அடுத்த ஆட்சி

எது எப்படி ஆயினும் இனி ஆட்சிக்கு வரவேண்டியது காங்கிரசும் அதன் கூட்டணியுமே அதில் மாற்றுகருத்தே இல்லை

மிக எதிர்பார்க்கபட்ட மோடி குஜராத்தின் முதல்வராக ஜொலித்த மோடி பாரதபிரதமராக சறுக்கி இருக்கின்றார்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வந்த கதையும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சரிவும் , பெட்ரோல் மற்றும் எரிபொருளின் விலைவாசியுமே அதை காட்டி நிற்கின்றன‌

மிக மோசமான ஆட்சி என்று நிச்சயம் மோடியின் ஆட்சியினை சொல்லமுடியாது, பெரும் ஊழல் என்றும் இல்லை

கிட்டதட்ட வாஜ்பாய் பிரதமராக இருந்தது போலவே பெரும் சர்ச்சையின்றி விடைபெறுகின்றார் மோடி

திமுக மோடியினை கரித்து கொட்டுவதை விடுங்கள் , வாஜ்பாய் காலத்தில் இவர்களுக்கு அமைச்சரவை கிடைத்தது அதனால் அமைதி காத்தார்கள்

இப்பொழுது இல்லை என்பதால் கரித்து கொட்டுகின்றார்கள் அவ்வளவுதான் விஷயம்

ஒரு அரசின் திட்டங்கள் பலனளிக்க நெடுநாளாகும், நேருவின் திட்டம் 1970களில்தான் பலன் கொடுத்தது

இந்திராவின் திட்டங்கள் 1990க்கு பின்புதான் நல்லவைகளாக தெரிந்தன, ராஜிவின் திட்டங்கள் 2000களில் கண்முன் தெரிந்தது

வாஜ்பாயின் தங்கநாற்கர திட்டம் 2010களிலேதான் உணரபட்டது, மோடியின் சில நல்ல திட்டங்களையும் பின்னாளில் இந்தியா உணரகூடும், இங்குள்ள யதார்த்தம் அது

மற்றபடி பொருளாதார ரீதியாக இந்த அரசு சறுக்கலையே சந்தித்தது

அம்பானிக்கு மோடி அள்ளிகொடுத்தார் என்றால் அம்பானியின் சில நிறுவணங்கள் ஏன் திவாலாகின்றன?

ஆக அம்பானியினையும் சேர்த்து நடுரோட்டுக்கு கொண்டுவந்திருக்கின்றது இந்த அரசு

பொருளாதாரமும் இன்னபிற விஷயங்களும் மகா மோசமாக இருக்கின்றன, அதை சரிசெய்யும் ஆற்றலும் அனுபவமும் இவர்களுக்கு இல்லை

ஒருமுறை மோடி ஆண்டாகிவிட்டது, அது நல்லாட்சியா இல்லையா என்பதை சொல்ல இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கொடுப்பதே சரி

அதுவும் வெறும் 5 வருடமே, உலக கோப்பை கிரிக்கெட் சாம்பியனுக்கான கால அளவு போன்றது

அடுத்த ஆட்சி வரட்டும், பலமிக்க எதிர்கட்சியாக ஏன் ஆளும் கட்சி உருப்படியில்லை எனில் அதை ஆட்டி வைக்கும் மாபெரும் சக்தியாக பாஜக இருக்கட்டும்

பிரதமராக பத்திரிகையாளரை சந்திக்காத மோடி அப்பொழுதாவது பத்திரிகையாளரிடம் பேசட்டும்