கலைஞருக்கு ஆழ்வார்கள்

கலைஞருக்கு ஆழ்வார்கள் மையம் சார்பில் அஞ்சலி செலுத்தபட்டிருக்கின்றது

ஆக சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை நிரூபித்திருகின்றார்கள் ஆழ்வார்கள்

மேன்மக்கள் என்றும் மேன்மக்களே..

இன்னும் தீபாவளிக்கும், கோகுலாஷ்டமிக்கும் வாழ்த்து சொல்லாமல் பக்ரீத்திற்கும், கிறிஸ்மஸ்க்கும் திமுக தலமை நல்வாழ்த்து சொல்லிகொண்டிருந்தால் அது அர்த்தமற்றது

“நீயா நானா” நிகழ்ச்சி

கலைஞர் இறந்து கிடைத்த அனுதாப நேரத்தை அட்டகாசமாக ஸ்கோர் செய்கின்றது விஜய் டிவி

“நீயா நானா” நிகழ்ச்சி இப்பொழுது போரடித்து விழுந்து போனதை கலைஞர் எனும் மனிதரின் நினைவுகளை கொண்டு தூக்கி நிறுத்திற்று

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதை இனி செத்தும் கொடுத்தார் கலைஞர் என மாற்றிகொள்ளலாம்

ஆனால் ஜெயா இருந்தவரை இம்மாதிரி நடத்தாத டிவி இப்பொழுது ஜெயா இல்லா நிலையில் நிகழ்ச்சியினை நடத்துகின்றது

ஒருவேளை அம்மணி இருந்திருந்தால் என்னாகும்?

பிக்பாஸ் மேல் சமூக அக்கறை வழக்குகள் சில பாய்ந்திருக்கும், ஜெயாவும் விஜய்டிவியிம் திரைமறைவில் நீனா? நானா? நடத்திகொண்டிருப்பார்கள்

ஆனால் ஒரு விஷயம் பாராட்டதக்கது

கலைஞரை பொது மேடையில் பேசுகின்றார்கள், திமுக அமைதியாக பார்க்கின்றது, தொண்டர்களும் ஆழ்ந்த அமைதி

இது தமிழகத்தில் வேறு எந்த தலைவனுக்காவது சாத்தியமா? என்றால் இல்லை

ஜெயா, ராமசந்திரன் என யாரையாவது இப்படி இழுக்கமுடியுமா , பேசமுடியுமா? என்றால் முடியாது, காரணம் தலமைபதவி அவர்களுக்கு ஒரு வகையான அரச கிரீடம்

கலைஞர் பெரும் தலைவராயினும் சாதாரண‌ மக்களில் அவர்களோடு ஒருவராக வாழ்ந்திருக்கின்றார் என்பதை எப்படி மறுக்க முடியும்?

நிகழ்ச்சி அதனைத்தான் நிரூபித்து கொண்டிருக்கின்றது.

காமராஜரை கலைஞர் எல்லை மீறி விமர்சித்தார்

சிலர் 1969ல் காமராஜரை நாகர்கோவிலில் கலைஞர் பெரும் முயற்சி எடுத்தும் தோற்கடிக்கமுடியாமல் போன கதைகளை பேசிகொண்டிருக்கின்றனர்

உண்மையில் அந்த தேர்தல் காமராஜருக்கு வாழ்வா? சாவா? என்றிருந்தது, தொடர் வெற்றியில் காமராஜரை சுதாரிக்காமல் அடித்து வெளியேற்றவேண்டும் என்ற வெறி கலைஞரிடம் இருந்தது

காமராஜர் நாடார் என்பதும், குமரி தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர் என்பதும் அவருக்கு கூடுதல் பலம் என களம் இருந்தது

கலைஞரோ கிறிஸ்தவர்கள் அதிகமான அத்தொகுதியில் பிரபலமான கிறிஸ்தவ நாடாரை நிறுத்தினால் வெற்றிபெறலாம் என கணக்கிட்டு டாக்டர் மத்தியாசை நிறுத்தினார்

திமுக vs காங்கிரஸ் என வந்திருக்க வேண்டிய களத்தினை இந்துநாடார் vs கிறிஸ்தவ நாடார் என நுட்பமாக திசை திருப்பினார் கலைஞர்

இதில் 1969ல் கலைஞர் ஆட்சி என்பதால் கிறிஸ்தவர்கள் கலைஞர் பக்கம் சரிந்தனர், மத்தியாஸ் கிறிஸ்தவர் என்பதால் அவரை ஆதரிக்கவேண்டும் என கிறிஸ்தவ தலமைகளே பகிரங்கமாக கேட்க தொடங்கின‌

காமராஜரின் எதிரிகள் CSI கிறிஸ்தவர்கள், இவ்வளவிற்கும் நாடார்கள் நிரம்பிய சபை அது

காமராஜரை கலைஞர் எல்லை மீறி விமர்சித்தார், இன்னும் காமராஜரின் வாடகை வீட்டை இதோ ஏழை பங்காளனின் சொநத பங்களா என அண்ணா சிலை அருகே பேனர் வைத்தெல்லாம் பிரச்சாரம் செய்தார்

ஆனால் முடிவில் காமராஜர் அபார வெற்றிபெற்றார், லட்சகணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்

கலைஞரோ “நடந்தது நாடாளுமன்ற தேர்தல் அல்ல, நாடார் மன்ற தேர்தல்” என சொல்லிவிட்டு விடைபெற்றார்

2மாதம் நாகர்கோவிலில் தங்கி அவர் செய்த சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் எடுபடவில்லை

அதன்பின் 1971ல் கூட கலைஞர் நாகர்கோவில் பக்கம் வரவில்லை, “நெல்லை என் எல்லை, குமரி என் தொல்லை” என சொல்லி கொண்டார்

ஆனால் இந்தவெற்றிக்கு பின் அந்த இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என திமுக விதைத்த விதை முளைத்து வளர்ந்தது

அது பல இடங்களில் கலவரமாக வெடித்தது, அந்த சாதிகலவரம் மதகலவரமாக மாறிற்று

இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்று தேர்தலில் விதைத்த விதை பின்பு இந்து கிறிஸ்தவ மோதலாக வெடித்தது

நேசமணி, ஜீவா போன்ற பெரும் பிம்பங்களின் பெயர்கள் எல்லாம் மறைய தொடங்கி பெரும் மதவாதிகள் பெயர்கள் வந்தன‌

மண்டைக்காடு கலவரமெல்லாம் நடந்தது

அந்த கலவரத்திற்கு பின் இந்துக்களின் பெரும் எழுச்சியில் கன்னியாகுமரி தொகுதி இப்பொழுது பாஜக கோட்டையாக நிற்கின்றது

பாஜக தமிழகத்தில் முதல் முதலாக நாகர்கோவில் பக்கம் காலூன்றியது இப்படித்தான், முதல் பாஜக எம்.எல்.ஏ எம்பி எல்லாம் இப்படித்தான் உருவானார்கள்

பொன்னார் உருவாகி வந்ததெல்லாம் இப்படித்தான்

ஆனால் விதை கலைஞர் போட்டது

ஆக என்றோ காமராஜருக்கு எதிராக உருவாக்கபட்ட அரசியல் விளையாட்டு எங்கோ திசை திரும்பி என்னவெல்லாமோ ஆயிற்று

கலைஞர் செய்த பெரும் தவறு அது, சொன்னால் திட்டுவார்கள் ஆனால் உண்மை அதுதான்

அத்தோடு முடிந்ததா என்றால் இல்லை

அந்த டாக்டர் மத்தியாஸ் என்ன ஆனார்?

அவரால் திறுக்குறுங்குடி பக்கம் பெரும் மலைக்காடுகளை வளைக்க முடிந்தது,பெரும் எஸ்டேட்டை உருவாக்கினார்

அப்பொழுது காமராஜரை எதிர்க்க அரசியலுக்கு கொண்டுவரபட்ட அவருக்கு மலைகளை வளைப்பது எளிதாயிற்று

இது எதில் வில்லங்கமானது?

கலைஞர் அரசு கொடுமுடியாறு அணையினை பெரும் திட்டமாக கட்ட தொடங்கியபொழுது நீர்பிடிப்பு பகுதியாக மத்தியாசின் எஸ்டேட் மூழ்க இருந்தது

அவர் குடும்பம் வழக்கெல்லாம் நடத்தியது, அணை தாமதமானது

இந்த வைகை அணையினை கட்டும்பொழுது கிராமங்களை எல்லாம் காலி செய்யவைத்து பிரமாண்டமாக கட்டினார்கள்

ஆனால் கொடுமுடியாறு அணையில் மத்தியாசின் எஸ்டேட்டை கைபற்றமுடியாமல் தயங்கியது கலைஞர் அரசு, காரணம் நாகர்கோவில் இடைதேர்தல் கைமாறு

இறுதியில் அவர் சொத்துக்களுக்கு பாதிப்பில்லா வகையில் முல்லை பெரியாறு போல கட்டபட வேண்டிய அணை நீச்சல் குளம் அளவிற்கு, திருவாரூர் கோவில் தெப்பகுளம் அளவிற்கு கட்டபட்டாயிற்று

அந்த அணையால் துளியும் பிரயோசனமில்லை, ஆனால் கட்டியது கலைஞர் என உபிக்கள் ஆனந்தபடுவார்கள்

ஆனால் அதன் பின்னால் இருபபது அப்பகுதி மக்களுக்கான பெரும் துரோகம்

காமராஜரை எதிர்க்க மத்தியாசை கொண்டுவந்து அவருக்கு மலைகளை வளைத்துகொடுத்து, அணையினை சிறிதாக்கி பெரும் துரோகத்தை ராதாபுரம் பகுதி மக்களுக்கு செய்திட்ட துரோகம்

மறக்கமுடியா சம்பவங்கள் அவை

சிலர் 1969 கதைகளை பேசபேச அவை எல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன‌

காமராஜரை எதிர்த்து அங்கு பரப்பட்ட சாதிவெறி மதவெறியாய் மாறி என்னவெல்லாமோ ஆயிற்று, குமரி மக்களின் சோகம் அது

மத்தியாசின் நரித்தனம் கொடுமுடியாறு அணையினை பாதித்தது, ராதாபுரம் மக்களின் தீரா சோகம் அது

இதன் பின்னணியில் இருந்தது யார் என சொன்னால் நாம் ஆரிய அடிவருடி..

நிச்சயம் செய்திருக்க கூடாத காரியங்கள் அவை

கலைஞர் இந்நாட்டின் தேசியவாதியா?

கலைஞர் நிச்சயம் போராளி, அவரின் உழைப்பும், சாதுரியமும், தமிழும் இன்னபிற சிறப்பு குணங்களும் யாருக்கும் வராது

நிச்சயம் தமிழகத்து அரசியல்வாதிகளில் பெரும் இடம் பெற்றவர், அது மாறாது

ஆனால் கலைஞர் இந்நாட்டின் தேசியவாதியா? இந்நாட்டை தாங்கி நின்றவரா? இந்நாட்டிற்கு பெரும் சேவை செய்தவரா என்றால் இல்லை என்றே பதில்வரும்

இம்மாநிலத்தை தேசியத்துடன் ஒட்டவிடாமல் திராவிடம் தமிழ் தமிழர் என சொல்லிகொண்டே ஒருமாதிரி இழுத்து சென்ற அரசியல் அவருடையது

அதன் எதிரொலிதான் நாம் என்ன செய்தாலும் கலைஞர் காப்பார் என பல படுகொலைகளை இம்மண்ணில் புலிகள் செய்ய துணிந்தது

கலைஞரும் தேச அரசியலில் ஒட்டாமலே தவிர்த்துதான் வந்தார், பின்பு அதிமுகவினை முடக்க தேசிய கட்சிகளோடு சாதுர்ய கூட்டணி வைத்தாரே அன்றி, நாட்டு நலனில் எல்லாம் அல்ல‌

ஜனாதிபதி பதவியினை ஏற்றால் கூட பின்னாளில் மாநில அரசியல் செய்யமுடியாது என சாதுர்யமாக தவிர்த்தவர் அவர்

டெல்லி அரசில் இடம்பெறும்பொழுதெல்லாம் அவரின் சுயநலத்தில் பொதுநலமும் , பொதுநலத்தில் சில சுயநலமும் கலந்தே இருந்தது.

மாநில அளவில் கலைஞரை கொண்டாடலாம், ஆனால் தேசிய அளவில் அவரை பெரும் தலைவர், காமராஜர் காந்தி வரிசை என சொன்னால் அதற்கு விமர்சனம் வந்தே தீரும்

உண்மையான தேசாபிமானிகளுக்கு கலைஞர் என்பவர் மனதால் நெருக்கமானவர் அல்லவே அல்ல‌

கலைஞரை போற்றுகின்றோம் என பழங்கதைகளை கிளறுகின்றார்கள்

கலைஞரை போற்றுகின்றோம் என சொல்லி மகா அபத்தமாக அவரின் பழங்கதைகளை கிளறுகின்றார்கள் உபிக்கள்

என்ன சொல்கின்றார்கள்? 1942ல் இந்த பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் எல்லாம் பேருந்து செலவுக்கு பணமின்றி இருந்தார்களாம், கலைஞர் அவர்களை அழைத்து பேசவைத்து வழிசெலவுக்கு 5 ரூபாய் கொடுத்து, பழங்கஞ்சி கொடுத்து அனுப்பினாராம்

இந்த அன்பழகனும் , நெடுஞ்செழியனும் ஆனந்த கண்ணீர் வடித்துகொண்டே சென்றார்களாம்

அன்று இவர்கள் அன்பழகன் அல்ல, ராமையா. நெடுஞ்செழியனின் பெயர் நாராயணசுவாமி இவர்கள் பெயரை மாற்றியது எல்லாம் பிற்காலத்தில்

1942களில் கலைஞர் நிலை எப்படி இருந்தது என்பதை அவரின் நெஞ்சுக்கு நீதியிலே பார்க்கலாம்

“அது பெரியாருக்கு கீழ் பணியாற்றிய காலம், சொற்ப சம்பளத்தில் ரூபாய் சம்பளத்தில் உணவு, தங்குமிடம் என பலதும் போய் என்னை நம்பி வந்த பத்மாவதிக்கு (முக முத்து தாயார்) மாதம் 3ரூபாய் அனுப்புவதே பெரிய விஷயம்

காலையில் பம்புசெட்டிற்கு குளிக்க சென்றால் மாற்று உடைக்காக‌ இருக்கும் இன்னொரு வேட்டியினை துவைத்து அப்படியே தலைக்கு மேல் பிடித்து வருவது வழக்கம், அப்படி இருந்தது வறுமை”

ஆக 1940களில் கலைஞரே தடுமாறி கொண்டிருந்த காலம், அவருக்கான உச்சகாலம் 1946க்கு பின்னரே தொடங்கிற்று

உண்மை இப்படி இருக்க பெரியாருக்கு கீழ் பாடாய்பட்ட காலத்திலே அவர் அன்பழகனுக்கும், நெடுமாறனுக்கும் வழிசெலவுக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு இருந்தாராம்

எவ்வளவு பொய்கள்..

கலைஞர் எல்லா நாளும் கலைஞராக, சுவாரஸ்யமிக்கவராக இருந்தார்

Image may contain: 1 person, sunglasses, close-up and textகலைஞர் மிக சிறந்த வசனகர்த்தா என்பது அவர் மிக பொருத்தமாக எழுதும் பல வசனங்களில் வெளிப்படும், சூழலுக்கு அற்புதமாக வசனம் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே

எத்தனை பேர் கியூபாவினை பற்றி பேசினாலும், கலைஞர் பேசியிருக்கும் அழகு வராது, முன்பே பேசியிருந்தார்.

அவர் நச்சென்று சொன்னது இது

” ‘கியூபா’ சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு!

தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா?

தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம் கொட்டி விடும் தேனீக்கள் கியூபாவின் மக்கள் – அந்தக் கூடு காக்கும் காவல்காரர் தான் பிடல் காஸ்ட்ரோ!”

இதனை விட கியூப நிலை, அமெரிக்க தோல்வி, காஸ்ட்ரோ புகழினை சொல்லமுடியுமா?

இன்னமும் சொன்னார்

“தென்னை, வாழை, பெரு மரங்களை எல்லாம் சரித்து விழுங்கும் யானை, அங்குசத்தை விழுங்குமா?

அமெரிக்கா யானை என்றால் காஸ்ட்ரொ அங்குசம்..”

எப்படி கியூபானினை அமெரிக்க காலடியில் வைத்து சோவியத் யூனியன் விளையாடியது என்பதை இதனை விட எப்படி விளக்க முடியும்

கலைஞர் எல்லா நாளும் கலைஞராக, சுவாரஸ்யமிக்கவராக இருந்தது இப்படித்த்தான்

சரி இத்தனை தலைவர் இருக்கும்பொழுது காஸ்ட்ரோ மீது அவருக்கு அப்படி என்ன பற்று?

தன் தம்பிக்கு அதாவது குடும்த்தினருக்கு தனக்கு பின் தன் வாரிசாக பதவியினை கொடுத்த காஸ்ட்ரோ கலைஞரை கவர்ந்திருக்கலாமோ?

இருக்கலாம்

ஆனால், அந்த தேன் கூடு, யானை , அங்குசம் என்ற வார்த்தைகளை இப்பொழுது காஸ்ட்ரோவொடு பொருத்தி பாருங்கள்

கலைஞரை தேடி சென்று கட்டியணைக்க தோன்றும், இனி அப்படி ஒரு சுவாரஸ்யமான நபரை எங்கே காண்பது?

பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன

இப்பொழுதெல்லாம் பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன, ஒரு படமும் விடுவதாக இல்லை, அப்படிபட்ட அபார வசனங்கள்

சிலவற்றில் ராமசந்தின ஈஈ என இளித்து கொண்டிருக்கின்றார், அத்தோடு வின் ஜாணகியும் மருத நாட்டு இளவரசியில் ஆடிகொண்டிருக்கின்றார், கலைஞரின் வசனத்திற்காக அவர்களை பொறுத்துகொண்டாயிற்று

அன்று வருங்கால முதலமைச்சர்களுக்கு வசனம் எழுதுகின்றோம் என்பது கலைஞருக்கும் தெரிந்திருக்காது, வருங்கால சகாப்தம் தங்களுக்கு வசனம் தருகின்றது என அந்த நடிப்பு தம்பதிக்கும் தெரிந்திருக்காது

காலம் என்னவெல்லாமோ விளையாட்டு ஆடியிருக்கின்றது

அக்காலத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கலைஞர் அபிமன்யு போன்ற படங்களுக்கும் எழுதியிருக்கின்றார்

அது மகாபாரத கதைதான், ஆனால் அட்டகாசமாக எழுதியிருக்கின்றார் கலைஞர்

உண்மையில் பாரத கதையினை ஆழபடிக்காத ஒருவனால் அப்படி எழுதவே முடியாது. அந்த அளவு அவர் நுணுக்கமாக படித்திருக்கின்றார்

நிச்சயம் அவருக்கு இந்துமத நூல்கள் எல்லாம் அத்துபடி , அவ்வளவு படித்திருக்கின்றார், பல படத்து வசனங்கள் அதை அட்டகாசமாக சொல்கின்றன. நிச்சயம் அவர் ஆழமாக அவற்றை படித்திருக்கின்றார்

ஆனால் நாத்திகராகிவிட்டார்

ஒருவேளை ஆத்திகராக இருந்தால் என்னாகியிருப்பார்? இந்த உயரத்தை எட்ட அம்மதத்தின் சாதியும் இன்னபிற கட்டுபாடுகளும் விட்டிருக்குமா?

சாதாரண பக்திமான் வசனகர்த்தாவாக‌ அவர் வாழ்வு கழிந்திருக்கும்,

அந்த மதத்தில் பெரும் ஞானம் பெற்றிருந்தாலும் காஞ்சி சங்கராச்சாரி இடத்தையோ, கிருபானந்தவாரி இடத்தையோ அவரால் எட்டியிருக்க முடியுமோ? விட்டிருப்பார்களா?

நிச்சயம் சந்தேகம்

இந்துமதத்தின் சாதி கட்டுபாடும் இன்னபிற இறுக்கமும், மிகபெரும் அறிவாளியினை அதாவது மிகபெரும் சமயஞானியாக வந்திருக்க வேண்டிய ஒருவனை மாபெரும் ஆத்திகராக்கி அவனை வரலாற்றில் முத்திரை பதித்த சகாப்தமுமாகவும் ஆக்கிற்று

தன் சொந்த மதத்தில் சில கட்டுபாடுகளை தன் பிறப்பால் பெறமுடியாத கலைஞர், அதை எதிர்த்து மாபெரும் இடத்தை வரலாற்றில் பெற்றுகொண்டார் என்பதுதான் அவரின் சாதுர்யம்.

உடன்பிறப்பே… நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது

Image may contain: 1 person, sunglasses and close-upஉடன்பிறப்பே

நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது, இதுதான் சொர்க்கம் என்றார்கள், இப்படி தமிழகத்தின் மக்களும் நலமாகவும் சமமாகவும் வாழத்தான் நான் போராடினேன், என் காலம் முடிந்ததே தவிர போராட்டம் ஓயவில்லை அது உங்களிடமே விட்டுவிட்டு வந்திருக்கின்றேன்

உடன்பிறப்பே, எங்கோ கிராமத்தில் பிறந்த எனக்கு, சாதியோ பெரும் குடும்ப அடையாளமோ இல்லாத எனக்கு மொத்த தமிழமும், உலகெல்லாம் தமிழ்வாழும் சமூகமும் , இந்திய தேசமும் மொத்தமாக அடித்தள மக்கள் முதல் உயர்பீடம் வரை அஞ்சலி செலுத்தினார்கள் என்றால் உண்மையிலே அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்திருக்கின்றான் இந்த கருணாநிதி

காவேரி மருத்துவமனைமுன் திரண்ட கூட்டம் போல பல மடங்கு இன்னும் மெரினாவில் அண்ணாவோடு நான் துயில் கொள்ளுமிடம் இடத்தில் நள்ளிரவிலும் , கடும் வெயிலும் வந்துகொண்டே இருக்கின்றது என்றால் இத்தமிழகத்தின் எல்லா பட்டி தொட்டிகளிலும் நாங்கள் எழுப்பிய பகுத்தறிவு எழுச்சி, சுயமரியாதை முழக்கம் எவ்வளவு தூரம் எட்டி இருக்கின்றது என்பதை உணர முடிகின்றது

நானும் அண்ணாவும் எங்கெல்லாம் , எந்த மூலை முடுக்கெல்லாம் திராவிட சிந்தனையினை விதைத்து கொண்டே சென்றோமோ, அங்கிருந்து பலர் உருவாகி இப்போது எங்களை நன்றியோடு காண வந்திருக்கின்றார்கள் எனும்பொழுது இந்த இடத்திலிருந்து உங்களுக்கு தெரியாதவாறு கண்ணீர் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்

“தம்பி கருணாநிதி, உனக்காக வழியும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும், உன் உழைப்புக்கும் போராட்டத்திற்குமான நன்றியின் அடையாளம்” என அண்ணா அருகிருந்து சொல்லுபொழுது அன்னை அஞ்சுகம் என்னை தமிழகம் வாழவே பெற்றார் என்பதை நினைத்து அவரும் இதோ ஆனந்த கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றார்

உடன்பிறப்பே,

காலத்தால் எல்லோரும் பிறப்போம், காலத்தால் எல்லோரும் மறைவோம், இதற்கு நீனோ நானோ விதிவிலக்கு அல்ல‌

ஆனால் வாழும் காலத்தில் இந்த சமூகத்திற்கும், இந்த மக்களுக்கும் என்ன செய்தோம் என்பதுதான் வரலாற்றில் நிற்க கூடியது, நான் என் கடமையினை செய்தேன், உங்கள் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்

கருணாநிதிக்காக இவ்வளவு பேர் அழுகின்றார்களே, ஆனால் தேர்தலில் அவருக்கு பல நேரங்களில் தொல்வி வந்ததே என சில சதிகாரர்கள் சொல்லி ஆனந்தம் அடைகின்றார்களாம்

என் மீது அன்புகொண்டவர்கள் எல்லாம் எனக்கு வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? அது ஜனநாயகம் ஆகுமா?

என் கொள்கையினை ஏற்றவர்கள் வாக்களித்தார்கள், ஆனால் என் அரசியலையும் மீறி இத்தனை கோடி மக்கள் இந்த கருணாநிதியினை நேசித்திருக்கின்றார்கள் என்றால் அந்த அன்புக்கு எந்நாளும் நன்றி, இதொ இந்த வங்க கடல் போல் சொல்லிகொண்டே இருப்பேன்

நான் எனக்காக கண்ணீர் விடும் உங்களிடம் கேட்டுகொள்வது ஒன்றுதான்

அண்ணாவின் இடத்தை என் ஒருவனால் நிரப்ப முடியவில்லை, ஒப்புகொள்கின்றேன். அண்ணா போல நான் இருந்திருந்தால் கழகம் சில சறுக்கல்களை சந்தித்திருக்காது என்பது என் மனசாட்சி சொல்லும் உண்மை

ஆனால் நான், அருமை நண்பர் பேராசிரியர், முரசொலி மாறன் இன்னும் பலர் இணைந்துதான் அண்ணாவின் இடத்தை நிரப்ப முயன்றோம், ஓரளவு வெற்றியும் பெற்றோம்

அப்படி நீங்களும் எல்லோரும் , 3 கோடி தொண்டர்களும் இணைந்துதான் இந்த இயக்கத்தை நடத்தவேண்டுமே தவிர, செயல்தலைவர் ஒருவாரல் மட்டுமே நிரப்ப முடியாது

நான் முன்பே சொன்னபடி என் 6 பிள்ளைகளும், என் மன்சாட்சியாய் நின்ற மாறன் பிள்ளைகளும் எக்காலமும் இந்த கட்சிக்கு உழைக்கவும், ஒற்றுமையாய் இயக்கத்தை நடத்தவும் முன் நிற்பார்கள் என்பது எக்காலமும் எனக்குள்ள நம்பிக்கை

அந்த நம்பிக்கையினை உறுதிபடுத்தும் விதமாக என் இறுதி அஞ்சலியில் அவர்கள் உள்ளத்தில் எடுத்த பிரமாணம் எனக்கு கேட்டுகொண்டேதான் இருந்தது , அந்த நம்பிக்கையில்தான், அவர்கள் எக்காலமும் தமிழகத்திற்காக எனக்கு பின் உழைப்பார்கள் எனும் நம்பிக்கையில்தான் புதைந்தேன்

உடன்பிறப்பே, அண்ணா நம்மை விட்டு பிரிந்தபொழுது நன் சொன்னது நினைவிருக்கின்றதா, அதையேதான் என் பிரிவிலும் நீ எண்ணிகொள்ள வேண்டும்

கண்ணீரை துடைப்போம், களம் காண்போம். ஆற்றுவதற்கு ஏராளமனா விஷயங்கள் இருகின்றன , அண்ணனுக்கு காணிக்கை வைக்க ஏராளமான வெற்றிகளை பெற வேண்டி இருக்கின்றது என சொன்னது மறந்துவிட்டதா?

அப்படி இத்தமிழகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை எண்ணி களம் காணுங்கள், திருவாரூரில் நான் என் இறுதி காலத்தில் ஆற்றமுடியாமல் போல காரியங்களை தொடரவும், அது கழகத்து கோட்டை எனும் பெயர் நிலைக்கவும் களமிறங்கு

“வெற்றியினை எனக்கு காணிக்கையாய் தா” என நான் கேட்டதுமில்லை, அது எனக்கு பழக்கமுமில்லை

ஆனால் நான் உருவாக்கிய படை, எனக்கு பின்னும் வெற்றிகளை குவிக்கின்றது எனும்பொழுது என்னை விட மகிழ்வது யார்?

ராஜராஜ சோழனுக்கு பின் அவன் சந்ததிகள் அவனி ராஜ்யத்தை பெருக்கியது போல, செங்கிஸ்கானுக்கு பின் அவன் சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது போல நீங்களும் திமுகவின் எல்லைகளை பெருக்குங்கள், தமிழர் வாழ , தமிழ் வாழ காவலிருங்கள்

வரும் தேர்தலில் கழகம் வெற்றி எனும் செய்தி உலகெல்லாம் எதிரொலிக்கட்டும், வர இருக்கும் பெரும் வெற்றிக்கு அது விடிவெள்ளியாய் தெரியட்டும்

அண்ணாவின் ஆசியும், நான் காட்டிய வழியும் எந்நாளும் இயக்கத்தை நடத்தும், வெற்றிகளை குவிக்கும்

இந்த எளியவனுக்காக, அவனின் போராட்ட வாழ்வினை அர்த்தமுள்ளது என மொத்த‌ உலகமும் ஒப்புகொள்ளும் அளவிற்கு , வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திருகின்றான் இந்த எளிய கருணாநிதி என எல்லா நாட்டு மக்களும் வாய்விட்டு சொல்லும் அளவிற்கு எனக்காக திரண்ட உங்கள் ஒவ்வொருவருகும் மறுபடியும் நன்றி

உடன்பிறப்பே, எனக்கு தெரிந்து உனக்கு ஒரு குறையும் நான் வைத்துவிட்டு வரவில்லை. போராட்ட ஆயுதம் முதல் வழிமுறை வரை , வெற்றிபெறும் வழிவரை சொல்லிவிட்டும் செய்து காட்டிவிட்டுமே விடைபெற்றிருக்கின்றேன்

அவ்வழி நடப்பாய், இயக்கம் காப்பாய், தமிழகத்தை வாழவைப்பாய்

கண்ணீரை துடை, களத்தை நோக்கி போ,

எந்நாளும் போல கழகத்து செயல்பாட்டில் நான் வாழ்ந்துகொண்டே இருப்பேன்”

கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் : திருநாவுக்கரசர்

“உழைப்பு என்ற கருணாநிதியின் மந்திர சொல்லின் மூலம், அவரின் கனவுகளை , கட்சி தொண்டர்களின் துணையுடன் சாதித்துக்காட்டுவேன” : முக ஸ்டாலின்

மெரினாவில் கலைஞருக்கான‌ இடத்தை மீட்க‌ அழகிரியுடன் சேர்ந்து காட்டிய ஒற்றுமையினை தமிழகத்தினை எடப்பாடி கும்பலிடம் இருந்து மீட்பதிலும் இவர் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


விரைவில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் -திருநாவுக்கரசர் அறிவிப்பு

தமிழகம் முழுக்க திறக்கபடாத ராஜிவ், இந்திரா, காமராஜர் சிலைகல் ஏராளம் உண்டு

தவம் செய்யும் முனிவர்களை சுற்றி வளர்ந்திருக்கும் புற்று போல ஆகிவிட்டது சில சிலைகள்

அதை எல்லாம் கண்டு கொள்ளா திருநாவுக்கரசர் கலைஞருக்க்கு சிலை வைக்க போகின்றாராம்

தமிழக காங்கிரஸ்தலைவரின் செயல் திமுக தலைவருக்கு சிலை வைப்பதா? எப்படி ஒரு கட்சி பார்த்தீர்களா?

இன்னும் வெறிபிடித்த திமுககாரனுக்கே வராத சிந்தனை, தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வந்திருக்கின்றதென்றால் அவரின் மனநிலை பற்றி சந்தேகம் வருகின்றது

இப்படி ஒரு தலைவனை வைத்துகொண்டு அக்கட்சி எப்படி வளரும்? உருப்படும்?

கலைஞர் தனிபெரும் தலைவர் சந்தேகமில்லை, ஆனால் காங்கிரசுக்கோ அதன் வளர்ச்சிக்கோ அவர் செய்தது என்ன மிஸ்டர் திருநாவு?

இனி தி.அரசர் ஜெயா, வின்.ஜாணகி என பலருக்கு சிலைவடிக்கும் பெரும் காரியத்தில் இறங்குவார் என எதிர்பார்ப்போம்

வாழ்க தமிழக காங்கிரஸ், வளர்க அதன் எதிர்கட்சி தலைவர்களுக்கு சிலை வைக்கும் பணி

மானமுள்ள காங்கிரஸ்காரன் அதன் வரலாறு தெரிந்தவன் ஒருவன் இருந்தாலும் இந்நேரம் திருநாவுக்கரசை இழுத்து போட்டு சாத்தி வேட்டியினை கிழித்திருப்பான்

அப்படி யாரும் இல்லை என்பதால் திருநாவின் வேட்டிக்கும் முகத்திற்கும் இன்னும் ஆபத்தில்லை

மிஸ்டர் திருநாவு திறக்கபடா காங்கிரஸ் தலைவர்கள் சிலைகள், நெல்லை பணகுடியில் பர்தா போட்டு நிற்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலையினை முதலில் திறங்கள்

கலைஞர் சிலையினை அப்புறம் பார்த்துகொள்ளலாம்


புலிதரப்பு ஈழதமிழர்கள்தான் கலைஞரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள்

புலிதரப்பு ஈழதமிழர்கள்தான் கலைஞரை திட்டிகொண்டே இருக்கின்றார்கள் என்றால், இந்த பத்மநாபா வரதராஜ பெருமாள் கோஷ்டியும் அதையே செய்கின்றது

என்ன சொல்கின்றது

அமைதிபடை காலத்தில் புலிகளை ஆதரித்தார் கலைஞர், பத்மநாபாவினை காக்க மறந்து அவர் படுகொலைக்கு துணைபோனார், அமைதிபடையோடு வந்த போராளிகளை சென்னைக்குள் அனுமதிக்க மறுத்து விசாகபட்டினம் அனுப்பினார் என ஏகபட்ட குற்றசாட்டுகள்

ஆக அகதிகளாக வந்த ஈழதமிழர்களுக்காக தலையிட்டு இருபக்கமும் வாங்கி கட்டுகின்றது திமுக‌

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது இதுதான்

கலைஞர் மரியாதை தெரிந்த ஒரே ஈழ இனம் சிங்களன் மட்டுமே, மிக மரியாதையாக இலங்கை பாராளுமன்றத்தில் அஞ்சலி எல்லாம் செய்திருக்கின்றார்கள்

இனி பாருங்கள் திருப்பதிக்கு வந்துவிட்டு இலங்கை அதிபர்கள் கலைஞர் சமாதிக்கும் வந்து வணங்குவார்கள்