சிதறல்கள்

பயங்கரவாத தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் : மோடி

காங்கிரஸ் ஆட்சியில் தாக்குதல் நடந்தால் 56 இன்ஞ் மார்பு என கையில் அளவு நாடாவோடு சீறிவார் மோடி

ஆனால் இவர் ஆட்சியில் நடந்தால் 56 இன்ஞ் மார்பும் கிடையாது, சத்தமும் கிடையாதாம்

முன்பு இம்மாதிரி விஷயங்களில் காங்கிரசு அமைச்சருக்கு சேலை வளையல் எல்லாம் அனுப்புவார்கள் பாஜகவினர் என்பது குறிப்பிடதக்கது

இப்போது காங்கிரசார் வளையலும் சேலையும் அனுப்பினால் என்னாகும்? நிர்மலா சீத்தாராமன் சாவகாசமாக அள்ளி கொண்டு செல்வார் என்பது வேறுவிஷயம்

************************

நிச்சயம் இந்த தாக்குதல் கண்டிக்கதக்கது, அதற்காக போர் தொடுக்கவேண்டும் என பலர் கொக்கரிக்க தொடங்கியாயிற்று

போர் தொடங்கினால் என்னாகும்? எமர்ஜென்ஸி சட்டம் கொண்டுவந்து மோடி அட்டகாசமாக தொடர வழிசெய்யும்

ஆம், நாட்டுக்கு நெருக்கடி என எமர்ஜென்சியினை அறிவித்துவிட்டு அவர்போக்கில் இருப்பார் மோடி

எந்த முடிவினையும் அவர் எடுக்கலாம், கருப்பு கொடியினை எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கலாம் அனுதினமும் கருப்பு பணத்தை ஒழிக்கலாம்

என்னென்ன விளையாட்டு உண்டோ எல்லாம் அவர் ஆடலாம்

அதற்கா ஆசைபடுகின்றீர்கள்?

போர் தொடங்க இது நேரமல்ல, அடிக்க வேண்டிய நேரம் ஒன்று உண்டு அப்பொழுது நொறுக்கலாம்

இப்பொழுது தொடங்கினால் தேர்தலும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது, மோடிக்கு என்ட் கார்டே கிடையாது

இனி எவனும் போர் தொடங்கட்டும் என பேசுவான்?

******************

காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பாஜகவின் நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யபடுகின்றன என்கின்றது செய்திகள்

ஆனால் பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழகம் வந்திருக்கின்றார் பலமான கூட்டணி அமைக்க போகின்றாராம்

ஒருவேளை இவர் பாஜகவில் இல்லையோ? அப்படி இருப்பதாக‌ பொய் சொல்லியிருப்பாரோ?

******************

அரசியல் பேச்சுக்கான நேரம் அல்ல’- புல்வாமா தாக்குதலால் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்த பிரியங்கா

பொறுப்பு என்பது இதுதான், பக்குவம் என்பதுதான் இதுதான்

உடனே வந்து காங்கிரஸ் தலைவராக பதவிஏற்றுகொள்ளுங்கள் தாயே, பாரதம் காத்திருக்கின்றது

கருப்பு நாள் 14/02/2019

கோவையில் கொடூர இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லபட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கும் போதே
காஷ்மீரில் அதே பாகிஸ்தானிய கொடூர இஸ்லாமிய தீவிரவாதிகளால் நம் வீரர்கள் கொல்லபட்டிருக்கின்றார்கள்

இந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உருவாக்கமான ஜெய்ஷ் இ முகமட் எனும் தீவிரவாத அமைப்புக்கும் இந்தியாவுக்கும் கடுமையான மோதல் எப்பொழுதும் உண்டு

1994ல் அதன் தலைவனான மசூத் அசாரை பிடித்து சிறையில் இட்டது இந்தியா, அதன் பின் கொஞ்சகாலம் அடங்கி இருந்தார்கள்

வாஜ்பாய் காலத்தில் அவர்களாலும் அவர்களின் சகல பாடிகளான லஷ்கர் போன்ற இயக்கங்களாலும் கார்கில் போரே நடந்தது

அதில் வால் நறுக்கபட்ட அந்த கொடூர இயக்கம் அதன்பின் 1999ல் காந்தகாருக்கு ஏர் இந்தியாவின் விமானத்தை கடத்தி பணயகைதிகளை பிடித்து மிரட்டி அந்த மசூத் அசாரை நம்மிடம் இருந்து பெற்றுகொண்டது

அன்றெல்லாம் இந்திய பிடி ஆப்கனில் இல்லை, அது பின்லேடன் கோட்டையாக இருந்தது. இன்று ஏன் இந்தியா அங்கு கொட்டி கொடுக்கின்றது என்றால் இம்மாதிரி பழைய பெரும் வலிகள் எல்லாம் உண்டு

விடுவிக்கபட்ட மசூத் அசார் ஓயவில்லை மறுபடி மறுபடி இந்தியா மேல் தாக்குதல் தொடுத்துகொண்டே இருந்தான், பாராளுமன்ற தாக்குதலில் அவனின் ரகசிய கரங்கள் இருந்தன‌

பின்பு மும்பை தாக்குதலில் லஷ்கர் இயக்க பெயர் அடிபட்டது

பதான் கோட் தாக்குதலுக்கு சூத்திரதாரி இவனே

அவன் எங்கிருக்கின்றான் என்றால் பாகிஸ்தானிலும் அதன் காஷ்மீரிலுமே இருப்பான், அடிக்கடி பகிரங்கமாகவும் தோன்றுவான் ஆனால் அவன் இல்லை என பாகிஸ்தானும் சொல்லும், உலக வல்லரசுகளும் அதை கண்டுகொள்ளாது

இது உலக அரசியல், பின்லேடனுக்கு ஒரு நீதி மசூத் அசாருக்கு ஒரு நீதி

அந்த மாபாதாகனின் திட்டம் நேற்றும் பலித்திருக்கின்றது, காஷ்மீரில் நடந்த கொடூர கோழைதனமான தாக்குதலில் அருமை வீரர்கள் 45 வீரர்கள் கொல்லபட்டிருகின்றார்கள்

இந்த தாக்குதல் ஹமாஸ் பாணி தாக்குதல் மிக துல்லியமாக ராணுவ வீரர்களை மட்டும் தாக்குவது, தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தை மாற்றி இருப்பது தெரிகின்றது, பதான் கோட்டும் இதே சாயலே

இந்த வகை தாக்குதல் புதிது, இஸ்ரேலுடனான இந்திய நெருக்கத்தை விரும்பா பல சக்திகள் ஒன்றிணைந்து எச்சரிக்கை செய்திருப்பது போலவே தோன்றுகின்றது

இஸ்ரேலுக்கு விழும் அடியின் அதே சாயலில் அடித்திருக்கின்றார்கள்

உலகம் இந்த நாசகார செயலை கண்டிக்கின்றது , இந்தியாவிற்கு ஆதரவு பெருகுகின்றது

2008க்கு பின் இரும்பு வேலி போடபட்டிருந்த இந்தியாவில் அதுவும் மோடி வந்தபின் பெரும் அசம்பாவிதங்கள் நடக்காத காஷ்மீரில் இப்பொழுது கருப்புநாளாக விடிந்திருக்கின்றது

“100 முறை என் திட்டம் தோற்கலாம், நீங்கள் முறியடிக்கலாம் ஆனால் ஒருமுறை என் திட்டம் நிறைவேற 1000 முறை முயற்சிப்பேன்” எனும் தீவிரவாத தத்துவம் நிறைவேறியிருக்கின்றது

நாட்டுக்காக ஏராளமானோர் உயிர்நீத்த இந்தியாவில் இந்த 45 தியாக வீரர்களும் சேர்ந்து கொண்டார்கள் அவர்களுக்கு அஞ்சலிகள்

ஆனால் அந்த கொடூரதீவிரவாத இயக்கத்திற்கு இந்தியா சொல்லிகொள்வதெல்லாம் கடைசி இந்தியன் இருக்கும் வரை ஒருபிடி இந்திய‌ மண்ணை கூட உங்களால் தொடமுடியாது

45 உயிர்களுக்கு பதிலாக ஆயிரகணக்கான உயிர்களை நீங்கள் கொடுக்கும் காலம் வரும் என அவர்கள் ரத்தத்தின் சாட்சியாக சபதமேற்கின்றோம்

எம்தேசம் 45 வீரர்களுக்கு அழுகின்றது , அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து அவர்களுக்கு இத்தேசமே உடனிருக்கும் என உறுதி கொடுக்கின்றது

200 கிலோ வெடிபொருளை வெடித்தவன் தான் ஜெய்ஸ் இ முகமட் உறுப்பினர் என ஆதாரத்தை பதிவு செய்துவிட்டு செத்திருக்கின்றான்

அந்த இயக்க தலைவன் பாகிஸ்தானிலேதான் இருக்கின்றான்

சர்வதேசம் இதற்கான நீதியினை சொல்லட்டும்

அவர்கள் ஒருபக்கம் சொல்லட்டும், இந்திய நீதிஎன்றால் என என்பது விரைவில் தெரியும்

வட எல்லையில் நடந்துவிட்ட பெரும் கொடூரத்திற்காக தென் எல்லை துடிக்கட்டும்

தமிழகத்தில் மானமுள்ள இந்தியர்கள் இருந்தால், மனசாட்சியுள்ள இந்தியர்கள் இருந்தால் இன்று வீதியெங்கும் அஞ்சலி செலுத்தட்டும்

ஒரு காசு பெறாத நடிகனுக்கும் நடிகைக்கும் என்னவெல்லாமோ செய்யும் மட தமிழ் சமுதாயம் இந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தட்டும்

சட்டசபை முதல் கன்னியாகுமரி கடல் வரை அஞ்சலிகள் பெருகட்டும், நாட்டுபற்று ஓங்கட்டும்

மெரினாவில் மாபெரும் கூட்டம் கூடி இந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தட்டும், அது தமிழகத்தாரின் கடமையும் கூட‌

தமிழக நகர்களெங்கும், வீடுகளெங்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தட்டும்

( கருப்புகொடி பைத்தியங்கள் முடிந்தால் இப்பொழுது மசூத் அசாரை பாதுகாக்கும் பாகிஸ்தான் தூதரகம் முன்பு காட்டட்டும், தேசவிரோதிகள் அதை பாரத பிரதமருக்கு செய்வார்களே அன்றி அடுத்த எதிரி நாட்டுக்கு செய்யவே மாட்டார்கள்.)

இந்தியாவின் வீதிகள் எல்லாம் இன்று மக்களின் கண்ணீரால் ஆறுகளாக ஓடுகின்றன‌

கொல்லபட்டவர்களில் தூத்துகுடி வீர இந்தியனும் ஒருவர் என்கின்றது செய்திகள்

அந்த மாவீரனுக்கு வீரவணக்கம், மாவீரன் கட்டபொம்மனின் தியாகத்திற்கு இணையான தியாகம் இது

தங்களின் இரத்தைத்தை அன்னை பூமிக்காக சிந்தியிருக்கும் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

45 வீரர்களின் ரத்தத்தில் 45 கோடி இந்தியர்கள் வருவார்கள் பகை முடிப்பார்கள், அதில் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமட் இயக்கம் நிச்சயம் அழிந்தே போகும்

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்