இன்று சதாம் பிறந்தநாள், அந்த மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

Image may contain: 1 person

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும்,

இந்தியா என் நட்பு நாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன்

காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் போல வலுவான எதிர்சக்தியோ 1990களில் இருந்திருந்தால் அத்தலைவன் வீழ்ந்திருக்க மாட்டான்

சதாமின் வீழ்ச்சி தனிமனித வீழ்ச்சி அன்று , அரபு நாடுகளின் வீழ்ச்சி அவர்களின் சுதந்திரமும் எதிர்காலமும் பறிபோன அவலத்தின் தொடக்கம்

இன்று அந்த மாவீரனின் பிறந்த நாள்

அண்டை நாடுகளில் நாட்டு எண்ணை எல்லாம் அரசனுக்கே என்றபொழுது, என் நாட்டு எண்ணெய் எம் மக்களுக்கே என அரபுலகில் முதலில் அடித்து சொன்னவன் அவன்.

இஸ்ரேல் இருக்கும் வரை அரேபியா அமைதியாய் இராது என மிக துணிவாய் சொன்னவன்

அவன் போராடியதும், வீழ்ந்ததும் நிச்சயம் அவனுக்காக அல்ல அந்நாட்டிற்காக‌

அவன் இருக்கும்வரை மிக முக்கிய பொருளாதார கேந்திரமாக இருந்த ஈராக் இன்று தரித்திர தேசமாயிற்று

இரும்பு கோட்டையாக இருந்த நாடு இன்று ஆளாளுக்கு வந்து அடிக்கும் தமிழக பிஜேபி அளவிற்கு சென்றாயிற்று

அவன் இல்லா இக்காலத்தில் புகழ்பெற்ற டைரிஸ் யூப்ரடிஸ் நதியினை கூட நிறுத்திவிட்டது துருக்கி, அது அப்பகுதியின் கர்நாடகம்

ஈராக்கியர் இன்று படும் அவலம் கொஞ்சமல்ல, பல நாடுகள் அவர்களை குதறுகின்றன, உள்நாட்டு சிக்கல் வேறு

இரும்பு மனிதனாக ஈராக்கை ஆண்டு அதன் அமைதியான வாழ்வினை வளமாக கொடுத்த சதாம் உசேனை இன்றும் தேடுகின்றார்கள்

பாலஸ்தீனியரும், சிரியரும் தங்களை அரண்போல் காத்த சதாமினை இன்றும் நினைக்கின்றார்கள்

அவனோடு மோதினோம் ஆனால் அவன் இருந்திருந்தால் இன்னும் இப்பகுதிக்கு பலமே என மனதார எண்ணுகின்றது ஈரான்

வஞ்சத்தில் வீழ்ந்த அந்த மாவீரனுக்கு இன்று பிறந்த நாள்

இந்தியர் என் சகோதரர் என மார்தட்டி சொன்ன அந்த மாவீரன் இல்லா ஈராக்கில் இன்று இந்தியர் எல்லாம் கொல்லபடுகின்றனர்

அமெரிக்கா தன் அதிகாரத்தை அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் நிறுத்தவேண்டும் என சுயமரியாதையாக போராடிய அவனைப்போல் இனி யார் வருவர்?

கட்டபொம்மனை, மருதிருவரை , திப்பு சுல்தானை நாம் கண்டதில்லை ஆனால் அவர்கள் எல்லோரையும் சதாம் எனும் மாவீரனின் உருவில் கண்டிருக்கின்றோம்

இந்த நூற்றாண்டில் நம் கண்முன் வாழ்ந்த மாபெரும் போராளி அவன்

இன்று அவனுக்கு பிறந்தநாள், அந்த மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

இன்று நொறுக்கபட்டாலும் இன்னொரு நாள் அத்தேசம் எழும்பும் அது சதாமின் வழியிலே நிச்சயம் எழும்பும்

டைக்கிரிஸ் நதி ஓடுமளவும் நெபுகாத் நேச்சர் மன்னனின் புகழ் போல, சிங்கம் சதம் உசேனின் புகழும் வாழும்.

 

சதாம் பற்றிய தொடர்…

ஒரு நண்பர் அழைத்தார், சதாம் உசேன் பற்றிய பதிவு பிரபல சேனல் ஒன்றில் டாக்குமெண்டரியாக வருகின்றது என்றார்

சதாம் உலகறிந்தவர் , யாரும் அவரைபற்றி தொடர் எடுக்கலாம் என்றாலும் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்கள் வரிகள், உங்களிடம் ஏதும் அனுமதி பெற்றார்களா? என்றார்

விஷயம் உறுதிபடுத்தபடவில்லை, யாராவது எதுவும் டிவியில் பார்த்திருப்பின் தயவு செய்து தெரிவியுங்கள். நிச்சயம் ராயல்டி வேண்டுமென்றொ ஏன் என் அனுமதி பெறவில்லை என்றோ மல்லுக்கு நிற்கபோவதில்லை,

அவை எல்லாம் தரமில்லா செயல்கள்

நம்மையும் மதித்து டிவி வரை கொண்டு சென்ற அந்த புண்ணியவான் யாரென பார்க்கவேண்டும், பார்த்து இப்படி எங்கள் தலைவி பற்றியும் தொடராக எடுப்பீர்களா? செலவுகளை எல்லாம் சங்கம் ஏற்கும் என உடனே சொல்லவேண்டும்

ஆக நண்பர்களே, ஏதும் பிரபல சேனல்களில் சதாமினை பற்றி ஏதும் டாக்குமெண்டரி வந்தால், அதில் நம் வார்த்தைகள் வந்தால், தயவு செய்து சொல்லுங்கள்

அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 03

Image may contain: 1 person

தானாக‌ ஆப்கானிஸ்தானில் போரிட்டுகொண்டிருந்த பின்லேடனுக்கு, அவர்களின் தலையீடும்,பின்னர் செய்த ஆர்ப்பாட்டங்களும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது, பிரபாகரனுக்கு இந்தியா மீது வந்த அதே கோபம், கொஞ்ச காலம் அமெரிக்காவின் ஆசிய நிலையங்ளை தாக்கினார், பெரும் சேதங்கள் எனினும் அதிரவைக்கும் தாக்குதல் அல்ல.

ஒரு அடி, மறக்கவே முடியாத பலத்த அடியாக இருக்கவேண்டும்,தழும்பாக பார்த்து பார்த்து அழ வைக்க வேண்டும், அடிக்கடி ராமேஸ்வர மீணவர்களை இலங்கையர் அடிப்பதுபோல அடிக்க முடியாது. ஒரு முறை தான் முடியும், செய்வதை திருந்த செய்யவேண்டும்.

செய்தார், முதன் முறையாக சொந்த மக்களை சொந்த மண்ணில் இழந்தது அமெரிக்கா, உண்மையில் அலறித்தான் போனார்கள். யாரும் எதிர்பார்க்காத அடி அது, குப்புற விழுந்தாலும் முகத்தை துடைத்து கொண்டு திட்டமிட்டார்கள் இதனை வைத்து என்னசெய்யலாம்?

போர் செய்யலாம், இனி யாரும் வாலாட்டாதவாறு ஆழ அடிக்கலாம், இதை எல்லாம் வைத்து பணம் செய்யலாம், 2 என்ன 20 கோபுரங்கள் கட்டலாம், வாய்ப்பினை விடவே கூடாது.

இரட்டை கோபுர அடியில் 3000 பேர் இறந்து விட்டார்களா? பிரச்சினை இல்லை விசாக்களை வழங்கினால் அறிவாளிகள் முதல் அல்லக்கைகள் வரை குவியபோகின்றார்கள்

அதுவரை மேற்காசியாவில் காலூன்ற சரியான காரணம் கிட்டவில்லை, இதோ கிடைத்துவிட்டது இனி பலநாள் கனவான ஆசியாவில் ராணுவதளம் அமைக்கும் திட்டத்தை முடித்துவிடலாம், திரிகோணமலை தவிர கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குள் புகுந்துவிடலாம், பிரபாகரனுக்கு பின் திரிகோண மலையை பார்த்துகொள்ளலாம்.

அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் இனி தீவிரவாதிகள், அவர்களின் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தால் அதிதீவிரவாதிகள், கொள்கைகள், நியாயங்கள்,அனுதாபப்க்கள் எல்லாம் இனி இல்லை, வல்லரசு வகுத்ததே நீதி.

உலகமே அதிர்ந்து குழம்பி, சாப்பிடுவதற்கே வாய்திறக்க அஞ்சிய நேரம், சதாம் மட்டும் சொன்னார் “இதை செய்தவர்களை நான் வரவேற்கிறேன்”, இதுதான் சதாம்.

கண்கள் சிவந்த ஜார்ஜ் புஷ் மனதில் வன்மத்தோடு சொன்னார், அமெரிக்க நீதி என்றால் என்ன என்பதை விரைவில் உலகம் தெரிந்துகொள்ளும், அந்த வாக்கியத்தில் சதாமின் தலைவிதி ஒளிந்திருந்தது.

பெரும் பொருட்செலவோடு களத்தில் இறங்கினார்கள், குற்றவாளி பின்லேடன் என்றார்கள்,ஆப்கன் மீது படையெடுத்தார்கள். அடுத்த தலைமுறை தொழில்நுட்ப ஆயுதங்களை ஆப்கனின் மண்வீடுகளிலும்,இந்துகுஷ் மலைகளிலும் சோதித்தார்கள், பின்லேடனை பிடிப்பதாக சொன்னாலும் அவர்களின் திட்டம் வேறு.

கிரிக்கெட்டில் ஒரு தந்திரம் உண்டு, ரன் எடுக்க திணறும் பேட்ஸ்மேனை ஆட்டம் தெரிந்த பவுலர் அவ்வளவு சீக்கிரம் விக்கெட்டை எடுக்கமாட்டார், அவனை வைத்தே ஒவரை கடத்துவார், ரன் சேராது ஆட்ட நேரம் முடிந்துவிடும். அதேதான் அங்கும் நடந்தது.

பின்லேடனை அன்று பிடிப்பது பெரும் நோக்கமில்லை, அவரது பின்புலங்களை உடைக்கும் நோக்கில் இறங்கினார்கள், ஆப்கானில் தாலிபான்களை தவிர என்ன இருக்கிறது, பணம்பண்ண வழி இல்லை.

பின்லேடனுக்கும்,சதாமுக்கும் தொடர்பு என்றார்கள், ஆதாரம் சிக்கவில்லை. இறுதியாக அஸ்திரத்தினை எடுத்தார்கள். சதாம் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கிறார், ரசாயாண, அணு ஆய்தங்களும் உண்டு.

வரலாற்று முரண், தேடபட்டது பின்லேடன், அவர் இருந்தது ஆப்கானில், ஆனால் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அடிபடபோவது சதாம் உசேன். ஒரு நாட்டின் அதிபர். மக்களின் அபிமான தலைவர். ஒரு வசந்த காலத்தில் அமெரிக்காவால் கொம்பு சீவபட்ட காளை, இன்று அடிமாடு.

சதாம் மறுத்தார், தன்னிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்றார், நீ வைத்திருக்காவிட்டாலும் உன்னுடைய தாத்தா வைத்திருக்கலாம் அல்லவா? என்று சொல்லி புகுந்தார்கள், ஈராக் வீழ்ந்தது, சதாம் அகதி ஆக்கபட்டார்.

ஈராக் எல்லாம் தேடினார்கள் பேரழிவு ஆயுதம் அல்ல, கச்சா எண்ணெயை. கிடைக்க கிடைக்க சந்தோஷ பட்டார்கள். ஆயுதம் என்று அரை பிளேடை கூட எடுக்கவில்லை. ஈராக் மக்களின் அவல வாழ்வு ஆரம்பமானது.

மக்களின் எதிர்ப்பு தீவிரவாதமாக மாறியது, தினசரி குண்டுவெடிப்புகள் வானிலை அறிக்கைபோல தினமும் வாசிக்கபட்டது. இன்று குண்டுவெடித்தது ஆனால் நாங்கள் சாகவில்லை என குழந்தைகள் அப்பாவியாக சொல்லுமளவு நிலமை மோசம்.

உணவு இல்லை,பள்ளிகள் இல்லை என பல கொடுமைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு தொழில் தடை இல்லாமல் நடந்தது, அது எண்ணெய் எடுப்பது.

இறுதியாக சதாமினை தாடியோடு பிடித்தார்கள், 250 பேரை கொன்றார் என அவரது நாட்டின் கோர்ட் அவருக்கு மரணதண்டனை விதித்தது, (பல லட்சம் பேரை கொன்ற ராஜபக்சே நடத்தியது உள்நாட்டுபோராம்)

“நான் ஈராக்கிய அதிபர் , என்றாவது ஒரு நாள் என்நாடு உணர்ச்சிபெறும்” என முழங்கிய சதாம் தூக்கிலடபட்டார். அவரது தூக்கு காட்சியும் ஒளிபரப்பபட்டது, மரண தண்டனையை ஒழித்துவிட்டதாக கூறும் அமெரிக்காவிலும் பலமுறை ஓளிபரப்பபட்டது. பழிவாங்கி விட்டார்களாம்.

அடிபட்டது அமெரிக்கா, அடித்தது பின்லேடன், அவர் இருந்தது ஆப்கன் மலைக்குகை, ஆனால் தண்டிக்கபட்டது சதாம், காரணம் அவரிடம் நியாயம் இருந்ததோ இல்லையோ எண்ணெய் நிறைய இருந்தது.

சதாம் மறைந்தாலும், மக்களின் கோபம் அடங்கவில்லை. முடிவில் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஷியா முஸ்லீம்களின் அரசு அமைக்கபட்டு, அமெரிக்க ராணுவம் வெளியேறியது. காரணம் எண்ணெய் எடுக்கும் பணியில் தடையில்லை, விலையில்லை, தமிழக பாணியில் சொல்வதென்றால் 
“விலை இல்லாத எண்ணெய்”.

இதோடு விட முடியாதல்லாவா? கடைசி சொட்டு பெட்ரோல் கிடைக்கும் வரை அள்ளவேண்ட்டும் அல்லவா?, கப்பல்களில் கொண்டு செல்ல சங்கடபட்டு, குழாய் பதித்து கொண்டு செல்ல முடிவெடுத்தார்கள். இடையில் இருக்கும் நாடு சிரியா.

அந்த அதிபர் கடுமையானவர், அவ்வளவுதான் திடீர் குழுக்கள் உருவாயின, உள்நாட்டு கலவரம் உச்சம் அடைந்தது, ஆச்சர்யமாக அல்கய்தா தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க கிடைத்தது. நிலமை முற்றி அமெரிக்க படை உள்ளே புக முயற்சித்தபொழுது பகிரங்கமாக சவால் விட்டது ரஷ்யா. கொஞ்சம் சீரடைந்திருக்கும் ரஷ்யா. சிரியா அதிபருக்கு ஆயுள் கெட்டி.

ஆளில்லாத காட்டில் ஆட்டம் போடும் சண்டியர் பின்வாங்கினார், ஆனால் உக்ரைனுக்குள் ஆட்டம் ஆரம்பித்தார். ஈராக் எண்ணெய் பூமி என்றால், உக்ரைன், பஞ்சாப் போல கோதுமை பூமி. அதையும் உடைத்து பிடுங்கியது ரஷ்யா

இரும்பு மனிதனாய் ஈராக்கை கட்டியாண்டார் சதாம், ஒரு குண்டுவெடிப்போ பெரும் குழப்பங்களோ இல்லை. வெளிநாட்டு தூதர்களே தயங்கி வந்து சென்ற இரும்புகோட்டை ஈராக், இன்று கோயம்பேடு பஸ்நிலையம் போல ஆகிவிட்டது,யாரும் வரலாம்.

எல்லா நாட்டு ராணுவமும் பிக்னிக் செல்வது போல சென்று அடிக்கின்றார்கள், கேட்க ஆளில்லை, பிரதமரே அடுத்த நாட்டு ராணுவத்தை வெற்றிலை பாக்கு வைத்து வணங்கி அழைக்கின்றார். நல்ல தலைவன் இல்லாத நாடு என்ன ஆகும் என்பதற்கு ஈராக்கை தவிர சொல்ல நாடில்லை.

சதாமை அழிக்க உதவிய தேசங்கள் இன்று அஞ்சி நடுங்குகிறது, சவூதி அரசர் எகிப்தின் உதவியை நாடுகிறார் (அமெரிக்காவிடம் அவர் பட்டது அவருக்கே தெரியும்). ஈராக்கின் குழப்பத்தில் பெட்ரோல் விலை உயர்த்தவேண்டிய கட்டாயத்தில் இந்திய பிரதமரும். கையில் சரவெடியோடு முன்னாள் இந்திய அரசு சகாக்களும் தயாராக இருக்கின்றனர்.

உலகம்,குறிப்பாக அரபுலகம் கடும் பதட்டத்திலே இருக்கிறது, நாம் மட்டும் ஷெரோபாவை மாய்ந்து திட்டுகிறோம், அஜித் அனிஷ்கா பற்றி பெரும் கவலை கொள்கின்றோம். நாம் அப்படித்தான்.

வட எல்லையில் சவூதி காவல் காக்கும் பொழுது, தென் எல்லையில் இரு மனித குண்டிகள் வெடிப்பது சாதாரண அறிகுறி அல்ல.குண்டு வெடிப்பது ஈராக்கோடு நின்றுவிடும் என நினைத்தால் அது பெரும் கனவு மட்டும்.

காரணம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உலகின் 4 மற்றும் 5வது பெரும் எண்ணெய் உற்பத்தி நிலையம் உள்ளது, 2 வருடம் கைகளில் வைத்திருந்தால் 20 வருடம் சண்டையிடும் பணம் அவர்களிடம் சேர்ந்துவிடும். எண்ணெய் மார்க்கெட் அப்படி.

புரியவில்லையா? நம்ம ஊர் சேட் கதைதான், திருட்டு தங்கமோ இல்லை வீட்டுக்காரன் தங்கமோ , தங்கம் கிடைத்தால் சரி.

அதே தான் எண்ணெய் கம்பெனிகளும், சவூதி மன்னர் கொடுத்தாலும் சரி, சோமாலியா கொள்ளியர்கள் கொடுத்தாலும் சரி சந்தோசம், பின்னது மலிவு விலை.

“எங்கள் நாட்டில் விளையும் எண்ணைக்கு நாங்கள் விலை சொல்ல கூடாதா?” என்ற ஒரு மானமுள்ள மனிதனை வீழ்த்த நடந்த நாடகம், இன்று பெரும் சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது, தண்ணீருக்கு நடக்கும் கொலைகளே தீராத பொழுது, எண்ணெய்க்கு நடக்கும் போராட்டம் எரியத்தான் செய்யும்.

ஈராக்கில் வெளிப்படையாக சண்டை நடக்கிறது, மற்ற‌ அரபுலகில் அரசாங்க உளவாளிகளும், தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களும் கண்ணாமூச்சி ஆடுகின்றனர், உறங்கும் எரிமலை அவ்வளவுதான், உறங்கியே விட்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை.

இயற்கையாலும், அரசாலும் புறக்கணிக்கபட்ட நமது பகுதிக்கு இன்று வாழ்வளிப்பவை அரபு நாடுகள். எத்தனையோ குடும்பங்களை வாழவைத்து கொண்டிருக்கும் பகுதிகள் அவை, அப்பகுதியில் அமைதியும் வளமும் நிலவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு என்ன வழி இருக்கின்றது.

இன்று அந்த மாவீரன் இறந்த நாள், என் நெல் என் உரிமை என சொன்ன கட்டபொம்மனை போல, என் நாட்டு எண்ணை எங்கள் உரிமை என சொல்லி தூக்குமேடை ஏறிய அந்த மாவீரனின் நினைவு நாள்

அவன் அரேபிய கட்டபொம்மன், ஈரானை சாய்க்க அமெரிக்காவால் ஏமாற்றபட்ட விருமாண்டி

அவன் இல்லாத ஈராக் சிதைந்து கிடக்கின்றது, ஈராக்கின் ஒரு பகுதி ஈரானின் கட்டுபாட்டில் வந்தாயிற்று, வளமான யூப்ரட்டீஸ் நதி துருக்கி கட்டிய அணையால் வற்றும் போலிருருக்கின்றது

இதையெல்லாம் கேட்க ஆளில்லை , ஆனால் எண்ணெய் மட்டும் எடுத்துகொண்டே இருக்கின்றார்கள்

வடகொரியா போல் ஒரு அணுகுண்டோ, அன்று புட்டின் போல ஒரு அசாத்திய தலைவன் இருந்திருந்தாலோ சதாமின் தலைமுடியினை கூட அமெரிக்காவால் தொட்டிருக்க முடியாது, விதி அது அல்ல.

மாவீரன் சதாம் இறந்திருக்கலாம், ஆனால் அவன் ஆயிரம் சதாம் உசேனாக திரும்பி வருவார்கள், அத்தேசம் நிச்சயம் ஒரு நாள் புத்துயிர் பெரும்

நம் தலைமுறையில் கண்ட அந்த மாவீரனுக்கு வீரவணக்கம்

 

அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 02

Image may contain: 1 person, hat and beard

எல்லா அரபு அரசர்களையும் போலவே ஈரானிய மன்னர் ஷாவும் எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ண முடியாத பணம் வாங்கிகொண்டு, “எண்ணெய் கிடைத்தது எனக்காக “என பாடிக்கொண்டும் ஆடிகொண்டும் இருந்தார்.

ஈரான் ஷியா இஸ்லாமிய மக்களின் நாடு, நமது பாஷையில் சொல்லவேண்டுமென்றால் கிட்டதட்ட “தாழ்த்தபட்ட” இஸ்லாமியர், அவர்களுக்கு ஒரு அடையாளமிட்டு, தலைவராகி புரட்சி செய்து ஷாவையும், அவருக்கு உதவியாக வந்த நாட்டாமையையும் விரட்டி ஈரானை இஸ்லாமிய குடியரசாக்கினார் அயதுல்லா கோமேனி, என்றென்றைக்கும் அவரே ஷியாக்களின் தன்னிகரற்ற தலைவர்,வழிகாட்டி என சகலமும்.

அவர் ஷியாக்களுக்கு வழிகாட்டியது தப்பில்லை, அந்த வழியில் எண்ணெய் வியாபாரம் மட்டுபடுத்தபட்டதுதான் மேற்குலகத்திற்கு தப்பாக தெரிந்தது, கப்பல்களையும், தொழில்நுட்பத்தினை கொண்டு உடனே அடிக்க முடியாது, காரணம் ஈரானின் அந்த பக்கம் சிகப்பு பூதம் சோவியத் யூனியன், எண்ணெய் சோவியத்திற்கு பிரச்சினையே அல்ல, அவர்களின் எண்ணெய் ராசி அப்படி,

ஆனால அமெரிக்கா ரஷ்யர்களுக்கு பிரச்சினை, தமிழக உணர்வாளர்கள் எங்காவது ராஜபக்சேவை தனியே கண்டால் என்ன ஆகும்? அந்த நிலமைக்கு சோவியத் அமெரிக்கவை அடிக்க வாய்ப்பு தேடிய காலம், மாவீரர் அமெரிக்கா உண்மையில் அன்று அஞ்சியது, அறை போட்டு ஆறுமாதம் விவாத்தித்து இறுதியாக ஒரே ஒரு வழியினை கண்டார்கள், கிடைத்தார் சதாம் உசேன்.

மிரட்டியே காரியம் சாதிப்பது அவர்களின் வழக்கம், சதாமிற்கு மிரட்டல் பிடிக்காது என்பதால் , அக்கறையாக “எடுத்து” சொன்னார்கள்,

அயத்துல்லா கோமேனி ஒரு பெரும் ஆபத்து, எங்களுக்கல்ல அரபு தேசத்திற்கு, இனி அடங்கி கிடக்கும் ஷியாக்கள் எல்லாம் உணர்ச்சியால் பொங்குவார்கள், உங்கள் நாட்டிலும் ஏராளமான ஷியாக்கள் உண்டு, பக்கத்து நாட்டு புரட்சியில் உங்கள் நாடு உடையலாம், எங்களுக்கென்ன வந்தது, நீர் நண்பர் அதனால் சொன்னோம், சண்டை என்றால் சொல்லுங்கள், அணுகுண்டு தவிர எல்லாம் தருவோம்,

பதிலுக்கு உங்கள் அன்பு முக்கியம், எண்ணெய் அதனை விட முக்கியம்”

சதாம் யோசிக்கும் முன் கோமேனியின் புதிய ஈரானுக்கும், ஈராக்கிற்கும் எல்லை பிரச்சினை, வன்முறைகள் போராய் வெடித்தது, விடுமா மேற்குலகம் புதிது புதியாய் ஆயுதங்கள் கொடுத்தது சதாமிற்கு, (அயதுல்லா கோமேனியை பழிவாங்குகின்றார்களாம்) 8 ஆண்டுகால போர். களைத்துபோன இருவருமமே முடிவில் ஓய்ந்தார்கள், இருவருக்குமே வெற்றி இல்லை.

விசித்திரமானது என்னவென்றால் இருவருமே இஸ்லாமியர், இருவருமே இனம் வேறு என்றாலும் கொள்கைளில் ஒற்றுமை, ஆனால் கோமேனி முதலிலே உறுதியாக‌ புரிந்துகொண்டார், அமெரிக்க தூதரகம் கூட ஈரானில் இருக்ககூடாது என்றார், சதாமுக்கு இந்த உண்மை புரிய கொஞ்சம் தாமதமானது, விதி முந்திகொண்டது.

போர் எப்படிபட்ட பணக்கார நாட்டையும் அதல பாதாளத்தில் தள்ளும், உருப்படியாக ஒரு யுத்தம்கூட நடத்தாத சீனா, இன்று புதுபணக்கார போதையில் “ஒரு மாதிரி” முறைக்கலாம். முறையான யுத்தம் ஒன்று நடக்கும் பட்சத்தில் அருணாசல பிரதேசம் அல்ல, அரைஞாண் கயிறு கூட வேண்டாம் என்று கதறுவார்கள்.

குவைத் மீது சதாமிற்கு கொஞ்சம் கடுப்பு இருந்தது, ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தது, குர்தீஸ் (ஈராக்கின் சுயாட்சி பகுதி,துருக்கியின் ஆசீர்வாதம் உண்டு) பகுதி பிரச்சினையில் கருத்து தெரிவித்தது என நிறைய இருந்தாலும், போர் நடந்த காலத்தில் குவைத் எல்லையில் ஈராக்கிய எண்ணெய் கிணறுகளை குவைத்திற்கு ஓப்பந்த அடிப்படையில் கொடுத்ததாக பேச்சு உண்டு, ஆதாரம் தேடினால் மலேசிய விமான கதை தான்.

அந்த ஒப்பந்தபடி கிணறுகளை கொடுக்காமல் காலம் தாழ்த்தியது குவைத் என்பார்கள், தாழ்த்த சொன்னது 7 சனிகளில் 2 சனி. இதற்கு இடையில் சதாமை ஆத்திரமூட்டும் செயலை குவைத் மூலம் செய்தார்கள்.

அதாகபட்டது எண்ணெய் எடுக்கும் நாடுகளுக்கு ஒபெக் என ஒரு அமைப்பு உண்டு, அவர்கள்தான் விலை நிர்னயிப்பார்கள், யார் எவ்வளவு எண்ணெய் எடுக்கவேண்டும் என எல்லைகளும் உண்டு.

குவைத் அந்த கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான எண்ணெயை, குறைந்தவிலையில் விற்க தொடங்கியது இது தான் பிரச்சினையின் மூலம், சதாம் வன்மையாக கண்டித்தார், இதனால் அரபுலகம் பொருளாதாரம் பாதிக்கும் என்றார், “உன்போர் உனது கஷ்டம் எங்களுக்கென்ன?” என எல்லோரும் ஒதுங்கினார்கள், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார் சதாம்.

ஒரு கட்டத்தில் பொங்கிய சதாம்,மிக எளிதாக குவைத்தை கைபற்றினார், அது மிக சிறிய நாடு. 19வது மாநிலமாக குவைத் இணைந்தது என்றார்.

பாரதத்தில் விதுரரிடம் கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள்தான் “தோல்வி மனிதனுக்கு வெறியூட்டும், வெறியில் மதி மாறும், எதிரி மேலும் இடங்கண்டு அடிப்பான்,வெறி மேலும் ஓங்கும், இறுதியில் படுகுழியில் மனிதன் வீழ்வான் ,இல்லை எதிரி விழவைப்பான் இந்த அநீதியில் கைதேர்ந்தவன் சகுனி”

அதேதான் சதாமுக்கும் நடந்தது, சகுனி என்ற பெயருக்கு பதிலாக இன்னொரு 3 எழுத்து நாட்டை சேருங்கள், சரியாக பொருந்தும்.

இதனை எதிர்பார்த்த அமெரிக்காவும் , அதற்கு வால் பிடிக்கும் அடிபொடிகளும் பொங்கின, சவூதி மன்னரிடம் பயம்காட்டபட்டது, இன்று குவைத், நாளை நீங்கள். உங்கள் எல்லையெல்லாம் ஈராக்கிய படை, நாங்கள் மட்டுமே உங்களை காப்போம், இடம் மட்டும் தாருங்கள், ஆபத்து நீங்கியதும் சென்றுவிடுவோம், நீர் எங்கள் நண்பன்.

இடையில் உலகெல்லாம் மீடியாக்கள் சதாமினை ஹிடலர் அளவிற்கு தாக்கின,அலறின. பல நியாயமான உண்மைகள் மறைக்கபட்டன. சதாம் ஒரு வெறியர், ஆபத்தானவர். மீடியாக்கள் உருவாக்குவதுதான் செய்தி, உண்மை வெகுதொலைவில் இருக்கும்.

சீனா திபெத்தை விழுங்கியதை கண்டுகொள்ளா மேல்நாடுகள், சதாம் குவைத்தை பிடித்ததை மட்டும் பெரும் ஆக்கிரமிப்பு என உலக செய்தி ஆக்கினர். அவர்கள் ஊடக உலகம் அல்லவா? அப்படித்தான் செய்வார்கள்

முதலில் தயங்கிய சவுதி மன்னர்,பின்னர் தளம் அமைக்க ஒப்புகொண்டார், படை பரிவாரங்களோடு முதலில் வந்தது அமெரிக்க ராணுவம்,பின்னால் வந்தது அராம்கோ போன்ற பரகாசுர எண்ணெய் கம்பெனிகள். அவர்கள் ஏன்? அவர்களும் சண்டையிடுவார்களா என அப்பாவியாக கேட்ட சவூதி மன்னருக்கு கிடைத்த பதில், “சண்டையிட எண்ணெய் வேண்டும், அவர்கள் உற்பத்திசெய்து தருவார்கள் அவ்வளாவுதான்.

(இன்று சதாம் இல்லை, சண்டை இல்லை ஆனால் அராம்கோ போன்ற கம்பெனிகள் மட்டும் சவூதியில் உண்டு)

ஒரு சுபநாளில் களப்பலி ஏதும் கொடுக்காமல் யுத்தம் தொடங்கினார்கள். இவ்வவு நாளும் அடக்கிவாசித்த அமெரிக்கா அப்பொழுது மட்டும் எப்படி தாக்குதலில் இறங்கினார்கள் என்றால் கார‌ணம், சோவியத் எனும் செம்பூதம் குழப்பத்தில் இருந்த காலம், அதாவது அந்திம காலம். எதிர்க்க ஆளில்லை.

குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் அமெரிக்க குழு இருந்தது.

சதாமோ ஒற்றை மனிதர், யாரும் துணைக்கில்லை, ஈரானோடு சண்டையிட்டு களைத்துபோன காலமெனினும் அவர் கலங்கவில்லை, துணிந்தார். எதிர்கொண்டார். சோவியத் பாணியிலான ஸ்கட் ஏவுகனைகள் முதல் பாவித்தார், இஸ்ரேலை தைரியமாக தாக்கினார், முடிந்தவரை களத்தில் முன்னால் நின்றார், அதுதான் அவர் ஸ்பெஷாலிட்டி.

எந்த தலைவனுக்கும் உலகில் இல்லா தைரியம் சதாமிற்கு இருந்தது, யுத்த களத்தின் முன்னால் இருந்து சண்டையிட்டார். அப்படி ஒரு தலைவனை அதன் பின் உலகம் இன்றுவரை காணவில்லை.

ஆனால் அமெரிக்காவும் அதன் அடிப்பொடிகளும் நடத்தியது யுத்தம் என்றாலும், உண்மையில் அவர்கள் செய்தது ஆயுத கண்காட்சி, ஒரு ஆயுத சோதனைகளமும் கூட.

யாரும் உலகினில் எதிர்த்துகூட பேசவில்லை, ராஜிவ்காந்தி மட்டும் பகிரங்கமாக எதிர்த்தார், அவருக்கும் அன்றே முடிவு குறிக்கபட்டிருக்கலாம், யாசர் அராபத்தின் ராஜிவ் பற்றிய எச்சரிக்கை சாதாரணமானது அல்ல.

ஒரு வழியாக தாங்கள் தயாரித்த எல்லா ஆயுதங்களையும் பரிசோதனை செய்தார்கள். உலகிற்கு பயம் காட்டினார்கள். அமெரிக்க டொமோகாக்,பேட்ரியாட் ஏவுகனைகளும், எஃப்16 வகை விமானம். பிரான்சின் ஜாகுவார் விமானம், பிரிட்டனின் டையூன் என பயன்படுத்தி அவர்கள் சண்டையிட்டாலும், உலகிற்கு சொன்னது இதுதான்

“பாருங்கள், எங்களிடம் தரமான யுத்த தளவாடம் உண்டு வந்து வாங்கி செல்லவும், வேறு எங்கும் கிளைகள் இல்லை, தள்ளுபடு உண்டு”

“பேட்ரியாட்” எனும் எதிர்ப்பு ஏவுகனைகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்தது, ஆனால அவர்கள் மிக கவனமாக அதனை பிரித்து அக்குவேறு ஆணிவேறாக அலசி புதிய பெயரில் தாங்கள் அதே ஏவுகனையை தயாரித்த‌ காமெடியும் நடந்தது.

போர் என்ற பெயரில் நடந்த ஆயுத விளம்பரம் கொன்றது 70,000 ஈராக்கிய மக்களை. வேறு வழியின்றி யுத்தத்தினை நிறுத்தினார் சதாம், குவைத்தை விட்டுவிட்டார், எந்த எதிரியும் இல்லாத கழுகு தேசம் உயர பறந்தது. ஆனால் அதன் குறி மாறவே இல்லை.

மிக தந்திரமாக பொருளாதர தடை என்றார்கள், உண்மையில் அவர்கள் கேட்டது “எண்ணெய்க்கு நாங்கள் சொல்வதுதான் விலை”, முடியாது என்ற சதாம் அரசுமீது ஏராளமான தடைகள். இந்த கொடுமையை கண்காணிக்க ஐ.நா வேறு.

வளமான இரு ஆறுகளை கொண்ட நாடு கோதுமையை கூட விளைய வைக்க முடியாத தடை.

கடந்த நூற்றாண்டில் நடந்த பெறும் அநீதி, அட்லாண்டிக் கடலுக்கு அங்கிருந்து வந்து சொந்த நாட்டு மக்களை தெருவில் கைஏந்த வைக்கும் கொடுமை அது, உணவுக்கு எண்ணெய் என இந்தியாவும் எண்ணெய் வாங்கியது, அதிலும் நாம் முத்திரை பதித்தோம், அதுவேதான் அதிலும் ஊழல்.

இதனையும் தாண்டியும் சதாம் வாழ்ந்தார், அசைக்கமுடியவில்லை, போராடி போராடி வளரத்தான் செய்தார், துன்பங்களை கண்டபோதும் அவர்மீதான மக்களின் அபிமானம் மாறவே இல்லை.

இன்னுமா இவன் அழியவில்லை, இன்னுமா நினைத்த படி எண்ணையை கொள்ளையிட முடியவில்லை, எப்படியாவது பாக்தாத்தில் நுழைந்து தலையில் போடவேண்டும், என நினைத்த வல்லரசுகளுக்கு ஒரு வழிபிறந்தது,

அவமானத்திலும், அழிவிலும் கூட ஆதாயத்தினை அழகாக தேடினார்கள்

வழியை காட்டியது அல்கய்தா, செப்டம்பர் 11, 2001 அன்று.

தொடரும்…

 

ஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் : 01

Image may contain: 1 person, indoor

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும், இந்தியா என் நட்புநாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன்

காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் போல வலுவான எதிர்சக்தியோ 1990களில் இருந்திருந்தால் அத்தலைவன் வீழ்ந்திருக்க மாட்டான்

சதாமின் வீழ்ச்சி தனிமனித வீழ்ச்சி அன்று , அரபு நாடுகளின் வீழ்ச்சி அவர்களின் சுதந்திரமும் எதிர்காலமும் பறிபோன அவலத்தின் தொடக்கம்

அந்த மாவீரனின் நினைவுநாள் நாளை அனுசரிக்கும் நிலையில் அவனின் வாழ்வினை நினைத்து பார்க்கலாம்

எண்ணெய்வளமிக்க வளைகுடா பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளை பொதுவாக ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்சினை என தள்ளமுடியாது, காரணம் உலகின் ஒவ்வொரு வீடும் நேரடியாகவோ அல்லது மறைமுகமகாவோ அதோடு தொடர்புடயவை, அதுவும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அவை மகா முக்கியம், ஏராளமான இந்தியருக்கு பெற்றோரோ,உறவினரோ, குடும்பத்தாரோ அல்லது நண்பர்களோ யாராவது கண்டிப்பாக அங்கு இருப்பார்கள்.

நிச்சயமாக இன்று நமது இந்திய‌ பொருளாதாத்தின் முதுகெலும்பு இவைகள், அங்கு நடக்கும் சிறு பிரச்சினைகளும் நிச்சயம் நம்மை பாதிக்கும். அந்தவகையில் சதாம் வீழ்த்தபட்ட கதையினை கொஞ்சம் அலசி பார்ப்பது தவறே அல்ல, நாளையோ இல்லை விரைவிலோ பெரும் விவகாரமாக வெடிக்கும் எரிமலையின் தேற்றுவாயினை பார்க்கலாம், தேவை இல்லாத விஷயம் என கருதினால் விட்டுவிடலாம்.

உலகத்திற்கே நாகரிகத்தினை சொல்லிகொடுத்தது மெசபடோமியா, ஐரோப்பியர்கள் நாடோடிகளாக காட்டுமிராண்டிகளாக வாழும்பொழுதே மெசபடோமியா உலகின் முதல்நிலை நாடாக இருந்தது.

வற்றாத யூப்ரடீசும் டைக்கீரிசும், செழுமையான நிலமுமாக‌ அரேபியாவிற்கே உணவளித்த நாடு, வயிறு பிரச்சினை நீங்கினால் மனித மனம் கட்டங்கள் கட்டவும்,கலைகளிலும் செல்லும். அவர்களுக்கும் அப்படி சென்றது, புகழ்மிக்க பாபிலோன் தொங்கும் தோட்டமும், ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் போன்ற இலக்கியரசம் சொட்டும் படைப்புக்களும், (ஜெயமோகன், மனுஷ்,லீலா மணிமேகலை எல்லாம் நினைவுக்கு வரகூடாது) ஏராளம்.

கணிதத்தில் மேனிலை மாணவர்கள் ஆசிரியரை மனதில் தூக்கிபோட்டு மிதிக்கும் திரிகோணமிதி,அல்ஜிப்ரா எல்லாம் அவர்களின் தொடக்கம், அவ்வளவு ஏன் 1,2.. என தொடங்கும் எண்களே உலகிற்கு அவர்களால் தான் கொடுக்கபட்டது.

உலகின் முதன்முதலில் மக்களுக்கு சட்டமியற்றி ஆண்ட ஹமுராபி, தோல்வியே அறியாத அரசர்களில் ஒருவனான நெபுகாத் நேச்சர் சிங்கமுத்திரையுடன் ஆண்ட அந்த நாடு, அதன் செழிப்பினை கேள்விபட்டே மாவீரன் அலக்ஸாண்டர் மெசபடோமியா வந்தான் (இறுதியில் அதே பாபிலோனில் இறந்தான்), ஐரோப்பாவில் அன்றெல்லாம் கடும் குளிரினை தவிர ஒன்றுமில்லை,தரித்திரமான தேசங்கள். அமெரிக்கா என்ற நாட்டினை யாரும் கற்பனைகூட செய்ததில்லை.

மெசபடோமியா இன்றைய ஈராக்

எகிப்து நாகரிகத்தின் தொட்டில் என்றால் பாபிலோன் நாகரிகத்தின் தங்க கட்டில்

அக்காலத்திலே உலகின் பணக்கார‌ வல்லரசாக ஆண்டார்கள், அலெக்ஸாண்டர், ரோமானியர்கள்,செங்கிஸ்க்கான்,ஆப்கானியர் இறுதியாக துருக்கியர் என எல்லா ஐரோப்பியரும் அவர்களைகுறிவைத்து அடித்தார்கள், துருக்கி சாம்ராஜ்யத்தில் ஈராக் ஒரு அங்கமான பொழுது அடித்துபறித்தல் இல்லை என்றாலும், சுரண்டல் இருந்தது. பாபிலோன் சுரண்டபட்டு துருக்கி அழகான நாடாக மலர்ந்தது.

நவீன காலத்தில் முதலாம் உலகப்போரில் துருக்கிமன்னர் வெள்ளைகொடிகாட்ட, ஈராக்கில் பிரிட்டிஷ் கொடி பறந்தது, ஈராக்,லெபனான் தவிர மற்ற நாடுகள் பாலைவனம், அக்காலத்தில் ஒட்டகமும், பேரிச்சம்பழமும் தவிர ஒன்றுமில்லை என கண்ட பிரிட்டிசார் துருக்கி மன்னனை முறைத்துவிட்டு நடையை கட்டினர்,

அரேபியா பல துண்டுகளாக சிதறியது 20 மைல்க்கு ஒரு சுல்தான், அவருக்கு ஒரு கோட்டை, உலகில் யாரும் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. (இன்று சுல்தான்கள் எல்லாம் மணிக்கொரு விமானம் வாங்கும் கோடீஸ்வரர்கள்)

ஐரோப்பியருக்கு ஒரு காலமென்றால்,அரேபியர்களுக்கு ஒரு காலமுண்டல்லவா?, குவைத்தில் முதலில் எண்ணெய் கண்டுபிடித்தார்கள், சூடமேற்றி சத்தியம் செய்தார்கள் “உலகின் முதல்தரமான எண்ணெய்”.

இன்று உலகில் நடக்கும் எண்ணெய் போர்களுக்கு ஒரே காரணமான 7 சகோதரிகள் (ஷெல்,பிபி…) எனும் பெரும் எண்ணெய் கம்பெனிகள் அரேபியாவில் தனியே குத்தாட்டம் போட தயாரானது, சில கம்பெனிகள் குரூப்டான்ஸ் ஆட மேக்கப் போட ஆரம்பித்தது.

அவ்வளவுதான் அமெரிக்காவில் எண்ணை எடுக்க அரசு தடைவிதித்தது (இன்றும் சவூதியை விட அலாஸ்காவில் ஆயில் ரிசர்வ் அதிகம்), ராக்பெல்லர் எனும் அமெரிக்க எண்ணைகிணறுகளின் அதிபர் முதல்பணக்காரர் தகுதியை இழந்தார், அரேபிய சுல்தான்கள் ஒரே இரவில் உலக கோடீஸ்வரரானார்கள்.

மற்ற அரேபிய நாடுகளுக்கும் ஈராக்கிற்கும் வித்தியாசமுண்டு, அன்று உணவில் தன்னிறைவு பெறும் நாடு, இதில் எண்ணெய் பணமும் கலந்தால் விக விரைவில் மிகபெரிய வல்லமை கொண்டநாடாக மாறும், எகிப்தில் அன்று மாவீரன் கர்ணல் நாசர் வேறு பிரிட்டனின் மூக்கை சூயசில் உடைத்ததில் பிரிட்டன் பிளாஸ்த்திரி போட்டு அழுதுகொண்டிருந்தது.

ஆனால் மேற்குலகத்திற்கு சில பெரும் ஆறுதல்கள் உண்டு, இந்தியாவின் முன்னேற்றத்தை,அரசியலை சாதிகள், ஊழல்கள் பார்த்துகொள்ளும், பாகிஸ்தானை அதன் மதவாதிகள் பார்த்துகொள்வார்கள், சில சூதாட்ட கிளப்புகளை தொடங்கிவிட்டால் முடிந்தது சீனா. பல இனங்கள் வாழும் ஈராக்கினை அந்த “குழு”க்களே பார்த்துகொள்ளும்.

ஆனால் கணிப்பினை பொய்யாக்கி ஒரு மானமுள்ள மனிதன் எழுந்தான், அரபுலகத்தின் அன்றும் சரி இன்றும் சரி, எண்ணெய் பணம் எவ்வளவு என்பது அரசர்களுக்கும் அந்த 7 தேவதைகளுக்கு மட்டுமே தெரியும், அரசரின் “சின்ன அரண்மனைகளுக்கு” கூட தெரியாத ரகசியம். ஆனால் அந்த மானமுள்ள சதாம் சொன்னது ” ஈராக்கியரின் எண்ணெய் ஈராக்கிய மக்களுக்கே”

இந்த முழக்கமே அவரை வாழ்வாங்கு வாழவும் வைத்தது,சிங்கம் போல சுற்றவும் வைத்தது, பாவம் எலியினினை போல பொந்தில் பிடிபடவும், கொல்லவும் வைத்தது.

எல்லா மக்களும் இனஉணவும் மானமும் மிக்கவர்கள்,சரியான தலைவன் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் அவன்பின்னால் கிளர்ந்தெழுவார்கள். அந்த தலைவன் நல்லதலைவன் என்றால் எந்த நிலையிலும் கொள்கை மாறமாட்டான், இறுதிவரை போராடுவான், சதாமும் அப்படித்தான் வாழ்ந்தார்.

ஈழத்திலும் பிரபாகரன் அப்படித்தான் உருவானார், தொடக்ககால மக்கள் எழுச்சியின் அடையாளம் அவர்.பின்னாளில்தான் குழம்பி பெரும் பாதாளத்தில் வீழ்ந்தார்

உறுதியாக சொல்லலாம் 1986க்கு முன்பிருந்த அந்த பிரபாகரனை எனக்கு பிடிக்கும், எல்லோருக்கும் பிடிக்கும். 16 வயதிலே எப்படியாவது தமிழர்களுக்கு தீர்வு வேண்டும், அதற்கு உயிரே போனாலும் பரவாயில்லை என மகா துணிச்சலாய் கிளம்பிய அந்த பிரபாகரன் உருக்கமாக பார்க்கபடவேண்டியவர்

ஆனால் ஈழ தமிழ் அரசியல்வாதிகள், தமிழக அரசியல்வாதிகள், அந்நியநாட்டு தொடர்புகள் எல்லாம் அந்த இளம் வீரனை மகா தவறுதலாக நடத்தி அழித்தும் விட்டன, அவரும் பிற்காலத்தில் மாறிவிட்டார். எல்லாம் நாசமாயிற்று

ஒரு ஸ்பூன் கச்சா எண்ணையோ அல்லது நாசமாய் போன திரிகோணமலை யாழ்ப்பாணம் பக்கம் அமைந்திருந்தாலோ இல்லை இந்தியாவில் ஒரு நல்ல உறுதியான தலைவர் இருந்தாலோ வரலாறு மாறியிருக்கும், தமிழீழம் கனடாவிற்கு நாடு கடந்திருக்காது, ஆனால் விதி அது அல்ல

ஆட்சிபொறுப்பிற்கு வந்ததும் மாறிவிடும் தலைவர் அல்ல சதாம், ஹமுராபி,நெபுகாத் நேச்சரின் வாரிசு, சொன்னதை செய்தார். ஒரு இரும்பு தலைவனால் மட்டுமே ஆளகூடிய தேசம் அது. நாட்டினை அமைதியாக்கினார், கிட்டதட்ட ஐரோப்பிய நாடுகளை விட பொருளாதார நிலையில் ஈராக்கை மேன்மையாக்கினார், வளம்,வாழ்வு,சுபிட்சம்.

இது மேற்குலகிற்கு பிடித்ததோ இல்லையோ,பக்கத்து அரசர்கள் மனதில் பெட்ரோல் ஊற்றியது. இனி நமது நாட்டு மக்களும் மக்களின் எண்ணெய் மக்களுக்கே என்றால் எதிர்காலம் என்ன ஆவது, சதாம் தொலையவேண்டும், கண்டிப்பாக தொலையவேண்டும்

சதாம் உறுதியாக நின்றார், அவரது தனித்துவம் அதுதான்,யதார்த்தமும் அதுதான் . உதாரணம் வேண்டுமென்றால் நமது வீட்டில் தண்ணீர் குறை, பக்கத்து வீட்டுக்காரன் போர்வெல்லில் நல்ல தண்ணீர் என்றால் அவனிடம் சென்று உரிமை கொண்டாட முடியுமா?, அவன் போர்வெல் அவன் உரிமை.

தண்ணீருக்கே சண்டை என்றால், எண்ணெய் தங்கத்தின் போர்வெல்லுக்கு ?? எவ்வளவு நடக்கும்.

சதாமும் அதேதான் சொன்னார் ஈராக்கிய‌ பெட்ரோல் எங்கள் உரிமை, 7 கம்பெனியும் அவர்களின் குரூப்டான்சர்களும் அவர்களின் நாட்டு அரசிடம் மூக்கு உறிஞ்சி அழுதார்கள்.

அந்த நாடுகள் எல்லாம் தமது மக்கள் உலகில் எங்கு சென்றாலும் பிழைக்க உதவி செய்வார்கள், நமது நாட்டை போல நமது எல்லைக்குள்ளே மீன்பிடிக்ககூடாது, விவசாயத்தை கண்டிப்பாக விட்டுவிடு, முடிந்தால் சாவு என்றேல்லாம் மக்கள் வயிற்றில் அடிக்கமாட்டார்கள்.

மேற்குலகம் அரேபிய மன்னர்கள், பெரும் “கையை” கொண்ட நாடு எல்லாம் ஒருங்கிணைந்து தருணம் பார்த்துகொண்டிருந்தது, ஆனால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. ஈராக்கில் அமைதி,வளம் ஆகவே தீவிரவாதமில்லை.

ஆனால் பாவம் சதாமோ அரபுகளின் தலைவரான நாசர் விட்டுசென்ற பணிகளை தொடர நினைத்தார், அப்பொழுது பக்கத்து நாடான ஈரானில் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டது, அதையெல்லாம் சதாம் கண்டுகொள்ளவில்லை, ஆயினும் அப்புரட்சியில் பின்மண்டையில் அடிபட்ட அமெரிக்க‌ நாட்டாமைக்கு பெரும் அவமானம்.

கிட்டதட்ட விறுமாண்டி கமலஹாசன் போல வஞ்சக விலை சதாமுக்கு விரிக்கபட்டது, விரித்தது கொத்தாளர் அமெரிக்கா,

இன்று ஈராக்கிய மக்களின் அவலநிலைக்கும், நடந்து கொண்டிருக்கும் கொடூரங்களுக்கும்,இன்னும் நடக்கபோகும் அநீதிகளுக்கும் அன்றே திட்டமிடபட்டது. கொத்தாளர் அமெரிக்கா

அவர்கள் ககைகாட்டியது நல்லமநாயக்கர் எனும் கோமேனி, ஈரானியர்களின் சுப்ரீம்தலைவர் அயதுல்லாலோமேனி. விருமாண்டி கமலஹாசன் போல சிக்க வைக்கபட்டார் சதாம்

தொடரும்…