எது நியாயம் என மனதிற்கு படுமோ அதை எழுதுவோம்

நாம் ஒரு இந்தியன், ஒரு இந்தியனாக இந்நாடு நன்றாயிருக்க வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு

மற்றபடி கட்சி அபிமானம் ஏதுமில்லை, இங்கு சுத்தமான அரசியல் கட்சி என ஏதுமில்லை அப்படி இருக்கவும் முடியாது

பரந்த இந்திய வானமும் கடலும் இருக்கும்பொழுது குறுகிய கட்சி வட்டத்துக்குள் நிற்பது ஒருவித சிறை, ஒருவித கட்டுப்பாடு அது எமக்கு சரிவராது.

இங்குள்ள யதார்த்த நிலைக்கு 100% சுத்தமான ஆட்சியினை யாரும் கொடுக்கவும் முடியாது

எல்லா கட்சிக்கும் நல்ல பக்கங்களும் உண்டு, மோசமான பக்கங்களும் உண்டு. நாம் இரண்டையுமே சொல்வோம் அதில் தயக்கமில்லை

இன்னொன்று நீங்கள் நினைப்பதை எல்லாம் நாம் எழுத முடியாது, அதற்கு நானோ இந்த பக்கமோ தேவையே இல்லை, ஐடியினை உங்களிடம் கொடுத்துவிடுகின்றேன் நீங்களே எழுதிகொள்ளுங்கள்

எது நியாயம் என மனதிற்கு படுமோ அதை எழுதுவோம், அவ்வளவுதான் விஷயம்

மாறாக எம்மை திட்டிகொண்டே இருப்பதில் அர்த்தமில்லை

வேண்டுமென்றால் உங்கள் கட்சிக்கு பாதுகாப்பான கருத்துக்களை ரகசியமாக கேளுங்கள் உரிய ஆலோசனை வழங்கபடும்

அப்படியே எதிர்தரப்புக்கும் அதற்கு சமமான ஆலோசனை இலவசமாக வழங்கபடும்

அப்பொழுதுதான் எல்லோரும் குழம்பி திரிவீர்கள், நன்றாக குழம்பி தெளிந்தால்தான் கட்சிகள் நலனை விட‌ நாட்டுக்கு எது நலம் என்பது உங்களுக்கு புரியும்