தேசத்தின் மிக சிறந்த ஆளுமைகள்

ஆளாளுக்கு தேசத்திற்காய் பொங்குகின்றார்கள், விட்டால் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு “பேட்ட” ரஜினி ஸ்டைலில் பாகிஸ்தானுக்குள் புகுந்துவிடுவார்கள் போலிருக்கின்றது

இதில் பல அரைவேக்காடு தலைவர்களும், அகிலேஷ் யாதவ் போல பக்குவமில்லா தலைவர்களும் போர் ஆமாம் போர் என முழங்குகின்றார்கள்

போர் என்பது அடித்துவிட்டு வரும் விஷயமல்ல, தொடங்கினால் அது எளிதில் முடியாது

கார்கில் யுத்தம் நமது எல்லைக்குள் நடந்தது, எல்லை தாண்டி போர் தொடுப்பது என்பது அதுவும் இரு அணுசக்தி நாடுகள், ராணுவ கருவிகள் பலத்தில் சமபலத்தில் இருக்கும் நாடுகள் மோதுவது என்பது கடும் நாசமான விளைவுகளை ஏற்படுத்தும்

மோடி அரசால் நாசமான பொருளாதாரம் இன்னும் ஆகும், எரிபொருள் முதல் அரிசிவரை தட்டுபாடாகும்

போர்சூழல் என்பது கிரிக்கெட் பார்த்து கைதட்டுவது போல் இராது, முழு யுத்தம் என்றால் என்ன என்பதை கொடும் வரலாறு 70 ஆண்டுகளுக்கு முன்புவரை பதிவு செய்திருக்கின்றது

முன்பாவது யுத்தம் வட எல்லையில் நடக்கும் தென்னகம் நிம்மதியாக இருக்கும்

இப்பொழுது அப்படி அல்ல, கோரி, ஷாகீன் என பாகிஸ்தானிய ஏவுகனைகள் தென்னக நகரங்களை குறிவைத்து நிற்கின்றன‌

போதா குறைக்கு அவர்களின் நீர்மூழ்கி வேறு

நிச்சயம் இந்தியா பாகிஸ்தானை வெல்லும், ஆனால் ஓரளவு ஏற்படும் இந்திய சேதத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

எத்தனையோ இடங்களில் போர் நடத்தும் அமெரிக்கா தன் சொந்த எல்லையில் நடத்துமா என்றால் நடத்த்தாது ஆம் பாதுகாப்பான யுத்தம் என எதுவுமில்லை

யுத்தம் தொடங்க இது சரியான நேரம் அல்ல, இந்திரா தொடங்கிய யுத்தம் எல்லாம் சோவியத்தின் ஆசிபெற்றதாகவே இருந்தது

நல்ல பலசாலியினை பின்னால் வைத்து கொண்டு யுத்தம் நடத்துவதே சாலசிறந்தது, இந்திரா அதனை செய்தார்

இன்றைய காலகட்டத்தில் அப்படி ஒரு பலம் இல்லை , புட்டீன் எதுவும் இத்தாக்குதல் பற்றி பேசவுமில்லை, இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவாகவுமில்லை

யுத்தத்தை தவிர்ப்பதே இப்பொழுது சால சிறந்தது,45 பேருக்கு பழிவாங்க கிளம்புகின்றோம் என 45 ஆயிரம் பேரை சாக கொடுப்பது அறிவுடமை ஆகாது

எல்லா தலைவர்களின் அறிக்கையினையும் பார்க்கின்றோம் ஆனால் இரு தலைவர்களின் அறிக்கையே பக்குவமும் பொறுப்பும் நிறைந்ததாய் இருக்கின்றது

அது ராகுல் மற்றும் பிரியங்காவின் அறிக்கைகள்

உண்மை அறிந்த, நாட்டு பற்று மிக்க , நாட்டை பற்றியும் நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் நல்வாழ்வினையும் அமைதியினையும் பற்றி கவலைபடும் அறிக்கைகள் அவை

தேசத்தின் மிக சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்கும் அந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்,

தேசம் அவர்களால் பெருமை கொள்கின்றது