சாக்கோஸ் தீவுகள்

இந்தியாவில் புறம்போக்கு நிலமெல்லாம் அரசியல்வாதிக்கு என்பது போல உலகில் புறம்போக்கு நிலமெல்லாம் ஒரு காலத்தில் பிரிட்டனுக்கு

புறம்போக்கு நிலமென்றால் கடலில் உள்ள பெரும் ஆளில்லா தீவுகளும் அடக்கம், அப்படி ஒரு காலத்தில் வளைத்து போட்டிருந்தது பிரிட்டன். இந்தியா போன்ற நாடுகள் சுதந்திரமடைந்தாலும் பல தீவுகளை தங்களுக்கு சொந்தம் என சொல்லி வம்பு செய்வது அவர்கள் பாணி

அர்ஜெண்டினா அருகே உள்ள தீவு முதல் பல தீவுகளில் சர்ச்சை செய்வார்கள். சில தீவுகளை விழுங்குவார்கள், அப்படி விழுங்கபட்டதுதான் இலங்கைக்கு தேற்கேயும் மொரிஷியஸ் அருகேயுள்ள சாக்கோஸ் தீவுகள்

சாக்கோஸ் தீவுகள் என்றால் தெரியாது, ஆனால் அமெரிக்கா மர்ம ராணுவதளம் கட்டியிருக்கும் டீகோ கார்சியா எனும் தீவுள்ள பகுதி என சொன்னால் பலருக்கும் தெரியும்

அந்த சாக்கோஸ் பகுதி பிரிட்டனுக்கு சொந்தமானது என்றும் அமெரிக்காவிற்கு அது குத்தகைக்கு விடபட்டிருக்கின்றது என்பதும் இதுகாலமும் வந்த செய்தி

தாதா ஒருவன் குத்தகைக்கு நிலத்தை எடுத்தால் கொடுப்பானா? அப்படி அமெரிக்காவும் மிக பெரும் ராணுவதளம் அமைத்து மிக மர்மமாக அங்கே இருக்கின்றது

இந்நிலையில் அத்தீவு மொரிஷீயசுக்கு சொந்தமானது என அந்நாடு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, சில காலம் நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அது மொரிஷீயசுக்கு சொந்தம் எனவும் பிரிட்டன் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்லிவிட்டது நீதிமன்றம்

மொரிஷீயஸ் இதை வரலாற்று வெற்றி என சொல்லிகொண்டிருக்கின்றது, அங்கு மிகபெரும் கொண்டாட்டம் காத்திருக்கின்றது

இதனால் ஆசிய நாடுகளுக்கு மிகபெரும் அச்சுறுத்தலான டீகோ கார்சியா தீவில் இருந்து அமெரிக்கா வெளியேறுமா என தெரியவில்லை

ஏற்கனவே பிரிட்டன் அமெரிக்காவினை வெளியேற சொன்னதாகவும், அதனால் மொரிஷியஸை சில சக்திகள் தூண்டிவிட்டு தீவினை வாங்கியதாகவும் சில செய்திகள்

மொரிஷுயஸ் அமெரிக்க ஒப்பந்த்திற்கு வருமா? இல்லை சர்வதேச அரசியல் விளையாட்டில் அமெரிக்கா விரட்ட்படுமா என்பது இனிதான் தெரியும்

ஆனால் கொஞ்சகாலமாகவே திரிகோணமலைபக்கம் ஒருமாதிரி சுற்றி திரிகின்றது அமெரிக்கா, அவர்களிடமும் திட்டம் இருக்கலாம்

எது எவ்வாறாயினும் பிரிட்டன் ஆக்கிரமித்த தீவுகளில் உரிய நாடுகளுக்கு நியாயம் கிடைத்திருப்பது நல்ல விஷயம்

இது மொரிஷியஸுக்கு கடும் உற்சாகம் அதை விட நாம் தமிழருக்கு கடும் உற்சாகம், அதிகார மாற்றம் நிகழ்ந்து நாம் தமிழர் ஆட்சி கிடைத்தவுடன் இதே போல் வழக்கு தொடர்ந்து கச்சதீவினை மீட்காமல் விடவே மாட்டார்களாம்