அறை நண்பணிடம் கொஞ்சம் வம்பு

கிரிக்கெட் வெறியில் முழுக்க மூழ்கிவிட்ட அறை நண்பனை கொஞ்சம் வம்பிழுக்க வேண்டும் என தோன்றியது, கிறிஸ் கெயில் நடையினை கட்டிய அந்த சோகமான நொடிதான் அதற்கு சரியான தருணம்

அப்பொழுது மெதுவாக சீண்டினோம் “டேய் சென்னையில் குடிநீர் பஞ்சம், உங்க தளபதி போராடாமல் சிங்கப்பூர் போயிட்டாராமே ஏன்?”

அவ்வளவுதான் ரோகித் சர்மாவாக பொங்கிவிட்டான்

“அண்ணாச்சி என்ன பேசுதியரு? இன்னும் 1 மாசத்துல ஆட்சி கவிழ்ந்து அவர் முதல்வராக போறாரு..

வந்த உடனே தமிழ்நாட்டை அமெரிக்காகவும் சென்னையினை சிங்கப்பூராக மாத்தவும்தான் திட்டமே

ஆட்சிக்கு வந்துட்டு சிங்கப்பூர்காரன்கிட்ட என் மாநிலத்துக்கு என்ன செய்யலாம்னு கேட்கிறதை விட, பூரா திட்டமும் ரெடியா வைச்சிகிட்டு ஆட்சிக்கு வர்றதுதான் தளபதி பிளான், அவர் பெரிய அறிவாளி அண்ணாச்சி

வந்து சீட்ல அமர்ந்துட்டா, சட்டு சட்டுன்னு எல்லாம் செய்யணும், அப்புறம் ஒரு இடம் நகர கூடாது

தளபதி ரகசியமா பல திட்டம் வச்சிருக்காரு அண்ணாச்சி, இதெல்லாம் எங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தெரியும் கேட்டியரா?

நாங்க ஆட்சிய கவிழ்த்திட்டால் நல்லாட்சி கொடுக்க எல்லா திட்டமும் போட்டாச்சி, கடைசி ஒப்புதலுக்குத்தான் அங்க போயிருக்கோம், வந்ததும் ஆட்சி கலையும் தளபதி முதல்வர், தமிழ்நாடு அமெரிக்கா, சென்னை சிங்கப்பூர்”

நான் அந்த பாகிஸ்தான் வீரன் போல கொட்டாவி விட்டுகொண்டிருந்தேன்

“அண்ணாச்சி ஏன் இப்படி இருக்கியரு? நீர் நாகர்கோவில் பக்கம்தானே, அங்க எல்லோரும் நீரு, இந்த ஜயமோகன், தமிழைசை மாதிரிதான் இருப்பிக‌ போல, உங்களை எல்லாம் மலையாளிகிட்டேயே விட்டிருக்கணும்வே, தமிழ்நாட்டு கூட சேர்த்தது தப்பு”