தலாய்லாமா விவகாரம் மறுபடியும் விஸ்வரூபமாகின்றது

தலாய்லாமா விவகாரம் மறுபடியும் விஸ்வரூபமாகின்றது

அதாவது திபெத்தில் தலாய்லாமா என்றால் லாமாக்களுக்கு தலையானவர் என்று பொருள் , லாமா என்றால் மதகுரு தலாய் லாமா என்றால் தலமை குரு

அவர் எப்படி தேர்ந்தெடுக்கபடுவார் என்றால் ஒரு தலாய்லாமா மறித்ததும் திபெத்தில் அடுத்து பிறக்கும் ஆண்குழந்தை தலாய்லாமாக குறிக்கபட்டு வளர்க்கபடும்

இப்பொழுது இருக்கும் தலாய்லாமா 83 வயது நெருங்குவதால் அடுத்து யார் என்பதில் சிக்கல்

அது அவர் காலத்திற்கு பின்புதான் என்றாலும், என் காலத்திற்கு பின் இந்தியாவில் இருக்கும் திபெத்திய குடும்பத்தில் பிறப்பவனே அடுத்த தலாய்லாமா என அறிவித்துவிட்டார் இப்போதைய தலை

விடுமா சைனா?

அதெல்லாம் முடியாது, உண்மையான திபெத் எங்களுடன் இணைந்திருக்கும் பொழுது இங்கு பிறப்பவர்தான் அடுத்த தலாய்லாமா என்கின்றது சைனா

அதன் கணக்கு வேறு

இப்போது இருப்பவர் தனி திபெத் கேட்கும் தலாய்லாமா, அவரை ஒப்படைக்க சொன்னால் இந்தியா செய்யவில்லை இன்னும் சர்ச்சை தீரவில்லை

இதனால் அடுத்த தலாய்லாமா சைனா திபெத்திலே பிறக்கடும், அவரை சீன தேசியத்திலே வளர்க்கலாம் என்பது அதன் கணக்கு

இங்கே தலாய்லாமா கிடைத்தால்தான் திபெத் விடுதலை போராட்டத்தை தொடர வழியுண்டு இல்லாவிட்டால் சிரமம் என்பது தலாய்லாமா கணக்கு

இரு கணக்குகளும் உரசிகொண்டிருக்கின்றன‌

இனி இரு தலாய்லாமாக்கள் வருவார்களா? அல்லது சீனாவின் பிடியில் திபெத் இருப்பதால் அது வெல்லுமா என தெரியவில்லை

சீனர்களை பற்றி தெரியும் என்பதால் இந்த தலாய்லாமா இறந்த மறுநொடி ஏன் அதற்கு முன்பே சீனாவில் அவர் பிறந்துவிட்டார் என சொல்ல தயாராக இருகின்றார்கள்

ஒருவேளை அடுத்த தலாய்லாமா இந்தியாவில் பிறந்தால் என்னாகும்?

அருணாசல பிரதேசத்தின் டபாங் பகுதியினை தெற்கு திபெத் என சொல்வதை சீனா நிறுத்தாது, சர்ச்சைகள் தொடரும்

ஏன் இப்படி அலைகின்றது சீனா?

மதம் அந்த கம்யூனிச நாட்டுக்கு எதிரி என அது கருதுகின்றது, புத்தமதம் அடக்கி ஒடுக்கபடாவிட்டால் சீனாவின் நிலையான கம்யூனிச ஆட்சிக்கு ஆபத்து என்பது மாவோ சொல்லிவிட்டு சென்ற பாடம்

அதை உயிரை கொடுத்து நிறைவேற்றுகின்றார்கள்