ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை

எப்பொழுதும் யாராவது ஒரு தொடர் எழுதுவார்கள், பத்திரிகை உலகில் அது சகஜம்

ஆனால் தினமணியில் Pa Raghavan புதிதாக ஒரு தொடர் எழுதுகின்றார், விஷயம் ஆன்மீகம் துறவு தத்துவம் பற்றியது.

உண்மையில் இந்து மத தத்துவம் மிக உயர்ந்தது, ஆழமிக்கது. துறவு என்பதற்கும் ஆன்மீகம் என்பதற்கும் அது வகுத்திருந்த எல்லையும் ஆழமும் உயரமும் பெரிது

சிக்கல் என்னவென்றால் யாரும் பாமரருக்கு புரியும் வகை சொல்லவில்லை

எமக்கும் துறவில் ஆசை இருந்தது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை ஒரே மகனை ஏற்காது என்றார்கள். பெற்றோருக்கும் விருப்பமில்லை

சரி காதலில் தோற்றால் துறவறம் செல்லலாம் என தோற்கும் காதலாக செய்தாலும் அடுத்த காதல் வந்ததே தவிர துறவு வரவில்லை

நான் துறவியாக பெரும் விருப்பம் கொண்டவன் என் பெரியப்பா, ஒரே காரணம் சொத்துகள் அவர் வசமாகும் என்பது ஆனாலும் அந்த சண்டாளனும் துறவினை ஒழுங்காக போதிக்கவில்லை

நல்ல குருவும் இல்லை, துறவு புரியவுமில்லை. நாம் துறவியானால் பெரியப்பனுக்கு சொத்து போய்விடும் ஒரு சென்ட் கூட அந்த சண்டாளனுக்கு செல்ல கூடாது எனும் தீவிரமான முடிவெடுத்ததால் துறவுக்கு துறவு சொல்லி ஆயிற்று

ஆனாலும் அவ்வப்போது தேடுவதுண்டு, எல்லா மதங்களின் வாயிலிலும் தேடியிருகின்றேன்

பல சித்தாத்தங்களை படித்தால் பைபிளின் பழைய ஏற்பாடு முழுக்க யூதருக்கானது, புதிய ஏற்பாடு ஒரு மாதிரி பயமுறுத்துவது அதாவது கிறிஸ்துவினை ஏற்காவிட்டால் உனக்கு நரகம் என்பது

பைபிளின் சங்க திருவுரை ஆகமம் என்பதும் , தமிழக சித்தர்களின் பாடலும் வேறல்ல, இரண்டும் சொல்ல வருவது வாழ்க்கை என்பது காற்றை கையில் பிடிப்பதற்கு சமம்

மாபெரும் ஞானி சாலமோனே அதனை சொல்லியிருக்கின்றார்

இதை தவிர பைபிளில் உருப்படியாக படித்த ஆன்மீகம் ஏதுமில்லை

இஸ்லாம் ஒரே கடவுளை போதித்தாலும் யூத சாயல் நிரம்ப இருந்தது

துறவு என்றால் என்ன என்பதை இந்துமதம் எப்படி சொல்லியிருக்கின்றது என தேடினால் ஒன்றும் புரியவில்லை

ஆனால் முதன் முதலில் புரியும்படி ஆண்மீகத்தை போதித்தவர் விவேகானந்தர்

தமிழில் கிருபானந்தவாரி ஓரளவு சொன்னார், பழைய காஞ்சி மகான் சந்திரசேகரன் இன்னும் கொஞ்சம் விளக்கி இருந்தார்

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் இந்துக்களில் எல்லா நதிகரையினையும் தொட்டது, அது துறவை பற்றி மேலோட்டமாக சொன்னது

அந்த வரிசையில் தினமணியில் Pa Raghavan
” யதி” என்றொரு தொடரை எழுதுகின்றார்

துறவு என்பது அடைவது அல்ல உணர்வது என்ற ஒற்றை வரியில் தொடர் டாப் கியரில் எகிறுகின்றது

இந்து மத அபிமானிகள், ஆன்மீக தேடல் கொண்டவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய விஷயம் அது.

(இந்த ஜக்கி, நித்தி , பாபா ராம்தேவ் பேசுவது எல்லாம் ஆன்மீகமே அல்ல, அது வியாபாரம் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல‌)

விவேகானந்தராக, இரண்டாம் கண்ணதாசனாக ஆன்மீக தொடர் எழுதும் குருநாதருக்கு வாழ்த்துக்கள்

ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை, அப்படியும் புரியாவிட்டால் யார் எழுதியும் புரியாது

இது மிகபெரும் தொடராக வரும் என்கின்றார்கள், கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் தொடர்ந்து எழுதபோகின்றார்

அந்த எல்லாம் வல்ல பரம்பொருள் அவருக்கு எல்லா பலனும், நிரம்பிய ஞானமும் அருளட்டும்

 
 

சென்னையில் பார்த்த புத்தக கண்காட்சி

No automatic alt text available.

சென்னையில் பார்த்த விஷயங்களில் குறிப்பிடதக்கது புத்தக கண்காட்சி

மிக அழகான, நேர்த்தியான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். மிக பொருத்தமான இடமும் கூட.

உள்ளே நுழைந்தால் அது ஆயிரம் நூலகங்களை கவிழ்த்துபோட்ட கூடமாக இருந்தது, அத்தனை விதமான புத்தகங்கள் குவிந்து கிடந்தன. கிட்டதட்ட 700 ஸ்டால்கள் இருந்தன‌

இத்தனை பதிப்பகங்கள் உண்டு என்பது அன்றுதான் புரிந்தது.

ஒவ்வொரு புத்தகமும் வாங்க தூண்டியது, ஒரு கண்டெய்னரை கொண்டுவந்து அப்படியே அள்ளிபோட்டு செல்ல மனம் சொல்லத்தான் செய்தது. முடிந்த அளவு குறிப்பிட்ட புத்தகம் சுமார் 20 வாங்கினேன்

புத்தகத்தின் விலை அதிகம் என சொல்லமுடியாது. மிகபெரும் உழைப்பினை கோரிய புத்தகங்கள் ரூ.500 ஆயிரம் என்ற அளவில் இருந்தது மனதை பாதித்தது

உதாரணத்திற்கு நிலமெல்லாம் ரத்தம் புத்தகத்திற்கு Pa Raghavan உழைத்த காலம் 10 ஆண்டுகள், பட்டிருக்கும் பாடுகள் ஏராளம் அதன் விலை வெறும் 500ரூபாய்

அகம் புறம் அந்தபுறம் புத்தக தயாரிப்பிற்கு Mugil Siva பிறந்த உடனே படிக்க ஆரம்பித்திருக்க வேண்டும் அந்த புத்தகம் வெறும் ஆயிரம் ரூபாய்

இப்படியாக பெரும் களஞ்சியங்கள் எல்லாம் சல்லி விலையில் குவிந்திருந்தது, ஒரு பயணமோ அல்லது குடும்பமாக உணவகமோ செல்வதற்கோ பெரும் தொகை தேவைபடும் காலமிது, அதனை ஒப்பிடும்பொழுது இந்த புத்தக விலை நிச்சயம் பெரும் குறைவு

18ம் தேதி மதியம் சென்றபொழுது கூட்டம் அவ்வளவாக இல்லை, நிதானமாக ஒவ்வொரு ஸ்டாலாக சென்று ஒரு சுற்று முடித்தோம். சுற்றும்பொழுதே புத்தங்களை குறித்தாயிற்று பின் அடுத்த சுற்று செல்லும்பொழுது அள்ளியாயிற்று

உலகின் எல்லா சிறந்த நூல்களின் தமிழாக்கமும் இருந்தது, பழம் தமிழ் இலக்கியங்கள் இருந்தன, பக்தி இலக்கியம் இருந்தது, உலக வரலாறு முதல் உலக்கை தத்துவம் வரை கொட்டி கிடந்தது , எல்லா துறைகளுக்கும் எல்லா எழுத்தாளர் எழுதியதும் இருந்தது

புத்தகம் கைக்கு வந்ததும் வாசிக்க தொடங்கினேன் கண்ணதாசனின் மனவாசம் முதலில் கையில் வந்தது

மனிதர் கலைஞரை வனவாசத்தில் திட்டினார் என்பர் சிலர், ஆனால் காமராஜரையே பெரும் வசவில் மனவாசத்தில் திட்டியிருக்கின்றார் கண்ணதாசன், ஏன் என்றால் அவர் அப்படித்தான் “யோவ் நீர் குழந்தைய்யா” என கலைஞர் சொன்ன வரியும் அதில் இருக்கின்றது.

காமராஜரை கண்ணதாசன் அப்படி தூற்றியிருக்கும் வரிகள் ஆச்சரியத்தை கொடுத்தது, ஈவிகேஸ் சம்பத்தை கடலில் கரைத்த பெருங்காயமாக காமராஜர் மாற்றிவிட்டார் என்ற அந்த கோபத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை

மனவாசத்திற்கு அடுத்து Rajathi Salma “இரண்டாம் ஜாமத்து கதைகள்” வாசித்தாகிவிட்டது, பொதுவாக நாவல் வாசிக்கும் பழக்கமில்லை, கற்பனையினை ஏன் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமே அது

ஆனால் அமெரிக்க பல்கலைகழகத்தில் ஏன் அப்புத்தகத்தை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கி வாசித்தால் புத்தகம் அதிர வைக்கின்றது.

இப்படி எல்லாம் அந்த சமூக பெண்கள் நிலை குறித்து எழுதமுடியமா? எழுதிவிட்டு நிம்மதியாக இருக்க முடியுமா? என பல கேள்விகளை எழுப்பியது அந்த நாவல்

நாவல் எழுப்பும் பல கேள்விகள் சாதாரணம் அல்ல, அம்மணி நிச்சயம் நெருப்பாற்றினை நீந்தி இருக்க வேண்டும்

அதனை வாசித்து முடித்ததும் தோன்றிய விஷயம் ஒன்றுதான், ஏதேனும் பண கஷ்டம் வந்தால் இந்நாவலை ஈரானிய அரேபிய மொழியில் எழுதி ஈரான் அரசுக்கும், ஐஎஸ் இயக்கத்திற்கும் அனுப்பி ஆளை காட்டிவிட வேண்டியதுதான், நிச்சயம் பல மில்லியன் தருவார்கள்.

அந்த அளவு பெரும் தீ மூட்டும் விஷயம் அதில் இருக்கின்றது. அடக்கபட்ட பெண்களின் வலியினை சொல்ல இதனை விட இன்னொரு நாவல் இனி வராது.

Rajathi Salma தமிழத்து “தஸ்லிமா நஸ் ரீன்” என்பதில் சந்தேகமில்லை, அவரை பின்பு சந்தித்து புத்தகம் பற்றி சொன்னபொழுது வழக்கமான சிரிப்போடு கடந்து சென்றார், “எவ்வளவு சிக்கலை கடந்தேன் தெரியுமா?” எனும் விரக்தி அச்சிரிப்பில் இருந்தது

Savukku சங்கரின் “உளவு ..அரசியல்.. கைது” புத்தகம் பரபரப்பாக விற்றது, நிச்சயம் அந்த சாதாரண அரசு ஊழியன் பெரும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நின்றது பெரும் விஷயம். அவர் புத்தகத்தை படித்தபொழுது “விசாரணை” படம் பார்த்தது போலே இருந்தது

தன்னுடைய மிகபெரும் போராட்டத்தை அவர் சொன்னாலும் கிட்டதட்ட 25 ஆண்டுகால தமிழக அரசியலும் அதில் சுருக்கமாக வருவதுதான் ஹைலைட்

முகிலின் செங்கிஸ்கான் அதிரவைத்தார், மனிதருக்கு எங்கிருந்துதான் நேரம் கிடைக்குமோ தெரியாது

இப்படியாக சென்னையின் இரவுகளில் இப்புத்தகங்களை படித்துவிட்டு 20ம் தேதி மறுபடியும் புத்தக கண்காட்சிக்கு சென்றாயிற்று, விடுபட்ட புத்தகங்களை வாங்கியாயிற்று

முதன்முறை Kennedi M G அழைத்து சென்றார், இரண்டாம் முறை Senthil Kumar Krishnan கூட வந்தார். “அண்ணே நல்ல புக்கா சொல்லுங்கண்ணே..” என அவர் அரித்துகொண்டே இருந்தார்

புத்தக கண்காட்சியிலும் பலருக்கு நம்மை தெரிந்தது, மிக அருகில் வந்து நீங்கள் தானே ஸ்டான்லி ராஜன் என்றார்கள், அவர்கள் கையில் கத்தி, வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு இல்லாததை உறுதிபடுத்திவிட்டு ஆம் என்றேன், இத்தனை பேருக்கு எப்படி எம்மை தெரிகின்றது என்ற ஆச்சரியமும் இருந்தது

20ம் தேதி சனிகிழமை நல்ல கூட்டம், அலை அலையாக வந்தார்கள், பார்ப்பதற்கு மகிழ்வாக இருந்தது அதில் இளைஞர் கூட்டமும் மிகுந்து இருந்தது மகிழ்ச்சி, தமிழகம் விரைவில் அறிவார்ந்த சமூகமாக மாறும் என்ற ஒளி அங்கு தெரிந்தது

இந்த புத்தக சந்தை எல்லா நகரங்களிலும் நடத்தபட்டால் இன்னும் நல்லது

இந்த கண்காட்சியில் எதிர்கொண்டது ஒரே ஒரு சிக்கல், அதாகபட்டது பதிப்பகம் வாரியாக ஸ்டால் வைத்திருந்தார்களே தவிர குறிப்பிட்ட எழுத்தாளரின் புத்தகத்தை தேட மகா சிரமமாயிற்று

எங்கிருந்தோ வருபவர்களுக்கு பாலகுமாரன், ஜெயகாந்தன், இன்னும் பல ஜாம்பவான்களின் புத்தகத்தை எந்த பதிப்பகம் வெளியிடும் என எப்படி தெரியும்?

உதாரணத்திற்கு ஜெயகாந்தன் புத்தகங்களை தேடினால் மீனாட்சிக்கு போ என்றார்கள், மீனாட்சியில் சென்பகா போ என்றார்கள் இப்படியாக போய் கொண்டே இருந்து கடைசியில் ஜெயகாந்தனை எழுப்பி கேட்கும் அளவு வெறுத்துவிட்டது

ஆக இக்கண்காட்சியில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் புத்தகம் எங்கு கிடைக்கும் என ஒரு பட்டியல் வைத்திருந்தால் இன்னும் நலம், அடுத்தமுறை அந்த பாப்பாசியோ பப்பாளியோ அதனை செய்யும் என் எதிர்பார்க்கலாம்

நிச்சயம் மிக மிக வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரிய வகையில் கண்காட்சி நடந்தது, ஒவ்வொரு புத்தகமும் புதையலாக தெரிந்தது

நிச்சயம் அங்கு வந்து புத்தகம் வாங்கிய எல்லோரும் பேறுபெற்றோர்

தேனிபோல பல விஷயங்களை தேடி எழுதிய அந்த எழுத்தாளர்கள் , அவர்களுக்கு ஆதரவு கொடுத்த பதிப்பகத்தார், கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் என எல்லோருக்கும் மனதில் நன்றி சொல்லியபடி கிளம்பியாயிற்று.

இன்னும் வாங்க வேண்டிய புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றது, அடுத்த வருடம் வாங்க வேண்டும் அதோடு தங்க தலைவி குஷ்புவின் போராட்டமும் தைரியமும் நிறைந்த‌ வாழ்வினை புத்தகமாக எழுதி இதே புத்தக கண்காட்சியில் வைத்து அவர் புகழை பரப்பியே தீரவேண்டும் என்ற சபதத்துடன் சங்கம் விடைபெற்றது.

குஷ்பு பற்றி இன்னும் புத்தகம் இல்லா தமிழ் புத்தக உலகம் எப்படி நிறைவு பெற்றதாக சொல்ல முடியும்? அதனை நிறைவாக்கும் பொறுப்பினை சங்கம் தன் தோளில் சுமக்க ஆரம்பித்தாயிற்று

(மேற்சொன்ன புத்தகங்களை வாசித்தபின் அங்கு நேரமில்லை, இப்பொழுது ஒவ்வொரு புத்தகமாக கடந்து செல்கின்றேன். அற்புதமான விஷயங்கள் திகைக்க வைக்கின்றன, கலைஞரின் நெஞ்சுக்கு நீதியும் அவரின் அற்புதமான பதில்களும் கொண்டாட வைக்கின்றன‌

ஒவ்வொரு புத்தகம் கடக்கும்பொழுதும் பின்னர் பகிர்ந்துகொள்கின்றேன்.)

 

சென்னை புத்தக கண்காட்சி 2018

No automatic alt text available.

சென்னையில் புத்தக கண்காட்சி நடக்கின்றது, புத்தகம் என்பது மனிதனை செதுக்கும் விஷயம், அந்த சம்பவங்கள் காட்சிகளுக்குள்ளே உங்களை அழைத்து செல்லும். புத்தகம் படிக்க படிக்க சிந்தனை பெருகும், இந்த உலகமே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக படும், வாழ்வு போரடிக்காது

ஒரு நல்ல‌ புத்தகம் வாசிப்பது என்பது பலநூறுபேரிடம் மனதுவிட்டு பேசுவதற்கு சமம், அவ்வளவு அனுபவத்தை கொடுக்கும்

நல்ல புத்தகம் போல தோழனுமில்லை, மனதிற்கு மருந்துமிலை, மகிழ்வுமில்லை வழிகாட்டியுமில்லை

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி, தமிழகம் அறிவார்ந்த சமூகமானால் கொண்டாடபட்டிருக்க வேண்டும்

ஊடகங்கள், செய்திதாள்கள், ரேடியோக்கள் எல்லாம் அதனை மிகபெரும் அளவில் பிரபலபடுத்தியிருக்க வெண்டும்

ஆனால் அவற்றில் என்ன நடக்கின்றது? போலி அரசியல் பரபரப்பு, நாடக சினிமா வெளியீட்டு செய்தி என அது ஏதோ செய்து கொண்டிருக்கின்றது. இவை எல்லாம் இம்மக்களுக்கு அந்த ஊடகம் செய்யும் துரோகங்கள்

பாம்பு கூட பழைய எற்பாட்டில் மனிதனுக்கு அறிவு வரவேண்டும் என ஆசைபட்டதாம், இவர்களுக்கு அந்த ஆசை கூட இல்லை

புத்தக கண்காட்சி நிறைந்து வழிய வேண்டிய சமூகத்தில் திரையரங்கும் அரசியல்கூட்டமும் நிரம்பி வழிந்தால் இச்சமூகம் சரியில்லை என்றே பொருள்

பாரதி சாகும்பொழுது 4‍ பெரும், ஜெயகாந்தன் சாகும்பொழுது 40 பேர் என கூடிய சமூகம் இது. இங்கு புத்தக கண்காட்சிக்கு வரவேற்பு இருக்கும் என்றால் எப்படி??

எதிர்பார்ப்பது நிச்சயம் தவறுதான்.

ஆனால் நம் கடமையினை நாம் செய்வோம், முடிந்தவர்கள் அனைவரும் நிச்சயம் இப்பொங்கலுக்கு அங்கு செல்லுங்கள், குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் நீங்கள் செய்ய வேண்டிய பெரும் கடமை நல்ல புத்தகங்களை அடையாளம் காட்டுவது

ஆசிரியர்களுக்கும் இக்கடமை நிச்சயம் உண்டு

ஆக பெற்றோர்களே வருங்கால தலைமுறையாவது நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ள அவர்களை அழைத்து சென்று புத்தகம் வாங்க பயிற்றுவியுங்கள்

விரைவில் சென்னை வரும்பொழுது நிச்சயம் ஓடிசென்று நல்ல புத்தகங்களை வாங்க வேண்டும்

எமது அபிமானத்திற்குரியவர்கள் வரிசையில் பழைய எழுத்தாளர்கள் புத்தகம் எல்லாம் வாசித்தாயிற்று. சுஜாதா , மதன் போன்ற ஜாம்பவான்களின் புத்தகம் விடுபட்டிருக்கின்றது வாங்க வேண்டும்

கலைஞரின் அட்டகாசமாக அரசியல் கவிதைகள் புத்தகமாக உண்டு என செய்தி, அப்படி இருந்தால் வாங்க வேண்டும் கிடதட்ட 80 ஆண்டு தமிழகம் அதிலே வந்து அமர்ந்துவிடும்

ஜெயா பற்றிய வாசந்தி புத்தகம் வாங்கும் திட்டம் உண்டு, முகிலின் பல புத்தகங்களும், சொக்கனின் மொஸாட்டும் முதலிடத்தில் இருக்கின்றன‌

காவல் கோட்டம் போன்ற புத்தகங்களும் வாங்க வேண்டும், பெரியாரின் புத்தகங்கள் நல்ல விஷயம். ஆனால் இன்றிருக்கும் திராவிட எழுத்தாளர்கள் எல்லாம் பெரும் பொய்யினை எழுதுவதால் அப்பக்கம் செல்லும் திட்டமில்லை, அதனை வாசித்தால் நாமே நம் தலையில் மண் அள்ளி போடுவதற்கு சமம், ஒரு குறுகிய வட்டத்திலே இருப்பார்கள். பெருந்தன்மை என்பது அதில் வராது

அதில் பாமரன் என்பவரின் எழுத்து மட்டும் தனித்து நிற்கும், தமிழகத்து உண்மையான பெரியாரிஸ்ட் அவர்தான். அதுவும் அவர் கம்யூனிச அபிமானி, உண்மையான திராவிட போராளி இன்று இருப்பதில் அவர் ஒருவர்தான். அவர் புத்தகம் இருந்தால் நிச்சயம் வாங்க வேண்டும்

Pa Raghavan எல்லா புத்தகமும் வாங்கி குவித்துவிட வேண்டும், தங்கம் என தெரிந்தபின் அது என்ன டிசைனில் இருந்தால் என்ன? விட கூடாது

Saravanan Chandran புத்தகங்கள் நன்றாய் இருக்கும் என்கின்றார்கள் , அவரின் பதிவுகள் அட்டகாசம் அதனால் அவரின் புத்தகங்களும் சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

பெண் எழுத்தாளார்களில் Rajathi Salma புத்தகம் படிக்க வேண்டும், அமெரிக்க பல்கலைகழகத்தில் குறிப்பெடுக்க வைக்கபட்டிருகும் புத்தகம் அவருடையது, அதனால் தயக்கமின்றி வாங்கலாம்

இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் அந்த கண்காட்சிக்கு வரவேண்டி இருக்கின்றது, இது போக பாலகுமாரனின் உடையார் போன்றவையும் உண்டு, முத்துகுமாரின் அரசியல் புத்தகங்களும் உண்டு.

இந்த உயிர்மை என்ற பதிப்பகம் நமக்கு சரிவராது, ஆனால் ராஜ் சிவா என்பவரின் அட்டகாசமான பறக்கும் தட்டு , வான்வெளி மாயன்கள் விஷயத்தை அவர்ரை தவிர யாரும் எழுதுவதில்லை, இந்த ஒரு காரணத்திற்காக உயிர்மை பக்கம் செல்ல வெண்டி இருக்கின்றது

ஜெயமோகன் என்பவர் தங்க சுரங்கம் போன்றவர் , அதாவது சகட்டு மேனிக்கு மண் , கல், இரும்பு என நிறையவரும் அப்படியே தங்கமும் வரும் சில நேரம் வைரமும் வரும். பிரித்து அறியவேண்டியது நம் பொறுப்பு , அவரின் சில புத்தகங்கள் நிச்சயம் பாராட்டவேண்டியது

இது பொதுவான புத்தக பட்டியல்

இது போக அறிவியல் நூல்கள், வட்டார நூல்கள் என ஏக விஷயங்கள் குவிந்திருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

நெல்லை மக்கள் இருந்தால் உங்களுக்கு சொல்லி கொள்வது , நம் மனதை அப்படியே நெல்லைக்கு அள்ளி செல்வது சுகா என்பவரின் எழுத்துக்கள்

நெல்லை தமிழ் என்பதல்ல விஷயம், அந்த மண்ணுக்குரிய நகைச்சுவை, கிண்டல், அழுகை , சிரிப்பு, உருக்கம் என எல்லாவற்றையும் கொட்டி எழுதுவார், அவரின் “மூங்கில் முடிச்சு”, “தாயார் சந்நதி” போன்றவை சிலாகிக்க வைப்பவை

மிக அருமையான எழுத்தாளர், இசை ஞானம் உள்ளவர். அவர் எழுத்தாளராகவே இருக்கலாம் ஆனால் அது சோறு போடாது அல்லவா? அதனால் சினிமாவில் இருக்கின்றார் சதிலீலாவதியில் இருந்து பாபநாசம் வரை கமல்ஹாசனோடு பயணிக்கின்றார், தூங்காவனத்தில் கூட ஒரு சீனில் வந்தார்

மனிதர் நெல்லைக்காரர் என்பதில் நெல்லையர் பெருமைபடலாம், முகில் சிவா , Mugil Siva கூட தூத்துகுடிதான் நெல்லை பக்கம் சேர்த்துவிடலாம்

இந்த புத்தக கண்காட்சியினை நன்றாக நோக்குங்கள், ஈழ சிக்கல் பற்றி புத்தகம் இருக்கும் எல்லாம் புலிகள் சார்பாக இருக்கும், இந்தியா சார்பாக ஒரு புத்தகமும் இல்லை

Pa Raghavan யுத்தம் சரணம் கச்சாமி போன்ற ஈழ தொடர்கள் நின்றிருக்க கூடாது, அவைகள் ஏன் நின்றது என தெரியவிலை. ஈழ விவகார உண்மை தன்மை, புலிகளின் கொடூரத்தை எல்லாம் இங்கு எழுத யாருமில்லை அல்லது விடமாட்டார்கள்

இத்தன்மை மாறவேண்டும், அதற்கும் சில புத்தகம் வரவேண்டும்

அது வரட்டும், சென்னை வாசிகளுக்கு சொல்வது இதுதான். தமிழில் நல்ல புத்தகங்கள் வருவது குறைவு, அந்த எழுத்தாளார்கள் எழுத்தை நம்பி வாழ்பவர்கள்

அவர்களும் தேனியும் ஒரே சாதி, எங்கெல்லாமோ இருந்து தேடி தேடி எடுத்து புத்தகம் எழுதுகின்றார்கள், தேனிக்கள் பரவாயில்லை ஆனால் இவர்கள் மனிதர்கள் வாழ்வின் தேவைகள் அவர்களையும் விரட்டும்

இந்த தமிழ் எழுத்தாளர்களை யார் காப்பாற்ற வேண்டும் என்றால் நாமே காப்பாற்ற வேண்டும், வேறு யார் வருவார்கள்?

சென்னையினை சுற்றி பாருங்கள், பெரும் ஜவுளி கடைகள், பெரும் நகை கடைகள், திரையரங்குகள், உணவகம் இன்னபிற கேளிக்கை மையங்கள் எல்லாம் யார் பணத்தில் உருவானவை? சாட்தாத் மக்கள் பணத்தில்

குடும்பத்தோடு அடிக்கடியோ இல்லை பண்டிகைகளுக்கோ, சொந்த விழாக்களுக்கோ குடும்பத்தோடு சென்று மக்கள் செலவழித்த பணத்தில் உருவானவை

ஆனால் ஒரு எழுத்தாளன் அப்படி பெரும் பணக்காரனாக உருவானான் என தமிழில் காட்ட முடியுமா? சினிமாவிற்கு எழுதியவர் தவிர?

எழுத்தை தமிழன் ஆதரிப்பவன் என்றால் சுஜாதா, ஜெயகாந்தன் எல்லாம் மிகபெரும் கோடீஸ்வரன் ஆகியிருப்பார்கள், அப்படி ஆகவில்லை

சினிமா, நகைகடை, உணவகம் போன்றவற்றை போல எழுத்தாளர்களுக்கு அள்ளி கொடுங்கள் என சொல்லவில்லை மாறாக அவர்கள் எழுத்தை விட்டு வெறுத்து போகாத அளவிற்கு கிள்ளி கொடுங்கள்

இந்த புத்தக கண்காட்சி மாபெரும் வெற்றி அடையட்டும், அதில் நல்ல புத்தகங்கள் இன்னும் வரட்டும்

ஊடகங்களும், இன்ன பிற அமைப்புகளும் இந்த புத்தக கண்காட்சிக்கு பெரும் விளம்பரங்களை கொடுக்கட்டும் அது அவர்கள் கடமை

மற்ற ஊடகங்கள் செய்யாமல் இருந்தால் ஆச்சரியமில்லை, ஆனால் சன்டிவி, கலைஞர் டிவி , தந்தி டிவி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்

எழுத்தாளனின் வலி கலைஞரை விட , முரசொலி மாறனை விட, ஆதித்தனை விட‌ யாருக்கு தெரிந்துவிடும்?

தன் எழுத்தை தலைசுமையாக சுமந்து சென்று விற்று வாழ்வினை தொடங்கியவர் கலைஞர், அந்த மாபெரும் எழுத்தாளனின் வலி நிறைந்த தொடக்கம் அப்படித்தான் இருந்தது

குங்குமம் பத்திரிகையினை தமிழின் ரீடர்ஸ் டைஜஸ்டாக கொண்டுவரவேண்டும் என முரசொலிமாறன் கொண்டிருந்த அக்கறை கொஞ்சமல்ல‌

பெரியார் தொடங்கி வைத்த பாமர தமிழை, மக்கள் தட்டு தடுமாறி வாசிக்க பழகியதை அப்படியே ஏட்டுக்கு கொண்டு வந்த சிபா ஆதித்தனார் தன் எழுத்துக்களை கொண்டு செல்ல பட்டபாடு கொஞ்சமல்ல

இந்த எழுத்தாளர்களின் உழைப்புத்தான் இன்று சன்டிவி, கலைஞர் டிவி, தந்தி டிவி என வளர்ந்து நிற்கின்றது

கல்கி, சீனிவாசன், போன்றோரின் எழுத்துக்கள்தான் பின்னாளில் விகடனாகவும், கல்கியாகவும், குமுதமாகவும் வந்து நிற்கின்றது

இன்று கோலோச்சும் ஊடகம் எல்லாம் அன்று எழுத்தாளார்களால் உருவாக்கபட்டவை

அந்த நன்றியும் அவர்கள் நினைவும் இருந்தால் இந்த ஊடகங்கள் இந்த புத்தக கண்காட்சி செய்திகளுக்கு பெரு முக்கியத்துவம் கொடுக்கட்டும்

எழுத்தாளர்கள் பணி சிரமானது, எல்லோரும் எழுத முடியாது அதற்கு தனி ஆசீர்வாதமும் அறிவும் வேண்டும், அந்த சிந்தனையாளர்களை புறக்கணிக்கும் எந்த சமூகமும் உருப்படாது

அவர்களை ஆதரிப்போம், அடுத்த தமிழக தலைமுறையாவது அறிவுடை தமிழகமாக மலரட்டும்

பொங்கல் பரிசு பொருட்களோடு புத்தகங்களும் இடம் பெறட்டும், பொங்கலோடு அறிவும் பொங்கட்டும்

ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது….

Image may contain: 1 person, outdoor

இந்த ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது, எதிலிருந்து ஆகின்றது என்றால் மோடியினை புகழ்ந்து வைரமுத்து ஏதோ சொல்லபோக, அதிலிருந்து அய்யோ இவன் ஞானபீட விருதுக்கு அடிபோடுகின்றான் என கிளம்பிவிட்டார்கள்

இவர்களை நன்றாக கவனித்துபார்த்தால் ஒப்பாரி எப்படி வருகின்றது தெரியுமா?

அசோக மித்திரன், ஜாணகிராமன், சுந்தர ராசமாசி, லாசரா போன்றோருக்கு கொடுக்காத ஞானபீடம் எப்படி வைரமுத்துவிற்கு செல்லலாம் என கிளம்புவார்கள்

தமிழில் இதுவரை இருவர்தான் ஞானபீட விருது பெற்றிருக்கின்றார்கள் ஒருவர் அகிலாண்டம் எனும் அகிலன், இன்னொருவர் ஜெயகாந்தன்

இந்த இருவரை தவிர இன்னொரு தமிழன் இன்னும் பெறவில்லை, வைரமுத்துவின் எழுத்துக்கள் ஒன்றும் தரம் தாழ்ந்தவை அல்ல‌

ஜெயகாந்தனின் எழுத்து, இளையராஜாவின் இசை போல வைரமுத்துவின் எழுத்துக்கள் எளியமக்களின், அடித்தட்டு மக்களின் வாழ்வில் கலந்து வருவது.

அவரின் கிராமத்து காவியமான கள்ளிகாட்டு இதிகாசம் எல்லாம் தனித்து நிற்கும் ரகம்

பின்னர் ஏன் இவர்கள் குதிக்கின்றார்கள்? அதை சொல்ல இங்கு ஒருவருமில்லை, ஏன் வழக்கமாக குதிக்கும் அல்ட்ராசிட்டிகளும் இதில் இல்லை

கலைஞர் இருந்திருந்தால் ஒரே போடாக தன் வழக்கமான ஸ்டைலில் போட்டு அடித்திருப்பார், இதெல்லாம் அவருக்கான ஏரியா

எப்படி சொல்லியிருப்பார்?

“அன்புதம்பி வைரமுத்து மீது பெரும் சர்ச்சைகள் வருவதை கேள்விபட்டேன், இது இன்றல்ல நேற்றல்ல என்றுமே எழுத்தும் இலக்கியமும் பாடலும் ஒரு சாதிக்கு மட்டும் உரித்தான சொத்து என சொல்லும் வர்க்கம் அது

அதனை உடைத்து எழும்பிய அண்ணா போன்றவர்கள், என்போன்றவர்களை இங்கு ஒரு மாதிரித்தான் ஒதுக்குவார்கள்,

என்னைபோலவே சிவாஜிகணேசனை நீங்களும் நேசிப்பீர்கள், ஆனால் அவருக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவிலை? ஏன் என்றால் அவர் பராசக்தியில் பகுத்தறிவு பேசியவர் என்பதற்காக‌

அதில் வைத்த வஞ்சமே அவரை எகிப்தியன், பிரான்ஸ்காரன் எல்லாம் கொண்டாட வைத்தபின் இங்கு அதிர்வு ஆயிற்று

எளிய மக்களின் இசையினை உலகறிய வைத்த இளையராஜாவிற்கு ஒரு அங்கீகாரம் உண்டா? தமிழன் தம்பி ரகுமானுக்கு அங்கீகாரம் உண்டா?

ஆனால் வடநாட்டவருக்கு கிடைக்கும் அங்கீகாரமே வேறு, இங்கு தமிழ் உயர்சாதி கலைஞர்களை அவர்கள் அங்கீகரிப்பதே வேறு

என்றோ செத்த தியாகராஜருக்கு திருவாரூரில் விழுந்து விழுந்து விழா எடுப்பவர்கள், தம்பி இளையராஜாவினை கண்டுகொள்வார்களா என்றால் இல்லை

எதிர்முகாம் என்றாலும், என்னை வயிறெறிய திட்டியவர் என்றாலும் , சாபம் பல இட்டவர் என்றாலும் ,சேறு பூசினாலும், அந்த சேற்றிலே மலர்ந்த செந்தாமரையின் தமிழை ரசிப்பவன் நான்,

அந்த பெண் கவிஞரின் பாடல்களை நிரம்ப பாராட்டுபவன் நான், ஆம் அந்த கவியரசி தாமரை என்பவருக்கு ஏதாவது தேசிய விருது கொடுத்தார்களா? மாட்டார்கள்

அருமை அண்ணாவினை விட ஒரு எழுத்தாளன் உண்டா? அவருக்கு விருது என ஒரு குப்பி கொடுத்திருப்பார்களா?

அதேதான் இங்கு தம்பி வைரமுத்துவிற்கும் நடக்கின்றது, அவன் எழுதிய காவியங்களில் என்ன குறை கண்டார்கள்? எளிய மக்களின் கிராம வாழ்வினை அவனை விட தெளிவாக பதித்தது யார்?

ஆனால் விருது என்றவுடன் அசோகமித்திரன், ஜாணகிராமன், சுந்தர ராமசாமி என கிளம்புவது ஏன்?

ஏன் என்றால் அவர்கள் எல்லாம் பிராமணர்கள், உயர் சாதியினர், அவர்கள் படைத்ததுதான் இலக்கியமாம், தாழ்த்தபட்டவன் படைத்தது இலக்கியமே இல்லையாம்

இளையராஜா இசையினையே இன்னும் ஒப்புகொள்ளா வர்க்கம், இந்த வைரமுத்துவின் எழுத்தை மட்டும் அங்கீகரிக்குமா?

சூத்திரன் ஒருவன் பிராமணனுக்கு மேல் கலைவடிவங்களை படைப்பாதா? எனும் ஆற்றாமையும், வேதனையும், எரிச்சலுமே இந்த சர்ச்சைகளுக்கு காரணம்

தம்பி வைரமுத்து சூத்திரன் என்பதாலும், பெரியார் வழியில் என் கைபிடித்து நடந்ததாலும், பெரியார் படத்திற்கு பகுத்தறிவு பாடல் எழுதியதாலும் இந்த ஆரியர்களால் குதறபடுகின்றானே அன்றி வேறல்ல தமிழகமே

தாழ்த்தபட்ட மாணவி மருத்துவ கல்விபடிக்கவே விடாதவர்கள், தாழ்த்தபட்டவனுக்கு விருது அதுவும் உயர்விருது தர எப்படி ஒப்புகொள்வார்கள்?, செய்யவே மாட்டார்கள்

அவர்களிடம் நியாயம் கேட்பது, கடலுக்குள் நன்னீர் தேடுவதற்கு சமம்

இவர்கள் ஒப்புகொள்ளாவிட்டால் வைரமுத்து படைப்பாளி ஆகமாட்டாரா?, “மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு..” என்ற அவரின் வரிகள் போல, எங்கிருந்தாலும் தனி கம்பீரமும் தமிழ் அழகு கொண்ட தனித்துவமாக வைரமுத்து மிளிர்வார் என்பதில் சந்தேகமில்லை”

 

ஜெயமோகன் ஒருவரே இலக்கியவாதி????

கம்பன் முதல் இந்த நூற்றாண்டில் செத்துபோன பாரதி, பாரதி தாசன், அகிலன் , மு.வரதராசனார், கல்கி, ஜெயகாந்தன் , அண்ணா, சுஜாதா, கண்ணதாசன் உட்பட பலரை எழுப்பி வைத்து ஒரு விஷயம் சொல்லவேண்டி இருக்கின்றது

இந்த உலகில் கவிஞன் என்றால் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளன் என்றால் ஜெயமோகனும் அவர் குரு சுந்தர ராமசாமியும்.

நீங்கள் எல்லாம் அவர்கள் முன் அற்ப பதர்கள். புரிகின்றதா? ஒழுங்காக ஒருமுறை வந்து நாங்கள் எல்லாம் கவிஞனோ எழுத்தாளனோ இல்லை ஜெயமோகன் ஒருவரே இலக்கியவாதி என சொல்லிவிட்டு செத்துபோங்கள்….


விஷ்ணுபுரம் விருதினை விட அந்த ஞானபீடம் என்ன பெரிய விருதா?

வேண்டுமென்றால் அந்த விஷ்ணுபுர விருதினை வைரமுத்துவிற்கு அளிக்காமல் அவரை பழிவாங்கலாம் சுயமோகன் சார்

இந்தமாதிரி ஆட்கள் இருந்தால் கன்னியாகுமரி பக்கம் ஒக்கி புயல் ஏன் வராது?

இந்த சீமான் கோஷ்டிகள் ஒரு பக்கம் வெறிநாய் தொந்தரவு என்றால் இந்த சுயமோகன் & விஷ்ணுபுர‌ இலக்கிய கொசுகடி இன்னொருபுறம், பாவம் தமிழன்


 

ஸ்டெல்லா புரூஸின் மறைவு

தமிழில் பல வகை எழுத்தாளர்கள் உண்டு, ஆரவாரமான சிலர் வெளியில் தெரிவார்கள், அமைதியான சிலர் தெரியமாட்டார்கள்

ஆனால் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை எழுதி சம்பாதித்திருக்கவே மாட்டார்கள், தமிழில் எழுதி ஒரு பைசா சம்பாதிக்கமுடியாது என்பது பெரும் எழுத்தாளார்கள் ஒப்புகொண்டது

விவசாயினை விட மோசமான நிலையில் இருப்பவன் தமிழ் எழுத்தாளன்

அப்படி அந்த எழுத்தாளரும் இருந்தார், அவர் பெயர் ராம் மோகன் ஆனால் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார்

கவிதை எழுதுவார், கதை எழுதுவார் ஆனந்த விகடனில் கூட தொடர் எல்லாம் எழுதினார்

வாசகியே மனைவியானார், எல்லாம் நன்றாய் சென்றுகொண்டிருந்த காலத்தில் சிறுநீரக கோளாறில் மனைவி இறந்துவிட கொஞ்சநாளில் ஸ்டெல்லா புரூசும் தற்கொலை செய்துகொண்டார்

நல்ல எழுத்தாளன் வறுமையில் வாடுவதும், அல்பாயிசில் போவதும் மன்னர் காலத்தில் இருந்து, பாரதி காலம் என தொடர்ந்து இன்றுவரை நடைபெறுகின்றது, தமிழக சாபம் அது

எந்த தமிழ் எழுத்தாளனும் அதற்கு தப்பமுடியாது

அந்த ஸ்டெல்லா புரூஸின் மறைவு அன்று எழுத்துலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியடு, இன்று அவர் இல்லை

இந்த வேலைக்காரன் படத்தில் தம்பி ராமையாவிற்கு அந்த பெயரை இயக்குநர் ஏன் சூட்டினார் என தெரியவில்லை. என்ன காரணம் எனவும் தெரியவில்லை

அப்படம் கொடுத்த தாக்கத்தில் ஸ்டெல்லா புரூசின் எழுத்தும் அவரின் தற்கொலையும் கண்முன் வந்து போகின்றது

ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன‌

ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன‌

அவர் பெண்தான் என்றாலும், பெண்களை பற்றி உயர்வாக ஒன்றும் எழுதவில்லை,மாறாக சண்டாளி, சூர்ப்பநகை என்றெல்லாம் எழுதி நல்ல பெண் இல்லா வீடு புலியின் குகை என்றெல்லாம் எழுதிவிட்டார்

இப்பொழுது ஒருத்தி அப்படி எழுதினால் உடனே பெண் பெயரில் இருக்கும் ஆண் என சீறிவிடுவார்கள்.

ஆக ஒவையார் என்பவர் அக்காலத்திலே பெண் பெயரில் இருந்த ஆணாக இருக்குமோ, அன்றே பேக் ஐடி கலாச்சாராம் இருந்திருகலாமோ என்ற சந்தேகம் எழுகின்றது

அல்லது பெண் அடிமை சொன்ன பார்பான் கும்பலாக அவ்வையார் இருந்திருக்க வேண்டும்

பெண் உரிமை விஷயங்களை எல்லாம் கையில் எழுத்திருக்கும் Devi Somasundaram என்பவரிடம் கேட்டால் சந்தேகம் தீர்ந்துவிடும்.

அம்மையாரே, எம் மனகுழப்பம் தீர்ப்பீரோ?. இந்த ஓளவையார் என்பவர் அன்றே பெண் பெயரில் இருந்த ஆண் கவிஞர்தானே?