ராகுலின் எளிமை அந்த குலத்தின் அளவு

நேரு மிகபெரும் செல்வந்தர் ஆயினும் கேம்பிரிட்ஜ்ல் படித்தவராயினும் கதர் தவிர வேறு ஆடை அணிந்ததில்லை

தன் தனி அடையாளமான அந்த‌ கோட் கூட கதராக இருக்குமளவு கவனமாக இருந்தார்

இந்திரா நூல்சேலை தவிர எந்த ஆடையும் கட்டியதில்லை, காதிலும் கழுத்திலும் கூட ஒரு நகை நீங்கள் பார்த்திருக்க முடியாது

ராஜிவ் மிக சாதாரண ஆடைகளையே அணிந்தார், சோனியாவின் சேலையும் பாமரபெண் சாயலிலே இருக்கும்

பிரியங்கா, ராகுல் உடைகளும் ஒருநாளும் விலை உயர்ந்தவை அல்ல‌

இவ்வளவிற்கும் சோனியா குடும்பம் இன்னும் மிரட்டலிலே வாழும் குடும்பம் , எப்பொழுதும் அவர்களுக்கு எதுவும் நேரலாம்

ஆனாலும் புல்லட் புரூப் ஆடை கூட அவர்கள் பெரும்பாலும் அணிவதில்லை

தன் தந்தை மீது பெண்ணொருத்தி மனித வெடிகுண்டாய் தாக்கிய தமிழகத்தில் கொஞ்சமும் பாதுகாப்பின்றி, மிக இயல்பாய் வந்து கல்லூரி மாணவிகளிடம் பேசிவிட்டு சென்றிருக்கின்றார் ராகுல்

ஒரு சாதாரண நடிகனே பத்து பவுன்சரோடு சுற்றும் தமிழகத்தில், வார்டு கவுன்சிலரே 40 அல்லக்கைகளோடு அலையும் தமிழகத்தில் அந்த மாபெரும் இயக்க தலைவன் வெகு எளிமையாக வந்துவிட்டு சென்றிருக்கின்றார்

அவரை பார்த்த கண்களுக்கு வேறு ஒன்றும் சிக்கவில்லை மாறாக அவர் ஆடை பல இலட்சம் என சங்கி கும்பல் கிளம்பிவிட்டது

மாபெரும் செல்வந்தனாயினும் நேரு எப்படி பாமர இந்தியனாக இருந்தாரோ, இந்திரா எப்படி எளிமையாக‌ இருந்தாரோ அப்படித்தான் ராகுலும் மகா எளிமையாக இருக்கின்றார்

இதெல்லாம் நற்குடிபிறப்பு எனும் வகையில் வருவது, அவ்வையார் இதைத்தான் சொன்னார்

“நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்”

அதாவது அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே வளரும். ஒருவன் கற்ற நூல்களின் அளவே அவன் அறிவு.

முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே ஒருவன் இப்போது அனுபவிக்கும் செல்வம். குணம் ஒருவன் தோன்றிய குலத்தின் அளவே.

ஆம் ராகுலின் எளிமை அந்த குலத்தின் அளவு