காதல் கீதம்

எத்தனை கவிஞர்கள் வரட்டும் உருகி உருகி காதலிக்கவும் அக்காதல் தோற்றுவிட்டால் கதறி கதறி பாடவும் ஒரு கவிஞன் தமிழில் உண்டென்றால் அது சாட்சாத் டி.ராஜேந்தர்

“ஒரு தலை ராகம் முதல்” ஏராளாமான படங்களில் அவர் எழுதிய அளவு காதலின் வலியினையும் சோகத்தையும் அவர் எழுதிய அளவு இன்னொருவன் எழுத முடியாது

வர்ணனை, வார்த்தை, ஆழம், பாசம், சோகம், ஏக்கம் என கலந்து கட்டி அவர் அடித்த அளவு இந்த நூற்றாண்டில் இன்னொருவன் இல்லை

கண்ணதாசன் பாடலில் காதலிலும் தத்துவம் இருக்கும், வைரமுத்து பாடலில் கிராமத்து வாசமிருக்கும், வாலி பாடலில் வார்த்தை ஜாலமிருக்கும்

டி.ஆர் பாடலில் மட்டுமே உண்மையான காதலும் வலியுமிருக்கும்

மிக முக்கியமான விஷயம் காமம் என்பது துளியும் இருக்காது.

வென்ற காதலுக்கு ஆயிரம் பாடல்கள் இருக்கலாம், தோற்றுவிட்ட காதலுக்கு டி.ஆரின் உருக்கமான பாடலை தவிர ஏதுமில்லை

“வாசமில்லா மலரிது,,”
“இது குழந்தை பாடும் தாலாட்டு”
“நான் ஒரு ராசியில்லா ராஜா..” 
“நானும் உந்தன் உறவை”
“கடவுள் வாழும் கோவிலிலே..”
“வைகை கறை காற்றே நில்லு”

போன்ற பாடல்கள் எல்லாம் காதலுக்கும் ஏக்கத்திற்கும் எந்நாளும் நிலைபெற்றவை

இன்று ஒரு கவிஞனை கொண்டாட வேண்டுமென்றால் தயகமின்றி டி.ராஜேந்திரன் எனும் அற்புத கவிஞனை அவனின் பாடல்களுக்காக மட்டும் கொண்டாடலாம்

மிக சிறந்த கவிஞரான அவர், மிகபெரும் தன்னம்பிக்கையுடன் எல்லா பக்கமும் தன் சிறகை விரித்து பல இடங்களில் காமெடியானது வேறு வகை

அவர் ஒரு குயில், அது பாடத்தான் வேண்டும் மாறாக கழுகுகளோடும், கள்ள பருந்துகளோடும், குப்பையினை கிண்டும் கோழிகளோடும் மல்லுக்கு நின்றது காலத்தின் கேடு

அட தவளைகளோடுமா அந்த குயில் மல்லுக்கு நிற்க வேண்டும்?

உலகம் “வாலன்டைன்ஸ் டே” கொண்டாடும் பொழுது “எங்க தல எங்க தல டி.ஆரு, சென்டிமென்டுல தார்மாறு” என கொண்டாடவும் கூட்டமிருக்கின்றது அதற்கு காரணமும் இருகின்றது

என்னதான் டி.ஆர் ஆயிரம் பாடல் எழுதினாலும் உண்மையான காதலலின் வரிகள் எப்படி இருக்கும் என்பதற்கு “நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு ஈடு இணையே இல்லை

அதிலும் அந்த “எங்கிருந்தாலும் வாழ்க” என்ற அந்தபாடல்தான் உண்மை காதலுக்கான தேசிய கீதம்.