வெனிசுலா

சில நாட்களுக்கு முன்பு தி இந்து தமிழ் பத்திரிகையில், “வாழும் போதே நரகமாகும் வெனிசுலா” என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்

முழுக்க படு அபத்தமான கட்டுரை அது, அங்கிள் சைமனின் பிதற்றலுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அது

அப்படி ஒரு முழு பொய்யும், உளறலும் ஆகும்

தென்னமெரிக்கா பற்றியோ அங்கு நிலவும் அரசியல் பற்றியோ லத்தீன் கத்தோலிக்க பிரிவினை கிறிஸ்தவ அரசியல் பற்றியோ கொஞ்சமும் ஞானமில்லாதவர் அந்த எழுத்தாளர்

சாவேஸ் என்பவர் எப்படி உருவானார்? எப்படி எண்ணெய் பணத்தை மக்களுக்கு கொடுத்தார் என்பதை எல்லாம் தெரியாமல் அல்லது மறைத்து படு அபத்தமாக அவரை குற்றம் சாட்டியிருந்தார் அந்த கட்டுரையாளர்

சாவேஸ் என்பவர் கடாபி, கோமேனி போன்றோரின் சாயல்

எண்ணெய் பணம் என்பது ஒருசிலருக்கானது அல்ல நாட்டின் சொத்தான பணம் நாட்டு மக்களுக்கே என செய்து காட்டி சதாம் போல கடாபி போல ஒழிக்கபட்ட ஒரு போராளி

காஸ்ட்ரோவிற்கும் சாவேஸுக்கும் பெரும் வித்தியாசமில்லை, சாவேஸ் புற்றுநோயால் கொல்லபட்டார் காஸ்ட்ரோ நீண்டநாள் இருந்தார் என்பதுதான் வித்தியாசம்

லிபியாவினை எப்படி அமெரிக்கா சீரழித்ததோ அப்படி பின் தங்கி இருந்து சாவேஸால் சீரமைக்கபட்ட வெனிசுலாவினை எண்ணெய்க்காக அமெரிக்கா சீரழிக்க கிளம்பிவிட்டது

இந்த உண்மையினை மறைத்து என்னவெல்லாமோ எழுதுகின்றார் ஆசிரியர்

தென்னமெரிக்காவில் போதை பொருள் என்பது தமிழக டாஸ்மாக்கை விட தாராளம், சாவேசும் காஸ்ட்ரோவும் அதை தங்கள் நாட்டில் விடாமல் காத்தனர்

வெனிசுலாவினை சீரழித்ததில் அமெரிக்கா முதல் ஏகபட்ட முதலாளித்துவ நாடுகளின் பங்கு உண்டு

கொஞ்சமும் வரலாறு தெரியாமல், உலக நிலைப்பாடு தெரியாமல், சும்மா உளறிகொண்டுஇருப்பவர்களை எழுத வைப்பது “தி இந்து ” போன்ற பத்திரிகைக்கு நல்லதல்ல‌

“தி இந்து” பத்திரிகையின் அந்த கட்டுரை சென்னை அமெரிக்க தூதரை மகிழ்விப்பது போல இருப்பது பல மர்மங்களை கொண்டது

நீதிக்கும், நேர்மைக்கும் இன்னும் பலவற்றுக்கும் போராடுபவர்கள் நாங்கள் என மார்தட்டுபவர்கள் உலக நீதியினையும் , அதன் பெரும் உண்மைகளையும் இப்படி கொச்சைபடுத்த அனுமதிப்பது சரியல்ல‌

இனியாவது “தி இந்து” தமிழ் பத்திரிகை திருந்தட்டும், இப்படிபட்ட விஷயமில்லா குறைகுடங்களின் விஷம எழுத்துக்களை அனுமதிக்காதிருக்கட்டும்.