புனிதமான ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலில் கொல்லபட்டவர் எணணிக்கை 50ஐ தொடுகின்றது, உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்

தாக்கியவன் உலகெல்லாம் அதை ஒளிபரப்பியபடியே சுட்டிருக்கின்றான், அவனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போகின்றார்கள்

அவன் ஏன் சுட்டான்? எதற்கு சுட்டான் என்பது இதுவரை சொல்லபடவில்லை, சொல்லவும் மாட்டார்கள்

இதுவே இஸ்லாமியனோ இல்லை மாற்று இனத்தினரோ வெள்ளையர் கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிற்று கிழமை காலை இப்படி சுட்டிருந்தால் இந்நேரம் உலகம் பொங்கி இருக்கும், போர் முரசு எல்லாம் கொட்டியிருப்பார்கள்

மெழுகுவர்த்தி, பூச்செண்டு கண்ணீர் என உலகமே அதாவது ஐரோபாவே அலறிகொண்டிருக்கும்

செத்தவர்கள் இஸ்லாமியர் என்பதால் ஒரு பரபரப்புமில்லை

அந்த புனிதமான ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்

அந்த துப்பாக்கி சூடு காட்சிகள் பரவுகின்றது, அதை தடுக்க வேண்டும் என மட்டும் பல நாடுகள் துடிக்கின்றன , எங்கள் நாட்டு குழந்தைகள் மனநலம் பாதிக்கும் என அவர்கள் சொன்னாலும் பல காரணங்கள் அதில் இருக்கின்றன‌

குறிப்பாக கிறிஸ்தவன் இப்படி சுடுவானா? அது அவமானம் இல்லையா போன்றவை அது

சில நாடுகள் அமைதியாக இருந்தாலும் பல நாடுகள் கண்டிக்கின்றன, ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகின்றன‌

சில கிறிஸ்தவ‌ நாடுகள் தங்கள் நாட்டில் இருக்கும் பள்ளிவாசல்களுக்கு தக்க பாதுகாப்பு அளித்திருக்கின்றன

இனி இவ்வாறான சம்பங்கள் நடக்காமல் போகட்டும்

புனதமான பள்ளிவாசலில் அதுவும் வெள்ளிகிழமை தொழுகையின் பொழுது இந்த கொடுமை நடந்திருப்பது உலகெல்லாம் இஸ்லாமிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருகின்றது

எல்லோரும் அஞ்சலி செலுத்துகின்றார்கள் என்பதற்காக இந்த ஈழ, புலி, தமிழுணர்வு இம்சைகளும் அஞ்சலி செலுத்தினால் அவர்கள செருப்பால் அடிக்கலாம்

ஆம், இதே போல இலங்கை காத்தான்குடியில் தொழுகையில் இருந்த இஸ்லாமியரைத்தான் ஒரு காலத்தில் புலிகள் கொன்று குவித்தனர்.

கிட்டதட்ட 200க்கும் அதிகமான மக்கள் அப்படி கொல்லபட்டிருந்தனர், அதையும் உலகம் அமைதியாக பார்த்துகொண்டேதான் இருந்தது

ஆம் அப்படி எல்லாம் மகா பாவத்தை செய்ததால் கேட்க யாருமின்றி மொத்தமாக அழிந்தது அந்த கொடூர கூட்டம்