ஜூலியன் அசாஞ்சே

ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு அனுப்பபடுகின்றார், பிரிட்டன் ஒப்புகொண்டாயிற்று

அமெரிக்காவின் ரகசியங்களை இணையம் இன்னும் பல வழிகளில் திருடினார் என குற்றம்சாட்டபட்டு அமெரிக்காவால் விரட்டபட்டு எங்கெல்லாமோ இருந்து தில்லாக சவால்விட்டவர் அசாஞ்சே

அதுவும் லண்டன் ஈக்வெடார் தூதரகத்திலே இருந்துகொண்டு சவால் விட்டவர்

பின்பு அவருக்கும் ஈக்வெடார் அதிபருக்கும் மோதிகொள்ள பிர்ட்டன் அமுக்கிவிட்டது

இப்பொழுது அவர் அமெரிக்காவுக்கு தூக்கி செல்லபடுகின்றார்

செய்தி சொல்வது என்ன தெரியுமா?

“கடைசியா முகம் பார்க்க விரும்புபவர்கள் பார்த்து கொள்ளவும்”

ஆம் அமெரிக்காவுக்கு அன்னார் அவ்வளவு குடைச்சல் கொடுத்திருக்கின்றார், கையில் பச்சைமட்டையோடு காத்திருக்கின்றது அந்நாட்டு அதிகார பீடம்.

விஷயம் மறுபடியும் பற்றி எரிகின்றது

சில வாரங்களுக்கு முன்பு அமீரக துறைமுகத்தில் 4 கப்பல்கள் தாக்கபட்டது நினைவிருக்கலாம்

அப்படியே இப்பொழுதும் இரு கப்பல்கள் அந்த ஏரியாவில் தாக்கபட்டிருக்கின்றன‌

அவற்றை தாக்கியது ஈரான் என வழக்கம் போல கிளம்புகின்றது அமெரிக்கா

இல்லை இது எங்கள் மேலான தாக்குதலுக்கு அவர்களே செய்யும் தந்திரம் என்கின்றது ஈரான்

கப்பல்கள் தாக்கபட்ட விதத்தை பார்த்தால் அவை கப்பலை மூழ்கடிக்கும் எண்ணத்தில் அடித்த அடி அல்ல, மாறாக எச்சரிக்கை செய்ய அடிக்கபட்ட அடி என்கின்றார்கள்

விஷயம் மறுபடியும் பற்றி எரிகின்றது

உணவுக்கு எண்ணெய் எனும் கட்டுபாட்டுக்கு ஈரான் வருவதாக தெரியவில்லை, அது சுதந்திர எண்ணெய் வியாபாரத்துக்கு விரும்புகின்றது

இச்சம்பவத்தால் விலகி சென்ற போர்மேகங்கள் மறுபடியும் சூழ்கின்றன

இரண்டாம் முறையாக டிரம்ப் கிம் இன்று சந்திப்பு

இரண்டாம் முறையாக டிரம்ப் கிம் இன்று சந்திப்பு

“இந்த வெள்ள குண்டான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன்கிறான்

பொருளாதார தடையில் வடகொரியாவே பட்டினாயிற்றுன்னு அழுறான், ஆள பார்க்க அப்படியா இருக்கான்?

ஏதும் பிசினஸ்மேனா இருந்தா வளைச்சி போடலாம் , இவன் அணுகுண்டும் ராக்கெட்டுமா செஞ்சி பிஸினஸ் பண்றான், அதெல்லாம் செய்யகூடாதுடான்னா அப்போ அமெரிக்காவ எழுதிகொடுன்னு கேக்குறான்

ஜப்பான்மேல அணுகுண்டு போடும்பொழுதே ஆசான் மெக் ஆர்தர் சொன்னார், சைனா கொரியாவ எல்லாம் இப்பவே அணுகுண்டு போட்டு சோலிமுடிச்சாத்தான் அமெரிக்கா நிம்மதியா இருக்கும்ணு, அந்த ஐசன்ஹோவர் அத‌ செய்யாம விட்டு இப்போ என் தலையில விடியுது

இவனோட நான் படுற‌பாடு இருக்கே அய்யோ அய்யோ.. அவனும் அவன் மண்டையும்..”

வடகொரிய அதிபரும் டிரம்பும்

இங்கு தமிழிசையும் முக ஸ்டாலினும், கமலஹாசனும் திமுகவும் மோதிகொண்டிருப்பது போல அடிக்கடி அறிக்கை போர் நடத்திகொண்டிருக்கும் வடகொரிய அதிபரும் டிரம்பும் மறுபடியும் சந்திக்க போகின்றார்கள்

ஒரு அரசியல் கூட்டம் நடக்கும்பொழுது அவர்கள் சந்திக்கும் இடம் மகா முக்கியம்

முதலில் சிங்கப்பூரில் சந்தித்தார்கள் அது மேற்கத்திய ஆதரவு நாடு

இப்பொழுது வியட்நாமில் சந்திக்கின்றார்கள், வியட்நாம் வித்தியாசமான நாடு, ஒரு காலத்தில் சீன ரஷ்ய ஆதரவுடன் அமெரிக்காவினை விரட்டி அடித்தார்கள்

உலகில் அமெரிக்கபடைகள் தோற்ற வெகுசில இடங்களில் வியட்நாமும் ஒன்று

இப்பொழுது சீனாவுடன் உரசுகின்றார்கள். உலகிலே சீனாவினை அசால்ட்டாக எதிர்க்கும் நாடு வியட்நாம், இதனால் இந்தியா பிரம்மோஸ் ஏவுகனை எல்லாம் கொடுத்து தயாராக வைத்திருக்கின்றது

அப்படிபட்ட வியட்நாமில் மறுபடியும் டிரம்பும் கிம்மும் சந்திகின்றார்கள், இன்னும் வடகொரியா மேலான தடை அகற்றபடா நிலையில் டிரம்பின் மிரட்டல் தொணி கொஞ்சம் குறைந்து முணுமுணுப்புக்கு வந்திருக்கின்றது

அதாவது வடகொரியா அணுஆயுதம் வைப்பதை தடுக்கவில்லை எனும் அளவிற்கு அய்யன் இறங்கியிருக்கின்றார்

ஏன் இந்த மாற்றம்?

தென் கொரியாவினை வளர்த்தது போல வடகொரியாவினை வளர்த்து சீனாவுக்கு எதிராக கொம்பு சீவும் திட்டம் இருக்குமோ?

ஒரு காலத்தில் பெரும் எதிரியும் பெரும் அவமானமும் கொடுத்த வியட்நாமே இன்று அமெரிக்காவுடன் நட்பாக இருந்து சீனாவினை எதிர்ப்பது போல, வடகொரியாவினை வளைக்கும் தந்திரமும் இருக்குமோ?

பாமக அதிமுகவுன் இணைந்தது போல லோக்கல் அரசியலிலே அதிசயம் நடக்கும் பொழுது சர்வதேச அரசியலில் நடக்காதா?

வியட்நாம் தேர்ந்தெடுக்கபட்ட ரகசியம் இதுதான் என்கின்றார்கள்

இப்பொழுதெல்லாம் அரசியல் கூட்டணி என்றால் பிரமாண்ட விருந்துடனேதான் நடக்க வேண்டுமாம்

அதற்கு தைலாபுரம் தோட்டமோ வியட்நாமிய ஸ்டார் ஹோட்டலோ விதிவிலக்கல்ல‌

இருபெரும் அழிச்சாட்டிய தலைவர்களுக்கு பெரும் விருந்து பிப்ரவரி 27க்காக தயாராகின்றது

ஒபாமாவுடன் நான் டெலிபோனில் எப்பொழுதும் பேசுவேன் என முன்பு சொன்னார் அன்புமணி

பாவம் டிரம்ப், அன்புமணியுடன் அவருக்கு நல்ல உறவு இல்லாததால் தைலாபுரத்து ஸ்பெஷல் டிஷ் வியட்நாமிய விருந்தில் மிஸ்ஸிங்..

ரஷ்ய புரட்சி

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது
அதற்கும் முன் போலந்து வலயம், பிரெஞ்ச் புரட்சி, அமெரிக்க சுதந்திரம் என பல நிகழ்ந்தாலும் ரஷ்ய புரட்சி என்பது வரலாற்றை மாற்றி போட்டது
அந்த புரட்சி நடந்த நூற்றாண்டு விழா நாளை தொடங்குகின்றது, அந்த செங்கொடி எழுந்து நூறு ஆண்டுகள் ஆகின்றது
ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், பெரியார் அதனை வரவேற்று பின் தன் போக்கினையே மாற்றிய அந்த காலமும் நினைவுக்கு வருகின்றது.
1917ல் ரஷ்யாவில் எழுந்த செங்கொடி, உலகெல்லாம் போலவே இந்தியாவிலும் பறந்திருக்கலாம், வாய்ப்பு இருந்தது . ஆனால் இங்கு அணியபட்டிருக்க வேண்டிய செஞ்சட்டை கருப்பு சட்டையானது
பின் அது திராவிட கட்சிகளாகி ஆட்சிக்கும் வந்தது. சர்வ நிச்சயமாக இங்கு பொதுவுடமை கொடியே கேரளா போல பறந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி அமையவில்லை, பெரியார் ஏனோ கம்யூனிஸ்ட் என தன்னை அறிவிக்கவில்லை
ஆனால் திராவிட கொள்கையினை அவர் கம்யூனிச சாயல் இல்லாமல் சொல்லவில்லை. பெரியார் பேசிய எழுதிய எல்லாமும் அந்த செங்கொடி தேசத்து சாயலே
அவர்கள் போப்பையும் கிறிஸ்துவத்தையும் எப்படி எல்லாம் விமர்சித்தார்களோ பெரியார் அதில் இந்துமதத்தையும் புராணத்தையும், பிராமணியத்தையும் பொருத்தினார், அவ்வளவுதான் புரட்சியாளர் ஆனார்
ரஷ்யாவின் கிறிஸ்தவ குருமார்கள் செய்ய அட்டகாசத்தை இங்கு பிரமணர்கள் செய்தார்கள், அக்காலம் அப்படி இருந்தது அதனை பெரியார் எடுத்துகொண்டார்
ஆனால் நிலசுவாந்தார்களை குறி வைத்த அந்த ரஷ்ய பொதுவுடமையினை எடுக்கவில்லை. கவனித்தால் புரியும் பெரியார் பிராமணியத்தை எதிர்த்தாரேயன்றி பண்ணைமுறையினை, பண்ணையார்களை எதிர்த்தாரா என்றால் இல்லவே இல்லை
காரணம் அவரும் பெரும் பண்ணையாராய் இருந்ததால், ரஷ்ய புரட்சியில் எது தனக்கு தேவையோ அதை மட்டும் எடுத்து கடவுள் இல்லை ஆனால் முதலாளித்துவம் உண்டு என்றார்
இது பிரிட்டிஷ்காரனுக்கும் சிக்கல் இல்லாத விஷயமாக இருந்ததால் அவனும் கண்டுகொள்ளவில்லை
பொதுவுடமை கோட்பாடு பரவாமல் தடுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கையாளாக பெரியார் செயல்படுகின்றார், பொதுவுடமை கொள்கை பரவினால் பிராமணியம் தானாக அழியும்பொழுது பெரியார் ஏன் செஞ்சட்டை அணியாமல் கருப்பு சட்டை அணிகின்றார் என்ற கேள்விகளுக்கு பெரியாரிடம் இருந்து மவுனமே பதில் ஆனது
கடைசிவரை அவர் பதில் சொல்லவில்லை
பண்ணையாருக்கு கீழ் இருந்த பாட்டாளிகள் அவருக்கு சூத்திரர்களாக தெரிந்தார்களே தவிர வாழ வழியிலா அடிமைகளாக, உரிமையில்லா கூட்டமாக தெரியவே இல்லை
பெரியார் இப்படி திசைதிருப்பி தமிழகத்தை மாற்றியிருக்காவிட்டால் இன்று நிச்சயம் கேரளா போல் இங்கொரு கம்யூனிஸ்ட் முதல்வராகியிருப்பார்
தமிழிசை, ராசா இனபிற கும்பல் எல்லாம் பேசிகொண்டிருக்க முடியாது, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு கடும் சவால்விடும் கேரளா போல தமிழகமும் சவால் விட்டு கொண்டிருந்திருக்கும்
ஆனால் பெரியார் செய்த குழப்பமான முடிவால் என்னவெல்லாமோ நடந்துவிட்டது. 
லெனினும் மாவோவும் உருவாகியிருக்க வேண்டிய தமிழகத்தில் குறைந்தபட்சம் ஜோதிபாசுவும், நம்பூதிரிபாடும் உருவாகியிருக்கவேண்டிய தமிழகத்தில் “புரட்சி தலைவன்” ராமசந்திரனும் “புரட்சி தலைவி” ஜெயலலிதாவும் உருவாகிவிட்டார்கள்
பெரியாரை விடுவோம், செங்கொடி பறந்த காலத்திற்கு செல்லலாம்
எப்படிபட்ட சாதனைகளை எல்லாம் அந்த செங்கொடி செய்தது
ஜார் மன்னன் எனும் கொடுங்கோலனை வீழ்த்தி, ரஷ்புடீன் எனும் சாமியாரை விரட்டி மக்களே மக்களை ஆள்வார்கள் என உயர்ந்தது அந்த கொடி
வர்க்கபேதமற்ற சமூகத்தை உருவாக்க தத்துவம் சொன்ன மார்க்ஸின் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்த சமூகத்தின் அடையாளமாக, மத சாமியார்களின் கட்டுபாட்டினின்று தன்னை விடுவித்த சமூகத்தின் அடையாளமாக அது உயரபறந்தது
அதுவரை தொழிலாளர் என்போர் விலங்குகளில் ஒருவர் என எண்ணபட்ட உலகிற்க்கு , தொழிலாளி என்பவன் வாழபிறந்தவன் என சொல்லி அவனுக்கு உயர்ந்த வாழ்வு அளித்தது அந்த கொடி
அந்த கொடியின் கீழான ஆட்சியில்தான் தொழிலாளர்கள் நிம்மதியாக சுவாசித்தனர், நிம்மதியாக வாழ்ந்தனர். முதலாளிகளுக்கும் நில சுவாந்தார்களுக்கும் மட்டுமே கிடைத்த வசதிகள் அத்தொழிலாளிகளுக்கும் கிடைத்தன‌.
விவசாயியும், சுரங்க தொழிலாளியும் கப்பல் ஏறி உல்லாச பயணமாக விடுமுறை கொண்டாடியது எல்லாம் அந்த ஆட்சியில்தான்
கூட்டுறவு பண்ணைகள் எல்லாம் உருவானது அங்குதான்
அந்த தொழிலாளிகள் வாழ்வாங்கு வாழ்வதை கண்ட மற்ற நாட்டு மக்களும் சிந்திக்க, பல அரசுகள் அஞ்சின, பல அரசுகள் சலுகைகளை அள்ளி கொடுத்தன‌
இன்று தொழிலாளர் உலகம் காணும் ஓய்வூதியம், பணிக்கொடை, வேலை பாதுகாப்பு, இன்னும் பிற படிகள் உட்பட பாதுகாப்புகள் எல்லாம் அதன் மூலம் உலகம் பெற்றுகொண்டவையே
இந்த உலகிற்கு எவ்வளவு பெரும் பாதுகாவலாய் நின்றது அந்த செங்கொடி.
ஹிட்லர் எனும் அரக்கனை அந்த செஞ்சேனைதான் வீழ்த்திற்று, ஹிட்லரின் பாசிச ஆட்சியிலிருந்து உலகை காத்தது நிச்சயம் அந்த பொதுவுடமை படை
அந்த வெற்றிக்கு பின்புதான் இந்தியா உட்பட்ட நாடுகளின் விடுதலை சாத்தியமானது, ஒருவேளை பிரிட்டன் அல்லது ஹிட்லர் வென்றிருந்தால் இந்திய விடுதலை சாத்தியமே இல்லை
சோவியத் யூனியனின் எழுச்சியே உலக சரித்திரத்தை புரட்டி போட்டது. அதன் பாதுகாவலிலே மக்களுக்கான அரசுகள் எழும்பின‌
சீனா, வியட்நாம், அந்நாளைய வடகொரியா எல்லாம் அப்படித்தான் ஆட்சிமாற்றம் கண்டது
சோவியத் இருக்கும் தைரியத்தில்தான் சேகுவேராவும், காஸ்ட்ரோவும் உருவானார்கள். அமெரிக்கா நொடியில் நசுக்க திட்டமிட்ட கியூபாவினை காத்து நின்றது சோவியத் யூனியன்
எகிப்து சூயஸ் கால்வாயினை கைபற்றி பிரிட்டனை அடித்து விரட்டி தன் சொத்தை தனதாக்கி கொள்ள உதவியதும் அதுவே
அந்த சோவியத் இருந்த தைரியத்தில்தான் அரபு நாட்டில் பாலஸ்தீன் எழுச்சியும் அந்த போராட்டமும் வலுபெற்றது, பாலஸ்தீன் இருப்பிற்கு சோவியத் மகா முக்கியம்
வங்கப்போரில் இந்தியாவினை அமெரிக்காவின் மிரட்டலில் இருந்து இந்தியாவினை காத்து நின்றதும் அந்த செங்கொடியேதான்.
இந்திராவின் இந்தியா எழுச்சிபேறவும் அது இன்று ஓரளவு பாதுகாப்பான தேசமாக நிற்கவும் அந்த செங்கொடி தேசம் கொடுத்த உதவிகள் கொஞ்சமல்ல‌
அணுசக்தி முதல் ஏவுகனைகள வரை நமக்கு அந்த‌ சோவியத் செய்த ரகசிய உதவிகள் கொஞ்சமல்ல‌
பெண் விடுதலையினை உலகிற்கு சொன்னதும், பால்காரி தெரஸ்கோவாவினை விண்வெளிக்கு அனுப்பியதும், மகளிர் நலனில் உலகிற்கு முன்மாதிரியாய் இருந்தது அந்த செங்கொடி நாடுதான்
மகளிருக்கும் குழந்தைகளுக்கும் அது கொடுத்த சலுகையினை இனி எந்த அரசும் கொடுத்துவிட முடியாது.
கல்வியும் மருத்துவமும் தன் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, எந்த மானிடருக்கும் எந்த நேரமும் வழங்க அது தயாராக இருந்தது. இன்று உலகின் மருத்துவ முன்னேற்றம் அடைந்த நாடாக கியூபா இருக்க, அந்த செங்கொடியின் சாதனையே காரணம்
விவசாயிகள் எப்படி காக்கபட வேண்டும்? முதலாளித்துவம் எப்படி கட்டுபடுத்தபட வேண்டும் என உலகிற்கு சொன்ன தேசம் அது
அத்தேசம் இருக்கும் வரை உலகின் தேசிய இனங்கள் அப்படியே இருந்தன. சோவியத் வலுவான காலத்தில் உலகில் நடந்த ஒரே தவறு திபெத் ஆக்கிரமிப்பு , அதற்கு ஆயிரம் காரணங்கள், மற்றபடி எல்லா இனங்களும் ஒரு வித பாதுகாப்போடே இருந்தன.
முதலாளித்துவ சக்திக்கு நிரகான சக்தியாக சோவியத் உலகை காத்தது.
எகிப்தின் கர்ணல் நாசர் போல பல ஜாம்பவான்கள் தணித்து நின்றனர்.
மதவெறி கும்பல் உலகில் எங்கும் தலை தூக்கிவிடாமலும், முதலாளித்துவ கைகூலிகளின் படை உருவாகிவிடாமலும் காத்து நின்றது செங்கொடி
ஆப்கனில் சோவியத் படைகள் இருந்த காலம் வரை காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டகாசம் என்ற செய்தி வந்தது உண்டா? நிச்சயம் இல்லை
ஆப்கனிலிருந்து செங்கொடி நீங்கிய பின்பே காஷ்மீருக்கு ஆப்கானிய தீவிரவாதிகள் அணிவகுத்து வந்து சோதனை கொடுத்தனர். அது இன்றும் நீடிகின்றது
ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்கா பின் மதவாததின் உண்மை தெரிந்தபின் அவமானத்தில் தலைகுனிந்த அந்த செங்கொடியின் மகிமையினை மனதிற்குள் உணர்ந்து நிற்கின்றது, ஏன் உலகமே உணர்ந்துகொண்டது.
காலத்தின் கோலத்தில் செங்கொடி மாஸ்கோவில் கீழிறங்கிய பின்பே இவ்வுலகில் நடக்க கூடா விஷமெல்லாம் நடந்தன,
உலகமே மாறியது சதாம் போன்றவர்கள் கொல்லபட்டனர். உலக சமநிலை ஓய்ந்தது, இன்று எங்கு நோக்கினாலும் பெரும் குழப்பம்
வல்லான் வகுத்ததே நீதியானது. ஈழம் போன்ற பகுதிகள் எரிய தொடங்கின‌
ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், அந்த செங்கொடி மட்டும் மிக வலுவாக பறந்துகொண்டே இருந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால், சிரியா, ஆப்கன் போன்ற கொலை கூடங்கள் எல்லாம் உதித்திருக்காது
இன்றைய உலகின் நிலையற்ற தன்மை வந்திருக்காது
12 மணிநேர வேலை, வேலை செய்தால் தான் கூலி மற்றபடி ஒரு சலுகையுமிலை என்றிருந்த தொழிலாளார் உலகினை நேரடியாகவும் மறைமுகமாகவும் மாற்றி காட்டியது அந்த செங்கொடி தேசம்
ஆனால் இன்றோ மறுபடி உலகம் அந்த கொத்தடிமை முறை நோக்கி செல்கின்றது. அது ஐடி முதல் எல்லா தொழில்களிலும் தெரிகின்றது
ஓவர்டைம் அது இது என சொல்லி எல்லா தொழிலாளர்களும் பிழியபடுகின்றார்கள், சனி ஞாயிறு இரவு பகல் என்பதெல்லாம் இல்லை.
மறுபடி அந்த தொழிலாளர் அடிமை முறை நோக்கி இந்த உலகம் சென்றுகொண்டிருக்கின்றது.
கம்யூனிசம் ஒன்றும் மார்க்ஸ் முதலில் சொன்னது அல்ல, பொதுவுடமை கோட்பாடு பைபிளிலே இருக்கின்றது. ஆதி கிறிஸ்தவர்கள் அப்படி பொதுவுடமை வாழ்வுதான் வாழ்ந்திருக்கின்றார்கள், என்று கிறிஸ்தவம் ரோமாபுரியினை கைபற்றியதோ அதன் பின்புதான் சிக்கல் தொடங்கியிருக்கின்றது
அந்த பொதுவுடமை வாழ்வினை கடவுள் இல்லை என்ற புள்ளியில் மறுபடியும் வாழ கொடி உயர்ந்தது நவம்பர் 7, 1917
அந்த தேசம் நன்றாகத்தான் இருந்திருக்கின்றது, சோவியத் மக்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று மிக்க நலமாக வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றார்கள்
ஆனால் மானிட சுபாவம் வித்தியாசமானது. ஆளுக்கொரு சிந்தனை ஆளுக்கொரு விருப்பம் என உள்ள மனிதர்கள் பொதுவுடமை கொள்கையினை கொஞ்சம் மறக்க தொடங்கினார்கள். இன்னொன்று முன்னோர் கண்ட சிரமும் அவர்கள் பட்ட பாடுகளும் அடுத்தடுத்த தலைமுறைக்கு தெரியவில்லை
விளைவு சோவியத் சிதறியது
ஆனாலும் பழைய சோவியத் முடிமக்களுக்கு அந்த செங்கொடி பறந்த காலம் மகா சொர்க்கமாக, மிகுந்த நல்லாட்சி நடந்த காலமாகவே தெரிகின்றது
இந்த உலகத்தையே புரட்டிபோட்ட மாபெரும் நிகழ்வின் நூற்றாண்டு நாளை கொண்டாட படவேண்டும்
ஆனால் எங்கும் அதற்கான வேலைகள் நடந்ததாக தெரியவில்லை. அவசர உலகம் அந்த நன்னாளை தவறவிடுகின்றதோ எனும் அச்சம் ஏற்படுகின்றது
அந்த நாளால்தான் கியூபா முதல் வடகொரியா வரை உலக அரங்கில் நிற்க முடிகின்றது, சீனா எல்லாம் ஆசிய சக்தியாக நிற்க முடிகின்றது
உலக அரசியலை விடுங்கள், பிரணாய் விஜயனும் இங்கு அமர்ந்திருக்கும் பழனிச்சாமியும் முதல்வராக அமர அந்த செங்கொடி கொடுத்த நம்பிக்கையே காரணம்.
நகைப்பாக இருக்கலாம், ஆனால் அதிமுகவின் மூலம் திமுக திமுகவின் மூலம் திக, திகவின் மூலம் பெரியார் என சென்றால் நிச்சயம் அந்த செங்கொடிதான் காரணம்
செங்கொடி உயர்ந்திருக்காவிட்டால் இவை எல்லாம் நடந்திருக்காது
அவ்வகையில் உலகின் ஒவ்வொருவர் தலைவிதியினையும் மாற்றிகாட்டிய நாள்
யார் நினைக்கின்றார்களோ இல்லையோ, மானிடத்தை நேசிக்கும், சமத்துவத்தை நேசிக்கும் யாரும் அந்நாளை கொண்டாடலாம்
மானிட குலத்தின் மகத்தான நாள் அந்த நவம்பர் 7.
அதுவும் நூற்றாண்டு விழா என்பதால் அந்த நினைவுகளில் மூழ்கி , அந்த செங்கொடியால் பெற்றுகொண்ட சகல நன்மைகளுக்காகவும் நன்றி தெரிவிக்கலாம்
[ November 8, 2018 ]
Image may contain: 1 person, text

சிதறல்கள்

முதலில் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக ஒரு மனுதாக்கல் செய்ய வேண்டும்

இந்த டிவிக்கள் இம்சை தாங்க முடியவில்லை, சின்னதம்பி மவுனராகம் எல்லாம் இடைவேளைக்கு பிறகு தொடரும் என்கின்றார்கள்

அடடே இதைவிட என்ன பாக்கியம் வேண்டும் என அமர்ந்தால், தலைவி வருவார் என எதிர்பார்த்தால் ஏதோ அல்லக்கைகள் வந்து நிற்கின்றன‌

அட நமக்கு என்னாயிற்று? கஞ்சா அடித்தோமா? இல்லை குஷ்பு இப்படித்தான் இருப்பாரா? அய்யகோ அப்படியானால் தலைவி கனவில் கண்ட முகமா? என பல எண்ணங்கள் மாயமாய் சுழன்ற பின் அது சீரியல் என தெரிகின்றது

விட முடியாது, விட்டால் வருஷம் 16, அண்ணாமலை என தலைவியின் காவியங்களை எல்லாம் சிறுமைபடுத்துவார்கள்

இரு ரவுடி கும்பல்களுக்கு இடையேயான கதையினை எப்படி மகாபாரதம் என்றால் ஏற்றுகொள்ள முடியாதோ அப்படி சில அல்லக்கைகளை காட்டி சின்னதம்பி என்றால் ஏற்றுகொள்ள முடியவே முடியாது

மகா அவசர மனுவாக இதை தாக்கல் செய்யும் முடிவில் சங்கம் இறங்கி இருக்கின்றது [ October 31, 2018 ]

============================================================================

அண்ணே உங்களை திமுகவினர் எல்லாம் ஒரு மாதிரி விமர்சிக்கின்றார்கள் உங்கள் பார்வைக்கு வந்ததா? என கேட்டார் நண்பர் ஒருவர்

‘அடேய் யாரெல்லாம் திக, திமுகவினை விமர்சிக்கின்றார்களோ அவர்களை எல்லாம் கோமாளிகளாக மாற்றுவது ஒன்றும் இங்கு புதிதல்ல‌

அது அன்றிலிருந்து இன்றுவரை நடக்கும் விஷயம், இங்குள்ள அமைப்பு அப்படி

சம்பத்தை ஆக்கினார்கள், கண்ணதாசனை ஆக்கினார்கள், திமுகவில் குடிகாரனே இல்லை என்பது போல விஜயகாந்தினை ஆக்கினார்கள்

இன்னும் யார் யாரை எல்லாமோ பைத்தியம் என்றார்கள், இது ஒருவகையான அரசியல்

பத்திரிகை முதல் பல சக்திகளும் இன்னபிற விஷயங்களும் அதற்கு துணைபோகும், மாயமான வேலைகள் எல்லாம் நடக்கும்

நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?”

[ October 31, 2018 ]

============================================================================

ஆக உள்ளூரில் பால்குடம் ஏந்த வேண்டும், வெளியே வந்தால் அம்பேத்கர் தழுவிய புத்தமதம் என கத்த வேண்டும்

மிஸ்டர் திருமா, இந்த நிலைக்கு உங்களை உயர்த்தியது உங்கள் கல்வியும் அது கொடுத்த பலமுமாகும், நிச்சயம் சாதி அல்ல‌

எப்படியோ நல்ல விஷயத்தை செய்திருக்கின்றீர்கள், மிக உரிமையாய் செய்திருக்கின்றீர்கள்

பாருங்கள் இதுவும் இந்துமத சம்பிரதாயமே, யாராவது உங்களிடம் இருந்து குடத்தை பிடுங்கினார்களா? முடியுமா?

நல்ல பாதைக்கு திரும்பி இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

[ October 31, 2018 ]
Image may contain: 2 people, people standing and outdoor
==========================================================================

குலசேகர பட்டினம் கடற்கரையில் ராக்கெட் தளத்திற்காக நிலம் கையக படுத்தபடுகின்றது

சைமன் முதல் திருமுருகன் காந்தி வரை ஒரு சத்தமில்லை, ஒரு கட்சியும் மூச் இல்லை, கடற்கரை மக்களின் காவலரான உதயகுமார் என்பவரை காணவே இல்லை

தினகரன் தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடு இல்லை என்கின்றார்

அண்ணாச்சியிடம் இன்னும் 7 நாள் விசாரணை நடக்கும்

இந்த செய்திகள் தனி தனியான செய்திகள் என்றாலும் நீங்களே கூட்டி கழித்து முடிவு செய்து கொள்ளுங்கள்

[ October 31, 2018 ]

============================================================================

பங்கு, தலைவருக்கு ரமாவரத்திலும் அம்மாவுக்கு கொடநாட்டிலும் 4000 கோடியில் சிலை வச்சா எப்படி இருக்கும்?

சூப்பர் ஐடியா பங்கு ஆனால் காண்ட்ராக்ட் என் சம்பந்திக்குத்தான் சரியா?

ஓகே, ஆனால் மணல் காண்ட்ராக்ட் என் குடும்பத்துக்குத்தான் சரியா

டன் பங்கு, சீக்கிரம் சிலை வச்சிருவோம்”

[ October 31, 2018 ]

============================================================================

வழக்கமாக‌ ஜப்பானுடன் தீவு பிரச்சினையில் மோதுவோம் என்பதும், நாலந்துலாவில் இந்தியாவுடன் உரசுவதும், தென் சீன கடலில் வியட்நாமுடன் போதுவதுதான் சீன பொழுது போக்கு

இப்பொழுது இதை எல்லாம் விட்டுவிட்டு தன் ஆதிகால பிரச்சினைக்கு உண்மையாக சென்றுவிட்டது

என்ன சிக்கல் அது?

சீனா அருகே உள்ளது தைவான், அது சீனாவின் ஒரு பகுதி என்றார் மாவோ, இல்லை நாங்கள் தனிநாடு என்றது தைவான்

ஒழுங்காக சீனாவோடு இணையுங்கள் என சீனா மிரட்ட, நாங்கள் தான் ஒரிஜினர் சைனா நீ டூப்ளிகேட் என தைவான் சொல்ல விஷயம் சிக்கலாயிற்று

இந்த சமச்சாரங்கள் 1960களில் நடக்கும் பொழுது தைவானை அணைத்தது அமெரிக்கா, தென் கொரியா போல வளர்த்தது

அவ்வப்போது சீனா மிரட்டுவதும், தைவான் சீறுவதும் அவ்வப்ப்போது நடக்கும்

இப்பொழுது அமெரிக்கா சீனா இடையே முறுகல் நடக்கும் நிலையில், தைவானை கைபற்ற சீன ராணுவம் தயாராகட்டும் என ஜின்பெங் சொல்லிவிட்டார்

விடுவாரா டிரம்ப்? தைவான் மேல் கை வைத்தால் நடப்பதே வேறு என்கின்றார்

போர் மேகம் தைவானை சூழ்கின்றது

ஆனால் போர் வருமா என்றால் வராது, பின் ஏன் சீனா தைவானை தாக்குவோம் என்கின்றது?

இதுதான் தந்திரம், இப்போது அமெரிக்க சீன வியாபார சண்டை நடக்கும் நேரம், அமெரிக்காவினை பேச்சுவார்த்தைக்கு அழைக்க சீனாவிற்கு ஒரு துருப்பு சீட்டு தேவை

அட்டகாசமாக எடுத்து வீசுகின்றது சீனா, இனி ராஜதந்திர விளையாட்டுகள் ஆரம்பமாகும்

[ November 1, 2018 ]

No automatic alt text available.
============================================================================

அண்டார்ட்டிக்கா என்பது குளிர்பிரதேசம் என்றாலும் அங்கு ஆதிக்கம் செலுத்த எல்லா நாடுகளுக்கும் ஆசை

ஆர்க்டிக் துருவம் ரஷ்ய ஆதிக்கமும் அண்டார்ட்டிக்கா கட்டுபாடு என்றாலும் அண்டார்டிக்காவில் ரஷ்ய தலையீடும் உண்டு

அங்கும் அணுகுண்டு முதல் பல ஆராய்ச்சிகளை செய்தார்கள், இன்னும் வெளிசொல்லபடாத காரணங்களும் உண்டு

அங்கு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கு நிரந்தர விமான நிலையங்கள் உண்டு, சீனா இந்தியா ஜப்பான் எல்லாம் இவற்றில் ஒன்றை பயன்படுத்துவார்கள், ரஷ்யா தன் நிலையத்தை சீனா பயன்படுத்த அனுமதித்தது

இப்பொழுது அண்டார்டிக்காவில் தனி விமான நிலையம் கட்டுகின்றது சீனா, ஏனென்றால் அவர்கள் வல்லரசாம்

சரி விமானநிலையம் கட்டியாயிற்று, ஆனால் அண்டார்டிக்காவில் பறக்க சிறப்பு விமானம் வேண்டும், சீனாவிடம் அது ஒன்றே ஒன்றுதான் உண்டு

ஒரு விமாத்தை வைத்து கொண்டா விமான நிலையம் கட்டுகின்றீர்கள் என உலகம் கேட்க சீனாவிடம் பதில் இல்லை

தமிழகத்தில் பாஜக கட்சி நடத்தவில்லையா? அப்படி அண்டார்டிக்காவில் ஏதோ செய்கின்றது சீனா

[ November 1, 2018 ]

============================================================================

இந்திய ராணுவத்தை பலபடுத்த சொன்னவர் பட்டேல், நிச்சயம் இந்திய ராணுவம் பலமாக வேண்டும் என முதலில் ஆசைபட்டவர் அவர்தான்

இந்த 3 ஆயிரம் கோடியில் நிச்சயம் ரபேலை விட அதி நவீன யூரோ பைட்டர் விமானங்களை எல்லாம் வாங்கி இருக்கலாம், இல்லை பெரும் ஆயுத தொழிற்சாலை கட்டி இருக்கலாம்

பட்டேலும் அதைத்தான் விரும்புவார்

ஆனால் 3000 கோடியினை சீனாவிடம் கொடுத்து சிலை கட்ட சொல்லி இருக்கின்றார்கள்

இதுபற்றி ஏதும் சொன்னால் நாம் நாட்டுபற்று இல்லாதவர்கள் ஆகிவிடுவோம்..

[ November 1, 2018 ]

============================================================================

தேவர் வழியில் நடப்போம் : முக ஸ்டாலின்

எந்த வழி மிஸ்டர் ஸ்டாலின்?

தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வழிகாட்டினார் தேவர், இரண்டுமே திமுகவிற்கு கசப்பான விஷயம்? பின் எந்த வழி?

இம்மானுவேல் சேகரனுக்கு நடந்த வழியா? அதெல்லாம் அழகிரிதான் சரி, அவரும் இப்போது திமுகவில் இல்லை

செப்டம்பர் 17ம் தேதிதான் பெரியார் வழி, அண்ணா வழியில் திமுக நடக்கும் என்கின்றார்

அக்டோபரில் தேவர் வழியில் நடக்குமாம்

இனி நவம்பர், டிசம்பரில் எந்த வழியில் திமுக நடக்குமோ தெரியாது , மாதம் ஒரு வழியில் நடப்பார்கள் போலிருக்கின்றது

[ November 1, 2018 ]

============================================================================

அது பல விஷயங்களில் உருப்படாத நாடு என்றாலும் சில இடங்களில் சில நேர்மையான விஷயங்கள் நடக்கின்றன‌

பாகிஸ்தானில் எது இல்லை என்றாலும் நீதிமன்றத்தில் சில நேர்மைகள் இருக்கின்றன, ஊழல் செய்தவர் யாராயினும் தப்ப முடிவதில்லை, விரட்டபடுகின்றனர்

இந்தியாவினை விட அங்கு சில தீர்ப்புகள் பரவாயில்லை

இப்பொழுது ஒரு தீர்ப்பு வந்திருகின்றது

பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் உண்டு, அதில் அசியா என்ற பெண்ணுக்கும் இஸ்லாமியருக்கும் தகறாறு, அப்பெண் ஏதோ சொல்லிவிட மத விவகாரங்களை பேசினாள், முகமது நபிபற்றி தவறாக சொன்னாள் என வழக்காகி அது மரண தண்டனையுமானது

8 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர் மேல்முறையீடு செய்தார், அதில் மரண தண்டனை ரத்தானது

இப்பொழுது பாகிஸ்தானின் தாடிவைத்த , நீண்ட கால்சட்டை போட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பலான பழமைவாதிகள் அவளை கொல்ல வேண்டும் என் போராடுகின்றனர்

பிரதமர் இம்ராம்கான் அமைதிகாக்க வேண்டும், நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என சொல்லிகொண்டிருக்கின்றார்

மிகபெரும் கலவர சூழல் எழுகின்றது, அப்பெண் வெளிவந்தாலும் இனி வாழமுடியுமா என்ற அளவுக்கு நிலமை மோசம்

அநேகமாக அப்பெண் வெளிநாட்டுக்கு பயணிக்கலாம், கிறிஸ்தவர்களை காக்க வந்திருக்கும் டிரம்பின் உலக‌ ஆட்சியில் அப்பெண் நிச்சயம் வெளிநாட்டில் வாழ வாய்ப்பு உண்டு

[ November 1, 2018 ]

============================================================================

திரையரங்கில் கொசு அதிகமாக இருந்ததால் மூடபட்டது : சுகாதார துறை அதிரடி

சிம்பு படமோ இல்லை இப்பொழுது வரும் சில படங்களையோ ஓடவிட்டால் பூரா கொசுவும் செத்துவிடாதா?

அன்பானவன்.. அடங்காதவன் படத்தைவிடவா சிறந்த கொசு ஒழிப்பு மருந்து உண்டு??

[ November 1, 2018 ]

=========================================================================

நவம்பர் பிறந்தாச்சி, “மாவீரர் மாதம்” , “கார்த்திகை 26 நோக்கி..” என்றெல்லாம் என கிளம்ப வேண்டும் , இப்பொழுதெல்லாம் நிலமை சரி இல்லை

அண்ணன் வைகோவோ, அய்யா நெடுமாறனோ இல்லை தம்பி திருமுருகனோ முதலில் தொடங்கட்டும் , நாம பின்னாடி சேர்ந்துக்கலாம்

ஒருவேளை அவங்கெல்லாம் நான் முதலில் தொடங்கட்டும்னு இருந்தா..

ஹஹஹஹஹஹஹஹா..

நடக்கவே நடக்காது ராஜா..வாய்ப்பே இல்லை ராஜா

[ November 1, 2018 ]

============================================================================

தவறான தகவல் பரப்புபவர்கள் பற்றிய விவரங்கள் வேண்டும்: தகவல் தொடர்பு நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தல்

இதற்கு எதற்கு அவர்களிடம் கேட்க வேண்டும்? பட்டியல் இதோ

மோடி, கட்காரி, ராஜ்நாத்சிங், சுஷ்மா, நிர்மலா சீத்தாராமன், தமிழிசை, எச்.ராசா, எடப்பாடி & கோ [ November 1, 2018 ]

============================================================================

அமெரிக்காவில் மலை உச்சியில் செல்பி எடுத்த இந்திய தம்பதியர் தவறி விழ்ந்து மரணம்

இதற்குத்தான் நாட்டுகொரு சிவகுமார் வேண்டும் என்பது [ November 1, 2018 ]

============================================================================

இந்த பாருங்க, காலையில வெடிக்க வேண்டிய வெடி அவர் வெடிப்பாராம்

மாலை வெடிக்க வேண்டிய வெடி நீங்க வெடிக்கணுமாம், அவ்வளவுதான் பஞ்சாயத்து

இது ஒரு பிரச்சினையென‌ மோடியினை பார்க்க டெல்லி செல்லக்கூடாது புரியுதா? [ November 1, 2018 ]

============================================================================

 

அர்ஜுன ரணதுங்க

அர்ஜுன ரணதுங்க எனும் கிரிக்கெட் ஆட்டக்காரரை மறக்க முடியாது

இலங்கை அணி 1980களில் தடுமாறியபொழுது அவர்தான் கேப்டன், மனிதர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி

அப்பொழுது இந்த கனடா, ஆப்கானிஸ்தான் போலிருந்த இலங்கை அணி இவர் தலமையில் குப்புற கிடந்தபொழுது சமிந்தவாஸ், டிசில்வா, ஜெயசூர்யா, முரளிதரன் போன்ற சிற்ந்த வீரர்கள் கிடைத்தார்கள், இதுவரை இலங்கை கண்ட மிக சிறந்த அணி அதுதான்

அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவினையும் விரட்டி கோப்பையினை கைபற்றியது, அப்பொழுது அவர் கேப்டன்

அதனால் மிகபிரபலமான அவர் அரசியலுக்கு வந்தார், ரணில் அமைச்சரவையில் சாலை மற்றும் கடற்போக்குவரத்து அமைச்சர் ஆனார்

இம்ரான்கான், சித்துவிற்கு எல்லாம் அன்னார் முன்னோடி

இப்பொழுது மகிந்தா ராஜபக்சே டிடிவி தினகரன் ஸ்டைலில் அங்கு கும்மாங்குத்து அதிரடி எல்லாம் காட்டுவதால் மனிதருக்கு நேரம் சரியில்லை

எங்கோ அலுவலகத்தில் நுழையபோய் துப்பாக்கி சூடு எல்லாம் நடந்து இருவர் பலி

விஷயம் உலக அரங்கில் பெரிதாகி அமெரிக்காவே தன் குடிமக்களை இலங்கையில் எச்சரிக்கையாய் இருங்கள் கலவரம் வரலாம் என சொல்லிவிட்டது

ராஜபக்சே இந்த ரணதுங்கவினை பிடித்து உள்ளே போட சொல்லிவிட்டார்

இலங்கை சிக்கல் மோசமாகிகொண்டுதான் செல்கின்றது

போகிற போக்கில் இன்னும் சிக்கலாகலாம், ராஜபக்சே உடனே நாடாளுமன்ற தேர்தல் நடத்தவேண்டும் என்கின்றார்

ஒருவேளை பெரும் கலவரம் வந்தால் என்னாகும்?

அதை அடக்க 1977, 1987களில் இந்தியா முன்பு களமிறங்கியது போல் இறங்கும்

காரணம் இன்னொரு நாட்டை இலங்கையில் களமிறக்க இந்தியா எளிதில் அனுமதிக்காது

ஒருவேளை கொழும்பில் கலவர சூழல் வந்து இந்தியா தலையிட்டால் என்னாகும்?

இங்கு உடனே முள்ளிவாய்க்காலில் இறங்காத இந்தியா கொழும்பு என்றால் மட்டும் எப்படி இறங்கலாம் என குதிப்பார்கள், இந்திய அரசுக்கு தலைவலி கொடுப்பார்கள்

அதை பார்த்த அமெரிக்கா, இலங்கைக்கு உதவ தயார் என சொல்லிவிட்டு டெல்லியினை பார்த்து சிரிக்கும்

இலங்கை விவகாரத்தில் இந்தியாவினை கட்டிபோட இங்கு சில சக்திகளை அமெரிக்கா ரகசியமாக ஆதரிக்கும் என்பது ஒன்றும் வியப்பல்ல, அரையணாவிற்கு தெருவோடு திரிபவன் எல்லாம் ஜெர்மன், பிரான்ஸ் என சென்று ஈழ முழக்கம் எழுப்புவதெல்லாம் இந்த ரகசியத்தில்தான்

ஆனால் இப்பொழுது ஆள்வது இரும்பு மனிதர் பழனிச்சாமி, எக்கு மனிதர் மோடி

யாராவது சீண்டினால் நொறுக்கிவிடுவார்கள், அதனால் கொழும்பில் இந்திய படை இறங்க ஒரு தடையும் இருக்காது

எனினும் இப்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு மட்டுமலல், முன்னாள் கேப்டனுக்கும் போதாத காலம்.. [ October 30, 2018 ]

 

Image may contain: 2 people
Image may contain: 1 person, closeup