்டும், அமெரிக்க பல்கலைகழகத்தில் குறிப்பெடுக்க வைக்கபட்டிருகும் புத்தகம் அவருடையது, அதனால் தயக்கமின்றி வாங்கலாம்

இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் அந்த கண்காட்சிக்கு வரவேண்டி இருக்கின்றது, இது போக பாலகுமாரனின் உடையார் போன்றவையும் உண்டு, முத்துகுமாரின் அரசியல் புத்தகங்களும் உண்டு.

இந்த உயிர்மை என்ற பதிப்பகம் நமக்கு சரிவராது, ஆனால் ராஜ் சிவா என்பவரின் அட்டகாசமான பறக்கும் தட்டு , வான்வெளி மாயன்கள் விஷயத்தை அவர்ரை தவிர யாரும் எழுதுவதில்லை, இந்த ஒரு காரணத்திற்காக உயிர்மை பக்கம் செல்ல வெண்டி இருக்கின்றது

ஜெயமோகன் என்பவர் தங்க சுரங்கம் போன்றவர் , அதாவது சகட்டு மேனிக்கு மண் , கல், இரும்பு என நிறையவரும் அப்படியே தங்கமும் வரும் சில நேரம் வைரமும் வரும். பிரித்து அறியவேண்டியது நம் பொறுப்பு , அவரின் சில புத்தகங்கள் நிச்சயம் பாராட்டவேண்டியது

இது பொதுவான புத்தக பட்டியல்

இது போக அறிவியல் நூல்கள், வட்டார நூல்கள் என ஏக விஷயங்கள் குவிந்திருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

நெல்லை மக்கள் இருந்தால் உங்களுக்கு சொல்லி கொள்வது , நம் மனதை அப்படியே நெல்லைக்கு அள்ளி செல்வது சுகா என்பவரின் எழுத்துக்கள்

நெல்லை தமிழ் என்பதல்ல விஷயம், அந்த மண்ணுக்குரிய நகைச்சுவை, கிண்டல், அழுகை , சிரிப்பு, உருக்கம் என எல்லாவற்றையும் கொட்டி எழுதுவார், அவரின் “மூங்கில் முடிச்சு”, “தாயார் சந்நதி” போன்றவை சிலாகிக்க வைப்பவை

மிக அருமையான எழுத்தாளர், இசை ஞானம் உள்ளவர். அவர் எழுத்தாளராகவே இருக்கலாம் ஆனால் அது சோறு போடாது அல்லவா? அதனால் சினிமாவில் இருக்கின்றார் சதிலீலாவதியில் இருந்து பாபநாசம் வரை கமல்ஹாசனோடு பயணிக்கின்றார், தூங்காவனத்தில் கூட ஒரு சீனில் வந்தார்

மனிதர் நெல்லைக்காரர் என்பதில் நெல்லையர் பெருமைபடலாம், முகில் சிவா , Mugil Siva கூட தூத்துகுடிதான் நெல்லை பக்கம் சேர்த்துவிடலாம்

இந்த புத்தக கண்காட்சியினை நன்றாக நோக்குங்கள், ஈழ சிக்கல் பற்றி புத்தகம் இருக்கும் எல்லாம் புலிகள் சார்பாக இருக்கும், இந்தியா சார்பாக ஒரு புத்தகமும் இல்லை

Pa Raghavan யுத்தம் சரணம் கச்சாமி போன்ற ஈழ தொடர்கள் நின்றிருக்க கூடாது, அவைகள் ஏன் நின்றது என தெரியவிலை. ஈழ விவகார உண்மை தன்மை, புலிகளின் கொடூரத்தை எல்லாம் இங்கு எழுத யாருமில்லை அல்லது விடமாட்டார்கள்

இத்தன்மை மாறவேண்டும், அதற்கும் சில புத்தகம் வரவேண்டும்

அது வரட்டும், சென்னை வாசிகளுக்கு சொல்வது இதுதான். தமிழில் நல்ல புத்தகங்கள் வருவது குறைவு, அந்த எழுத்தாளார்கள் எழுத்தை நம்பி வாழ்பவர்கள்

அவர்களும் தேனியும் ஒரே சாதி, எங்கெல்லாமோ இருந்து தேடி தேடி எடுத்து புத்தகம் எழுதுகின்றார்கள், தேனிக்கள் பரவாயில்லை ஆனால் இவர்கள் மனிதர்கள் வாழ்வின் தேவைகள் அவர்களையும் விரட்டும்

இந்த தமிழ் எழுத்தாளர்களை யார் காப்பாற்ற வேண்டும் என்றால் நாமே காப்பாற்ற வேண்டும், வேறு யார் வருவார்கள்?

சென்னையினை சுற்றி பாருங்கள், பெரும் ஜவுளி கடைகள், பெரும் நகை கடைகள், திரையரங்குகள், உணவகம் இன்னபிற கேளிக்கை மையங்கள் எல்லாம் யார் பணத்தில் உருவானவை? சாட்தாத் மக்கள் பணத்தில்

குடும்பத்தோடு அடிக்கடியோ இல்லை பண்டிகைகளுக்கோ, சொந்த விழாக்களுக்கோ குடும்பத்தோடு சென்று மக்கள் செலவழித்த பணத்தில் உருவானவை

ஆனால் ஒரு எழுத்தாளன் அப்படி பெரும் பணக்காரனாக உருவானான் என தமிழில் காட்ட முடியுமா? சினிமாவிற்கு எழுதியவர் தவிர?

எழுத்தை தமிழன் ஆதரிப்பவன் என்றால் சுஜாதா, ஜெயகாந்தன் எல்லாம் மிகபெரும் கோடீஸ்வரன் ஆகியிருப்பார்கள், அப்படி ஆகவில்லை

சினிமா, நகைகடை, உணவகம் போன்றவற்றை போல எழுத்தாளர்களுக்கு அள்ளி கொடுங்கள் என சொல்லவில்லை மாறாக அவர்கள் எழுத்தை விட்டு வெறுத்து போகாத அளவிற்கு கிள்ளி கொடுங்கள்

இந்த புத்தக கண்காட்சி மாபெரும் வெற்றி அடையட்டும், அதில் நல்ல புத்தகங்கள் இன்னும் வரட்டும்

ஊடகங்களும், இன்ன பிற அமைப்புகளும் இந்த புத்தக கண்காட்சிக்கு பெரும் விளம்பரங்களை கொடுக்கட்டும் அது அவர்கள் கடமை

மற்ற ஊடகங்கள் செய்யாமல் இருந்தால் ஆச்சரியமில்லை, ஆனால் சன்டிவி, கலைஞர் டிவி , தந்தி டிவி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்

எழுத்தாளனின் வலி கலைஞரை விட , முரசொலி மாறனை விட, ஆதித்தனை விட‌ யாருக்கு தெரிந்துவிடும்?

தன் எழுத்தை தலைசுமையாக சுமந்து சென்று விற்று வாழ்வினை தொடங்கியவர் கலைஞர், அந்த மாபெரும் எழுத்தாளனின் வலி நிறைந்த தொடக்கம் அப்படித்தான் இருந்தது

குங்குமம் பத்திரிகையினை தமிழின் ரீடர்ஸ் டைஜஸ்டாக கொண்டுவரவேண்டும் என முரசொலிமாறன் கொண்டிருந்த அக்கறை கொஞ்சமல்ல‌

பெரியார் தொடங்கி வைத்த பாமர தமிழை, மக்கள் தட்டு தடுமாறி வாசிக்க பழகியதை அப்படியே ஏட்டுக்கு கொண்டு வந்த சிபா ஆதித்தனார் தன் எழுத்துக்களை கொண்டு செல்ல பட்டபாடு கொஞ்சமல்ல

இந்த எழுத்தாளர்களின் உழைப்புத்தான் இன்று சன்டிவி, கலைஞர் டிவி, தந்தி டிவி என வளர்ந்து நிற்கின்றது

கல்கி, சீனிவாசன், போன்றோரின் எழுத்துக்கள்தான் பின்னாளில் விகடனாகவும், கல்கியாகவும், குமுதமாகவும் வந்து நிற்கின்றது

இன்று கோலோச்சும் ஊடகம் எல்லாம் அன்று எழுத்தாளார்களால் உருவாக்கபட்டவை

அந்த நன்றியும் அவர்கள் நினைவும் இருந்தால் இந்த ஊடகங்கள் இந்த புத்தக கண்காட்சி செய்திகளுக்கு பெரு முக்கியத்துவம் கொடுக்கட்டும்

எழுத்தாளர்கள் பணி சிரமானது, எல்லோரும் எழுத முடியாது அதற்கு தனி ஆசீர்வாதமும் அறிவும் வேண்டும், அந்த சிந்தனையாளர்களை புறக்கணிக்கும் எந்த சமூகமும் உருப்படாது

அவர்களை ஆதரிப்போம், அடுத்த தமிழக தலைமுறையாவது அறிவுடை தமிழகமாக மலரட்டும்

பொங்கல் பரிசு பொருட்களோடு புத்தகங்களும் இடம் பெறட்டும், பொங்கலோடு அறிவும் பொங்கட்டும்