தந்தை சாவுக்கு பழி தீர்த்திருக்கின்றார் ஷேக் ஹசீனா.

வங்கதேச முன்னாள் ராணுவத்தாரான மஜீத் என்பவருக்கு தூக்கு நிறைவேற்றபட்டிருக்கின்றது

அவர் இப்போதைய வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச விடுதலை வீரருமான‌ முஜிபுர் ரகுமான் கொலையில் சம்பந்தபட்டவர்

வங்கதேச போர் ஏற்பட ரகுமானே காரணம், அவரின் முக்திவாஹினி படை பாகிஸ்தானுடன் மோதி, அவர்களுக்கு ஆதரவாக இந்திய ராணுவம் களமிறங்கியே வங்கம் உருவாயிற்று

ஆனால் முஜிபுர் ரகுமான் 1975ம் ஆண்டு சுட்டு கொல்லபட்டார், அவர் குடும்பமே கொல்லபட்டது. உலகிலே ஒரு நாட்டின் தலைவர் வீடு தாக்கபட்டு குடும்பமே கொல்லபட்டது அங்குதான், உலகின் கோர காட்சிகளில் அதுவும் ஒன்று

இந்த ஷேக் ஹசீனா மட்டும் தப்பினார், அவர் அப்பொழுது அங்கு இல்லை வெளிநாட்டில் படித்து கொண்டிருந்தார்

வங்கதேச ராணுவத்தின் சதி என அது அறியபட்டு அதன் விசாரணை தூக்கில் போடபட்டது, 1996ல் பிரதமரான ஷேக் ஹசீனா தன் தந்தையின் சாவுக்கு நியாயம் தேடி விசாரணையினை துவக்கினார்

அதன் பின் அது வேகம் பெற்று கைதுகள் நடந்தன, சிலர் வெளிநாடுகளில் பதுங்கினர் அப்படி இந்தியாவில் கைது செய்யபட்ட அப்துல் மஜீத் என்பவர் நெடுங்காலம் இந்தியாவில் இருந்தார்

ரகுமானை கொன்றது யார் என்பது கென்னடி கொலையினை போன்ற மர்மம், எனினும் இந்தியாவே அவரை கொன்றது என்ற சர்ச்சையினை பாகிஸ்தான் கிளப்பிவிட்டது

ஈழபோராளிகள் இதை 1987ல் உரக்க சொன்னார்கள் “வங்கம் தந்த பாடம்” என புத்தகமே வெளியிட்டு இலங்கையில் இருந்து இந்திய வெளியேற வேண்டும் என பல குழு சொன்னது, இதில் உமா மகேஸ்வரன் முக்கியமானவர்

ஆனால் இந்தியா வாய்திறக்கவில்லை ஆனால் ரகுமானின் கொலையாளிகள் இங்கே தங்கியிருந்தது எதையோ சொல்கின்றது

எப்படியோ மோடி ஆட்சியில் அவர் அங்கு ஒப்படைக்கபட்டார், நேற்று அவருக்கு தூக்கு நடந்தது

அவருக்கு 75 வயதுக்கு மேல் இருக்கும், இன்னும் சில காலங்களில் சாக வேண்டியவரை வலிந்து கொன்று தன் தந்தை சாவுக்கு பழி தீர்த்திருக்கின்றார் ஷேக் ஹசீனா.

உலகில் தந்தையின் சாவுக்கு பழிவாங்க முடியாமல் போன பெனரீர் பூட்டோ போல் அல்லாமல் துணிச்சலாக செய்து காட்டிவிட்டார் ஹசீனா

பழிவாங்காமலே அமைதி காத்து, அவர்களை மன்னித்து, தன் தந்தையின் கொலைகார கும்பலின் கூட்டாளிகளுடன் கை கோர்த்து திரிய அவர் என்ன ராகுல் காந்தியா?

சே குவேரா

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள்.

அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது.

எந்த போராளியும் இதற்கு விதிவிலக்கு அல்ல ஒரே ஒருவனை தவிர‌

வரலாற்றில் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர்
சே குவேரா.

அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா, அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு , ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள்,

அதாவது வியப்பின் உச்சத்தில் ஒரு உணர்ச்சியாக சொல்வோம் அல்லவா?, அந்த உணர்ச்சிமிக்க உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.

தென் அமெரிக்க பழங்குடியினர் சொல் அது (அவர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு அதிகம்) , சே என்றால் நமது எனும் பொருளில் வருமாம்.

நம்மை சேர்தவர் என பொருளில் வரும் வார்த்தை “சே” என்பது

அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லபிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பிண்ணணியில் வளர்ந்தார்.

ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின் என சகலரையும் படித்தார்.

முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதபடும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்.

பின் மருத்துவ கல்லூரி மாணவர்தான், ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவினை சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, தரையில் விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம்.

ஆனால் மக்கள் ஏழைகள்.

இதுதான் அவரை சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைபொமையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது,

பிடல்காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டி நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.

பொதுவாக தென்னமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்துபத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார். பின் ஐரோப்பா பறப்பார்.

கனிம வளத்திற்காக, அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிகொண்டிருந்தன, அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும் சீனியும்.

நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக்கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ,

அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.

அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே, அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார், மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திகாட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார்.

ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது, உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை, ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?
ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர்1 இடம்.

நினைத்திருந்தால் சாகும்வரை கியூப ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.

பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி, நல்ல போராளி

தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார். ஆம் எல்லை கடந்து கியூப விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.

ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் அணுவுலை, தலித் விடுதலை, திராவிடம், ,கச்சதீவு,காவேரி பிரச்சினை ஒருங்கிணைப்பு போலவோ வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென்னமெரிக்கா திரும்பினார்.

கிட்டதட்ட ஆப்ரிக்கர்களும் தமிழர்களும் சிந்தனையால் ஒரே மாதிரியானவர்கள், அதாவது ஆளாளுக்கு ஒரு நியாயம், பொது நியாயத்திற்குள் வரவேமாட்டார்கள்.

இந்த காலகட்டத்திற்குள் சே வினை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாக கதை கட்டிவிட்டது, காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்ல தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை, ஆனால் இப்படி சொன்னார், “எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்”.

மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார், தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று, வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.

கியூப அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களை காண சென்றார், இந்தியாவும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார், இந்திய கியூப உறவுகள் தொடரவேண்டும் என்றார்,

இன்றுவரை வெளிநாட்டிலிருந்து வந்து இந்திய ஏழை விவசாயிகளை சந்தித்த ஒரே தலைவன் அவனே,

அது என்ன வெளிநாட்டு தலைவன்? காமராஜர் நேரு, சாஸ்திரிக்கு பின் உள்நாட்டு தலைவர்களையும் சேர்த்துகொள்ளலாம்.

இலங்கைக்கு சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார்.உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த ஒரே தலைவர் இன்றுவரை அவர் ஒருவர்தான்.

இப்படியாக உலகெல்லாம் கொண்டாடபட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன, அவை இப்படி சொன்னது.

உலகெங்காம் கடும் செல்வாக்கினை பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம்( சாத்தியம் இருந்தது),

அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுகொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணைய தயார். ஒரு லெனினை,ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது.

சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல.

அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது, கொலை செய்வது கடினம். ஆதாரம் கிடைத்தால் அமெரிக்காவிற்கு நெருக்கடி, அதனால் என்ன? பலவீனத்தில் அடிப்போம்

சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.

சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழசொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.

சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரபடுத்தினார்கள்,மக்கள் போராடுகின்றார்கள் என்பதால் களத்தில் குதித்தார் சே, வழக்கம்போல வந்து நின்றார் சே, அமெரிக்கா எதிர்பார்த்தது இதனைத்தான் சண்டை உச்சத்தை அடைந்தது. பொறியில் சிக்கினார் நாயகன்.

அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைகடந்தார், அங்கு ஆடுமேய்த்துகொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபபடு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

அமெரிக்க படைகள் சுற்றிவளைத்தன, அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார், சுற்றிபார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, “இது என்ன இடம்,பள்ளி கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிகூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா”

சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கின்றார் பார்த்தீர்களா? இதுதான் சே.

விசாரித்து தீர்பளித்தால் சிக்கல் பெரிதாகும், உலகம் கொந்தளிக்கும் என கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்ல தீர்மானித்தது, நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.

எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூப மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோக கடலில் ஆழ்த்தியது
அந்த சுட்டவீரன் சொன்னான், ,முகத்தில் தாடியோடு,கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்றகாட்சி சே வின் காட்சி அப்படியே இயேசுபிரானை கண்முன் நிறுத்திறு என சொல்லி பின்னர் அழுதான்.

அது நிதர்சனமான உண்மை, ஒடுகபட்டோருக்கு போராடிய இயேசுவின் வரிசையில் நிச்சயம் இந்த நாத்திக சே விற்கும் இடம் உண்டு.

ஒரு தேசத்தில் போராட சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், “எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்”
ஆஸ்மா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார் “அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சய்மாக எனது நண்பன்”

இன்று அவரின் பிறந்த நாள்

அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை.
சக மனிதனை நேசிக்க தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழ தமிழரை போல அகதிகளாய் வாழும் , சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து,பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களை பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.

மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தை பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்க தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.

ஈழ மலையகத்தில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு, அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன.

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை, இவர் ஈழபோராட்டம் மட்டும் சே வின் சம காலத்தில் ஈழத்தில் போராடியிருப்பாரென்றால், நிச்சயம் அவரோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக பத்மநாபாவோடு நின்றிருப்பார். அதுதான் சே.

காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் என போராடிய ஒரே போராளி சே மட்டுமே.

அவரிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்ததெல்லாம் மாணிட நேயம் மட்டுமே.

ஜார் மன்னனின் அக்கிரமத்தில் களம் புகுந்தான் லெனின், சீன பலவீனமான அரசினை எதிர்த்து களம் கண்டான் மாவோ, அமெரிக்க சுரண்டலை எதிர்க்க வந்தான் ஹோ

ஆனால் உலகெமெல்லாம் மனிதனை மதித்து, அவன் அடிமை விலங்கினை உடைக்க கிளம்பிய மகத்தான மனிதர்களில் கார்ல் மார்க்ஸ் வரிசையில் மானிடத்தை நேசித்த பெருமகன் சே

போதை பொருள் இல்லாத, மருத்துவமும் கல்வியும் எல்லோருகும் கிடைக்கும் நாடாக, இன்றுவரை சேவின் தாக்கம் இருக்கம் நாடாக இருக்கும் கியூபா அப்பெருமகனை நன்றியோடு நினைக்கின்றது

இந்நாளில் அவன் தியாகத்தால் பெற்ற நன்மைகளை எண்ணி கியூபர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்

கென்னடி கொல்லபட்ட அவமானத்தை துடைக்க அமெரிக்கா எதிர்நடவடிக்கையில் கொல்லபட்டவன் தான் சந்தேகமில்லை

ஆனால் இவ்வுலகம் கண்ட புத்தன், இயேசு, வரிசையில் அவனுக்கு எக்காலமும் இடம் உண்டு.

அதனை அமெரிக்கா என்ன? அந்த ஆண்டவனாலும் அழிக்க முடியாது.

அந்த பெருமகனுக்கு கண்ணீர் அஞ்சலி. மானிடம் உள்ளவரை அவன் பெயர் வாழும்

இலங்கையில் பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும்

இலங்கையில் கொஞ்சநாளாக பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும் வந்து போவதாக பல செய்திகள் உண்டு

அவை கட்டுகதை என ஒருசாராரும், திருடர்கள் பரப்பிவிடும் கதை என ஒருசாராரும் இல்லை உண்மையிலே அந்நிய கிரக சக்திகள் நடமாட்டம் என ஒரு சிலரும் சொல்லிகொண்டிருக்கின்றனர்

2 அடி உயர விசித்திர உருவங்கள் அடிக்கடி அங்கு இரவு தென்படுமாம், சாடுமாம், ஓடுமாம், கதவை தட்டுமாம் இன்னும் ஏகபட்ட அட்டகாசங்கள் செய்யுமாம்

ஆனால் எதுவும் அவை பேசுவதில்லையாம், உற்று பார்க்குமாம் அப்படியே ஓடிவிடுமாம்

அவை ஓடியபின் பார்த்தால் வித்தியாசமான காலடிதடம் இருக்குமாம்

ஆனால் அதை யாரும் பிடித்ததாகவோ, கட்டிவைத்ததாகவோ தகவல் இல்லை

இலங்கை அரசு இதைபற்றி முறைபடி அறிவிக்கவில்லை எனினும் செய்திகள் வந்தபடி உள்ளன‌

இது இன்னும் அங்கிள் சைமனுக்கு தெரியாது போல‌

தெரிந்தால் என்னாகும்? அன்னார் இப்படித்தான் பொளந்து கட்டுவார்

“அந்நிய கிரகம் ஒன்றில் ஏற்கனவே தமிழினம் உண்டு, முழுக்க தமிழர்கள். வேறு கிரகத்தில் எங்கெல்லாம் தமிழன் ஒடுக்கபடுவானோ அங்கெல்லாம் சென்று அவர்கள் போராட உதவுவார்கள்

அவர்கள்தான் பூமியில் ஒரு தமிழீழம் அமைக்க பிரபாகரனோடு போராடினார்கள், அவர்களுக்கும் அண்ணனுக்கும் போக்குவரத்து இருந்தது

நானே அண்ணனின் பறக்கும்தட்டில் ஏறி அவர்கள் கிரகமெல்லாம் சென்று அவர்கள் கிரகத்து ஆமை எல்லாம் உண்டிருக்கின்றேன்

இறுதியுத்தத்தில் அண்ணன் தப்பி அங்குதான் சென்றார், இப்பொழுது இந்தியாவில் என்ன ஆட்சி அமையும்? அதை பொறுத்து யுத்தம் தொடங்கலாமா? என ஆய்வு செய்ய அந்நிய கிரகத்தில் இருந்து தமிழீழ குள்ளர்கள் வந்திருக்கின்றார்கள், செய்தி சேகரித்து அண்ணனுக்கு கொண்டு செல்வார்கள்

இதெல்லாம் எனக்கும் அண்ணனுக்கும் சாதாரணம், அந்த வெளிகிரக தமிழர்கள் 3 அடிக்குள்தான் இருப்பார்கள்

அண்ணனே உயரம் குறைந்தவர், நான் கூட கேட்டேன் அண்ணே நீங்களும் அந்த கிரகத்துல உள்ளவரான்னு, அண்ணன் சொன்னார், எந்த கிரகம்னா என்னடா தம்பி, அதை பூரா தமிழன் ஆளனும்டா அதுதான் நம்ம இலக்குண்ணார்

“ஹாஹஹ்ஹஹ ஹஹஹஹஹா ஹ்ஹாஆஆஆஆ”

அழியா புகழுடைய காரல் மார்க்ஸ்

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது

அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள்

அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி கிறிஸ்தவரானார்கள்.

இயேசு நாதரின் உறவு வம்சமோ என்னமோ, தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக கவலைபட்ட யூதர் மார்க்ஸ், யூதருக்கே உரிய அறிவு அவரிடமும் இருந்தது, மிக சிறந்த அறிவாளி அதனை விட முக்கியம் அவரின் எழுத்துக்கள்

அவரின் பட்டமும், பதவியும், அறிவும், வாதமும் அவருக்கு பெரும் புகழை கொடுத்தன, வாதத்தில் அன்று அவரை வெல்வார் யாருமில்லை

பெரும் அறிவாளிகள் உலகினை ஒட்டிவாழமுடியாது, பெருந்த்த அறிவு ஒரு வகை பிணி, ஒரு சாபம். அது அந்த மனிதனை அவன் வாழும் சமூகத்தால் பரிகசிக்க வைக்கும், ஒதுக்கி வைக்கும், அவனை பைத்தியக்கார வகையில் சேர்க்கும், அவன் வாழ்வு மிக அலங்கோலமாய் அமையும்

ஆனால் பின்னால் வரும் தலைமுறை அவனை கொண்டாடும், அவனுக்காய் அழும், உலக வினோதம் இது, மிக சிறந்த உதாரணம் தமிழகத்து பாரதி

பாரதிக்கு முன்னோடி மார்க்ஸ், அவன் அறிவும் எழுத்தும் அவனை வினோதமாக பார்க்க வைத்தன‌, நிச்சயம் ஏதோ சொல்கின்றான், ஆனால் சமூகத்திற்கோ குடும்ப வாழ்க்கைக்கோ ஒத்து வராதவன் என உலகம் அவனை ஒதுக்கியது.

அந்த பெண்ணும் அவள் காதலும் இல்லை என்றால் மார்க்ஸ் இல்லை, கம்யூனிசம் இல்லை, லெனின் இல்லை, சோவியத் ரஷ்யா இல்லை, தமிழகத்தில் திராவிட குரலும் இல்லை

அவள் ஜென்னி, மிகுந்த பணக்கார வாரிசு, அழகியும் கூட. யூதனாயிலும் பார்க்க சகிக்காத அழகர் மார்க்ஸ், கிட்டதட்ட நம் போல அழகற்ற முகம், ஆனால் மிக மெலிந்த தேகம், மொத்தத்தில் பெண்கள் விரும்பாத ஆண் அவர்.

ஆனால் ஜென்னி அவன் அறிவிற்காக காதலித்தாள். அந்த ஒன்றிற்காக அவனை சுற்றி சுற்றி வந்தாள். அவளின் அணைப்பு ஒன்றிலே தன் அவமானத்தை எல்லாம் துடைத்துவிட்டு எழுதினார் மார்க்ஸ்

அது எந்திரங்கள் வந்து உற்பத்தி பெருகிய தொழில் புரட்சி காலம், ஆனால் தொழிலாளர்கள் உரிமை இல்லா காலம். மார்க்க்ஸ் அழுதது அவர்களுக்காக, சிந்தித்தது அவர்களுக்காக ஏதும் செய்யமுடியுமா? என முழுநேரமும் வாழ்ந்தது அவர்களுக்காக‌

காரணம் அத்தொழிலாளிகள் 18 மணி நேர வேலை செய்யவேண்டும், உரிமை என உணவினை தவிர எதுவுமில்லை. சுருக்கமாக சொன்னால் ஏரில் கட்டிய மாடும் அக்கால தொழிலாளியும் ஒன்று

மார்க்ஸ் வீட்டிலோ வறுமை, முதலாளிகளை பகைத்ததில் சுத்தமான வறுமை. ஆனாலும் ஜென்னி அவனை விட்டு செல்லவில்லை. அவள் காதல் அறிவிற்காக வந்ததல்லவா? அது மார்க்ஸிடம் நிரம்ப இருந்ததால் அவள் காதல் குறையவில்லை, இவன் 4 காசு சம்பாதிக்க மாட்டான், இவனுக்கு உன்னை திருமணம் செய்துகொடுக்கமாட்டோம் என சொன்ன பெற்றோர்களை தூக்கி எறிந்தாள் ஜெனி

மார்க்ஸின் எழுத்துக்கள் அடிமையான தொழிலாளர்களுக்கு கடவுளின் வார்த்தையாய் ஓளிவீசின, அவர் கொண்டாடபட்டார், விளைவு ஐரோப்பா எங்கும் விரட்டபட்டார். நீ எழுதகூடாது என சொல்லியே நாடுகள் அவரை அனுமதித்தன‌

எந்த ஒரு புரட்சியாளனும் தன்னைபோல ஒருவன் கிடைத்துவிட்டால் பற்றி எரிவான், ஏங்கல்ஸை சந்தித்தபின் அப்படி எரிய தொடங்கினார் மார்க்ஸ், “உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என அவன் நாடு, மொழி,இனம்,மதம் கடந்து அழைத்தபொழுது ஐரோப்பா திடுக்கிட்டது

ஏங்கல்சும் மார்க்சும் இணைந்தபின் ஐரோப்பா எங்கும் தொழிலாளர் குரல் ஓங்கியது, அது பிரான்சில் தெரிந்தது, பெல்ஜியத்தில் தெரிந்தது, ரஷ்யாவில் எதிரொலித்தது, அரசுகள் திகைத்தன‌

மறுபடியும் ஓட விரட்டபட்டார் மார்க்ஸ், ஜென்னியினை விபசார பொய்வழக்கில் எல்லாம் சிக்க வைத்து மார்க்ஸை சித்திரவதை செய்தனர், அவள் அசரவுமில்லை, மார்க்ஸை அழவிடவும் இல்லை

வாழ்வெல்லாம் சோதனையினை மட்டும் கடந்தன அந்த காதல் ஜோடிகள், லண்டன் வாழ்வு அவர்கள் சோதனையின் உச்சமானது, ஆம் மூன்று குழந்தைகளும் வறுமையால் இறந்தன‌

மார்க்ஸ் அந்த பிஞ்சு குழந்தையின் சடலத்தை மார்போடு அணைத்து சொன்னார், “மகனே நீ பிறக்கும்பொழுது தொட்டில் வாங்க காசில்லை, நீ இறக்கும்பொழுது சவபெட்டி வாங்கமும் பணமில்லை” அப்படித்தான் இருந்தது வறுமை

எவ்வளவு பெரும் சோகம்? யார் தாங்குவார்?

ஆனால் ஜென்னி தாங்கினாள், உங்களுக்கு பிறகுதான் எனக்கு குழந்தைகள் வந்தார்கள், நீங்கள்தான் முக்கியம், உங்கள் அறிவுதான் முக்கியம் என கொஞ்சமும் அசராமல் சொன்னாள்

“ஒரு பெரும் அசாத்தியமான பெண்ணான ஜெனி என்னை தாங்கி நின்றபொழுதுதான், நான் மகத்தான காரியத்தை படைக்க பிறந்தேன் எனும் நம்பிக்கை எனக்கு வந்தது” என மார்க்ஸே சொன்னார்

உலக காதலர்களில் மிக உன்னத இடத்தில் வைக்கவேண்டியது மார்க்ஸ் ஜென்னி காதல். உலகத்தின் நம்பர் 1 காதல் இதுதான்.

ஆனால் உலகம் சொல்லாது, காரணம் இந்த காதலில் சுயநலமின்றி ஏழை தொழிலாளரின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அல்லவா இருந்தது

இந்த சோதனைக்கு பின்புதான் மார்க்ஸ் மூலதனம் எனும் புத்தகத்தை எழுதினார், மூன்று பாகமாக எழுதினார்

இயேசு கிறிஸ்து, டார்வின், ஐன்ஸ்டீன் வரிசையில் , உலத்தை அதிரவைத்த வரிசையில் மார்க்ஸ் வந்தது அந்த புத்தகம் மூலம்தான்

அது ஒன்றும் பெரும் விஞ்ஞானம் அல்ல, எளிய தத்துவம் அதாவது விவசாயி காய்கறியினை உற்பத்தி செய்கின்றான், நாம் கடையில் வாங்குகின்றோம். உண்மையில் நாம் நமது தேவைக்கு அவன் உழைப்பினை கோருகின்றோம், அவன் உழைத்து தருகின்றான். ஆனால் நாம் கொடுக்கும் பணம் அவனுக்கு முழுவதுமாக சேர்கின்றதா? இல்லை இடையில் இருக்கும் வியாபாரி கையில் சேர்கின்றதா?

இதனை தடுத்து உழைப்பவனுக்கு முழுபலனும் கிடைக்க என்ன வழி? என போதிகும் புத்தகம்தான் அந்த மூலதனம்

அதுவரை மத புத்தகங்களையும் இன்னபிற ஏமாற்றுகொள்கைகளையும் பார்த்துகொண்டிருந்த ஐரோபா அந்த புத்தகத்தால் அதிர்ந்தது, இது சாத்தியமா? உழைப்பவனுக்கு அவன் முழு உரிமையும், பொருளும் கிடைக்குமா?

நிச்சயம் கிடைக்கும் அதற்கான வழிமுறை இது என பல்லாண்டு கால ஆராய்சியில் அழகாக சொல்லியிருந்தார் மார்க்ஸ், அது ஒரு லாஜிக், சூத்திரம் போன்றது. இப்படி செய்தால் தொழிலாளர்களை வாழ வைக்கலாம் எனும் சித்தாந்தம் அது

முதன் முதலில் உலகில் தொழிலாளர் நலனுக்காக எழுதபட்ட புத்தகம் அதுதான், அது ஒன்றுதான்.

இந்த புத்தகம் தான் கம்யூனிஸ்டுகளின் பைபிள் ஆனது, உலகெல்லாம் எல்லா கம்யூனிஸ்டுகளுக்கும் வேதமானது. அதாவது அதுவரை தொழிலாளர்களை வாழவைக்க முதலாளிகளால் மட்டும் முடியும் என உலகம் நம்பிகொண்டிருந்தது. மார்க்ஸின் சிந்தனை அவற்றை தகர்தெறிந்து எப்படி தொழிலாள்ர்கள் நிர்வாகத்தையே நடத்தமுடியும் என சொல்லிகொடுத்தது

கிட்டதட்ட ஆதாமுக்கு கிடைத்த ஞானபழம் போல, தொழிலாளருக்கு மூலதனம் எனும் புத்தகம் கிடைத்தது, அது உலகை மாற்றிற்று

அதனை பின்பற்றி சோவியத் ரஷ்யா அமைந்தது, சீனா, கியூபா என எல்லா தேசங்க்ளும் அமைந்தன, கொரியாவும் ஒரு கம்யூனிச தேசமாக மலர்ந்திருக்கும், அமெரிக்கா கெடுத்தது அது இன்றுவரை தீரவில்லை, இன்று அந்த கம்யூனிச வடகொரியா அமெரிக்காவின் சவால்

இன்று எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர் நலனுக்கான சட்டங்களின் மூலம் இந்த கார்ல் மார்க்ஸின் கொள்கைகளே, அவரின் சிந்தனைதான் இன்று ஓரளவிற்காவது உலக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தருகின்றது

இன்று காரல் மார்க்ஸுக்கு நினைவு நாள்

மானிட நேயம் என்றால் என்ன? தொழிலாளர் நலன் என்றால் என்ன? என முதன் முதலில் சிந்தித்த அந்த கடவுளின் நினைவுநாள் . சாதிப்பது பெரிதல்ல , வறுமையிலும் சாதித்தான் அல்லவா? அதுதான் பெரிது

கம்யூனிச உலகிற்கு அவனும் அந்த ஜெனியும் மறக்க முடியாதவர்கள்

உலகெல்லாம் இன்று மார்க்ஸ் கொண்டாடபட்டாலும், பல நாடுகளின் தலைமகனாக அவன் வீற்றிருந்தாலும் அன்று வறுமை அவன் குடும்பத்தை கொன்றது, பின் அவனருமை ஜெனியினை கொன்றது

ஜெனி இறந்த கொஞ்சநாளில் மார்க்ஸும் இறந்தார், அந்த ஜெனியும் அவள் காதலும் இல்லையேல் மார்க்ஸ் இல்லை, இல்லவே இல்லை

மார்க்ஸின் அறிவு மீது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கையும், காதலும் இருந்திருக்கின்றது, அது பொய்க்கவில்லை மாறாக வரலாறு ஆயிற்று என்பதுதான் அவள் கண்ட ஒரே நிம்மதி

மார்க்ஸின் வாழ்விற்கும் பாரதி வாழ்விற்கும் நிறைய ஒற்றுமை காண முடியும், மார்க்ஸ் கவிஞன் கூட‌

பெருத்த அறிவு பெரும் நோவு என சொன்ன பழமொழி பொய்யல்ல, பெரும் அறிஞர்களின் வாழ்வு இப்படித்தான் இருந்திருக்கின்றது. அவர்களை புரிந்துகொள்ள 100 ஆண்டுகளுக்கு பின் கழிந்து முடிந்திருக்கின்றது

மார்க்ஸுக்கு ஜெனியும், ஏங்கல்சும் கிடைத்தார்கள் ஆயுளும் கிடைத்தது, ஆனால் நம் பாரதிக்கு இப்படி ஒன்று கூட வாய்க்கவில்லை.

வாய்த்திருந்தால் அவன் உலகில் பெரும் உயரத்தில் எங்கோ சென்றிருப்பான்.

இன்று மார்க்ஸின் நினைவு நாள் , முதன் முதலில் தொழிலாளிகளுக்காய் கண்ணீர் விட்ட, உலக தொழிலாளர்களின் வாழ்விற்காய் தன் வாழ்வினை அர்பணித்தவனும், இக்காலம் வரை தொழிலாளர் பெறும் அனைத்து சலுகைகளுக்கும் மூல காரணமான அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி

இது கணிணி யுகமாக இருக்கலாம் ஆனால் தொழிற்சங்கம் அமைத்து தொழில்பாதுகாப்பாக இருக்கும் கொத்தனாருக்கும், மில் தொழிலாளிக்கும் உள்ள தொழில்பாதுகாப்பு ஐடி தொழிலாளிக்கு இல்லை

தொழில்நுட்பம் எவ்வளவும் மாறலாம், உலகம் மாறலாம் ஆனால் உழைப்பவன் உரிமையினை மீட்டெடுக்க எந்நாளும் மார்க்ஸ் தேவைபடுவார்

காரணம் அவர் தனக்காக வாழ்ந்தவர் அல்ல, தொழிலாளரின் நல்வாழ்வுக்காக வாழ்ந்தவர் , பிறருக்காக வாழ்ந்தவர்

அந்த ஜெனி மார்க்ஸின் அறிவிற்காக வாழ்ந்தவள். இருவருக்கும் தன்னலம் என்பது கொஞ்சமுமில்லை

சரித்திரத்தில் கடவுளை போலவே அவர்கள்
அமர்ந்துவிட்டது இதனால்தான்.

2017ல் மிக சிறந்த படமாக விருதுபெற்ற படம் இது

பரம வைரிகளான இஸ்ரேல் பாலஸ்தீன எல்லையில் ஏற்பட்ட காதல் இது.

பிரிக்கபட்ட எல்லையில் அப்பக்கம் இஸ்ரேலிய இளைஞனும் இப்பக்கம் பாலஸ்தீன பெண்ணும் முத்தமிடுகின்றார்கள் அதுவும அந்நாட்டு கொடியோடு

2017ல் மிக சிறந்த படமாக விருதுபெற்ற படம் இது

இதெல்லாம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்தால் என்னாகும்? சங்கிகள் மாரடைப்பிலே செத்துவிடும் அல்லது சயனைடு கடித்து செத்துவிடும்

ஈழத்தில் என்ன பிரச்சினை

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்.

அமைதிபடைக்கு முன்பே 1980 ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம்.

அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை.

ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று எதிர்பார்த்தேதான் இருந்தார்.

அமைதிபடை சென்று இறங்கியதும் எல்லா குழுக்களும் ஆயுதம் ஒப்படைக்க, புலிகளும் சிலவற்றினை ஒப்படைத்து சுதுமலை மேடையில் “இந்தியாவினை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்” என்றவுடன் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது,

ஆனால் பிரபாகரனின் முகம் சிலநொடி சட்டென இருண்டது,

அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, 17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல்.

அதன்பின் புலிகளின் வரிவசூல் ஒப்பந்தத்தால் பாதிப்படைய, தீலிபனின் உண்ணாவிரதம் தொடங்கியது, அவனை காப்பாற்ற புலிகள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, அவன் செத்ததும் அவன் உடலோடு மக்கள் முன் சென்று ஒரு உணர்ச்சி எழுச்சி உண்டாக்கினர்.

அதன்பின் அது போராக வெடித்தது, இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை, புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.

உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.

மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும்,

ராணுவம் என்ன செய்யும்? ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.

மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.

திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும்,

எப்படி சோதிக்க?

சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.

ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.

எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.

இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை, இன்னொன்று இந்திய ராணுவம் அழிவுகளை குறித்து கவனமாக போராடிற்று, அப்படியும் பிரபாகரனை முடக்கிய சமயத்தில்தான் விபி சிங் படை மீட்டார்.

இதே தந்திரத்தை, அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.

பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.

அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 25 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.

இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி. இதோ ராஜிவ் கொலை குற்றவாளி 5 புலிகள், 2 தமிழகத்தார் என்பதை 7 தமிழர்கள் என லாவகமாக மறைத்தார்கள் அல்லவா? அப்படியே தான்.

அமைதிபடை காலத்தில் 1500 இந்திய வீரர்கள் செத்தனர், பெரும்பாலும் சீக்கிய சகோதரர்கள், அவர்களுக்கு இலங்கையில் இன்றும் நினைவு மண்டபம் உண்டு, அவர்கள் பெயர் எல்லாம் பொறிக்கபட்டுள்ளன.

மக்களை முன்னிறுத்தி செய்யபடும் இடத்தில் எமது பெருமை மிக ராணுவம் தன் உயிரை இழக்குமே ஒழிய, அப்பாவிகளை கொல்லாது என்பதற்கு பெரும் அடையாளமாக அது உள்ளது, இலங்கை செல்லும் எல்லா இந்திய ராஜதந்திரிகளும் அதனை வணங்க தவறுவதே இல்லை.

நிச்சயம் கண்ணீரால் வணங்கவேண்டிய இடம் அது, இந்த புலிகளால் ஒரு நாளில் லட்சகணக்கான அப்பாவி மக்கள் சாவார்கள் என முன்னறிவித்த இடம் அது, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்

சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று, அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.

மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காது.

ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,

உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?

ஈழத்தில் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்,

“ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை” ,

பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.

(இன்று காஷ்மீருக்குள் புகுந்த இந்திய விமானபடை போல அன்றே இலங்கையில் புகுந்து பங்கர் பிரபாகரன் மண்டையில் போட்டிருக்க வேண்டும்..)

அந்த ஜப்பான் துயரம்

அந்த ஜப்பான் துயரம் நடந்து இன்றோடு 8 வருடம் ஆயிற்று

புக்குஷிமா எனும் அணுவுலை சுனாமியால் பாதிக்கபட்டு, அது தொடங்கி ஜப்பான் நடத்தும் பெரும் போராட்டம் இன்றோடு 6 ஆண்டுகளை கடக்கின்றது

இதில் எந்த அளவு முன்னேற்றம் ஜப்பானிய அணுகழிவு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கின்றது என்றால், ஜப்பானிய அரசும், அணு நிபுணர்களும் தலைகுனிந்து நிற்கின்றார்கள்

அதனால் இன்னும் பெரும் ஆபத்து நீடித்துகொண்டே இருக்கின்றது, முழுவது களைய 10 லட்சம் கோடி செலவாகலாம் என கணிக்கபட்டுள்ளது

பணம் கூட சிக்கலில்லை, ஆனால் தொழில்நுட்பம்? அதுதான் பெரும் சிக்கல், இன்னும் அந்த அணுவுலையினை நெருங்க முடியவில்லை, அது இன்னும் கதிர்வீச்சினை வெளியிட்டுகொண்டே இருக்கின்றது.

செர்னோபில் போல நிலம் என்றால் கூட சுற்றி வேலியிட்டு மக்கள் நுழையாமல் தடுத்துவிடலாம், இது அப்படி அல்ல கடல் அதன் கதிரியக்கம் கடலில் கலந்துகொண்டே இருக்கின்றது

இதனால் பெரும் அழிவும், சீர்கேடும் அங்கு நடந்துகொண்டே இருக்கின்றது. ஜப்பானிய கடல் உணவு சந்தை சரிந்துகிடக்கின்றது.

மக்களுக்கு ஏற்படும் ரகசிய நோய்கள் ஒருபுறம், மறுபடியும் மக்கள் அங்கு குடியேறமுடியா கொடுமை ஒருபுறம், கட்டுபடுத்தமுடியா கதிர்வீச்சு ஒருபுறம், விஷமான கணநீர் ஒருபுறம் என திகைக்கின்றது ஜப்பான்

பல ஆண்டு ஜப்பானின் முன்னேற்றத்தில் பெரும் தடையாக , பெரும் சவாலாக வந்து நிற்கின்றது புக்குஷிமா…

அதனை கடக்க ஜப்பான் பட்டுகொண்டிருக்கும் சிரமம் கொஞ்சமல்ல, பொருளாதார ரீதியாக அது பெரும் அடிவாங்கிகொண்டிருக்கின்றது..

எவ்வளவோ மறைத்தும் ஜப்பானால் இந்த கதிரியக்க சீர்கேடுகளை தடுக்கவே முடியவில்லை, 2020 ஒலிம்பிக் போட்டியினை நடத்தி தன் நாட்டில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சொல்லிகொள்ள துடிக்கின்றது.

புக்குஷிமா ஜப்பானின் பொருளாதாரத்தை சரித்து போட்டிருக்கின்றது என்பது உண்மை, இன்னும் பல சிக்கல்களை அது எதிர்கொள்கின்றது

எப்படிபட்ட பொருளாதார ஜாம்பவான் ஜப்பான், அதுவே அணுவுலையினை சரிகட்ட முடியாமல் , அந்த விபத்தை எதிர்கொள்ளமுடியாமல் மிக மிக திணறுகின்றது

அணுகுண்டின் அழிவை உலகிற்கு சொன்ன அதே ஜப்பானே, கடற்கரை அணுமின் நிலைய ஆபத்தினை உலகிற்கு சொல்லிகொண்டே இருக்கின்றது

பெரும் வல்லரசுகளின் ஆதரவில், பெரும் பணத்தில் மிதக்கும் ஜப்பானுக்கே இந்நிலை என்றால்????

அனாதையாக உலகில் , பெரும் மக்கள் தொகையுடன், வளர்ந்துகொண்டிருக்கும் இந்நாட்டில் அப்படி ஒரு சம்பவம் நடக்குமானால்….

நினைக்கவே பெரும் அச்சமூட்டும் விஷயமிது, தமிழக கடற்கரை ஒன்றும் சுனாமி அச்சமில்லா ஏரியா அல்ல, 2004 சுனாமி ஒரு காலமும் மறக்கமுடியாதது, அது சொல்லிகொண்டு வரவில்லை

ஒவ்வொரு விபத்திலிருந்தும் இந்த உலகம் ஒவ்வொரு பாடம் கற்று அதனை தவிர்த்தே வந்திருக்கின்றது,, எல்லா விஷயங்களிலும் அப்படித்தான்

ஆனால் அணு விஷயத்தில் அப்படி அல்ல, அந்த தவற்றை திருத்தவே முடியாது, அவ்வளவு ஆபத்தானது. தப்ப ஒரே வழி அதனை பாதுகாப்பாக மூடிவிட வேண்டியதுதான்

அமெரிக்கா அதனைத்தான் செய்ய தொடங்கியிருக்கின்றது , கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கின்றது. பிரான்ஸ் சிந்திக்க தொடங்கியிருக்கின்றது

புக்குஷிமாவினை தொடர்ந்து, ஜெர்மனி அணுவுலைக்கு வாய்ப்பு இல்லாத நாடாக தன்னை அறிவித்துகொண்டது

உலகெமல்லாம் அணுவுலையினை குறைக்க, தமிழகத்தில் மட்டும் கல்பாக்கம் ஈணுலை, கூடங்குளத்தில் 5,6 என எண்ணிக்கை கூடிகொண்டே செல்கின்றது

அணுகுண்டின் அழிவு ஹிரோஷிமா, நாகசாகி என இரு இடங்களில் தெரிந்தது. அணுவுலையின் அழிவு செர்னோபில் , புக்குஷிமா என இரு இடங்களில் உலகிற்கு சொல்லபட்டிருக்கின்றது

இந்த துயரங்களோடு அணு கொடுமைக்கு முடிவு கட்டினால் மானிட குலம் வாழும்

எல்லா அணுவுலைகளும் தூங்கும் அணுவுலை என்பதனைத்தான் இந்த விஞ்ஞான உலகம் சொல்லிகொண்டிருக்கின்றது

அவை நிரந்தரமாக தூங்கவும் ஒரு காலம் வரட்டும்….

இந்தியாவினை மிரட்டுகின்றார் ட்ரம்ப்

ஒரு துப்பாக்கி விவகாரம் எப்படி எல்லாம் வெடிக்கும் என்றால் இப்படித்தான்

அமெரிக்காவிடம் துப்பாக்கி கொள்முதல் செய்ய பிப்ரவரி 3ம் தேதி பேச்சு நடத்தியது இந்தியா, அவர்களும் மகிழ்வோடு இருந்தார்கள்

10 நாளில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காட்சிகள் மாறின, புட்டீனின் அமைதி இந்தியாவினை யோசிக்க வைத்தது

நேற்று இந்தியா ஏகே 203 துப்பாக்கிகளை ரஷ்யாவோடு இணைந்து தயாரிப்பதாக சொன்னது

விடுவாரா டிரம்ப்

அமேசான் மற்றும் வால்மார்ட் ஆதரவுடன் செயல்படும் பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் போக்குகளைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா கொண்டு வந்த புதிய மின் வர்த்தக விதிமுறைகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்

இந்தியா அப்படி சில விஷயங்களை செய்தது உண்மை

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் செய்து சம்பாதிக்கும் பொழுது நாம் பார்த்துகொண்டா இருக்க முடியும்?

ஆனால் இதை கண்டும் காணாமல் இருந்தார் டிரம்ப்

இப்பொழுது துப்பாக்கி காட்சி, இன்னும் எப்16 சம்பவம் போன்றவற்றால் ஒருவித ஆற்றாமையில் இருக்கும் டிரம்ப் இப்பொழுது இந்தியாவினை மிரட்டுகின்றார்

அமெரிக்காவின் முன்னுரிமை கூட்டாளி என்பதில் இருந்து இந்தியாவினை விலக்க போகின்றாராம்

இதற்கு சர்வதேச அரசியலில் என்ன அர்த்தம் தெரியுமா?

“ஒழுங்கு மரியாதையாக என் வியாபாரத்தை இந்தியாவில் பார்க்கவிடு, அங்கு என் ஆட்கள் சம்பாதித்தால்தான் எனக்கு வரிகட்ட முடியும்

எங்களுக்கு உபயோகமில்லாத யாரின் நட்பும் எங்களுக்கு தேவையில்லை “

அப்படியே டிரம்ப் சொல்லவரும் இன்னொரு செய்தி பாகிஸ்தானுக்கு எப்117 விமானத்தை உள்நாட்டு பாதுகாப்புக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

ஸ்டாலின்

உலகம் அந்த இரும்பு மனிதனை மறக்க முடியாது. வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர்

செருப்பு தைத்த தொழிலாளியின் மகன் உலகையே ஆட்டிய பெரும் சக்த்தியாக மாறிய அதிசயம் அவர். பிறப்பால் அவர் ரஷ்யர் அல்ல, ஜார்ஜியா நாட்டுக்காரர் ஆனால் லெனினின் பொதுவுடமை போராட்டத்தில் அவரோடு நின்றார், சிறைசென்றார், வெளிவந்து ஆயுதமேந்தினார்

கிட்டதட்ட 20 வருடம் லெனினோடு போராடி ரஷ்ய புரட்சியில் பெரும்பங்கு வகித்து சோவியத் யூனியன் அமைக்க காரணமானவர் ஸ்டாலின்

லெனினுக்கு பின் சோவியத்தில் குழப்பம் வந்தது, டராவோஸ்கி தலமையில் ஒரு குழு, இன்னும் பல குழுக்கள் அட்டாகசம் செய்தன, சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஜெயாவிற்கு பின்னரான அதிமுக நிலையில் 1924ல் சோவியத் இருந்தது

எல்லாவற்றையும் ஒடுக்கி தனிபெரும் தலைவராக வந்தார் ஸ்டாலின், அவர் மீது சர்ச்சையும் இருந்தது கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மிக வலுவான அரசினை அமைத்தார்

ஐந்தாண்டு திட்டங்கள் என அவர் அறிமுகபடுத்தியதில்தான் , கூட்டுறவு முறை விவசாயத்தில் ரஷ்யா விவசாய புரட்சி கண்டது அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் தொழிற்துறை, அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் என ரஷ்யா பாய்ச்சலை காட்டியது

பின் தங்கிய ஏழை நாடாக இருந்த ரஷ்யா இப்படி முன்னேறி வந்தபொழுதுதான் ஹிட்லர் எனும் பெரும் அபாயம் உலகில் எழும்பியது. ஹிட்லர் எனும் மந்திரவாதியிடம் எல்லா பூதங்களும் இருந்தன , ஒன்றுமட்டும் இல்லை

அது பெட்ரோல்

அன்று அரேபிய பகுதி பெட்ரோல் அறியபடவில்லை, அது அன்றே தெரிந்திருந்தால் ஹிட்லர் இங்குதான் பாய்ந்திருப்பான். ஈரான் ஈராக் என ஒன்றும் இருந்திருக்காது. அபுதாபி பஹ்ரைன் துபாய் எல்லாம் உருவாகமலே போயிருக்கும்

ஏன் இஸ்ரேலும் இருந்திருக்காது, ஜெருசலேம் சர்ச்சையும் இருந்திருக்காது ஆனால் விதி அது அல்ல‌

ஸ்டாலின் உருவாக்கிய எண்ணெய் சாம்ராஜ்யத்திற்காக ரஷ்யா மீது பாய்ந்தான் ஹிட்லர். ரஷ்யா ராணுவ பலம் கொண்டநாடல்ல என்பது அவன் கருத்து

ஆனால் நெப்போலியனுக்கு குருச்சேவ் தண்ணிகாட்டினார் என்றால், ஹிட்லருக்கு ஸ்டாலின் அட்டகாசமான எதிர்ப்பினை கொடுத்தார். காரணம் ஸ்டாலின் பட்டுமெத்தையில் வளர்ந்தவர் அல்ல மாறாக சிறுவயது முதலே போராட்டம், கலவரம் , போர் என்றே வளர்ந்தவர்

யாராலும் வெல்ல முடியா ஹிட்லரை ஸ்டாலினின் செம்படை விரட்டி அடித்தது, அதுவும் ஜெர்மனியில் புகுந்து ஹிட்லரின் எரிந்த உடலை எடுத்ததும் ரஷ்ய படைகளே

உறுதியாக சொல்லலாம் ரூஸ்வெல்ட்டும்,சர்ர்சிலும் சும்மா அறிக்கைகளை விட்டுகொண்டிருந்த நேரத்தில் ஹிட்லரை நேருக்கு நேர் சந்தித்த வீரன் ஸ்டாலின் ஒருவரே

ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பின் ரஷ்ய ராணுவத்தை பலபடுத்தினார், அணுகுண்டு முதல் பல விஷயங்களில் ரஷ்யாவினை வலுபடுத்தினார்

பின்னாளைய உலகை மிரட்டிய சோவியத் யூனியன் ஸ்டாலின் போட்ட பாதையில்தான் பயணித்து தன் பொற்காலத்தை அடைந்தது

நிச்சயம் ஸ்டாலின் சர்வாதிகாரி, ஆனால் நல்ல சர்வாதிகாரி ஒரு நாட்டை எப்படி வளபடுத்தமுடியும், பாதுகாக்க முடியும் என்பதற்கு அவரை தவிர யாரையும் உதாரணம் சொல்ல முடியாது

அந்த இரும்பு மனிதன் மீது கலைஞருக்கு பெரும் ஈர்ப்பு இருந்ததால் தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயரிட்டார்

ஸ்டாலின் எனும் பெயர்மட்டும் அந்த மகனுக்கு வந்தது மற்றபடி ரஷ்ய‌ ஸ்டாலினின் திறமையில், ஆற்றலில் ஒன்றும் வரவில்லை

உலகின் மறக்கமுடியா இரும்பு தலைவனான, ரஷ்யாவினை மிக உச்சிக்கு கொண்டு சென்ற அந்த ஸ்டாலினின் நினைவு நாள் இன்று

ஜார் மன்னனை வீழ்த்தி ரஷ்யாவினை காத்து, பின் ஹிட்லர் எனும் பெரும் பூதத்தை வீழ்த்தி இந்த உலகினை ஏகாதிபத்திய இனவாதி ஹிட்லரிடம் இருந்து காத்தவர் ஸ்டாலின்

இன்றைய பலமிக்க ரஷ்யாவினை அவனே கட்டி எழுப்பினான், இன்று உலகை மிரட்டும் ரஷ்யாவின் ஆயுதங்கள் எல்லாம் அவன் காலத்தில் அஸ்திவாரமிடபட்டதே

அறிவியலிலும் இன்னும் பல விஷயங்களில் மிக பின் தங்கி இருந்த ரஷ்யாவினை மாபெரும் வல்லரசாக்கி உலகை புரட்டி போட்ட அந்த செங்கொடி நாயகனுக்கு வீரவணக்கம்

தேசம் வலிமையாகட்டும்

1987ல் ஈழத்தின் வடமாரட்சி எரிந்து கொண்டிருந்தது, முள்ளிவாய்க்காலாக கொள்ளி வைக்க காத்திருந்தான் சிங்களன்

ராஜிவ் முதலில் கப்பலில் உதவிபொருள் அனுப்பினார், திருப்பி அனுப்பியது ஜெயவர்த்தனே அரசு

உடனே ராணுவ விமானங்கள் சூழ, மிக் ரக விமானங்கள் சூழ இந்திய விமானபடையின் விமானம் ஆகாயமார்க்கமாக உணவுபொருள் வீசியது

எங்கள் வான்பரப்பில் எங்கள் அனுமதியின்றி இந்திய விமானம் வந்தது போர் தொடுப்பதற்கு சமம் என ஐ.நாவில் கத்தி பார்த்தது இலங்கை

இந்தியா அசைந்து கொடுக்கவில்லை, வேறு வழியின்றி அமைதி ஒப்பந்ததிற்கு வந்தான் ஜெயவர்த்தனே

ஈழமக்கள் மகிழ ஒரே ஒரு மனிதன் மட்டும் வெறுப்பாய் இந்நிகழ்வினை கண்டான், ராஜிவ் மேல் அன்றே அவனுக்கு தீரா வெறுப்பு வந்தது

அவன் பெயர் பிரபாகரன்

அமைதி ஒப்பந்தம் தொடர்ந்து இந்தியபடை அனுப்பபட்டதும் இதே பிரபாகரன் அதோடு முரண்டு பிடித்ததும் பின் 1500 இந்திய வீரர்களை கொன்று 2009ல் தானும் லட்சகணக்கான மக்களோடு மாண்டதும் வரலாறு

காட்சிகள் திரும்புகின்றன‌

1987 வரை ஈழத்தில் செத்த இந்திய வீரருக்கான நினைவிடம் டெல்லியில் அமைந்திருக்கின்றது , 1987க்கு பின் இந்திய விமானம் எல்லை தாண்டி பறக்கின்றது

30 வருடத்திற்கு முன்பான வலுவான நிலையினை எட்டியிருக்கின்றது

பாகிஸ்தானின் பால்கோட்டில் இந்தியா குண்டுவீசும் பொழுது, இங்கும் சில தேசதுரோக இலக்கினை நாம் சொல்கின்றோம்

அது வைகோவின் வீடு, சீமானின் மாளிகை, திருமுருகன் காந்தி மற்றும் கவுதமன், வேல்முருகன், பழ.நெடுமாறன் போன்றோரின் தலைகள்

பால்கோட்டில் விழுந்தது இங்கும் விழட்டும், தேசம் வலிமையாகட்டும்