கலைஞர் டிவி சர்ச்சை

பொள்ளாச்சியில் கொடுமை நடந்திருக்கின்றது, ஆனால் 273 பெண்கள் 1200 வீடியோ என்பதெல்லாம் மிகைபடுத்தபட்டவை

இன்னொரு விஷயமும் கவனிக்கதக்கது பொள்ளாச்சி எனும் அதிமுக கோட்டை தவிர இன்னொரு இடத்தில் இக்கொடூரம் நடந்தால் இவ்வளவு முக்கியத்துவம் வந்திருக்குமா என தெரியவில்லை

நாம் இதை எந்த கோணத்திலும் சொல்லவில்லை, அக்கயவர்கள் தண்டிக்கபட வேண்டும், அந்த வேட்டை நாய்கள் வீழ்த்தபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை

நக்கீரனின் அப்பணி வாழ்த்துகுரியது

ஆனால் சந்தடி சாக்கில் கலைஞர் தொலைகாட்சியின் பல சர்ச்சைகள் மறைக்கபடுகின்றது

அதாவது நிர்வாக மாற்றம் வந்ததில் இருந்து புதிதாக வந்த அடிபொடிகளுக்கு அளவற்ற சம்பளமும் பழைய பணியாளர்களை வேலையினை விட்டு வெளியேற்றும் கொடுமையும் நடக்கின்றது

மிகபெரும் மாற்றத்தை அந்த டிவி எதிர்கொள்கின்றது , 
அதற்காக பழைய பணியாளர்கள் வரிசையாக கழுத்தை பிடித்து தள்ளபடுகின்றார்கள்

விபத்தில் சிக்கிய மூத்த பணியாளர் கண்ணன் என்பவரை கலைஞர் டிவி நிர்வாகம் கைவிட்டுவிட்டது என்கின்றார்கள் சிலர்

கலைஞர் டிவியில் நடக்கும் பல சர்ச்சைகளை ஸ்டாலினிடமே சொன்னாலும் தீர்வு எட்டபடவில்லை, ஸ்டாலினால் செயல்பட முடியவில்லை என்கின்றது சில செய்திகள்

மிக பெரும் சிக்கலாக புகைகின்றது விஷயம்

தன் டிவியினையே நிர்வாகிக்க தெரியாதவரா நாட்டை ஆளபோகின்றார் என்ற அதிருப்தி குரல்கள் வெடிக்கின்றன‌

மிக சரியாக அந்த சிக்கல் வெடிக்கும் பொழுதுதான் பொள்ளாச்சியில் கொடிபிடிக்கின்றார் கனிமொழி

ஆக கலைஞர் டிவியில் நடக்கும் சர்ச்சையினை பற்றியும் புலனாய்வு புலி கோபால் எழுதினால் சரியாக இருக்கும்

ஆனால் எழுதுவாரா? செய்யவே மாட்டார்

கலைஞர் டிவி சர்ச்சை வெடிக்கும் நேரம் பொள்ளாச்சி சர்ச்சை வருவதுதான் பலரின் சந்தேகங்களுக்கு காரணம்

முக ஸ்டாலின் மேல் மிகபெரும் சர்ச்சை அவரின் சொந்த டிவியில் தேர்தல்நேரம் வெடிப்பது அவர்களுக்கு நல்லதல்ல‌

இந்நேரமே பொள்ளாச்சி சம்பவமும் அதிமுக பெயர்களும் அடிபடுகின்றன‌

// இரு நாட்களுக்கு முன்பு அப்படி கலைஞர் டிவி பற்றி பெரும் செய்தி கிளம்பியது

https://timestamilnews.in/…/Kalaigar-Tv-clear-off-the-old-e…

எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்த்தால் ஏதோ தட்டுபடுகின்றது /