சீன பாரம்பரியம்

சொந்த ஊரில் இருந்து சிலமைல் தள்ளி சென்றாலே தன் பாரம்பரியத்தை மறப்பவன் தமிழன், ஆனால் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் பாரம்பரியத்தை இழுத்து செல்வதில் சீன இனம் தன்னிகரற்றது

அப்படி சீன புத்தாண்டை கொண்டாடுகின்றார்கள், சந்தேகமில்லை அக்காலத்தில் பொங்கல் விழா தமிழகத்தில் 1 மாதம் கொண்டாடபடும் என்பார்கள் அல்லவா அப்படி அவர்கள் புத்தாண்டும் கிட்டதட்ட 1 மாதம் இழுக்கும்

1 மாதமென்றால் முழுக்க அல்ல மாறாக முக்கிய நேரங்களை கொண்டாடுவது

தமிழருக்கு காணும் பொங்கல் என்றொரு பண்டிகை உண்டல்லவா? அதாவது பொங்கலின் மூன்றாம் நாள் உறவினரை காண்பது. அதன் அர்த்தம் என்னவென்றால் சும்மா உறவினரை மட்டும் காண்பதல்ல ஏதும் திருமண சம்பந்தம் இருந்தால் பேசிமுடிப்பதும் உண்டு

ஆம் கன்னி பொங்கல் காணும் பொங்கல் என்பது அதுதான் அக்காலத்தில் கன்னிபெண்களை காணும் சம்பிரதாயமாகவும் அது இருந்திருக்கின்றது

சுயவர திருவிழாகவும் அது இருந்திருக்கின்றது

அப்படி சீனருக்கு சீன புத்தாண்டின் 15ம் நாள், அக்காலத்தில் நமது ஊரில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவது போல சீனருக்கு சில சம்பிரதாயம் உண்டு

அதாவது சிகப்பு ஆரஞ்சு அவர்களுக்கு செழுமை மற்றும் தங்கத்திற்கான அடையாளம், அக்காலத்தில் சீன கன்னிகள் /காளைகள் தனக்கு பிடித்தவனுக்கு அதை கொடுப்பார்கள் என்பதும், பையனோ பெண்ணோ கிடைக்காத போன்ற கோஷ்டிகள் தங்கள் ஆசையினை அதன் மேல் எழுதி கடலிலோ ஆற்றிலோ எறிவார்கள் என்பதும் அவர்கள் வழக்கம்

அதை ஆற்றிலோ கடலிலோ எடுப்பவர்கள், அட நம்மை போல ஒருவர் ஆள் தேடுகின்றார்களே என தேடிவருவார்கள் என்பது அடிப்படை நம்பிக்கை

அக்கால சீன சுயவரம் இது.

இந்த பன்னெடுங்கால நம்பிக்கை கலாச்சாரத்தை இன்றும் சீனர்கள் கொண்டாடுகின்றார்கள்

இது மாறிவிட்ட காலம் அல்லவா? அதனால் ஆரஞ்சுபழத்தில் கைபேசி நம்பர், ஈமெயில் முடிந்தால் இன்ஸ்டாகிராம் அடையாளம் என எல்லாம் எழுதி எறிகின்றார்கள்

வேடிக்கையாக இருந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை காப்பதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி

நிச்சயம் விஞ்ஞான உலகில் நாகரீக உச்சத்தி வாழ்ந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை விடாமல் காப்பாற்றிவருகின்றார்கள்

இதனால் ஜோடி சேர்தார்களா வாழ்ந்தார்களா என்பது அல்ல பிரச்சினை, அவர்கள் கலாச்சாரத்தை விஞ்ஞான காலத்திலும் காத்து வருகின்றார்கல் அல்லவா? அதுதான் விஷயம்

‘சாப் கொ மே” (Chap Goh Me ) என இதை கொண்டாடுகின்றார்கள், கடந்த செவ்வாய் அன்று கொண்டாடினார்கள்

மிக சரியாக மாசி மகம் என தெப்பதிருவிழா போன்ற கொண்டாட்டங்கள் நடக்கும் பொழுது இதுவும் நடப்பது ஆச்சரியம்

கூட்டி கழித்து பார்த்தால் தமிழரின் பொங்கல் கலாச்சாரமும் அதன் கொண்டாட்டமும் காணும் கன்னி பொங்கலும் இன்னபிறவும் சீன புத்தாண்டையொட்டி வருவதால் அக்காலத்தில் தமிழகமும் புத்தாண்டை தை மாதமே கொண்டாடியிருக்கலாம் வாய்ப்பு இருக்கின்றது

சீனரின் சிங்க டிராகன் நடனம் இன்னும் பழம் கலாச்சாரங்களை பார்க்கும் பொழுது சிலப்பதிகாரம் கண்ணுக்குள் வருகின்றது

தமிழருக்கும் இந்திர விழா, பூந்தொடை விழா என ஏகபட்ட விழாக்கள் இருந்திருக்கின்றன, தொன்று தொட்டு கொண்டாடியிருக்க்கின்றார்கள்

இன்று எல்லாம் போயிற்று, அதை கொண்டாடிய குறிப்பு இலக்கியங்களில் உண்டே தவிர இன்று கொண்டாடுவோர் அல்லது அக்கொண்டாட்டம் அறிந்தோர் யாருமில்லை

ஜல்லிகட்டும் பொங்கலும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன, ஏக்க பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகின்றது

கலாச்சாரங்களை தொலைப்பதில் தமிழனை விட இன்னொரு இனம் இருக்கவே முடியாது.

அவன் விதி அப்படி