கிரெம்ளின் பகிரங்க மிரட்டல்

ஐரோப்பாவில் ரஷ்ய எல்லையில் ஏவுகனை தளம் அமைத்து ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நெடுநாளைய கணக்கு

அப்படி ஒரு அறிவிப்பினையும் 1990களின் இறுதியில் செய்தது, சில நேரங்களில் அது வேகமும் எடுக்கும்

புட்டின் வந்து ஆட ஆரம்பித்தபின் அமெரிக்கா அதில் சுணங்கியது, புட்டீனின் சிரிய நடவடிக்கை ராணுவ ஒத்திகை, நவீன ஏவுகனை ஒத்திகை என பல மிரட்டல்கள் வந்தபின் அமெரிக்கா மவுனம் காத்தது

இப்பொழுது ஐரோப்பாவில் ஏவுகனை சிஸ்டம் பொருத்தும் திட்டமில்லை என அமெரிக்கா சொன்னாலும், அட்டகாசமாக சீண்டுகின்றது ரஷ்யா

இல்லை பொருத்தி பாருங்கள், எங்களுக்கென்ன? எம் கடலடி நீர்மூழ்கிகள் அமெரிக்கா எல்லையில் ஏவுகனைகளோடு நிறுத்தபடும் , சும்மா விடமாட்டோம் என எச்சரித்துள்ளது

இத்தோடு விட்டாலும் பரவாயில்லை, அதிரடியாக பெண்டகனை 5 நிமிடத்தில் தாக்குவோம் , அமெரிக்காவின் மிக முக்கிய முடிவு எடுக்கபடும் கேம்ப் டேவிட்டினை 3 நிமிடத்தில் தாக்குவோம் என சொல்லி, தாக்குதலுக்கான அமெரிக்க இலக்குகளை படம் போட்டு காட்டிவிட்டது

ரஷ்ய தொலைகாட்சியின் இந்த அதிரடி உலகில் பலத்த சலசலப்பினை ஏற்படுத்திற்று,புட்டீனிடம் கேட்டால் அதற்கென்ன என்பது போல் சென்றுவிடுகின்றார்

ஒரு மாதிரியான ஆசாமியாக இருப்பார் போலிருக்கின்றது

குருச்சேவ் காலத்திற்கு பின் கிரெம்ளின் இப்படி பகிரங்கமாக அமெரிக்காவினை மிரட்டுவது இதுதான் முதல்முறை