எம் வோட்டு

விவசாயிகளின் சிக்கல் என்பது வேறு, அதை தாழ்மட்டத்திலிருந்து வந்த, விவசாய போராட்டங்களை முன்னெடுத்த ஒருவராலயே புரிந்துகொள்ளமுடியும்

நங்கவரம் விவசாயிகளுக்கான போராட்டமே கலைஞர் கருணாநிதியினை தமிழகம் அடையாளம் கண்டு திரும்பி பார்க்க வைத்த போராட்டம்

விவசாயிகளின் வலியினை அவரால் அன்றே உணரமுடிந்தது, அதில் உதித்த உயர்ந்த சிந்தனைதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உட்பட பல திட்டங்கள்

ஆம் அவர்தான் தொடங்கி வைத்தார்

இன்று பழனிச்சாமியும் மோடியும் சில ஆயிரங்களை கொடுக்க முன்வந்திருப்பது மேலோட்டமாக நலதிட்ட உதவி என்றாலும் பின்னாளில் இலவச மின்சாரம் நிறுத்தபடும் ஆபத்து உண்டு

அதுதான் வங்கிகணக்கில் போடுகின்றோமே, மானிய விலையில் மின்சாரம் என்பார்கள் பின் மானியம் ரத்து என்பார்கள்

இந்த அரசின் விவசாய நலதிட்டத்தில் இந்த ஆபத்தும் உண்டு

இருந்துபாருங்கள், திமுக அல்லாத ஆட்சி அமையும் பட்சத்தில் இது நடக்கும்

உறுதியாக சொல்கின்றேன் திமுக மேலும் அதன் தலைவர் மேலும் ஆயிரம் சர்ச்சை இருக்கலாம்

ஆனால் திமுக கொண்டுவந்த ஒவ்வொரு திட்டமும் அருமையானவை, காலத்திற்கும் நின்று பலனளிக்கும் தென்னை மரம் பொன்றவை

அதனால் விவசாயியாக எம் வோட்டு திமுகவிற்கே

பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சொத்து உண்டு என்பதால் சகோதரியின் வோட்டும் அவர்களுக்கே

நன்றி மறப்பது நன்றன்று..