இளையராஜா

ஆர்மோனியத்தை நம்பி சென்னை வந்தேன், யாரையும் தேடி செல்லவில்லை : இளையராஜா

இதே இளையராஜா முன்பு சில பேட்டிகளில் பல இசை மேதைகளை தேடி தேடி சென்று கர்நாடக சங்கீதத்தை கூர்படுத்தியதையும் இன்னும் சில இசைஅமைப்பாளர்களிடம் இசையினை மேம்படுத்தியதையும் சொல்லி இருந்தார்

அன்று அவர் சிலரை தேடி சென்றது நிஜம், அன்னக்கிளிக்காக தயாரிப்பாளர் முன் தவமிருந்தது நிஜம்

இளையராஜா சகோதரர்கள் வாய்புக்காக அலைந்தது நிஜம், யாரும் வாயில் வந்து ஊட்டவில்லை

ஆனால் இன்றோ எல்லோரும் என்னை தேடிவந்தார்கள் என்கின்றார் இளையரஜா.

வளர்ந்தபின் ஏணி எனக்கு உதவவில்லை அல்லது ஏணி இல்லாமல் மேலே வந்தேன் என சொல்வது இதுதான்

[ October 16, 2018 ]

============================================================================

இளையராஜா திறமையானவர் சந்தேகமில்லை, ஆனால் தன் வெற்றிக்கு தான் ஒருவனே காரணம் என்பதுதான் அவரின் சறுக்கல்

திரைப்பாடல் என்பது கூட்டுமுயற்சி, கவிஞர் இசை அமைப்பாளர் பாடகர், இசைக்கும் வித்வான்கள் இன்னபிற வித்வான்கள் எல்லோரின் கூட்டுமுயற்சி

இளையராஜாவிற்கு அற்புதமான கவிஞர்கள் பாடகர்கள் கிடைத்தார்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அட்டகாசமான இயக்குநர்கள் கிடைத்தார்கள்

இசையோ, பாடலையோ நிர்ணய்ம் செய்வது படத்தின் கதையே, அதுதான் பாடலையும் இசையினையும் வெற்றி பெற செய்கின்றது

இளையராஜா காலம் வித்தியாசமான காலம், படங்கள் பாடல்களை கொண்டாடிய காலம் என்பதால் பெரும்பாலான கதைகள் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருந்தது

மற்றபடி இளையராஜா ஒருவரே படத்தை தூக்கி நிறுத்தியவர் அல்ல‌

நாயகனோ, முதல் மரியாதையோ, மூன்றாம் பிறையோ, முள்ளும் மலருமோ
இளையராஜா ஒருவருக்காக ஓடியது அல்ல‌

கதையே கலைஞனுக்குள் இருக்கும் திறமையினை வெளிகொண்டு வரும் திறவுகோல் அது இசை அமைப்பாளரோ, இல்லை இயக்குநரோ எதுவோ, கதையே முக்கியம்

கரகாட்டகாரனில் இளையராஜா அவர் பங்கை ஒழுங்காக செய்தார் என்றால், செந்திலும் கோவை சரளாவும் அவர்கள் பங்கை அட்டகாசமாக செய்திருந்தார்கள்

பாடல் என்பதும் கூட்டு முயற்சி, உதாரணத்திற்கு வைரமுத்துவுடன் சேர்ந்திருந்தபொழுது பலமுறை தேசிய விருது வாங்கினார் இளையராஜா, ஆனால் வைரமுத்து பிரிந்தபின் என்னாயிற்று

ஆனால் வைரமுத்து அதன் பின் 5 முறை வாங்கி காட்டினார் என்பது வேறுவிஷயம்

(இதை சொன்னால் நான் சின்மயிக்கு எதிரானவன் என வரிந்து கட்டுவார்கள்)

வைரமுத்துவும் வாலியும் ரகுமானோடு சேர்ந்து அருமையான பாடல்களை கொடுத்தார்கள், ஆனால் ரகுமான் எல்லா புகழும் இறைவனுக்கே என சொல்லிவிட்டு நகர்ந்தார், எங்கும் தான் ஒருவனே காரணம் என சொல்லவில்லை

இளையராஜா திறமையானவர், ஆனால் நான் மட்டுமே என அவர் சொல்வதுதான் சினிமா எனும் கூட்டு துறையில் சரிவராத வாதம்

[October 17, 2018 ]

Image may contain: 1 person, closeup