திவாலாகிவிட்டது ஜெட் ஏர்வேஸ்

15 வருடத்திற்கு முன்பு ஜெட் ஏர்வேஸுக்கு இப்படி ஒரு நிலைவரும் என கடவுளே சொன்னாலும் நம்பியிருக்கமாட்டார்கள்

ஆம் திவாலாகிவிட்டது ஜெட் ஏர்வேஸ்

1990களில் அருண் கோயல் எனும் சாமான்யனால் அது சிறிதாக கட்டமைக்கபட்டு பெரும் பிம்பமாக வளர்ந்தது, இந்திய அரபு இந்தியா கிழக்காசியா இந்தியா ஐரோப்பா என அனைத்து வழிகளிலும் அது சாம்ராஜ்யம் நடத்தியது

ஆனால் பின்னாளைய பட்ஜெட் விமானங்கள் அதை ஆட்டம் காண செய்தன, இந்தியாவின் பட்ஜெட் ரக சேவை மட்டுமல்ல ஏர் ஏசியா போன்ற சர்வதேச பட்ஜெட் ஏர்வெஸ்கள் வந்தபின் நிலை மோசம்

போதா குறைக்கு எதியாட் எமிரேட்ஸ் எல்லாம் அசுர பலத்தோடு இறங்க ஜெட் ஏர்வேஸ் கடனில் தத்தளித்து மூடுவிழாவிற்கு வந்தாயிற்று

வியாபார போட்டிகள் மிகுந்துவிட்ட உலகில் எந்த சாம்ராஜ்யமும் நொடியில் கவிழ்ந்துவிடும் என்பதற்கு ஜெட் ஏர்வேஸ் பெரும் உதாரணம்

நீட்டிக்கபட்டிருக்கின்றது

ஐரோப்பிய யூனியனிலிருந்து இன்று பிரிட்டன் வெளியேறியிருக்க வேண்டும் ஆனால் அது நீட்டிக்கபட்டிருக்கின்றது

ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் பிரிட்டனின் நலம் பாதிக்கபடுகின்றது அது வெளியேற வேண்டும் என்ற குரல் வலுத்து பிரிட்டனும் வெளியேற முயற்சிக்கின்றது

ஆனால் அதில் பல சிக்கல் இருப்பதை உணர்கின்றது பிரிட்டன். அது வெளியேறும் பட்சத்தில் வியாபாரம் இறக்குமதி ஏற்றுமதி உள்ளிட்ட பல விஷயங்கள் பாதிக்கபடும் என்பதை அது யோசிக்கின்றது

மாற்று ஏற்பாடுகளும் சொல்லிகொள்ளும்படி இல்லை, அமெரிக்க சீன மோதலில் ஏற்பட்டிருக்கும் மந்தம் பிரிட்டனையும் பாதித்திருக்கின்றது

இந்நிலையில் ஜெர்மன் ஆலோசனைபடி அக்டோபர் வரை பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிக்குமாம்

ஐரோப்பாவினை கவனித்து பாருங்கள் இரு பெண்கள்தான் அதனை கட்டுபடுத்துகின்றார்கள்

ஒருவர் தெரசா மே இன்னொருவர் ஏஞ்சலா மெர்கல்

ஐரோப்பா என்ன? நமது தூத்துகுடியிலும் அதுதான் நடக்கின்றது

நிலாவில் இறங்கும் முயற்சியில் தோல்வி அடைந்திருக்கின்றது இஸ்ரேல்

நிலாவில் இறங்கும் முயற்சியில் தோல்வி அடைந்திருக்கின்றது இஸ்ரேல்

விண்வெளி போட்டியில் நாங்களும் உண்டு என இப்பொழுது விண்ணுக்கு தாவியிருக்கும் இஸ்ரேல் தன் விண்கலத்தை நிலாவில் இறக்க அது கடும் ‍போராட்டத்திற்கு பின் தோல்வியாகிவிட்டது

அமெரிக்கா ரஷ்யா சீனா என 3 நாடுகள் மட்டுமே இதுவரை நிலாவில் கலன்களை இறக்கியுள்ளன‌

அதில் 4வதாக இணைய நினைத்த இஸ்ரேல் முதல் முயற்சியிலே தோல்வி அடைந்திருக்கின்றது

ஆனால் அவர்களா அசருவார்கள்? நாடு அடைய 2000 வருடம் போராடிய இனம் சும்மா கிடக்கும் நிலாவினை விடுமா?

விடாது விரைவில் அவர்கள் முயற்சி வெற்றிபெறலாம்

எதும் கேட்டால் நாங்கள் நிலாவில் இப்பொழுது இறக்காவிட்டால் 3ம் ஆலயம் கட்டிவைத்தபின் எங்கள் மெசாயா வந்து இறக்க போகின்றார் எங்களுக்கு என்ன கவலை என்பார்கள்

எனினும் விண்வெளி போட்டிக்கு இஸ்ரேல் வரிந்துகட்டி வந்து நிற்பது உலக கண்களுக்கு பல விஷயங்களை சொல்கின்றது

அது இருக்கட்டும்

இந்தியாவுக்கு பல நவீன‌ விஷயங்களை கொடுக்கின்றது இஸ்ரேல் இனி வான்வெளி நுட்பத்தை இரு நாடுகளும் பங்கிட்டுகொண்டால் இந்தியாவுக்கு மாபெரும் பலமாகும்

அது நடந்தாலும் நடக்கலாம்

இலங்கையில் பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும்

இலங்கையில் கொஞ்சநாளாக பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும் வந்து போவதாக பல செய்திகள் உண்டு

அவை கட்டுகதை என ஒருசாராரும், திருடர்கள் பரப்பிவிடும் கதை என ஒருசாராரும் இல்லை உண்மையிலே அந்நிய கிரக சக்திகள் நடமாட்டம் என ஒரு சிலரும் சொல்லிகொண்டிருக்கின்றனர்

2 அடி உயர விசித்திர உருவங்கள் அடிக்கடி அங்கு இரவு தென்படுமாம், சாடுமாம், ஓடுமாம், கதவை தட்டுமாம் இன்னும் ஏகபட்ட அட்டகாசங்கள் செய்யுமாம்

ஆனால் எதுவும் அவை பேசுவதில்லையாம், உற்று பார்க்குமாம் அப்படியே ஓடிவிடுமாம்

அவை ஓடியபின் பார்த்தால் வித்தியாசமான காலடிதடம் இருக்குமாம்

ஆனால் அதை யாரும் பிடித்ததாகவோ, கட்டிவைத்ததாகவோ தகவல் இல்லை

இலங்கை அரசு இதைபற்றி முறைபடி அறிவிக்கவில்லை எனினும் செய்திகள் வந்தபடி உள்ளன‌

இது இன்னும் அங்கிள் சைமனுக்கு தெரியாது போல‌

தெரிந்தால் என்னாகும்? அன்னார் இப்படித்தான் பொளந்து கட்டுவார்

“அந்நிய கிரகம் ஒன்றில் ஏற்கனவே தமிழினம் உண்டு, முழுக்க தமிழர்கள். வேறு கிரகத்தில் எங்கெல்லாம் தமிழன் ஒடுக்கபடுவானோ அங்கெல்லாம் சென்று அவர்கள் போராட உதவுவார்கள்

அவர்கள்தான் பூமியில் ஒரு தமிழீழம் அமைக்க பிரபாகரனோடு போராடினார்கள், அவர்களுக்கும் அண்ணனுக்கும் போக்குவரத்து இருந்தது

நானே அண்ணனின் பறக்கும்தட்டில் ஏறி அவர்கள் கிரகமெல்லாம் சென்று அவர்கள் கிரகத்து ஆமை எல்லாம் உண்டிருக்கின்றேன்

இறுதியுத்தத்தில் அண்ணன் தப்பி அங்குதான் சென்றார், இப்பொழுது இந்தியாவில் என்ன ஆட்சி அமையும்? அதை பொறுத்து யுத்தம் தொடங்கலாமா? என ஆய்வு செய்ய அந்நிய கிரகத்தில் இருந்து தமிழீழ குள்ளர்கள் வந்திருக்கின்றார்கள், செய்தி சேகரித்து அண்ணனுக்கு கொண்டு செல்வார்கள்

இதெல்லாம் எனக்கும் அண்ணனுக்கும் சாதாரணம், அந்த வெளிகிரக தமிழர்கள் 3 அடிக்குள்தான் இருப்பார்கள்

அண்ணனே உயரம் குறைந்தவர், நான் கூட கேட்டேன் அண்ணே நீங்களும் அந்த கிரகத்துல உள்ளவரான்னு, அண்ணன் சொன்னார், எந்த கிரகம்னா என்னடா தம்பி, அதை பூரா தமிழன் ஆளனும்டா அதுதான் நம்ம இலக்குண்ணார்

“ஹாஹஹ்ஹஹ ஹஹஹஹஹா ஹ்ஹாஆஆஆஆ”

ராணுவத்தில் ரோபோ ரஷ்யா முயற்சி

ராணுவத்தில் ரோபோக்களை நிறுத்த கடும் முயற்சியில் இறங்கிவிட்டது ரஷ்யா

ராணுவத்தில் ரோபோக்களை நிறுத்த கடும் முயற்சியில் இறங்கிவிட்டது ரஷ்யா

ரோபோக்கள் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்திற்கு அனுப்ப அது முடிவு செய்து அதற்கான காரியங்களில் இறங்கிவிட்டது

ஆனால் உலகம் கடுமையாக எதிர்க்கின்றது, என்ன இருந்தாலும் அது எந்திரம், அதன் கட்டுபாட்டில் துப்பாக்கியினை கொடுப்பது பெரும் தவறு , அதற்கு யாரை கொல்கின்றோம் என தெரியாது, அப்பாவிகளையும், சிறுவர்களை கூடவும் அது கொல்லும்

அது போக உயிர்கள் அனைத்தையும் கொல்லும் (அதாவது உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தை வைத்து ரோபா சுடுமாம், விலங்குகளையும் அது கொல்லலாம்) இது மகா ஆபத்து என உலகம் எச்சரிக்கின்றது

ரஷ்யாவோ ரிமோட் ஆயுதம் போல ரிமோட் ரோபோ என சொன்னாலும் நிலமை சுமூகமாக இல்லை

ரஷ்யா இன்னும் கருத்து ஏதும் சொல்லவில்லை என்றாலும், உள்நாட்டு காவல் துறையில் அதை பரீட்சித்து பார்க்கும் எனும் தகவல்கள் கசிகின்றன‌

ரஷ்யவாசிகள் கொஞ்சம் பாவம்தான், எந்திர போலிஸ் என்னவெல்லாம் செய்யுமோ?

ராணுவத்தில் ரோபோக்களை நிறுத்த கடும் முயற்சியில் இறங்கிவிட்டது ரஷ்யா

ரோபோக்கள் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்திற்கு அனுப்ப அது முடிவு செய்து அதற்கான காரியங்களில் இறங்கிவிட்டது

ஆனால் உலகம் கடுமையாக எதிர்க்கின்றது, என்ன இருந்தாலும் அது எந்திரம், அதன் கட்டுபாட்டில் துப்பாக்கியினை கொடுப்பது பெரும் தவறு , அதற்கு யாரை கொல்கின்றோம் என தெரியாது, அப்பாவிகளையும், சிறுவர்களை கூடவும் அது கொல்லும்

அது போக உயிர்கள் அனைத்தையும் கொல்லும் (அதாவது உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தை வைத்து ரோபா சுடுமாம், விலங்குகளையும் அது கொல்லலாம்) இது மகா ஆபத்து என உலகம் எச்சரிக்கின்றது

ரஷ்யாவோ ரிமோட் ஆயுதம் போல ரிமோட் ரோபோ என சொன்னாலும் நிலமை சுமூகமாக இல்லை

ரஷ்யா இன்னும் கருத்து ஏதும் சொல்லவில்லை என்றாலும், உள்நாட்டு காவல் துறையில் அதை பரீட்சித்து பார்க்கும் எனும் தகவல்கள் கசிகின்றன‌

ரஷ்யவாசிகள் கொஞ்சம் பாவம்தான், எந்திர போலிஸ் என்னவெல்லாம் செய்யுமோ?

கண்டம் தப்பிவிட்டார் டிரம்ப்

ஒரு வழியாக கண்டம் தப்பிவிட்டார் டிரம்பானவர், அவருக்கு பெரும் கண்டம் எதில் வந்தது என்றால் அவர் தேர்தலில் வெல்ல ரஷ்யா உதவி செய்ததா என்ற அளவில் வந்தது

தேர்தல் பிரச்சார காலங்களில் ஹிலாரியே முதலிடத்தில் இருந்தார், ஆனால் அவர் செனட்டராக இருந்தபொழுது அனுப்பிய பல இமெயில்கள் வெளிவந்து அவருக்கு சரிவினை கொடுத்தது

இதுபோன்று இன்னும் பல விஷயங்கள் உண்டு

அவை எல்லாம் டிரம்ப் வெற்றிபெற ரஷ்ய உளவுதுறை செய்த வேலை என சர்ச்சை வந்தது, இதனை விசாரிக்க முல்லர் என்பவரின் தலமையில் கமிஷனும் அமைக்கபட்டது

அது என்ன இந்திய கமிஷனா? முடிவே வராமல் போக? இந்தியாவில் ஒரு கமிஷனும் முடிவினையே சொல்லாது, எல்லாம் கொந்தளிப்பினை ஆறபோடும் செய்யும் வேலை

இங்கு முடிவு எடுத்துவிட்டுத்தான் கமிஷன் அமைப்பார்கள்

அங்கு அப்படி அல்ல, முல்லர் குறிப்பிட்ட நாளில் தன் முடிவினை சொன்னார், அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு இல்லை என அறிவித்துவிட்டார்

இதனால் “இயேசப்பா கோட்டான கோடி நன்றி இயேசப்பா” என வெள்ளைமாளிகையில் நன்றி ஜெபம் செய்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்..

ஐரோப்பாவுடன் நல்லுறவு

அமெரிக்காவுடன் கடும் முறுகல் இருக்கும் நிலையில் ஐரோப்பாவுடன் நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கின்றது சீனா..

சீனாவின் நிரந்தர அதிபர் ஜின்பெங் ஐரோப்பா சென்றிருக்கின்றார், அங்கு பல நாடுகளை சந்தித்த அவர் மிகபெரும் காரியத்தை செய்துவிட்டார்

ஆம் இத்தாலியினை தன் முத்துமாலை மற்றும் பட்டுசாலை திட்டத்தில் சேர்த்துவிட்டார்

ஆசியாவில் ஒரே சாலை ஒரே இணைப்பு எனும் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்து பல நாடுகளை இணைத்து பெரும் சாலை மற்றும் கடல் வழி இணைப்பை ஏற்படுத்தி தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் சீனா முதல் ஐரோப்பிய நாடாக இத்தாலியினை பிடித்திருக்கின்றது

ஆசிய நாடுகளை விடுங்கள், ஆனால் இத்தாலி உலகின் 10 பொருளாதார வள நாடுகளில் ஒன்று

அப்படிபட்ட இத்தாலிக்கு கொஞ்சம் பொருளாதார சரிவு, அதனால் சீனாவின் பிடிக்குள் செல்லுமோ என அஞ்சுகின்றார் பலர்

வழக்கமாக ஒரு நாடு சிக்கிவிட்டால் கந்துவட்டியினை விட மோசமான வட்டியினை வாங்கி அதை விழுங்கிவிடும் நாடு சைனா

அது இத்தாலியில் கால் வைத்திருப்பது வித்தியாசமாக நோக்கபடுகின்றது, சீனாவின் ஐரோப்பிய வியாபாரம் வேறு

ஆனால் சாலைபோட்டு வருவதில் ராணுவ நோக்கம் இருக்கலாம் என மற்ற ஐரோப்பிய யூனியன் தேசங்கள் அஞ்சுகின்றன‌

நடக்கும் காட்சிகளை அமெரிக்காவும் ரஷ்யாவும் நோக்கிகொண்டே இருக்கின்றன‌

ஆசிய நாடுகளை தாண்டி ஐரோப்பா வரைக்கும் தன் பழைய பட்டுசாலையினை , செங்கிஸ்கானின் காலத்து பெருமைகள் நோக்கி செல்கின்றது சைனா

இதே இத்தாலியில் இருந்துதான் பட்டுசாலை வழியாக சைனா சென்றான் மார்க்கோபோலோ

சீனாவின் வெடிபொருள், காகிதம் திசைகாட்டும் கருவி என சகலத்தையும் அவனே ஐரோப்பாவுக்கு கொண்டுவந்தான், அதன் பின் ஐரோப்பா எழும்பிற்று

இன்று அதே இத்தாலிக்கு சாலை அமைத்து வந்து நிற்கின்றது சைனா

எங்களிடமிருந்து கொண்டு சென்ற செல்வங்களை மறுபடியும் கொண்டு செல்ல வந்திருக்கின்றோம் என வந்து நிற்பார்களோ என்னமோ?