ராகுல் காந்தி மேல் லேசர் ஒளி

ராகுல் காந்தி மேல் லேசர் ஒளி அடித்த சர்ச்சை ஒரு வழியாக தீர்ந்துவிட்டது

அதை தீர்த்து வைத்திருப்பவர் காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் சிங்வி அவர் இப்படி சொல்லிவிட்டார்

”உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி எந்த கடிதமும் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது”

ஆக பாதுகாப்பு குறைபாடு மற்றும் லேசர் ஒளி தொடர்பாக வந்த செய்திகள் குறித்து தாங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

இது பற்றி உள்துறை அலுவலக அறிவிப்பு இப்படி வந்துள்ளது

“சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவருக்கு இது தொடர்பாக விசாரணை செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விசாரணை மேற்கொண்ட சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவர், ராகுலின் தலையில்பட்ட பச்சை நிற ஒளி , ராகுலின் உரையை படம்பிடித்த ஒரு புகைப்பட நிபுணரின் கேமராவில் இருந்து வெளிப்பட்டதாக கண்டறிந்துள்ளார்.

இதன் பின்னர் இந்த தகவல் ராகுலின் தனி பாதுகாவலர்கள் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது”

இதிலிருந்து உங்களுக்கு என்னபுரிகின்றது?

காங்கிரஸ் இதுபற்றி புகாரே அளிக்கவில்லை ஆனால் உள்துறை அலுவலகம் அலறி அடித்து விசாரித்து உண்மையினை சொல்லிவிட்டது

ஆக ராகுலை காக்கும் பொறுப்பில் காங்கிரஸை விட பாஜகவுக்கு அதிக அக்கறை என்பது புரிகின்றதல்லவா?

இளையவன் என்று இகழ்ந்தால்

“போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன என்னை
நுண்பல் கருமம் நினையாது 
இளையன் என்று இகழின், 
பெறல் அரிது ஆடே.”

எதிரிப்டை வீரர்களே கேளுங்கள், சிறுவர்கள் விளையாடக் கலங்கும்படியான கால் அளவுள்ள நீருக்குள் யானையைக் கொன்று வீழ்த்தி இழுத்துச் செல்லும் முதலையைப் போன்ற வர் எம் தலைவன்,

அவன் செய்யும் பல செயல்களைக் கருத்தில் கொள்ளாமல், அவனை இளையவன் என்று இகழ்ந்தால், நீங்கள் வெற்றி பெறுவது அரிது.

வன்மையாக கண்டிக்கதக்கது

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு ராகுல் வந்த விஷயத்திற்காக அக்கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றது அரசு

இது வன்மையாக கண்டிக்கதக்கது, ராகுல் ஒன்றும் அந்நிய நாட்டு தீவிரவாதி அல்ல, இந்நாட்டின் இளந்தலைவர்

அதுவும் லயோலா கல்லூரி சம்பவத்தின் பொழுது மவுனம் காத்த அரசு, திருச்சி ஜோசப் கல்லூரி போன்றவை இந்த சீமான் போன்றவர்களை எல்லாம் பேச வைக்கும் பொழுது அமைதி காக்கும் அரசு ராகுல் என்றால் கிளம்புவது சரியே அல்ல‌

முதலில் கல்லூரிகளில் பேசி விஷ வித்துக்களை விதைக்கும் பிரிவினைவாதிகளை அரசு களையட்டும் அதன் பின் ராகுல் பக்கம் வரலாம்

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

அந்த 7 பேர் மேலும் கொஞ்சமும் வருத்தமில்லை என “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்..” என்பது போல பெருந்தன்மையாக சொல்லியிருகின்றார் ராகுல் காந்தி

இந்த 7 பேர் விடுதலை நாடக கம்பெனியும், அந்த மகா முக்கிய ஆர்ட்டிஸ்ட்டான அந்த அற்புதம்மாளும் கண்டு கொண்டதாக தெரியவில்லை

நல்லவர்கள் அந்த ராகுலை சந்தித்து நன்றி சொல்ல வேண்டாமா?

இந்த ராமதாஸ் கோஷ்டி எதிர்தரப்பு (இப்போது மட்டும்) என்பதால் கண்டுகொள்ளவே இல்லை

மற்ற வழக்கமான இந்த 7 பேர் விடுதலை என பொங்கும் கோஷ்டிகளும் சத்தமே இல்லை, எல்லாம் கள்ள மவுனம்

நிச்சயம் இவர்கள் நல்லவர்கள் என்றால் ராகுலை சந்தித்து வாழ்த்தியிருக்க வேண்டும்

செய்தார்களா? இல்லை , ஏன் என்றால் அவர்களை இயக்கும் மறைமுக சக்தி அதை செய்யவிடாது

இவர்கள் செய்வதையும் செய்துவிட்டு இப்பொழுது பெருந்தன்மையாக ராகுல் சொல்வதையும் கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம் காக்கின்றார்கள் அல்லவா?

இந்த திக பெரியார் கோஷ்டி நாடகத்தையும் அந்த ஆர்டிஸ்ட் அற்புதம்மாளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்

அற்புதம்மாளே நீர் “அற்ப”அம்மாளாக இருத்தல் கூடாது..

ராகுலின் எளிமை அந்த குலத்தின் அளவு

நேரு மிகபெரும் செல்வந்தர் ஆயினும் கேம்பிரிட்ஜ்ல் படித்தவராயினும் கதர் தவிர வேறு ஆடை அணிந்ததில்லை

தன் தனி அடையாளமான அந்த‌ கோட் கூட கதராக இருக்குமளவு கவனமாக இருந்தார்

இந்திரா நூல்சேலை தவிர எந்த ஆடையும் கட்டியதில்லை, காதிலும் கழுத்திலும் கூட ஒரு நகை நீங்கள் பார்த்திருக்க முடியாது

ராஜிவ் மிக சாதாரண ஆடைகளையே அணிந்தார், சோனியாவின் சேலையும் பாமரபெண் சாயலிலே இருக்கும்

பிரியங்கா, ராகுல் உடைகளும் ஒருநாளும் விலை உயர்ந்தவை அல்ல‌

இவ்வளவிற்கும் சோனியா குடும்பம் இன்னும் மிரட்டலிலே வாழும் குடும்பம் , எப்பொழுதும் அவர்களுக்கு எதுவும் நேரலாம்

ஆனாலும் புல்லட் புரூப் ஆடை கூட அவர்கள் பெரும்பாலும் அணிவதில்லை

தன் தந்தை மீது பெண்ணொருத்தி மனித வெடிகுண்டாய் தாக்கிய தமிழகத்தில் கொஞ்சமும் பாதுகாப்பின்றி, மிக இயல்பாய் வந்து கல்லூரி மாணவிகளிடம் பேசிவிட்டு சென்றிருக்கின்றார் ராகுல்

ஒரு சாதாரண நடிகனே பத்து பவுன்சரோடு சுற்றும் தமிழகத்தில், வார்டு கவுன்சிலரே 40 அல்லக்கைகளோடு அலையும் தமிழகத்தில் அந்த மாபெரும் இயக்க தலைவன் வெகு எளிமையாக வந்துவிட்டு சென்றிருக்கின்றார்

அவரை பார்த்த கண்களுக்கு வேறு ஒன்றும் சிக்கவில்லை மாறாக அவர் ஆடை பல இலட்சம் என சங்கி கும்பல் கிளம்பிவிட்டது

மாபெரும் செல்வந்தனாயினும் நேரு எப்படி பாமர இந்தியனாக இருந்தாரோ, இந்திரா எப்படி எளிமையாக‌ இருந்தாரோ அப்படித்தான் ராகுலும் மகா எளிமையாக இருக்கின்றார்

இதெல்லாம் நற்குடிபிறப்பு எனும் வகையில் வருவது, அவ்வையார் இதைத்தான் சொன்னார்

“நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்”

அதாவது அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே வளரும். ஒருவன் கற்ற நூல்களின் அளவே அவன் அறிவு.

முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே ஒருவன் இப்போது அனுபவிக்கும் செல்வம். குணம் ஒருவன் தோன்றிய குலத்தின் அளவே.

ஆம் ராகுலின் எளிமை அந்த குலத்தின் அளவு

மாற்றத்திற்கான அறிகுறிகள்

கலைஞர் இருந்திருந்தால் இந்நேரம் ராகுல் கேள்விகளை தமிழில் கேட்கின்றேன் என அவர் அருகிலே இருந்திருப்பார்

கூட்டத்து கவனமோ இல்லை தமிழக கவனமோ ராகுலை நோக்கி செல்லாதவாறு அட்டகாச வித்தைகாட்டியிருப்பார்

தமிழகத்தில் யார் வளரவேண்டும், எப்படி வளரவேண்டும் என்பதை கடந்த 60 ஆண்டுகாலம் தன் கையிலே வைத்திருந்தவர் அவர்

ஜெயா இருந்திருந்தால் இந்நேரம் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல்வர் என்ன பாடுபடுவாரோ தெரியாது

பெரும் பிம்பங்கள் உடைந்தபின் பல தேசிய அடையாளங்கள் இங்கு உதிக்க ஆரம்பிக்கின்றன‌

இவை எல்லாம் மாற்றத்திற்கான அறிகுறிகள்

கொஞ்சமும் திமுக வரலாறு தெரியாமல் ராகுலை நோக்கி கைதட்டி கொண்டிருக்கின்றர் அக்கட்சியினர்

சென்னையில் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடல் நடத்துகின்றார் ராகுல்காந்தி

மிகமிக சுவாரஸ்யமாக கொஞ்சமும் தடுமாற்றமின்றி அவர்களுடன் இயல்பாக பேசி கைதட்டலை அள்ளுகின்றார் ராகுல்

இவ்விஷயத்தில் கடும் உற்சாகமாக இருப்பவர்கள் யாரென்றால் காங்கிராசாரை விட திமுகவினர்

மோடிக்கு இப்படி கூட்டம் நடத்த தைரியம் தகுதி உண்டா என் கேள்வி வேறு

நல்லது, இந்த முக ஸ்டாலின் என்பவருக்கு இப்படி ஒரு கலந்துரையாடல் நடத்த திட்டம் உண்டா? என கேட்டால் பதிலே இல்லை

பெரியவரவேற்பா?

என்னது தமிழ் மாணவிகள் ராகுல்காந்தியிடம் ஆங்கிலத்தில்உரையாடினார்களா? பெரியவரவேற்பா?

ராகுல்காந்தி தமிழில் பேசவில்லை என்பதை கண்டிக்கவில்லையா?

ஈழத்தில் நம் இனம் அழிந்த கவலை கொஞ்சமும் இல்லையா? அதுபற்றி ஒருத்தியும் கேள்வி கேட்கவே இல்லையா?

அங்கு களமாட ஒரு மானமுள்ள‌ தமிழச்சியுமா இல்லை?

நமது ஆட்சி அமையட்டும் , புனித மரியன்னை கல்லூரியில் 300 மாடு கட்டி, இவளுக அத்தனை பேரையும் மாட்டுசாணம் அள்ளவைத்து பழிவாங்கிவிடலாம்