அனைவருக்கும் நன்றி

மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் ஆசியும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

நமது பட்டியலில் எல்லா வயது அன்பர்களும் உண்டு, அதில் வாழ்த்தியோருக்கு நன்றி, ஆசீர்வாதம் வழங்கிய பெரியவர்களுக்கு சிரம் தாழ்ந்த‌ வணக்கம்.

உங்கள் வாழ்த்துக்களில் அவன் உயரட்டும், தகப்பன் போல அல்லாமல் அவனாவது உருப்படட்டும்

அவனது பெயர் “Miguel Shimon” என்பது, “Alphonse Rajan” என்பது தந்தையின் பெயர்.

நான் அவனை அந்த பெயரில்தான் அழைத்து கொண்டிருக்கின்றேன்

மறுபடியும் அனைவருக்கும் நன்றி… அவனுக்கு விவரம் தெரியவரும்பொழுது உங்கள் எல்லோரையும் பற்றி கண்டிப்பாக‌ சொல்லிவிடுவேன்

//பின்குறிப்பு: அவனுக்கு விரைவில் ஞானஸ்நானம் நடைபெற இருக்கின்றது, அவனுக்கு ஆசீர்வாதம் வாழ்த்து எல்லாம் இப்பொழுதே நீவிரெல்லாம் சொல்லிவிட்டதால் இன்னொரு முறை சொல்ல அவசியமில்லை

மாறாக நல்ல தொகையினை மொய்யாக‌ அனுப்பி வைக்கவும், //