தந்தைக்கு கல்லறை

தந்தைக்கு கல்லறைகட்டியாகிவிட்டது, ஆக அவருக்கு மகனாக செய்ய வேண்டிய கடைசி கடமையினையும் முடித்தாயிற்று.

பெரும் துயரமே, ஆனால் அந்த விதிக்கு யார் தப்ப முடியும்?

ஆனால் அலெக்ஸ்டாண்டர் , செங்கிஸ்கான் போன்ற மாமன்னர்களுக்கு கல்லறையே இல்லா உலகில் என் தந்தைக்கு கல்லறையாவது கிடைத்திருக்கின்றது, அந்த அளவிற்கு அவர் பாக்கியசாலி

பிடித்தமானவர்களுக்கு கல்லறை கட்டும்பொழுதுதான் ஷாஜகானின் மனம் புரிகின்றது, அவனுக்கு இருந்த செல்வத்தில் அவனால் அதை செய்யவும் முடிந்திருக்கின்றது

என்ன வாழ்வு இது?

அவர் பிரிந்துவிட்டார், அவர் மரணித்த கட்டிலில் தவழ்கின்றான் மகன். ஒன்றை கொடுத்து ஒன்றை பிரிக்கும் ஆண்டவனின் கணக்கு மிக சரியாகின்றது

அந்த ஆன்மா தங்கியிருந்த கூட்டினை இந்த ஆத்மா அடக்கம் செய்யபட வேண்டும் என்பதும், இந்த ஆத்மா அழும்பொழுது அதற்கு ஆறுதல் சொல்ல இன்னொரு ஆத்மா பிறக்க வேண்டும் என எழுதி வைத்தது யார்?

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமாக கடக்கும்பொழுதும் ஒவ்வொரு உண்மையாக புலபட்டுகொண்டே இருக்கின்றது

எதுவுமே நம் கையில் இல்லை என்பதும் எங்கிருந்தோ ஒரு சக்தி அதன் கணக்கினை நடத்திகொண்டிருகின்றது என்பதும் புரிகின்றது

அந்த கணக்கின் தொடர்ச்சியிலே இந்த உலகம் தொடர்ந்து இயங்குவதும் புரிகின்றது