சோபியா ஆலயமும் நீலக்கல் மசூதியும்

உலகின் அழகான நாடுகளில் ஒன்று துருக்கி, அதை விட முக்கியமானது அதன் அழகான கட்டங்கள்

அலெக்ஸாண்டர், ரோமர், போப் தொடங்கி ஓட்டோமன் மன்னர்கள் வரை மிக மிக கலாரசனையாக கட்டபட்ட மாளிகைகளும் ஆலயங்களும் மசூதிகளும் அங்கு நிறைந்துள்ளது

அதுவும் அந்த நீலமசூதி என்பது மிக பிரசித்திபெற்றது

அந்த நீலமசூதியின் வரலாறு பெரிது, மாபெரும் வரலாற்று அதிசயங்கள் அதில் புதைக்கபட்டு இருக்கின்றன‌

ரோமருக்கு பின்னரான பைசாந்திய பேரரசனான ஜஸ்டீனியனுக்கும் அவன் மனைவி தியோடோராவிற்கும் சாலமோன் அரசனுக்கு பின் மிக அழகான ஆலயத்தை கட்ட வேண்டும் என தோன்றிற்று

அவர்கள் கிறிஸ்தவ அரசர்கள் என்பதாலும், அன்று கிறிஸ்தவம் மகா தீவிரமாக பரவிகொண்டிருந்ததாலும் ரோமிற்கும் இஸ்தான்புல்லுக்கும் சில முறுகல்கள் இருந்ததாலும் அப்படி ஒரு முடிவினை எடுத்தார்கள்

அந்நாளில் இஸ்தான்புல் எனும் ஸ்கான்டான்டிநோபிள் கிழக்கு ரோம் என அழைக்கபட்டது, உண்மையில் பவுலும் அவரின் சீடகோடிகளும் துருக்கியிலே கிறிஸ்தவம் வளர்த்தன அப்போஸ்தலர் பணியில் வரும் 7 புகழ்பெற்ற சபைகள் அங்குதான் நிறுவபட்டன‌

கிறிஸ்தவம் முதலில் வளர்ந்த இடம் சிரியாவும் துருக்கியுமே.

கிறிஸ்தவருக்கு இஸ்ரேல், துருக்கி, வாடிகன் என மூன்றும் மகா முக்கிய புண்ணிய ஸ்தலங்கள். இதனால் துருக்கியில் உலகம் வியக்கும் ஆலயத்தை கட்ட முனைந்தான் ஜஸ்டீனியன்

கட்டிடக்கலை நிபுணர் இசிதோரும் கணித மேதை அந்திமெய்யுவும் அதற்கான உருவத்தை வரைந்தனர் அது அதுவரை உலகில் இல்லா தனி சாயலில் அட்டகாசமாக வந்தது

அன்று அந்த சாயலில் எந்த ஆலயமும் இல்லை

சாலமோனின் ஆலயம் மட்டுமல்ல, பண்டைய கிரேக்க, ஜோர்டானிய ஆலயங்களின் மாடலை கலந்து அதை அமைத்தான் ஜஸ்டினியன்

12 அப்போஸ்தலர்களுக்கு என அர்பணிகப்படட்ட ஆலயத்தின் அருகில் அதை அமைத்திருந்தான், அந்த 12 அப்போஸ்தலர் ஆலயம் அழிந்திருந்தது, அதற்கு காரணமும் இருந்தது

அன்றைய கிறிஸ்துவத்தில் ஒரு பிரிவினர் monophysite christians என்றும் மற்றவர் chaledonian christians என்று அழைக்கப்பட்டனர்.

monophysite chiristians எனபட்டவர்கள் யேசுநாதர் உயிர்த்து பரலோகம் சென்றுவிட்ட பிறகு அவருக்கு மனித சுபாவம் இல்லை என சொல்லிகொண்டார்கள்

chaledonian christians எனப்பட்டவர்கள் யேசுநாதர் உயிர்த்து பரலோகம் சென்றுவிட்ட பிறகு அங்கே அவர் கடவுளாகவும் இருகின்றா. மனிதனாகவும் இருகின்றார் என சொன்னார்கள்

இந்த ஷியா சன்னி சிக்கல் போல அன்று கிறிஸ்துவத்தில் இது தீரா மோதலாக இருந்தது, அடிக்கடி கலவரங்கள் மூண்டன அதில் 12 அப்போஸ்தலர் ஆலயம் கொளுத்தபட்டது

(இந்த கலவரத்தில் தான் ஜஸ்டீனியன் தியோடாரவினை சந்தித்தான், அவள் விதவையும் நெசவு தொழிலாளியுமாக இருந்தாள், ஆனால் மகா பதியாக இருந்தாள்

காதலுக்கு என்ன தெரியும்? ஜஸ்டீனியன் அவளை மணந்து மகாராணி ஆக்கினான் , தனக்கு மிகபெரும் காரியத்தை கடவுள் செய்திருக்கின்றார் என உருகிய தியோடரா அந்த மாபெரும் அழகிய ஆலயத்தை உருவாக்க நினைத்தாள் )

அது இன்று ஜெருசேமில் இருக்கும் தங்க கூரை மசூதியின் சாயலில் இருந்திருக்கின்றது, ஆம் கூரை எல்லாம் தங்கம், கலவரம் முடிந்தபொழுது கூரையே இல்லை

அதை மீட்டெடுக்க நினைத்த ஜஸ்டீனியன் அதைவிட அழகான ஆலயத்தை கட்ட முடிவெடுத்தே வேலையினை தொடங்கினான்

ஒரு அழிவு நடந்தால் முன்னதை விட அழகான ஒன்றை அமைத்துவிட வேண்டும் என்பது உலக நியதி. அப்பொழுதுதான் அழிவின் வலி தெரியாது.

பால்பெக் எனப்படும் பண்டைய கிரேக்க ஆலயத்தின் தூண்கள், மெக்காவின் புனித ஜம்ஜம் நீறுற்று தண்ணீர் (அப்பொழுது இஸ்லாம் இல்லை, அந்த இடம் கிறிஸ்தவ யூத ஸ்தலமாக இருந்தது) என மிக பிரமாண்டமாக தொடங்கினான்

532ல் அதை கட்டி முடித்தான், உலகின் மிக புகழ்பெற்ற ஆலயமாக , வாடிகனை விட அதி அற்புதமான ஆலயமாக அது இருந்தது

சாலமோனின் ஆலயம் போல அது மாட்சிமையாகவும் இருந்தது, அப்பொழுது ஒரு அதிசயமும் நடந்தது

துருக்கியில் பிளேக் நோய் பெருகியது, கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் புனித செபஸ்தியார் அதனின்று மக்களை காக்கும் புனிதராக அறிவிக்கபட்டிருக்கின்றார்

அப்படி அவரை வணங்கி மன்னன் நின்றபொழுது ஒரு காட்சி கண்டான், அதில் புனித ஜார்ஜியாரும் புனித சோபியாவும் ஆலய தூண்களை தொட்டு ஆசீர்வதித்தனர்

தரிசனம் முடிந்தபின் அந்த தூண்களை நோக்கி ஓடினான் ஜஸ்டீனியன், ஆம் புனித சோபியா தொட்ட இடம் ஈரமாக இருந்தது

சோபியா என்பவள் ரோம மன்னர்களின் வேத கலாபனையில் கொல்லபட்ட புனிதை, கடவுளுக்காக செத்த வேதசாட்சி

அதனால் கொஞ்சமும் தயக்கமின்றி அந்த ஆலயத்திற்கு ஹாக்கியா சோபியா (புனித சோபியா ஆலயம்) என பெயரிட்டான்

12 அப்போஸ்தலர் ஆலயம் என வரவேண்டிய ஆலயம் ஹக்கியா சோபியா என மாறியது இப்படித்தான்

அது மாபெரும் சிறப்பினை பெற்றது, அன்றைய நாளில் அதைவிட அழகான ஆலயமோ கட்டடமோ உலகில் இல்லை

துருக்கிக்கு அது மாணிக்க மகுடமாக அழகு சேர்த்தது , உலகெல்லாம் இருந்து வந்து அதை பார்த்து வியந்த்தார்கள்

காலமாற்றத்தில் துருக்கி இஸ்லாமிய நாடாக மலர, கலிபாக்கள் ஆட்சியும் அதை தொடர்ந்து சுல்தான் ஆட்சியும் வந்தது.

சிலுவைபோர்களின் காலத்தில் அது தேவாலயமாக இருந்தது, பின்னாளைய இஸ்லாமிய ஆட்சியில் இந்த தேவாலயத்தை மசூதி ஸ்டைலுக்கு மினார் எல்லாம் கட்டி மாற்றினார்கள்

உள்ளே இருந்த சொரூபங்கள் மாற்றபட்டன, ஜெருசலேமில் இருந்து வந்த இயேசு கால பொருட்கள் எல்லாம் அப்புறபடுத்தபட்டு குரான் வசனங்கள் எழுதபட்டன‌

இயேசு கட்டி அடிக்கபட்ட கற்றூன் இந்த ஆலயத்தில்தான் இருந்தது, ஆலயத்திற்கு இஸ்லாம் பூசும் வேலை நடந்தபொழுது இன்னொரு ஆலயத்திற்கு அது மாற்றபட்டது

இன்றும் அந்த கற்றூன் துருக்கி செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் உண்டு

என்னதான் மாற்றினாலும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை மசூதியாக மாற்றினார்கள் எனும் பழி இருந்துகொண்டே இருந்தது

அதை எப்படி துடைப்பது என எண்ணிய மன்னன் சுல்தான் அகமதுவிற்கு நல்ல திட்டம் உதித்தது, இதை போல இன்னொரு அட்டகாசமான மசூதியினை இதைவிட அழகாக கட்டிவிட்டால் என்ன?

உடனே வேலையினை தொடங்கினார், ஹக்கியா சோபியா ஆலயத்தின் அருகில் அந்த அபூர்வ அழகான நீலக்கல் மசூதி உருவானது

ஹக்கியா சோபியா ஆலயத்தின் அழகினை மிஞ்ச வேண்டும் என பார்த்து பார்த்து கட்டபட்டதால் அது மிக மிக அழகாக ஜொலித்தது

தாஜ்மஹால் கட்டபடும் வரை உலகின் மிக அழகான கட்டடம் அதுவே

பின்னாளில் ஷாஜஹான் தான் கட்டபோகும் மஹால் அதைவிட அழகுற வேண்டும் என மிக மிக நுணுக்கமாக சிந்தித்து, கட்டட கலைஞர்களை எல்லாம் விவாதிக்க வைத்து தாஜ்மஹால் எனும் சலவைக்கல் அதிசயத்தை கட்டினான்

அவன் போட்டியாக கருதியது இந்த நீலக்கல் மசூதியினையே

4 புறமும் ஒரே மாதிரி சாயலும், மினாரும் மத்தியின் மிக பெரும் டூம் வகை கூரையினையும் தாஜ்மகால் இங்கிருந்தே திருடிகொண்டது

மாமன்னன் ஜஸ்டீனியனின் கனவில் உருவான அந்த ஹக்கியா சோபியா ஆலயம் பின்பு சுல்தானின் கனவில் நீலக்கல் மசூதியாக, உலக அதிசயமாக உருவானது.

தாஜ்மஹாலை விட பன்மடங்கு கலைநயமிக்கது நீலக்கல் மசூதி

இந்த கதை எல்லாம் இப்பொழுது எதற்காக என்றால் விஷயம் இருக்கின்றது

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துருக்கி சமீபத்தில் ஒரு நடமாடும் மாளிகையினை கண்டு அசந்திருக்கின்றது, துருக்கி என்ன? உலகமே அதிசயித்திருக்கின்றது

கலைநயம் மிக்க சோபியா ஆலயமும், மிக மிக அழகான நீலக்கல் மசூதியுமே நாணத்தால் கீறியிருக்கின்றன‌

நடமாடும் தாஜ்மஹால் ஒன்று அந்த இரு அதிசயங்களையும் சுற்றிவந்து அவற்றை தோற்கடித்திருக்கின்றது

ஆம் தங்க தலைவி குஷ்பு துருக்கிக்கு சென்றிருக்கின்றார்

சோபியா ஆலயம், நீலக்கல் மசூதியினை தொடர்ந்து மூன்றாம் வாழும் அழகு அதிசயத்தை துருக்கி கண்டிருக்கின்றது

அந்த வரலாற்று சிறப்புமிக்க ஹக்கியா சோபியா ஆலயத்தின் முன்பு தலைவி படமெடுத்திருக்கின்றார்

தியோடரா உட்பட பல பேரரசிகளை கண்ட ஆலயம் இப்பொழுதுதான் உண்மையான பேரழகியினை கண்டிருக்கின்றது என வரலாறு குறித்தும் கொண்டது

ஒரு பெரும் வரலாற்று சம்பவம் நம் கண் முன்னாலும் நடந்து விட்டது