தோசை அலம்பல்கள் தொடர்ச்சி…

பொன்னி அரிசி ஆதிக்க சாதி, புழுங்கல் அரிசி ஒடுக்கபட்ட சாதி

ஆப்பிள், சிகப்பு தொழுவன் ஆதிக்கசாதி பழம், தக்காளி ஒடுக்கபட்ட சாதி பழம்

டைனிஷ் பிஸ்கட் ஆதிக்க சாதி, டைகர் பிஸ்கட் ஒடுக்கபட்ட சாதி

பென்ஸ் கார் ஆதிக்க சாதி, மாருதி 1000 ஒடுக்கபட்ட சாதி

இப்படி பார்க்கும் பொருளில் எல்லாம் ஆதிக்க சாதியும், ஒடுக்கபட்ட சாதியும் மாறி மாறி தெரிந்தால் என்ன செய்ய?

போதா குறைக்கு டிவியில் புல்லட்டில் செல்கின்றார் விணுசக்கரவர்த்தி

போதாதா? புல்லட் ஆதிக்க சாதி, சைக்கிள் ஒடுக்கபட்ட சாதி என சிந்தனை செல்கின்றது

இதிலிருந்து மீள என்ன செய்யலாம்?

96 படத்தினை இன்னொரு முறை பார்க்கலாம்

என்ன பெரிய 96? தலைவி குஷ்பு வைத்து 86 என்றொரு படத்தை எடுத்தால் அட்டகாசமாக காவியம் படைத்துவிட போகின்றது

சங்கம் அதுபற்றி யோசிக்க தொடங்கிவிட்டது..

[ October 27, 2018 ]

===========================================================================

சென்னையில் இருக்கும் மிக பெரும் ரெஸ்டாரண்ட் மேனேஜர்களிடம் விசாரித்தால் திமுக அதிமுக உட்பட எல்லா கட்சி கூட்டங்களுக்கும் அவர்கள் சாப்பாடுதான் செல்லுமாம்

சைவத்திலும் அசைவத்திலும் தனி முத்திரை பதித்த கடைகள் அவை, சுருக்கமாக சொன்னால் ஆதிக்க சாதி உணவு

ஆக ஆதிக்க சாதி உணவினை உண்டுவிட்டுத்தான் பலகாரங்களுக்கு சாதி பெயர் சூட்டும் சடங்கினை இந்த கும்பல் செய்து கொண்டிருக்கின்றது

திக உட்பட எல்லா கூட்டங்களிலும் பிரியாணி எனும் ஆதிக்க சாதி உணவுதான் அக்காலங்களில் இருந்து பிரசித்தி

பிரியாணி என்பது ஆதிக்க சாதி நெய்யும், பெரும் ஆதிக்க சாதியான பிரியாணியும் கலந்தது

இன்றும் வோட்டுக்கு பிரியாணி, கூட்டத்திற்கு பிரியாணி என ஆதிக்க சாதி உணவுதான் அடிப்படை

ஆனால் இதை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது

[ October 27, 2018 ]

============================================================================

அப்பல்லோ, குளோபல், காவேரி என்பதெல்லாம் ஆதிக்க சாதி மருத்துவமனை, அரசு மருத்துவமனையே ஒடுக்கபட்டோருக்கான மருத்துவமனை

நிறுத்துங்கண்ணே சும்மா ஆதிக்க சாதி அது இதுண்ணு, மதிமாறன் யாரு தெரியுமாண்ணே சிங்கப்பூர் எல்லாம் போய் பேசியிருக்காரு

எதுக்கு?

பெரியார் கொள்கையினை பரப்ப…

ஏண்டா சிங்க்ப்பூருல ஏது பிராமணன் அவனுக்கு அதிகாரம்? அங்க ஏன் திராவிட முழக்கம் பேச இவர் போனார்?

அது தமிழர் இருக்கும் இடமெல்லாம் போய் விழிப்புணர்வு கொடுக்கணும்ணே, அதுக்கு பெரியாதான் வழி

சிங்கப்பூர் சீன அதிகாரம், இவர் நல்ல புரட்சியாளர்னா அங்க போய் சீனர்களை கண்டிக்கணும் அத விட்டுபுட்டு அங்க போய் பிராமணன் ஒழிக திராவிடம் வாழ்கன்னா என்னடா அர்த்தம்

ஆமாண்ணே எனக்கே கொழப்பமா இருக்குண்ணே

சரி எந்த பிளைட்ல போனாரு?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

டேய் விமான போக்குவரத்துல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மாஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் எல்லாம் ஆதிக்க சாதி, இந்த சில்க் ஏர், ஏர் ஏசியாதான் ஒடுக்கபட்ட சாதி

அப்படியாண்ணே

பின்ன உங்க அண்ணன் ஏன் சீன ஆதிக்க சாதி நாட்டுக்கு ஆதிக்க விமானத்தில் சென்றார்?

அட போங்கண்ணே, நீங்க ஆரிய அடிவருடி, ஆர்.எஸ்.எஸ் ஏஜென்ட்

[ October 27, 2018 ]

Image may contain: 2 people
==========================================================================

ஏம்பா மதிமாறா

டிவியில் சாதி, அரசியல் எல்லாம் இல்லையா?

சன்டிவி என்பது ஆதிக்க சாதி டிவி, இந்த வின் டிவி ராஜ் டிவி இன்னும் பல பரிதாப டிவி எல்லாம் ஒடுக்கபட்ட டிவி என சொன்னால்தான் என்ன?

அப்படியே பாண்டி பஜார், திநகர் பக்கம் சென்று பார்த்துவிட்டு வியாபார ஆதிக்க சாதி எது என சொல்ல முடியுமா?

அட அவ்வளவு ஏன் விஜிபி கடற்கரை போன்ற ரிசார்ட் எல்லாம் ஆதிக்கசாதி கடற்கரை, மெரினா கடற்கரை ஒடுக்கபட்டோருக்கான கடற்கரை என சொல்ல மாட்டீரா? [ October 27, 2018 ]

============================================================================

தோசை விவகாரத்த வச்சி நாம பால்பாயாசம் வச்ச கதையினை மறக்க வச்சிட்டான்ல, அவன் தாண்டா மனுஷன்

அவனுக்கு ஏதாவது செய்யணும், மெயின் ரோட்டு பக்கம் வர சொல்லிருக்கேன்

[ October 27, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

உண்மையில் கொடூரமாக‌ சுரண்டபடும் சாதி ஒன்று உண்டென்றால் ஆட்டு எலும்பு சாதிதான்

எவ்வளவு கொடூரமாக சுரண்டுகின்றார்கள் பாவிகள்? கொஞ்சம் சதையினை வைத்தால்தான் என்ன?

தனிகறி வாங்கும் ஆதிக்க சாதிக்கு, எலும்பில் ஒட்டியிருக்கும் கறியினை சுரண்டி சுரண்டி கொடுப்பதுதான் சமூக நீதியா?

ஆட்டுகறி ஆதிக்க சாதி என்பதும் , எலும்பு ஒடுக்கபடும் சாதி என்பதும் , குடல் தீண்டதகாத சாதி என்பதும் யாருக்கு தெரியும்?

ஆட்டுகறியிலும் அரசியல் இருகின்றது

[ October 28, 2018 ]

============================================================================

தோசை அலம்பல்கள்

தோசையில் சாதி இருக்கின்றது, ஆதிக்க சாதி தோசையினை ஒடுக்கபட்டவன் சுட முடியாது

இப்படிபட்ட அபார கண்டுபிடிப்பினை செய்தவர் யாரென்றால் பெரியாரிஸ்ட் மதிமாறன் என்பவர்

அதாவது பிராமணர் நெய் ஊற்றி பொடி போட்டு சுடுவார்களாம், தாழ்த்தபட்டவன் எண்ணெய் கூட இல்லாமல் வறட்டி மாதிரி சுடுவானாம், இதனால் தாழ்த்தபட்ட பெண் பிராமணன் வீட்டில் வாழமுடியாதாம்

தோசைக்குமா ஆதிக்க சாதி?

சரவணபவன் ஹோட்டல் என்பது நாடார் எனும் தாழ்தபட்ட சாதியினரால் நடத்தபடுகின்றது, அங்கு இல்லாத ருசியா?

உணவினை நிர்ணயிப்பது வருமானம், நல்ல வருமானம் இருந்தால் வகை வகையாக செய்து உண்ண போகின்றார்கள் இதில் சாதி எங்கிருந்து வந்தது?

தோசைக்கு வழி இல்லா பிராமணனும் உண்டு , வருமானத்தில் கொழுத்திருக்கும் தாழ்த்தபட்டவனும் உண்டு

தோசையிலும், அடுப்பு கரியிலும் சாதி பார்க்கும் ஒரு மாதிரி மனோவியாதி நிலைக்கு பெரியாரிஸ்டுகள் வந்துவிட்டதுதான் சோகம்

இப்போது உள்ள பெண்களுக்கு தோசை சுடவே தெரியவில்லை,

இதில் ஆதிக்க சாதி தோசை வேறாம், கிராதகர்கள்.

[ October 26, 2018 ]

============================================================================

ஆத்தாடி, எவ்வளவு பெரிய கோதுமை தோசை..

ஆதிக்க சாதி நாடுகளின் தோசை இப்படித்தான் இருக்கும் போல…

[ October 26, 2018 ]
Image may contain: food and text
============================================================================

உங்க நாட்டுல நூடுல்ஸ் மட்டும்தானா? அதுவும் சரிதாங்க தோசைன்னா சாதிக்கொரு தோசைன்னு வரும்

நூடுல்ஸ்னா எல்லோருக்கும் ஒண்ணுதான், கம்யூனிசம்னா இதுதானுங்க…

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, standing and suit
———————————————————————————————————————————-

நல்ல தோசை சுடுபவன் எல்லாம் ஆதிக்க சாதி என்றால், செட்டி நாட்டு சமையல்காரன் கடவுள் சாதி..

[ October 26, 2018 ]
Image may contain: food
========================================================================

மிஸ்டர் மதிமாறன்

இது என்ன சாதி தோசை என கொஞ்சம் பார்த்து சொல்லமுடியுமா?

[ October 26, 2018 ]
Image may contain: 3 people
=========================================================================

உணவிலும் சாதி உண்டு, சாதி வன்மம் உண்டு என சில கிளம்பி இருக்கின்றன, அபத்தமான வாதம் இது. குறிப்பிட உணவு சில சாதி அடையாளம் என்பதெல்லாம் சாதிய வாதம்

உண்மையில் உணவு என்பது வர்க்கம் சார்ந்தது, வர்க்கமும் அதன் வருமானமே உணவினை தீர்மானித்தது

அக்காலத்தில் உணவில் உச்சத்தில் இருந்தது அரசர்கள், ராஜபோஜனம் என்பது அதுதான்

இரண்டாம் வகையில் இருந்தது வியாபாரி முதலான செட்டியார்கள், செட்டிநாட்டு உணவு இன்றும் தனித்து நிற்க காரணம் அவர்கள் சாதி அல்ல மாறாக அன்றைய பெரும் செல்வம்

அக்கால செட்டியார்களுக்கும் அரசர்களுக்கும் விருந்து வைப்பதில் சண்டையே நடந்திருகின்றது இறுதியில் அரசன் உயர்ந்தவன் செட்டி வீட்டு கல்யாணத்தில் முக்கனியில் ஒன்று குறைய வேண்டும் என தீர்ப்பாகி இருக்கின்றது

நாயக்கர் கால சாம்பார் வகையாறாவும், மொகலாயர் கால பிரியாணியும், செட்டி நாட்டு வகைகள் இன்றும் நிலைத்து நிற்பது இப்படித்தான்

நிலக்கிழார்களின் உணவு முறை இவர்கள் அளவு இல்லாவிட்டாலும் திருப்திகரமாக இருந்திருக்கின்றது

ஆனால் நிலமில்லா ஏழைகள் நிலை பரிதாபம், அவர்கள் உழைத்தால் கஞ்சியோ கூழோ கிடைத்திருக்கின்றது

இதை சாதி என சொல்லமுடியாது உலகெல்லாம் அப்படித்தான் இருந்திருக்கின்றது, கருப்பின மக்களுக்கு ஒரு நாள் கூலி சோளமும் பன்றிகறியும் என்கின்றது மேற்கத்திய வரலாறு

உணவு என்பது வர்க்க பேத அடையாளமே தவிர சாதி அல்ல‌

பிரட் இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள் எனும் பிரான்ஸ் மன்னனின் விளையாட்டு பேச்சு அந்நாட்டு புரட்சிக்கு வழிவிட்டது

உன் தட்டில் ரொட்டில் இல்லை என்றால் ஆண்டவனை கேட்காதே, அதை தடுத்து வைத்திருக்கும் அதிகாரம் மிக்கவனிடம் அடித்து கேள் என்ற லெனினின் வாசகம் ரஷ்யாவில் புரட்சி வெடிக்க வைத்தது

ஆக இந்த வர்க்க பேதம் என்பதைத்தான் சாதி பேதம் என மாற்றி குறுகிய மனப்பான்மையுடன் பலர் சொல்லி திரிகின்றனர்

இதெல்லாம் சாதிவெறி பிடித்த சாதி ஒழிப்பாளர்களின் சீழ் பிடித்த சிந்தனையே அன்றி வேறல்ல‌

அதுவும் மாறிவிட்ட இக்காலங்களில் எல்லா சாதியும் எதனையும் எதுவும் எப்பொழுதும் எங்கும் உண்ணலாம் எனும் நிலையில் இன்னும் சாதிய உணவு என்பதெல்லாம் எரிச்சலான காமெடி வகை

சோற்றுக்கு வழி இன்றி தவித்தான் பாரதி, ஒரு வேளை உணவுக்காக கெஞ்சி நின்றான் கனித மேதை ராமானுஜம். அவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பது பற்றி யாரும் பேசமாட்டார்கள்

எந்த சாதிக்காரன் இப்பொழுது எந்த உணவினை சாப்பிட முடியாது? என்ன தடை?

இந்த சாதி இந்தவகை உணவினை சாப்பிட கூடாது, இதைத்தான் சாப்பிட வேண்டும் என யார் இங்கு கத்தி அரிவாளோடு சுற்றுகின்றார்கள்??

[ October 26, 2018 ]

============================================================================

தோசைக்கு ஆயிரம் பிரிவுகள் இருக்கலாம், ஆனால் இட்லிக்கு ஒரே உலக அடையாளம் தலைவி குஷ்பு ஒருவரே..

அதில் பிரிவே இல்லை.. [ October 26, 2018 ]

============================================================================

ஒருத்தன் என்னடான்னா கோட் மாட்டினாலும் அரசியல், கழற்றினாலும் அரசியல்னு சொல்றான்

இன்னொருத்தான் என்னடான்னா தோசை மாற்றி போட்டால் ஒரு அரசியல், மாற்றி போடாவிட்டால் இன்னொரு அரசியல்ங்கிறான்

எங்க இருந்துடா வாரீங்க…. [ October 26, 2018 ]

============================================================================

தோசையே தமிழர் உணவு இல்லை, வந்தேறி தோசை என ஒரே போடாக போட்டு விடுவோமா….

[ October 26, 2018 ]
Image may contain: 1 person, closeup
============================================================================

அந்தமான் பழங்குடி முதல் அமேசான் பழங்குடி வரை அரிசிசோறு சாப்பிடாதற்கு சாதியே காரணம்

விண்வெளியில் ஆய்வாளர்கள் உண்ணும் உணவுக்கும் சாதியே காரணம்..

சோமாலியா பஞ்சம் முதல் விழா காலங்களில் உலகெல்லாம் வீணாகும் உணவுவரை சாதியே காரணம்.. [ October 26, 2018 ]

============================================================================

வரலாறு இதைத்தான் சொல்கின்றது

உலகெல்லாம் இருந்தது மூன்று சாதி, ஒன்று மத குருமார் சாதி இன்னொன்று நிலமுடைய முதலாளி / வியாபாரி சாதி இன்னொன்று உழைக்கும் சாதி அல்லது அடிமை சாதி

முதன் முதலில் அடிமைகள் இனி இல்லை அவர்கள் சுதந்திரமானவர்கள் என சொல்லி உயிரை கொடுத்தார் ஆபிரகாம் லிங்கன்

தொடர்ந்து மார்க்ஸும் இங்கர்சாலும் முழங்கிய முழக்கத்தில் தொழிலாளர் உலகம் திரண்டது, உரிமை கோரியது

மத குருமார்களும், நில சுவாந்தர்களும் ஆளும் உலக நாமும் ஆள்வோம் என கிளம்பினான் லெனின்

உலகெல்லாம் இது அதிர்வலைகளை ஏற்படுத்திற்று, அரசுகள் அஞ்சின. பிரிட்டன் போன்ற ஏகாதிபத்தியங்கள் கலங்கின‌

அமெரிக்காவில் அது கருப்பர் எழுச்சியாக தொடங்கியது

சீனாவில் சன்யாட்சன் அதை தொடங்கி வைத்தான்

பிரிட்டனின் காலணி ஆதிக்கமான இந்தியாவிலும் அது வர்க்க பேத போராட்டமாகவே தொடங்கும் சாத்தியம் இருந்தது

ஏழைகளும், பாட்டாளிகளும் நிரம்பிய இத்தேசம் சரியான தலைவன் இருந்தால் அப்படி திரும்பி இருக்கும்

விடுவானா வெள்ளையன்?

சாதி, ஆரிய திராவிட , சமூக நீதி என எல்லாவற்றையும் கிளறிவிட்டான்

அதுவரை கேட்காத குரல்கள் எல்லாம் உலகம் வேகமாக புரட்சிக்கு மாறிகொண்டிருந்த பொழுது இங்கே கேட்டது

லெனினும் மாவோவும் போராடிய பொழுது இங்கோ சாதி, சமூக, நீதி, திராவிட நீதி அது இது என கனத்த சத்தம் வந்தது

வெள்ளையன் அதை மனமார ரசித்தான், ஆம் இங்கு வர்க்க பேதத்தை விரட்டும் போராட்டம் நடக்கவே இல்லை அதை சாதி சண்டையாக மத சண்டையாக மாற்றிவிட்டு அவன் போக்கில் இருந்தான்

விளைவு என்னாயிற்று?

வர்க்க பேத போராட்டம் வந்திருக்க வேண்டிய நாட்டில் சாதிய போராட்டம், ஆரிய திராவிட போராட்டம் என திசைமாறி போய் இன்று தோசைக்கு சாதிபட்டம் கொடுக்கும் அளவு நிலமை சென்றாயிற்று

வர்க்க பேதம் என்பதை சாதியாக மாற்றி, அதிலும் உட்சாதியாக மாற்றி இங்கு இன்னும் மோதிகொண்டே இருகின்றார்கள்

அவர்களும் உருப்படமாட்டார்கள், இத்தேசம் உருப்பட விடவும் மாட்டார்கள்

சாதி, ஆரியம் திராவிடம், தலித்தியம் அது இது என சொல்லிகொண்டு முதலாளிகளின் சொத்துக்களுக்கு ஒரு ஆபத்து வராமல், முதலாளி வர்க்கத்தின் மேல் ஒரு தூசும் படாமல் ஏழைகளை ஏழைகளாகவே வைத்துவிட்ட தந்திரம் இங்கு நடந்துவிட்டது

இதை சொன்னால் நாம் தலித் விரோதி ஆகிவிடுவோம்

வரலாற்றில் சீன மன்னன் குடும்பம் சீன புரட்சியில் ஒழிந்தது நிலமெல்லாம் ஏழைகளுக்கு சொந்தமாயின‌

ரஷ்ய புரட்சியில் அதுவே நடந்தது

வர்க்க புரட்சி அப்படித்தான் நடக்கும், இந்தியாவில் நடந்திருந்ந்தால் நிலச்சுவாந்தார்களும் முதலாளிகளும் ஒழிக்கபட்டு நாட்டின் தலைவிதி மாறி இருக்கும்

ஆனால் என்ன நடந்தது?

உழைக்கும் வர்க்கத்தை சாதி, சமூக நீதி என திசை திருப்பிவிட்டு முதலாளி வர்க்கம் தன் சொத்துக்களையும் அதிகாரங்களையும் தக்க வைத்து கொண்டது

இதை சொன்னால் நாம் ஆரிய அடிவருடி, திராவிட எதிரி, தலித் விரோதி

[ October 26, 2018 ]

============================================================================

இன்று காலை மீன் சந்தையில் அந்த ஞானம் பிறந்தது, அட இது தெரியாமல் இவ்வளவு நாள் மீன் சந்தைக்கு வந்தோமா? என்ற அறியாமை இருள் அகன்றடு

ஆம் மீன்களிலும் சாதி உண்டு என்பது புரிந்தது

சால்மன் என்பது பேராதிக்க வகை, நெருங்க முடியா உயர் சாதி, ஆம் அது இனவெறி மீன், ஐரோப்பிய வெள்ளையர் தட்டில் இருக்குமே அன்றி கருப்பருக்கு கிடைக்காது

வஞ்சிரம், லாப்ஸ்டர் , சிகப்பு இறால், வாவல் எல்லாம் ஆதிக்க சாதி

நெய்மீன், அசலை, பாறை என்பதெல்லாம் இடைபட்ட சாதி

நெத்திலி, சாளை , மொரல் என்பதெல்லாம் ஒடுக்கபட்ட சாதி

நண்டு, கணவாய் என்பதெல்லாம் திருநங்கை வகையறா

இந்த சாதிய பிரிவில்தான் இனி மீன் வாங்க வேண்டும் என தீர்மானித்தாயிற்று உலகோடு ஒட்ட வேண்டும்

இதனால் ஆதிக்க சாதி மீன் கொடுங்கள் என கேட்டேன்? அவர் திருக திருக முழித்தார், இன்னும் உமக்கு தகவல் வரவில்லை என நினைக்கின்றேன் என சொல்லிவிட்டு வஞ்சிரத்தோடு வந்துவிட்டேன்

பக்கத்தில் சால்மன் எனும் பேராதிக்க சாதி படுத்திருந்தது, நெருங்க முடியாதது,

சந்தையினை பார்த்து கொண்டே இருந்தேன், ஆதிக்க சாதி மீன்களை ஆதிக்க சாதியே வாங்கி கொண்டிருந்தது

சில இஸ்லாமிய பெண்கள் ஆதிக்க சாதி மீன்களை வாங்கினார்கள் ஆனால் அவர்கள் என்ன சாதி என தெரியவில்லை

சிலர் இந்த நெத்திலி , சாளை, சார்டின் எல்லாம் பொறுக்கி கொண்டிருந்தார்கள் அவர்கள் ஒடுக்கபட்ட சாதியாக இருக்கலாம்

கருவாடு பொறுக்கிகொண்டருந்தது அடிமட்ட சாதியோ என்னமோ?

குளத்து மீனை தேடிகொண்டிருந்தவர்கள் ஆதிவாசி இனமாக இருக்கலாம்

ஆழ்ந்த சிந்தனையில் நான் மீன்கடையினை சுற்றி சுற்றி வந்ததை பார்த்து மீன்வியாபாரி அழைத்து காரணம் கேட்டார்

சொன்னேன், மீன்கள் சமைப்பதை வைத்து யார் ஆதிக்க சாதி, யார் தாழ்த்தபட்ட சாதி என்பதை கண்டுபிடிக்கலாம் என்றேன்

அப்படியா என்றார், செட்டி நாட்டு சமையல் சிவகாசி நாடார் சமையல் , தஞ்சாவூர் மீன் குழம்பு, வேலூர் முதலியார் மீன் குழம்பு கேரள நாயர் மீன் ஸ்பெஷல், மதுரை வகை மீன் எல்லாம் சாதிய அடையாளம் என விளக்கினேன்

இதெல்லாம் எங்கிருந்து வந்தது, மீன் உணவில் இத்தனை சாதிகளா என வாய்பிளந்து கேட்டார், இதை உருவாகியது யார்?

யாரா? இதெல்லாம் அந்த பிராமணன் உருவாக்கியது அய்யா, கொடுமையான அவனின் வன்மத்தில் உருவானது

பிராமணரா? அவர்கள்தான் மீனே சாப்பிடுவதில்லையே என்றார்

இருக்கலாம், ஆனாலும் யாருகு என்ன மீன் என பிரித்து வைத்த கூட்டம் அதுதான், அப்படித்தான் பகுத்தறிவாளர்கள் சிந்திக்க சொல்லி இருக்கின்றார்கள் என்றேன்

மனிதர் குழம்பிவிட்டார்

நாளை கறிகடைக்கு சென்று வெள்ளாடு ஆதிக்க சாதி, செம்மறி இடைபட்ட சாதி, நாட்டுகோழி அடுத்த கட்ட சாதி , பிராய்லர் கோழி ஒடுக்கபட்ட சாதி என சொல்லிவிட்டு வர வேண்டும்

கொக்கு, குருவி, காக்கா எல்லாம் நரிகுறவர் சாதி

பிராமணருக்கும் மீன் ஆடு கோழிக்கும் சம்பந்தமில்லை, ஆனால் இந்த ஆதிக்க சாதி மீன், ஆடு கோழி எல்லாம் அவர்களால் வந்தது என நீங்கள் நம்பியே தீரவேண்டும்

இதுதான் பகுத்தறிவு இல்லை பசியறிவு, இதுதான் சுயஉணவு

அதனால் சாதி பார்த்து மீனும், கறியும் வாங்கி வாரவிடுமுறையினை பகுத்தறிவுடன் கொண்டாடுங்கள்..

[ October 27, 2018 ]

============================================================================

இதோ பிராமண சாதிவெறி என பலர் ஸ்வீட் பாக்ஸோடு கிளம்பியாயிற்று..

செட்டிநாட்டு மட்டன், செட்டிநாட்டு வறுவல் மொகல் பிரியாணி, பாய்கடை பிரியாணி, மதுரை கோனார் கடை கறி தோசை, விருதுநகர் நாடார் கடை பரோட்டா, நாயர் கடை டீ, கேரள மீன்கறி என வாங்கி வாங்கி விழுங்குபவனுக்கு

பிராமணர் பெயரில் ஸ்வீட் மட்டும் வந்தால் பொறுக்காதாம்…

இதுதான் திராவிடமாம், இதுதான் சுயமரியாதையாம்..

[ October 29, 2018 ]
Image may contain: 1 person
============================================================================

இலையில் சாப்பிட்டால் ஆதிக்க சாதி, தட்டில் சாப்பிட்டால் ஏழை சாதி : மதிமாறன்

அடேய் அமெரிக்க அதிபர், ஜெர்மன் பென்ஸ் கம்பெனி ஓணர் எல்லாம் தட்டில்தான் பிரட் சாப்பிடுவார்கள், ஜப்பானிய யமஹா கம்பெனி ஓணர் கோப்பையில்தான் சூப் குடிப்பார்

அவர்கள் எல்லாம் ஏழைகளா?

ரோட்டோரம் தட்டில் இலை வைத்து இட்லி உண்டால் அவன் ஆதிக்க சாதியா?

அட சாப்பிட்டு விட்டு தூர எரியும் இலையிலுமா சாதி பார்ப்பீர்கள்? இதையா பெரியார் சொல்லி கொடுத்தார்?

வாழை இலை என்பது தமிழ் கலாச்சாரம், அது ஒரு சாதிக்கு மட்டும் பொதுவானது என சொன்னவன் பைத்தியகாரன் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

உண்மை என்னவென்றால் அன்று சோறு என்பது அரிது, அதை பணக்காரர் மட்டுமே உண்டனர், அதற்கு இலை சரிவரும்

ஏழைகள் கஞ்சி, கூழ் என உண்டுகொண்டிருந்தனர், இலை அதற்கு சரிவராது

இந்த வர்க்க பேதைத்தான் சாதி என மாற்றி புலம்பி திரிகின்றது திருட்டு திராவிட கூட்டம்

மற்ற நாடுகள் எல்லாம் வர்க்க பேதத்தை ஒழிக்க புரட்சி செய்த பொழுது, இவர்கள் பிராமணனை மட்டும் குறிவைத்து இதர முதலாளிகளின் சொத்துக்களுக்கு பங்கம் வராமல் ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க துணை இருந்தனர்

பொருளாதார ஏற்றதாழ்வு ஒழிந்தால், அதாவது பண்ணையாரின் நிலமெல்லாம் தாழ்த்தபட்ட சாதிக்கு பகிர்ந்தளிக்கபட்டால், பெரும் தொழில்களில் தாழ்த்தபட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமளவு சமத்துவம் வந்திருந்தால் இங்கு என்றோ சாதி ஒழிந்திருக்கும்

ஆனால் ஏழைகளை, அன்றாடங்காய்ச்சிகளை சாதி என்ற அடையாளம் காட்டி, அவனை வைத்து பிராமணனை சாடி கொண்டே அரசியல் செய்ததை அன்றி வேறு எதனையும் இந்த திராவிட கும்பல் செய்ததில்லை

இவர்களால் பிராமணனுக்கு ஆபத்து வந்ததே தவிர, ஒரு பண்ணையாருக்கோ இல்லை பெரு முதலாளிக்கோ ஆபத்து வந்ததா?

வராது, வரவே வராது

பண்ணையாரின் நிலத்தில் ஏழைகளுக்கு பங்கு கொடு என்றால் கொன்றுவிடுவார்கள், பெரும் ஆலையில் ஏழைகளுக்கு பங்குகொடு என்றால் குதறிவிடுவார்கள்

அதனால் இவர்களுக்கு கிடைத்தது அப்பாவி பிராமணனும் அவனை காட்டி இங்கு சாதியினை உசுப்பேற்றும் ஏழை தாழ்த்தபட்டவனுமே

[ October 29, 2018 ]

============================================================================