நான் ஒரு இந்தியன், அதன் பின்பே கிறிஸ்தவன்.

டேய் தூத்துகுடியானே

அந்தோணியார் படத்தை சுமக்கும் கிறிஸ்தவ இந்தியன் பிஜேபியினை ஆதரிக்க கூடாது என சொல்லி கொடுத்தது உன் ஆலய பாதிரிதானே?

அவன் இடுப்பில் இருக்கும் கச்சையினை உருவி அவன் கழுத்தை நெறித்து கேள், “ஒரு இந்தியன் இப்போதைய வலுவான அரசு கொடுக்கும் பாஜகவினை ஆதரிக்காமல் இருக்க முடியுமா?, அவர்களை விட்டால் நிலையான அரசை கொடுப்பது யார்? பாஜகவால் இத்தேசம் இழந்தது என்ன, நீ இழந்தது என்ன? உன் பைபிளை பிடுங்கினானா? உன் திருப்பலியினை தடுத்தானா? ” என கேள்

அவன் அப்பொழுதும் கீச்சு குரலில் பாஜக வேண்டாம் என்பான், சரி வேறு யார் என காதுக்குள் கேள், திமுக சிறுபான்மை பாதுகாப்பு என்பான், சரி திமுகதானே தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் வென்றது உன் பேச்சை கேட்டுத்தானே வோட்டு போட்டேன் என கேள், அவனிடம் பதில் இருக்காது

இதனால் அவனை அப்படியே கழுத்தை நெறித்து கொன்றுவிடு

இயேசு ஒரு யூதன், யூதன் எந்த மன்னனுக்கும் வரிகட்ட மாட்டான், அவனுக்கு அவன் கடவுளே அரசன்

அந்த இயேசு சொன்னார் “ரோமை சீசருக்குள்ள வரியினை அவனுக்கு செலுத்துங்கள், அவனிடமே அதிகாரம் ஒப்படைக்கபட்டிருக்கின்றது”

அதைத்தான் நானும் சொல்கின்றேன், நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் ஒரு கிறிஸ்தவன் பாஜகவினை ஆதரிக்க கூடாது என எங்கே இயேசு அல்லது போப்பாண்டவர் சொன்னார்?

நான் ஒரு இந்தியன், அதன் பின்பே கிறிஸ்தவன். உன்னை போல மதவெறியோ குறுக்குபுத்தியோ எமக்கு இல்லை, நாட்டுக்கு எது தேவையோ அதை சொல்லிகொண்டே இருப்போம்

மேனேஜர், மாதா, பிதா, குரு, தெய்வம்.!

யங்மேன் சண்டே சர்ச் எல்லாம் போகாதே வீட்ல கவனமா இரு, சாப்பாட்டுக்கு எல்லாம் ஸ்டோர் பண்ணிருக்கியா

ஆமா சார், சர்ச் எல்லாம் ஆண்லைன்ல தான் சார்

வெரிகுட், அப்படித்தான் பொறுப்பா இருக்கணும், நாடும் சட்டமும் மக்கள் நலனும் முக்கியம்பா, கடவுள் எல்லாம் அதுக்கு அப்புறம்தான்

ஆமா சார்

ஒகே நல்லா நாட்டுக்காக உலகத்துக்காக பிரே பண்ணிக்கப்பா

கண்டிப்பா சார், இந்தியாவுல ஒரு பழமொழி உண்டு சார்

என்னப்பா?

மேனேஜர், மாதா, பிதா, குரு, தெய்வம். அதாவது மேனேஜர் முதல்ல அம்மா அப்பா அப்புறம், டீச்சர் அப்புறம் கடைசியா தெய்வம்

ஏம்ப்பா..

சார், அம்மா அப்பா பெத்தவங்க அவங்க வளக்குறது கடமை, உலகத்துல நாமளும் ஒரு உயிர் படியளக்குறது தெய்வத்தோட கடமை. ஆனால் ஒருத்தனுக்கு தொழில் கொடுத்து, கத்தும் கொடுத்து, சம்பளமும் கொடுக்குறவன் மேனேஜர் சார், அதுனால அம்மா அப்பாவிட, சம்பளம் வாங்கி பாடம் நடத்தும் குருவினை விட, சம்பளத்தை கொடுத்து பாடம் கொடுக்கும் கம்பெனி மேனேஜர் பலமடங்கு மேலே சார்..

இந்தியா எவ்வளவு பெரிய தத்துவநாடுப்பா, ஆனா எல்லோரும் உன்னமாதிரி இல்லியே, என்னமோ இப்போதான் மோடின்னு ஒரு ஸ்ட்ராங் மேன் வந்திருக்கார் இனி எல்லாம் மாறும்

தேங்க்ஸ் சார்

அப்படியே கம்பெனிக்கும் ப்ரே பண்ணிகப்பா, கம்பெனி நல்லா இருந்தாதான் நாமெல்லாம் நல்லாருக்க முடியும் மறந்துராத..

சார், உங்களுக்கும் கம்பெனிக்கும் எதுக்கு தனி தனியா பிரேயர், கம்பெனியே நீங்கதானே சார்..

ஏம்பா இப்படியெல்லாம், அந்த காலத்துல வெள்ளைக்காரன் தமிழன ஏன் மதிச்சி நம்பி உலகமெல்லாம் கூட்டிட்டி போனான்னு உன்னை பார்த்த அப்புறம்தாம்பா தெரியுது.

அறை நண்பணிடம் கொஞ்சம் வம்பு

கிரிக்கெட் வெறியில் முழுக்க மூழ்கிவிட்ட அறை நண்பனை கொஞ்சம் வம்பிழுக்க வேண்டும் என தோன்றியது, கிறிஸ் கெயில் நடையினை கட்டிய அந்த சோகமான நொடிதான் அதற்கு சரியான தருணம்

அப்பொழுது மெதுவாக சீண்டினோம் “டேய் சென்னையில் குடிநீர் பஞ்சம், உங்க தளபதி போராடாமல் சிங்கப்பூர் போயிட்டாராமே ஏன்?”

அவ்வளவுதான் ரோகித் சர்மாவாக பொங்கிவிட்டான்

“அண்ணாச்சி என்ன பேசுதியரு? இன்னும் 1 மாசத்துல ஆட்சி கவிழ்ந்து அவர் முதல்வராக போறாரு..

வந்த உடனே தமிழ்நாட்டை அமெரிக்காகவும் சென்னையினை சிங்கப்பூராக மாத்தவும்தான் திட்டமே

ஆட்சிக்கு வந்துட்டு சிங்கப்பூர்காரன்கிட்ட என் மாநிலத்துக்கு என்ன செய்யலாம்னு கேட்கிறதை விட, பூரா திட்டமும் ரெடியா வைச்சிகிட்டு ஆட்சிக்கு வர்றதுதான் தளபதி பிளான், அவர் பெரிய அறிவாளி அண்ணாச்சி

வந்து சீட்ல அமர்ந்துட்டா, சட்டு சட்டுன்னு எல்லாம் செய்யணும், அப்புறம் ஒரு இடம் நகர கூடாது

தளபதி ரகசியமா பல திட்டம் வச்சிருக்காரு அண்ணாச்சி, இதெல்லாம் எங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தெரியும் கேட்டியரா?

நாங்க ஆட்சிய கவிழ்த்திட்டால் நல்லாட்சி கொடுக்க எல்லா திட்டமும் போட்டாச்சி, கடைசி ஒப்புதலுக்குத்தான் அங்க போயிருக்கோம், வந்ததும் ஆட்சி கலையும் தளபதி முதல்வர், தமிழ்நாடு அமெரிக்கா, சென்னை சிங்கப்பூர்”

நான் அந்த பாகிஸ்தான் வீரன் போல கொட்டாவி விட்டுகொண்டிருந்தேன்

“அண்ணாச்சி ஏன் இப்படி இருக்கியரு? நீர் நாகர்கோவில் பக்கம்தானே, அங்க எல்லோரும் நீரு, இந்த ஜயமோகன், தமிழைசை மாதிரிதான் இருப்பிக‌ போல, உங்களை எல்லாம் மலையாளிகிட்டேயே விட்டிருக்கணும்வே, தமிழ்நாட்டு கூட சேர்த்தது தப்பு”

அனைவருக்கும் நன்றி

மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் ஆசியும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

நமது பட்டியலில் எல்லா வயது அன்பர்களும் உண்டு, அதில் வாழ்த்தியோருக்கு நன்றி, ஆசீர்வாதம் வழங்கிய பெரியவர்களுக்கு சிரம் தாழ்ந்த‌ வணக்கம்.

உங்கள் வாழ்த்துக்களில் அவன் உயரட்டும், தகப்பன் போல அல்லாமல் அவனாவது உருப்படட்டும்

அவனது பெயர் “Miguel Shimon” என்பது, “Alphonse Rajan” என்பது தந்தையின் பெயர்.

நான் அவனை அந்த பெயரில்தான் அழைத்து கொண்டிருக்கின்றேன்

மறுபடியும் அனைவருக்கும் நன்றி… அவனுக்கு விவரம் தெரியவரும்பொழுது உங்கள் எல்லோரையும் பற்றி கண்டிப்பாக‌ சொல்லிவிடுவேன்

//பின்குறிப்பு: அவனுக்கு விரைவில் ஞானஸ்நானம் நடைபெற இருக்கின்றது, அவனுக்கு ஆசீர்வாதம் வாழ்த்து எல்லாம் இப்பொழுதே நீவிரெல்லாம் சொல்லிவிட்டதால் இன்னொரு முறை சொல்ல அவசியமில்லை

மாறாக நல்ல தொகையினை மொய்யாக‌ அனுப்பி வைக்கவும், //

நாம் தரம் தாழ்ந்துவிட்டோமா?

ஒரு சில பதிவுகளை கடக்க முடிந்தது, அதில் நாம் லைக் என்பதற்காக எழுதுகின்றோம் என்றும் தரம் தாழ்ந்துவிட்டோம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

முகநூல் என்றால் என்னவென்றே அறியாத காலங்களை திரும்பி பார்க்கின்றேன், அன்று நான் மட்டும்தான் இருந்தேன்

இத்தனையாயிரம் பேர் வருவார்கள் என்றோ, இவ்வளவு நண்பர்கள் கிடைப்பார்கள் என்றோ எண்ணி கீபோர்டை தட்டவில்லை

எமக்கு எது நியாயமோ? எது மனதை பாதித்ததோ? எது நாட்டுக்கான விஷயமோ அதைத்தான் சொன்னோம், எம் போக்கில் எழுதி கொண்டே இருந்தோம்

திரும்பி பார்த்தால் பல்லாயிரம் பேர் இருந்தார்கள், நன்றி

அதற்காக அவர்கள் விரும்புவதை எழுத நான் எதற்கு? என் சுவரில் அவர்களே எழுதிவிட்டு போகலாமே?

மனதை எது தொடுமோ? அல்லது சுடுமோ? அதைத்தான் எழுத முடியும்.

இதில் லைக் வந்ததா? வரவில்லையா, யார் பிரிந்தார்கள் என்பது பற்றி எல்லாம் ஒரு நாளும் நோக்கியதுமில்லை அது தேவையுமில்லை.

இது கட்சி, சாதி,மதம் , இனம் என எந்த கட்டுபாடுமே இல்லா சுதந்திர பறவை. அதற்கு எந்த வானத்தில் பறக்க வேண்டும் என நினைக்குமோ அந்த வானத்தில் பறக்கும்,

அந்த நினைவுகளை எழுதும்

மற்றபடி லைக்கிற்காக மட்டும் தேர்ந்தெடுத்து எழுதினால் , கட்சி முகமூடி அல்லது அறிவாளி முகமூடி எல்லாம் போட்டு எழுதினால் பெரும் இடம் சென்றிருக்கலாம்

அது தேவையில்லை, மாபெரும் அறிவாளிகள் எல்லாம் கட்சிகளில் சேர்ந்து நாசமான வரலாறு கண்முன்னே கிடக்கின்றது

அயோக்கியர்களுக்கு அரசியல் புகலிடமே தவிர மனசாட்சி உள்ளோர்க்கு அல்ல‌

கையில் ஒரு விலங்கு, காலில் ஒரு விலங்கிட்டுகொண்டு, அறிவாளி முகமூடி போட்டு ஒரு மாதிரி திரிய எமக்கு விருப்பமுமில்லை, அது தேவையுமில்லை

இதுவே நிலைப்பாடு, இதை புரிந்தவர்கள் வரலாம், பிடிக்காதோர் விலகலாம்

இப்பறவை எல்லா வானத்திலும் பறந்துகொண்டே இருக்கும், சில மரத்து கிளைகளில் இளைப்பாறும்

அந்த நினைவுகளை சிந்தனைகளை ஆங்காங்கே இங்கு கிறுக்கி வைக்கும், அவ்வளவுதான்

அங்கு ஏன் பறக்கின்றாய், இங்கு ஏன் அமர்கின்றாய் என கேட்க யாருக்கும் உரிமையில்லை

பன்றிக்கு வானை பார்க்க தெரியாது அதன் கழுத்து நிமிராது என்பார்கள், அதற்காக அது பார்க்கும் மண் மட்டுமே மொத்த உலகம் ஆகுமா?

ஒரு விஷயத்தை எல்லா கோணத்திலும் பார்க்க வேண்டுமே தவிர, சேனம் கட்டிய குதிரையாக ஒரே பார்வை என்பது சரிவராது

எங்களோடு இரு என கிணற்று தவளைகள் ஒரு பறவையினை சொல்ல முடியாது, அப்படி சென்றுவிட்ட பறவையினை நோக்கி தவளைகள் கத்தினால் என்ன சொல்ல முடியும்?

அந்த தவளைகள் அந்த கிணறுக்குள்ளே கிடக்கட்டும், அவைகளின் உலகம் அதுவென்றால் யார் என்ன செய்ய முடியும்?

தந்தைக்கு கல்லறை

தந்தைக்கு கல்லறைகட்டியாகிவிட்டது, ஆக அவருக்கு மகனாக செய்ய வேண்டிய கடைசி கடமையினையும் முடித்தாயிற்று.

பெரும் துயரமே, ஆனால் அந்த விதிக்கு யார் தப்ப முடியும்?

ஆனால் அலெக்ஸ்டாண்டர் , செங்கிஸ்கான் போன்ற மாமன்னர்களுக்கு கல்லறையே இல்லா உலகில் என் தந்தைக்கு கல்லறையாவது கிடைத்திருக்கின்றது, அந்த அளவிற்கு அவர் பாக்கியசாலி

பிடித்தமானவர்களுக்கு கல்லறை கட்டும்பொழுதுதான் ஷாஜகானின் மனம் புரிகின்றது, அவனுக்கு இருந்த செல்வத்தில் அவனால் அதை செய்யவும் முடிந்திருக்கின்றது

என்ன வாழ்வு இது?

அவர் பிரிந்துவிட்டார், அவர் மரணித்த கட்டிலில் தவழ்கின்றான் மகன். ஒன்றை கொடுத்து ஒன்றை பிரிக்கும் ஆண்டவனின் கணக்கு மிக சரியாகின்றது

அந்த ஆன்மா தங்கியிருந்த கூட்டினை இந்த ஆத்மா அடக்கம் செய்யபட வேண்டும் என்பதும், இந்த ஆத்மா அழும்பொழுது அதற்கு ஆறுதல் சொல்ல இன்னொரு ஆத்மா பிறக்க வேண்டும் என எழுதி வைத்தது யார்?

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமாக கடக்கும்பொழுதும் ஒவ்வொரு உண்மையாக புலபட்டுகொண்டே இருக்கின்றது

எதுவுமே நம் கையில் இல்லை என்பதும் எங்கிருந்தோ ஒரு சக்தி அதன் கணக்கினை நடத்திகொண்டிருகின்றது என்பதும் புரிகின்றது

அந்த கணக்கின் தொடர்ச்சியிலே இந்த உலகம் தொடர்ந்து இயங்குவதும் புரிகின்றது

எது நியாயம் என மனதிற்கு படுமோ அதை எழுதுவோம்

நாம் ஒரு இந்தியன், ஒரு இந்தியனாக இந்நாடு நன்றாயிருக்க வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு

மற்றபடி கட்சி அபிமானம் ஏதுமில்லை, இங்கு சுத்தமான அரசியல் கட்சி என ஏதுமில்லை அப்படி இருக்கவும் முடியாது

பரந்த இந்திய வானமும் கடலும் இருக்கும்பொழுது குறுகிய கட்சி வட்டத்துக்குள் நிற்பது ஒருவித சிறை, ஒருவித கட்டுப்பாடு அது எமக்கு சரிவராது.

இங்குள்ள யதார்த்த நிலைக்கு 100% சுத்தமான ஆட்சியினை யாரும் கொடுக்கவும் முடியாது

எல்லா கட்சிக்கும் நல்ல பக்கங்களும் உண்டு, மோசமான பக்கங்களும் உண்டு. நாம் இரண்டையுமே சொல்வோம் அதில் தயக்கமில்லை

இன்னொன்று நீங்கள் நினைப்பதை எல்லாம் நாம் எழுத முடியாது, அதற்கு நானோ இந்த பக்கமோ தேவையே இல்லை, ஐடியினை உங்களிடம் கொடுத்துவிடுகின்றேன் நீங்களே எழுதிகொள்ளுங்கள்

எது நியாயம் என மனதிற்கு படுமோ அதை எழுதுவோம், அவ்வளவுதான் விஷயம்

மாறாக எம்மை திட்டிகொண்டே இருப்பதில் அர்த்தமில்லை

வேண்டுமென்றால் உங்கள் கட்சிக்கு பாதுகாப்பான கருத்துக்களை ரகசியமாக கேளுங்கள் உரிய ஆலோசனை வழங்கபடும்

அப்படியே எதிர்தரப்புக்கும் அதற்கு சமமான ஆலோசனை இலவசமாக வழங்கபடும்

அப்பொழுதுதான் எல்லோரும் குழம்பி திரிவீர்கள், நன்றாக குழம்பி தெளிந்தால்தான் கட்சிகள் நலனை விட‌ நாட்டுக்கு எது நலம் என்பது உங்களுக்கு புரியும்

எம் வோட்டு

விவசாயிகளின் சிக்கல் என்பது வேறு, அதை தாழ்மட்டத்திலிருந்து வந்த, விவசாய போராட்டங்களை முன்னெடுத்த ஒருவராலயே புரிந்துகொள்ளமுடியும்

நங்கவரம் விவசாயிகளுக்கான போராட்டமே கலைஞர் கருணாநிதியினை தமிழகம் அடையாளம் கண்டு திரும்பி பார்க்க வைத்த போராட்டம்

விவசாயிகளின் வலியினை அவரால் அன்றே உணரமுடிந்தது, அதில் உதித்த உயர்ந்த சிந்தனைதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உட்பட பல திட்டங்கள்

ஆம் அவர்தான் தொடங்கி வைத்தார்

இன்று பழனிச்சாமியும் மோடியும் சில ஆயிரங்களை கொடுக்க முன்வந்திருப்பது மேலோட்டமாக நலதிட்ட உதவி என்றாலும் பின்னாளில் இலவச மின்சாரம் நிறுத்தபடும் ஆபத்து உண்டு

அதுதான் வங்கிகணக்கில் போடுகின்றோமே, மானிய விலையில் மின்சாரம் என்பார்கள் பின் மானியம் ரத்து என்பார்கள்

இந்த அரசின் விவசாய நலதிட்டத்தில் இந்த ஆபத்தும் உண்டு

இருந்துபாருங்கள், திமுக அல்லாத ஆட்சி அமையும் பட்சத்தில் இது நடக்கும்

உறுதியாக சொல்கின்றேன் திமுக மேலும் அதன் தலைவர் மேலும் ஆயிரம் சர்ச்சை இருக்கலாம்

ஆனால் திமுக கொண்டுவந்த ஒவ்வொரு திட்டமும் அருமையானவை, காலத்திற்கும் நின்று பலனளிக்கும் தென்னை மரம் பொன்றவை

அதனால் விவசாயியாக எம் வோட்டு திமுகவிற்கே

பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சொத்து உண்டு என்பதால் சகோதரியின் வோட்டும் அவர்களுக்கே

நன்றி மறப்பது நன்றன்று..

இந்து மதத்தின் விரோதியா?

“இந்து மதத்தின் விரோதி என்று என்னைப் பார்த்துச் சொல்வார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்

பா.ஜ.கவை எதிர்ப்பது என்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு. இந்திய நாட்டை நாசமாக்கிய நரேந்திர மோடியை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது ஆகாது. பாரதிய ஜனதா காரர்கள் இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் அல்ல.

நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைத்து, தனது அரசியல் லாபங்களை அடைய நினைக்கும் பா.ஜ.கவைத் தான் நாம் எதிர்த்து கொண்டிருக்கிறோம்”

இப்படி மிக சரியாக பேசியிருக்கின்றார் ஸ்டாலின், தெளிவான பார்வை, நியாயமான பேச்சு

ஆனால் பேசிய இடம் எது தெரியுமா? முஸ்லீம் லீக் மாநாடு

அந்த மாநாட்டுக்கு ஸ்டாலின் செல்லலாம் பேசலாம்,

ஆனால் கோவை குண்டுவெடிப்பு தினத்தில் செத்தவருக்கு ஒரு அஞ்சலியாவது செலுத்திவிட்டு இப்படி சென்று பேசியிருக்கலாம்

பாஜகவின் பயங்கரவாதத்தை கண்டிப்பேன் என்பது சரி, ஆனால் கோவை குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதத்தை கண்டிக்க மாட்டோம் என்பது எவ்வகை நியாயம்?

அது பாசிச பாஜக என்றால் இது என்ன வகை திமுக?