ஓரின உறவு உரிமை

இந்த ஓரின உறவு உரிமையினை உச்சநீதிமன்றம் கொடுத்துவிட்டது இனி கலாச்சாரம் என்னாகும் என ஏகபட்ட கவலைகள்

எல்லா காலத்திலும் இயல்பானவர்கள் பெரும்பான்மை, இம்மாதிரி மனபிறழ்வு கொண்டவர்கள் கொஞ்சம்பேர் இருக்கத்தான் செய்தார்கள், இன்னும் இருப்பார்கள்

மாடு இரட்டை கன்றுகுட்டி போட்டது, வாழை இருகுலை தள்ளியது போன்ற அபூர்வ வகை அது

அதற்காக பொது தத்துவங்கள் என்பது இல்லாமல் போகாது, ஆணும் பெண்ணும் இணைந்துதான் வாழ்ந்து சந்ததி பெருக்க வேண்டும் என்பது பொதுவான தத்துவம், அது தொடர்ந்து நடக்கும்

இம்மாதிரி கருமாந்திரங்கள் மனபிறழ்வு கொண்டவர்களால் வருவது, அவர்களை பற்றி கவலைபட ஒன்றுமில்லை பரிதாபபடலாம்

அய்யய்யோ அப்படி அல்ல, உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது என்கின்றார்கள்

உச்சநீதிமன்றம் எதைத்தான் சொல்லவில்லை. லஞ்சம் வாங்குவது குற்றம் என்கின்றது, கலப்பு திருமணத்தை காக்க சட்டம் உண்டு என்கின்றது

இச்சமூகம் லஞ்சத்தை விரட்டிவிட்டதா, இல்லை கலப்பு திருமணம்தான் எளிதில் செய்ய முடியுமா?

யதார்த்த சமூக அமைப்பு என்பது வேறு, அதற்கும் உச்ச நீதிமன்ற சட்டங்களுக்கும் இடைவெளி அதிகம்

பொதுவாக நல்ல மனநிலை கொண்டவர்கள் எங்கிருந்தாலும் ஒழுங்காக இருப்பார்கள், கணிகையர் நடுவில் மாதவி இருந்தாள் அல்லவா? துரியனிடம் கர்னன் இருந்தான் அல்லவா? அப்படி

ஆனால் உருப்படாத கழுதை எங்கிருந்தாலும் உருப்படாமலே போகும், அதற்கு சட்ட விதிவிலக்கு மட்டும் காரணமல்ல‌

இதனால் உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது இனி இங்கு கலாச்சாரம் கெட்டுவிடும் என்பதெல்லாம் சரியல்ல‌

ஓரின சேர்க்கை எனும் மனகுழப்பம் எல்லா காலங்களிலும் இருந்தது, இன்னும் இருக்கும் அதை எல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது

ஆனால் இது தவறில்லை என சொன்ன நீதிமன்றம் விபச்சாரத்தை மட்டும் எப்படி தவறு என சொல்லமுடியும் என்பதுதான் அடுத்த கேள்வி, ஆனால் நாம் கேட்க கூடாது

ஏதோ உச்சநீதிமன்ற சட்டத்தை எல்லாம் இங்கு எல்லோரும் விழுந்து விழுந்து கடைபிடிப்பது போலவும், இப்பொழுது மட்டும் ஆபத்து வந்தது போலவும் ஏகபட்ட ஒப்பாரிகள்

எந்த சட்டத்தை மதித்தோம், சாதி பார்க்காமல் இருந்தோமா? இல்லை லஞ்சத்தை ஒழித்தோமா?

வோட்டுக்கு காசுவாங்குவது குற்றம் என சொல்லியும் வாங்காமல் இருந்தோமா? இல்லை அவர்கள்தான் கொடுக்காமல் இருந்தார்களா?

ஆக ஓரினசேர்க்கை சட்டதளர்வு எல்லாம் இங்கு ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது, சட்ட தடை இருந்தபொழுதும் இங்கு ஓரின சேர்க்கை இருந்தது, இனி சட்டம் இல்லாதபொழுது எல்லோரும் ஓடிபோய் ஜோடிசேரபோவதுமில்லை

கமலஹாசன் பாணியில் சொல்வதாக இருந்தால் , செய்யாதே என்பதற்காக முன்பு செய்யாமலுமில்லை, இனி செய்தால் குற்றமில்லை என்பதற்காக எல்லோரும் செய்ய போவதுமில்லை


 

ஓரின சேர்க்கைக்கு தடை இல்லை என்ற தீர்ப்பினை வரவேற்கின்றேன் : கமலஹாசன்

சும்மாவே இம்மாதிரி விஷயங்களில் இவருக்கு ஒரு மாதிரியான இமேஜ், “ஒரு காலத்தில் நான் ஆம்பிளை ஜெயமாலினி இல்லீங்க..” என புலம்பியவர்

இப்பொழுது தீர்ப்பினை வரவேற்கின்றாராம், உலகம் இவரின் வரவேற்பினை எப்படி எடுத்துகொள்ளுமோ தெரியாது