அதெல்லாம் காணல் நீராயிற்று

அந்த காஷ்மீரத்து சிங்கத்துக்கு தமிழகமும் திமுகவும் எவ்வளவு அவசியம் என்பது அன்றே புரிந்திருந்தது…

திமுகவுக்கும் காஷ்மீரிய சிக்கல் புரிந்திருந்தது, அதன் குரல் நியாயமான குரலாய் இருந்தது, அந்த 1987 டெசோவில் பரூக் அப்துல்லாவினையும் சேர்த்திருந்தார் கலைஞர், அர்த்தமுள்ள செயல் அது

அதெல்லாம் காணல் நீராயிற்று

உதயநிதி வாழ்க.. இன்பநிதி வாழ்க வாழ்க

கடும் இறுக்குமான கட்டுபாடுகளுக்குள் வரலாம்

காஷ்மீரில் மெக்பூபா உட்பட தலைவர்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது நிச்சயம் முன்பு அராபத்தை இஸ்ரேல் வீட்டு சிறையில் வைத்தற்கு சமமானது

ஆனால் இந்தியாவில் ஒரு குரல் வருகின்றதா என்றால் இல்லை, வராது

நிச்சயம் அந்த மனிதன் இருந்திருந்தால் இப்பொழுது எதை சரியாக எழுதவேண்டுமோ அதை மிக சரியாக முரசொலியில் எழுதியிருப்பான்

காஷ்மீரிய சிங்கம் பருக் அப்துல்லா இப்படி சொன்னார், நேரு அப்படி சொன்னார், இந்திரா இப்படி சொன்னார் என தன் அனுபவங்களை எல்லாம் கொட்டி அட்டகாசமாக எழுதியிருப்பான்

அதில் வரலாறு இருக்கும், அரசியல் இருக்கும், பல உள்விஷயம் இருக்கும் மேற்கொண்டு வருங்கால எச்சரிக்கையும் இருக்கும்

அவர் இல்லா இடம் பட்டவர்த்தனமாக தெரிகின்றது, அதை நிரப்பத்தான் யாருமிலர்

அவரின் நாற்காலியில் ஓடிசென்று அமர்கின்றார்களே தவிர, அவரின் விஸ்வரூப இடத்தை எப்படி நிரப்புவது என யாருக்கும் தெரியவில்லை

கலைஞர் என்றல்ல, ஜெய்பிரகாஷ் நாராயண், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், நம்பூதிரிபாடு இன்னும் பல புகழ்பெற்ற தலைவர்களுக்கு தகுந்த வாரிசாக ஒருவர் கூட உருவாகிவரவில்லை என்பதுதான் சோகம்..

அரசியலில் இது நிச்சயம் மாபெரும் வீழ்ச்சி

அதன் விளைவு இன்று காஷ்மீராக இருக்கலாம், நாளை பாண்டிச்சேரி கூட வலுகட்டாயமாக தமிழகத்தோடு இணைக்கபடலாம்.

எதிரி யாருமில்லா சிங்கம் தனியாக கரிஜித்து அதன் வழியில் செல்லும், தான் விரும்பியதெல்லாம் செய்யும்

அதனை எதிர்க்க இன்னொரு சிங்கம் வேண்டும் எனும் அவசியமில்லை, சிறுத்தைகளோ இல்லை செந்நாய் கூட்டமோ ஒன்றாக கூடிவந்தாலே சிங்கம் பின்வாங்கும்

எதிர்க்க யாருமில்லை எனும்பொழுது அதன் முன்னால் நிற்பவர் யார்? எவனுமில்லை

ஒருதுருவ ஆட்சி என்பது இப்படித்தான் இருக்கும், 1970களில் இந்திரா இப்படி இருந்தபொழுது எதிர்குரல் பலமாக இருந்தது

இன்று அப்படி அல்ல.. அவர்களை எதிர்கொள்ள எந்த வாரிசு தலைவனுக்கும் திறமையுமில்லை தகுதியுமில்லை

இந்தியா அதன் சுதந்திரமான சிறப்பினை இழந்து சில நாடுகளில் இருப்பது போன்ற கடும் இறுக்குமான கட்டுபாடுகளுக்குள் வரலாம்

ஒருவேளை காஷ்மீருக்கான‌ 370ம் சட்டபிரிவு நீக்கபட்டால் என்னாகும்?

ஒருவேளை காஷ்மீருக்கான‌ 370ம் சட்டபிரிவு நீக்கபட்டால் என்னாகும்?

ஒன்றும் ஆகாது, இது இந்தியாவின் உள்நாட்டு சிக்கல் என உலகம் சொல்லிவிடும். மிஞ்சி போனால் கொஞ்சம் கண்டிப்பு , சில அரசியல் குத்தல்கள், சில திறைமறைவு பேச்சுக்கள் என்பதை தாண்டி ஒன்றும் நடக்காது

எல்லா நாடும் ஒவ்வொரு பகுதியில் இப்படி அழிச்சாட்டியம் செய்வதால் யாரும் கேள்வி கேட்கவும் முடியாது

திபெத்தில் சீனா, சர்ச்சையான‌ இலங்கை, இஸ்ரேல், உக்ரைனில் ரஷ்யா, ஆசாத் காஷ்மீரில் பாகிஸ்தான், இன்னும் பல தீவுகளில் ரஷ்யா, இன்னும் சில இடங்களில் பிரான்ஸ் பிரிட்டன் என சிக்கிகிடக்கும் உலகிது

ஒருவேளை காஷ்மீரின் சலுகை ரத்து செய்யபட்டாலும் எல்லோரும் ஒருவர் முகத்தை பார்த்து கொண்டு ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்துகொண்டு நகர்வார்கள்..

மன்னர் கால ஒப்பந்தம், அது முறிந்தால் காஷ்மீரிய நிலை என சில விஷயம் இருந்தாலும் அவை சபையேற போவதில்லை

இது பனிப்போர் காலமென்றால் நிச்சயம் சிக்கல், மகாசிக்கல் காஷ்மீரிய குங்குமபூவுக்கும் ஓக் மரங்களுக்கும் சிக்கல் என வல்லரசுகள் வந்து அமர்ந்துகொள்ளும்

இப்பொழுது நிலை அப்படி அல்ல‌

இதனால் 370 என்பதை நீக்கினாலும் கொந்தளிப்பு உலகம் முழுக்க பரவாது, அதை யாரும் பொருட்படுத்த போவதுமில்லை

மத்திய அரசு ஒரு முடிவோடு பரபரப்பு செய்திகளை மீடியாக்கள் மூலம் பரப்பிவிட்டு நாடிதுடிப்பினை பார்த்து கொண்டிருக்கின்றது

எல்லாமே மத்திய அரசுக்கு சாதகமாக செல்வதால் ஒரு நள்ளிரவு அல்லது அதிகாலையில் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்புகளை செய்யலாம்

அவர் ஏதும் சொல்லிவிட்டால் என்னாகும்?

இங்கு பழனிலார்டு கோஷ்டிக்கு இருக்கின்றதே இருக்கின்றது ராமசந்திரன் பாடல், அது போதாதா?

“புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகின்றது

மோடி வருகையிலே அவரை வரவேற்க” என கிளம்பிவிடுவார்கள்

“ல்லால்ல ல்லா லா…” பாட தமிழிசை அக்காவும் ரெடி

காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது

காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது, சுற்றுலா பயணிகள் அவசரமாக காஷ்மீரை விட்டு நீங்கும் நிலையில் அங்கு தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கபட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன‌

இப்பொழுதைய காஷ்மீர் ஆட்சியாளர் கவர்ணர் என்றாலும் அவர் ஜீன்ஸ் படத்து தம்பி நாசர் போல சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார், கையில் சட்டபுத்தகம் இருக்கலாம்

“எனக்கு எதுவும் தெரியாது, சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கின்றது,நாளை நடப்பது எனக்கு தெரியாது” என சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார்.

இதனிடையே பாகிஸ்தானின் இம்ரான்கான் காஷ்மீரில் பெரும் இன அழிப்பு என நமது ஊர் வைகோ, சைமன் போல கிளம்பிவிட்டார்

சில துப்பாக்கி மோதல்களில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் கொல்லபட்டிருப்பது அவருக்கு கவலை அளித்துவிட்டது, என்ன இருந்தாலும் தீவிரவாதிகளை உருவாக்குவது சாதரண விஷயமா? அவர்கள் கொல்லபட்டால் ஒரு ஆத்திரம் வரும் அல்லவா?

அவர் ஏதோ பேசிகொண்டிருக்கும் பொழுதே இந்தியா தன்நவீன ஏவுகனையினை அதாவது தரையிலிருந்து விண்ணுக்கு பாயும் நவீன ஏவுகனையினை வெற்றிகரமாக சோதித்திருக்கின்றது

அது எப்16 போன்ற நவீன விமானத்தையும் நொறுக்கும் திறன் கொண்டது என்கின்றன தரவுகள்

ஆக காஷ்மீரில் ஏதோ பெரும் திட்டத்துடன் இந்தியா களமிறங்கிவிட்டது நிஜம், பாகிஸ்தான் வந்தால் அதை சந்திக்கவும் இந்தியா தயாராகிவிட்டதும் நிஜம்

எல்லாம் தயார் என்றபின்னும் முக்கிய அறிவிப்பினை ஏன் இன்னும் வெளியிடவில்ல்லை?

அமித்ஷாவின் ஆஸ்தான ஜோதிடருக்கு லேசான குளிர்காய்ச்சலோ என்னவோ இன்னும் தேதி குறிப்பிடபடவில்லை

பாகிஸ்தான் தன் விளையாட்டை தொடங்கிவிட்டது

இந்தியாவில் தேர்தல் தொடங்கிவிட்ட நேரம் பாகிஸ்தான் தன் விளையாட்டை தொடங்கிவிட்டது

அதாவது அந்த பாலகோட் பக்கம் இந்திய விமானத்தால் தாக்கபட்ட மதராசாக்களுக்கு பத்திரிகையாளரை அழைத்து சென்று காட்டிவிட்டது

அது மதராசாவில் சில இடிபாடுகளும் இருந்திருக்கின்றன, அது பழமை காரணமாக இடிந்ததே தவிர விமான குண்டு வீச்சு இல்லை என சொல்லிவிட்டது பாகிஸ்தான்

பத்திரிகையாளரும் பார்த்துவிட்டு திரும்பிவிட்டார்கள்

அதாவது பாகிஸ்தானில் இந்தியா குண்டு வீசவில்லை என நிரூபிக்க படாதபாடு படுகின்றது

ஆனால் பலத்த கேள்விகள் எழுகின்றன‌

இதை தாக்குதல் நடந்த பிப்ரவரியிலே நடந்தபின்னும் இப்பொழுதுதான் பத்திரிகையாளரை அழைத்து சென்றது ஏன்?

உள்ளூர் மக்களிடம் ஏதும் பேசவே கூடாது எனும் கடும் நிபந்தனையுடன் அவர்களை அழைத்து சென்றது ஏன்?

பத்திரிகையாளருடன் தடவியல் நிபுணர்கள் யாரும் வராதது ஏன்?

மகா முக்கியமாக இந்தியா நடத்தாத தாக்குதலுக்கு ஏன் எப்16 சகிதம் பாகிஸ்தான் கிளம்பியது?

ஆக உலகம் என்ன முடிவுக்கு வருகின்றதென்றால், இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை, அந்த தடயங்களை மிக கச்சிதமாக இந்த இருமாத காலத்தில் மறைத்த பாகிஸ்தான் அதன்பின் பத்திரிகையாளரை அழைத்து சென்றிருகின்றது

“என்ன நாடு அது? தடயத்தை அழிக்க இரு மாதமா ஆகும்? அவ்வளவு அடி பலமோ?” என பாகிஸ்தானை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றது விஷயம் தெரிந்த உலகம்

இனி என்னாகும்?

புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த தாக்குதலால் காட்சிகள் வேகமாக மாறுகின்றன‌

முதலில் புல்வாமா தாக்குதலுக்கு காரணம் யாரென்றால் இந்த ஆட்சியின் வெற்றுவிளம்பரம், அதுதான் முதல் காரணம்

பஞ்சாபில் இந்திரா தீவிரவாதத்தை வேரறுத்தது போல் காஷ்மீரில் நாங்கள் வேரறுத்துவிட்டோம் என காட்ட துடித்தார்கள், துடிப்பென்றால் அப்படி ஒரு துடிப்பு

விளைவு காஷ்மீர் தீவிரவாதமில்லா பகுதி என அறிவிக்க முன்னோடியாக சில பகுதிகளை அறிவித்தார்கள், அதன் பின் நாங்களும் இருக்கின்றோம் என காட்டவேண்டிய அவசியம் அந்த தரப்புக்கும் வந்தது

அதன் பின் எல்லை தாண்டி அடித்ததெல்லாம் நல்ல விஷயமே, நிச்சயம் நமது நுட்பம் அல்ல ஏதோ ஒரு வல்லானை துணைக்கு அழைத்து அடித்தாயிற்று

அதன் பின் நடக்கும் நிகழ்வுகள்தான் அச்சமூட்டுகின்றன‌

இனி இந்திய விமானம் நுழைந்துவிடாதபடி கடும் தயாரிப்பில் இறங்கிவிட்டது பாகிஸ்தான், சீனாவிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் வாங்கியும், ஆப்கனில் திருடிகொண்டு வந்தவறையும் வைத்து மிகபெரும் வேலி அமைக்கின்றது

24 மணிநேரமும் தன் வான் எல்லையினை 50 ஆயிரம் அடி உயரம் வரைகாக்கும் நவீன சிஸ்டங்களை நிறுவி வைத்திருகிக்கின்றது

ஏகபட்ட வான் பாதுகாப்பு சாதனங்களுடன் அது மிக பலமான எல்லையினை அமைத்துவிட்டது

இனி இந்திய விமானங்கள் எல்லை தாண்டுவது மகா சிரமமே

இனி என்னாகும்?

மிகுந்த பாதுகாப்பில் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பயிற்சி பெறுவர், அதை இங்கிருந்து நாம் பார்க்க வேண்டும்

புலிகளின் சாதனை இலங்கையில் என்னவென்றால் சொத்தையாக கிடந்த, அதாவது ஹெலிகாப்டர் கூட இல்லாமல் இருந்த இலங்கை ராணுவத்தை மிக பலபடுத்தியது

அதாவது புலிகளை ஒழிக்கவே தன்னை மிகபலமாக மாற்றிகொண்டது இலங்கை ராணுவம், புலிகளின் ஒரே சாதனை அது

இப்பொழுது இந்த அரசும் பாகிஸ்தானுக்கு அந்த விஷயத்தை செய்துவிட்டது

அந்த மொரார்ஜி தேசாய்க்கு வழங்கபட்டது போல “நிசான் இ பாகிஸ்தான்” விருது மோடிக்கும் வழங்கபடலாம்

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு அவர் செய்திருக்கும் மாபெரும் உதவியில் பாகிஸ்தான் அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கின்றது

ரஷ்யா கனத்த அமைதி

புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த சிக்கல்கள் என எதிலும் ரஷ்யாவோ புட்டீனோ வாயே திறக்கவில்லை

மாறாக அமெரிக்க துப்பாக்கிகளை விட ரஷ்ய துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கபடும் என இந்தியா அறிவித்தது

ஆயினும் ரஷ்யா கனத்த அமைதி, ஏன் இந்த அமைதி என்பதில் பல கணக்குகள் இருந்தன‌

விஷயம் இந்திய விமானபடையில் இருக்கின்றது

கிட்டதட்ட 200க்கு மேலான மிக் விமானங்கள் விபத்துகுள்ளானது, இது மொத்த விமானபடை எண்ணிக்கையில் 4ல் ஒரு பங்கு ஆகும்

ரஷ்யாவின் சுகோய் 30 சில இருந்தாலும் மேலும் வலுபடுத்த ரபேல் பக்கம் சென்றது இந்தியா, தன் மிக் 35 ரகத்தை இந்தியா வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரஷ்யாவிடம் இருந்தது

ஆனால் மிக் ரகங்களை இந்தியா ரசிக்கவில்லை

சும்மா மிக் 21 29 என 1970 மாடல்களுக்கு பணத்தை கொட்டிகொண்டே இருக்க வேண்டுமா? பழைய உதவிகளை காட்டி ரஷ்யா நம்மை கட்டி போடுவதா என்ற முணுமுணுப்பு இங்கு இருந்தது

பழைய திராவிட கொள்கைகளை காட்டி தமிழக அச்சுறுத்தல் அரசியல் நடப்பது போல ரஷ்யா எதை எல்லாமோ சொல்லி கனத்த தொகையினை மிக் பராமரிப்பு என கறந்து கொண்டிருந்தது

இதனால் 1990களிலே பிரான்ஸின் டசால்ட்டிடம் இருந்து மிராஜ் ரகங்களை இந்தியா வாங்கியது ஆனால் எண்ணிக்கை குறைவு

இப்பொழுது ரபேல் என மறுபடியும் பிரான்ஸ் கதவினை தட்டியது, காங்கிரஸ் அரசை விட மோடி அரசு வாங்கியது நவீன அம்சமிக்க ரபேல் என்பதால் விலை அதிரித்தது

இதை பார்த்த சில சக்திகள் தங்கள் விமானத்தை வாங்காத இந்தியாவில் சலசலப்பினை ஏற்படுத்த ரபேல் ஊழல் என ஒன்றை கிளறிவிட்டன‌

ரஷ்யாவிடம் ஏராளமான விமானங்களை வாங்கும்போது வராத ஊழல் ரபேலிடம் மட்டும் வருமாம்.

ரபேலோடு விடவில்லை மாறாக அமெரிக்க லாக்கீன் மார்ட்டின் நிறுவணத்திடம் இருந்து எப் 21 விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்யபட்டாயிற்று

இது மிகபெரும் நவீன விமானம், சுகோய் 30 விட நவீனமானவை

இது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை, அதனால் கனத்த அமைதி

இந்தியா பழைய மிக் ரக விமானங்களை ஒதுக்கும் நேரத்தில் தன்ன்னிடமே விமானம் வாங்க வேண்டும் என்ற ரஷ்ய நம்பிக்கை ஏமாற்றத்தால் முடிந்ததில் அதற்கு கடும் கோபம்

இனி என்னாகும்?

நம்பினால் நம்புங்கள், ரபேல் சர்ச்சை வெடித்தது போல எப் 21 போன்ற இன்னும் பல சர்வதேச ராணுவ‌ இறக்குமதி ஊழல் பெரிதாக வெடிக்கலாம்

அதை சில நாடுகள் ரசிக்கலாம்

எனினும் எப் 16 விமானத்தை விட பன்மடங்கு நவீனமாது எப் 21, இவை அமெரிக்க விமானபடைக்கு அடுத்து இந்தியாவுக்கு மட்டும் கொடுக்கபட்டுள்ளது என்பது வரவேற்கதக்க விஷயம்

இவை அங்கு உதிரிபாகமாக தயாரிக்கபட்டு இங்கு அசெம்பிள் செய்யபடும்

இந்திய விமானபடை நவீனமயனாகின்றது மிக நல்ல விஷயம், எப் 21 என்பது மாபெரும் ஆயுதம்

ஒன்று புரிகின்றதா? ரஷ்ய ஆயுத பிடியில் இருந்து இந்தியா 1990களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக‌ வெளிவருகின்றது இப்பொழுது முழுக்க வருகின்றது

பெரும்பாலும் கப்பல் முதல் ஏவுகனை வரை பழைய சமாச்சாரங்களையே ரஷ்யர்கள் கொடுப்பார்கள், இப்பொழுதுதான் எஸ் 400 என்பதை கொடுத்திருக்கின்றார்கள், அது நிச்சயம் இந்தியாவின் சாதனை , நிர்மலா சீத்தாராமனை அதில் மறக்க முடியாது

மற்றபடி ரஷ்யர்கள் ஒருமாதிரி பழைய விஷயத்தைதான் தருவார்கள், உலக அரசியல் இது

முதல் தடவையாக எப் 21 எனும் மாபெரும் நவீன , மிக பலமான விமானத்தை இந்தியா பெறுகின்றது என்பது பல நாடுகளுக்கு பொறுக்கவில்லை ரஷ்யா உட்பட‌

ஏற்கனவே பனி அள்ளும் இயந்திரத்தை இந்தியாவுக்கு அனுப்பி காசு பார்த்த நாடு ரஷ்யா, அதாவது எங்களிடமிருந்து வாங்கியே தீரவேண்டும் என்ற நிர்பந்தம் அது

1970களில் பனி அள்ளும் இயந்திரத்தை அரக்கோணத்தில் இந்தியா வெறுமனே நிறுத்தியபொழுது அது சர்ச்சையானது, அன்றே ரஷ்ய பிடியிலிருந்து இந்தியா வெளிவரவேண்டுமென்ற குரல்கள் இருந்தன, இந்திய பணம் வீணாக ரஷ்யாவில் கொட்டபடுகின்றது என்ற சர்ச்சை எல்லாம் இருந்தது

பழைய மிக் விமானங்களை அடிக்கடி ரஷ்யாவிடம் கொடுத்து பழுது பார்க்காமல் மொத்தமாக தலைமொழுகலாம் என்ற கோரிக்கையினை பழைய அரசுகள் ஏற்கவில்லை, அது செய்ய வேண்டியதும் கூட‌

இப்பொழுது அது நடந்திருக்கின்றது

செய்தது யாரென்றால் மோடியும், நிர்மலா சீத்தாராமனும் மறைந்த மனோகர் பாரிக்கரும்

இந்தியாவின் மிகபெரும் ராஜதந்திர அதே நேரம் துணிச்சலான வெற்றி இது

காங்கிரஸின் கொள்கையிலிருந்து விலகி தேசத்திற்கு புதுவலிமை கொடுக்கும் திட்டங்களை தைரியமாக செய்யும் இந்த அரசினை வாழ்த்தத்தான் வேண்டும்

உண்மை இதுதான்

எப் 21 என்ற நவீன விமானத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் வெற்றி அடைந்திருக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டை வாழ்த்தியே தீரவேண்டும்

இனி பழைய மிக் விமானங்களுக்கு பதிலாக ரபேலும் சுகோயும் எப் 21 ரகமும் இருக்கும் , ரஷ்யாவுக்கு மிக் பராமரிப்பு என செல்லும் பணமும் மிச்சம்

மிகபெரும் ராஜதந்திர நகர்வு மற்றும் வெற்றி இது, சந்தேகமில்லை தேசத்தின் புதுபாதை இது

அந்த மனோகர் பாரிகரும் இதில் மறக்கமுடியாதவர்

தமிழகத்து இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாராமனின் மகத்தான சாதனை இது

நிஜமாகவே மோடி சவுக்கிட்டார்தான் போல..

நாட்டுக்கு எது தேவையோ அதை சரியாக செய்திருகின்றார்

( இது அரசியலுக்காக அல்ல, உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விஷயத்தினை பற்றி எழுதபட்டது அவ்வளவுதான் விஷயம்..

இந்திய அமெரிக்க ஒப்பந்தம் மிக ரகசியமானது என்பதாலும் அதன் பல விதிமுறைகளும் பலவும் வெளிதெரிந்தால் பெரும் சர்ச்சைகள் உலகளவில் வரலாம் என்பதாலும் இந்திய அரசு இது பற்றி வாய்திறக்க கூடாது என்பது விதி, அதனாலே விஷயம் பரபரப்பாக இல்லை, மவுனிக்கபடுகின்றது)

எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை

இந்தியா தேர்தல் பரபரப்பில் இருந்தாலும் எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை

பாகிஸ்தானின் கப்பல்களை இந்தியா அனுமானித்தால் அவற்றில் பல திசைமாறி நிற்கின்றன, காரணம் எளிது

அதாவது யுத்தம் தொடங்கினால் கராச்சியினை தாக்க செல்லும் இந்திய கப்பல்களை சுற்றி வளைத்து தாக்கும் ஒருவித தந்திரத்துடன் பாகிஸ்தான் தன் கப்பல்களை வேறு வேறு இடங்களில் நிறுத்தியிருகின்றது

பாகிஸ்தானிய விமானங்கள் எல்லைக்கு மிக அருகில் பறக்கின்றன, நேற்று எப்16 ரக விமானங்கள் எல்லைக்கு அருகே வந்து வந்து திரும்பியிருக்கின்றது

இந்திய விமானபடையும் வீரர்களின் விடுமுறையினை ரத்து செய்துவிட்டு எந்த சூழலுக்கும் தயாராய் நிற்கின்றது

ஏதும் சிறு உரசல் நடந்தாலும் நிலமை சிக்கல், தேர்தலும் சிக்கல்

இதனிடையே பாகிஸ்தானின் வடக்கில் உள்ள சர்வதேச தொண்டு நிறுவணம் ஒன்று பாகிஸ்தான் ராணுவம் சுமார் 200 உடல்களை கைபர் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஒப்படைத்தது என்ற செய்தியினை வெளியிட்டிருக்கின்றது

அதை உறுதி செய்யும் விதமாக பாகிஸ்தான் ராணுவமும் இந்தியா தாக்கிய தீவிரவாத முகாமை சீல் வைத்திருக்கின்றது, யாருக்கும் அனுமதி இல்லை

ஆக ஏதோ பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம், இந்தியா வீசியது சுரங்கத்தை அழிக்கும் அதாவது துளையிட்டு உட்புகுந்து வெடிக்கும் வகை என்பதால் கூரையினை துளைத்து உள்ளே வெடித்திருக்கலாம்

ஆனால் என்ன வகை குண்டு என்பதுதான் மர்மம், அதை பற்றி நாமும் சொல்லமுடியாது இந்திய ராணுவமும் சொல்லமுடியாது

கட்டடத்திற்கு அதிக சேதமின்றி ஆட்களை கொல்லும் ரகம் அது

அது துளையிட்ட இடத்தை அடைத்தால் கட்டடத்திற்கு அதிக சேதமிலாதவாறு காட்ட முடியும், பாகிஸ்தான் அதை செய்திருக்கலாம் என்கின்றது தியரி

ஆக இந்திய தாக்குதல் ஏராளமானோரை கொன்றிருகின்றது என்பதும் அந்த கோபத்தில் பாகிஸ்தான் கொதித்து நிற்கின்றது என்பதும் உண்மையாகின்றது

ஆக என்ன முடிவுக்கு வரலாம்?

இரு வாரங்களாகவே இந்த சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது, பாகிஸ்தானுக்குள் சென்று காணாமல் போன‌ இன்னொரு விமானம் பற்றி தகவல் இல்லை

இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலிய பங்கு உண்டு என சில ஊடகங்கள் முணங்கின, சில ஊடகங்கள் அடித்து சொன்னது

விஷயம் கசிந்தது இப்படித்தான்

ஆம் அந்த முகாம்கள் பற்றிய விவரங்கள் இந்தியாவிடமில்லை, அதை கொடுத்த இஸ்ரேல் இன்னொரு உதவியினை கோரியது

அடிக்கும் பொழுது நாங்கள் கைகாட்டும் இடத்தையும் அடிக்க வேண்டும் அதாவது ஜெய்ஸ் இ முகமது இயக்கதின் முகாமினை போல இன்னும் 5 முகாம்களை அடிக்க வேண்டும் என கோரியது

பாகிஸ்தானில் 6 இடங்களில் இந்தியா தாக்கியது இப்படித்தான், ஒரு முகாம்தான் இந்தியாவின் எதிரியே தவிர மீதி 5 பற்றி யாரும் மூச்சுவிடவில்லை

இப்பொழுது அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன, இது கட்டுகதை இந்தியாவிற்கு எதிராக உலக தீவிரவாதிகளை ஒன்று சேர்க்கும் தந்திரம் என ஒரு பிரிவு சொல்கின்றது

ஒரு பிரிவோ இல்லை, தாக்குதல் நடத்த இஸ்ரேலிய விமானிகளே வந்தார்கள், அவர்கள்தான் தாக்கிவிட்டு திரும்பினார்கள், முழுக்க அவர்கள் தொழில் நுட்பமும் , டெய்சி கட்டர் குண்டுகளுமே (அதாவது தரையினை துளைத்து வெடித்து சுரங்கத்தை தகர்க்கும் குண்டுகள்) தாக்குதலுக்கு பயன்பட்டன‌

இந்திய மிராஜ் விமானங்கள் சென்றாலும் 
இஸ்ரேலிய நவீன ரக விமானமான, உலகின் மகா அச்சுறுத்தும் விமானமாக லக்கீன் மார்டின் எப் 35 மூலம் தாக்கியது என்ற செய்தியும் வந்தது

இந்திய விமானங்கள் திரும்பிவிட இஸ்ரேலிய விமானம் என்ன ஆனது என்பதுதான் மர்மம், அது மகா வேக விமானம் என்பதால் அப்படியே ஆப்கன் பக்கம் சென்று அமெரிக்க தளத்தில் இறங்கியதா, இல்லை அங்கிருந்து வந்துதான் தாக்கியதா என்பது பற்றி தகவல் இல்லை, வரவும் வராது

சொல்வது இஸ்ரேலிய பத்திரிகை என்பதுதான் இன்றைய பரபரப்புக்கு காரணம்

அது யூகம் வதந்தி என்றார்கள், இப்பொழுது மறுபடியும் விஷயம் விஸ்வரூபமாகின்றது ஆனால் இருநாடுகளுமே அமைதி

இதற்கு வாய்ப்பு உண்டா?

நிச்சயம் உண்டு, வரலாற்றில் பதில் இருக்கின்றது

1978ல் மொரார்ஜி தேசாய் காலத்திலே பாகிஸ்தான் அணுகுண்டுக்கு தயாரானது

இந்தியா அணுகுண்டு செய்தவுடன் பாகிஸ்தானும் அலறிஅடித்து அணுகுண்டு செய்ததை கண்டறிந்தது

அது இந்திய வரலாற்றில் மாபெரும் சாதனையாக கொண்டாடி இருக்கவேண்டிய நிகழ்வு ஆனால் மொரார்ஜி தேசாயால் அது தடுக்கபட்டது

ஆம் ராவின் மிகபெரிய சாதனை அது

ஓசைபடாமல் ஆப்கன் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த ரா உளவாளிகள் பாகிஸ்தானை அட்டகாசமாக உளவு பார்த்தனர்

பாகிஸ்தானின் கவுட்டா பகுதியில் மர்ம தொழிற்சாலை அமைக்கபடுவதை கவனித்த ரா உளவாளி ஒருவர் அங்கேயே சலூன் கடை அமைத்துவிட்டார்

எப்படியோ பாகிஸ்தானிய அணு விஞ்ஞானிகளுக்கும் பணியாளருக்கும் முடிவெட்டும் வாய்ப்பினை பெற்ற அவர் அந்த முடியினை கடத்தினார்

அந்த முடியில் லேசான கதிர்பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கபட்டது, இந்திய தரப்பு உஷாரானது

இதனிலும் இன்னொரு ரா உளவாளி பாகிஸ்தானின் அணுசக்தி மையத்தில் நுழைந்து அந்த அணுமின் நிலையத்து மாதிரி படத்தினையே அசாத்தியமாக கடத்தினான்

இவை எல்லாம் மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வந்தபொழுது அவரோ ராவினை மூடிவிடும் முடிவிற்கு வந்தார், அதற்கு ஒதுக்கபடும் நிதியினை குறைத்தார்

ரா அலறி கெஞ்சியது, இது பின்னாளில் பெரும் சிக்கலுக்கு இட்டு செல்லும். நீங்கள் பணம் தராவிட்டாலும் பரவாயில்லை வேறு வகையில் பணம் கிடைக்க சில சட்ட விதிகளை மாற்றுங்கள் என கெஞ்சியது

அசைந்து கொடுக்கவில்லை மொரார்ஜி தேசாய். அந்நிய நாட்டு விவகாரம் நமக்கெதற்கு என அவர்போக்கில் இருந்தார்

ராவினை பின் தொடர்ந்த இஸ்ரேலிய மொசாத்திற்கும் விஷயம் புரிந்தது, அவர்களும் அலறினார்கள்

காரணம் அணுகுண்டு தயாரிக்கபோகும் முதல் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான். ஈராக், சிரியா எல்லாம் அணுகுண்டு தயாரிக்காமல் பார்த்துகொண்ட அவர்களுக்கு பாகிஸ்தானையும் கண்காணிக்கும் அவசியம் இருந்தது

எல்லாவற்றிற்கும் மேலாக பாகிஸ்தானின் மிக லேட்டஸ்ட்டான அணுகுண்டை வாங்கி தன் பழமையான அணுகுண்டை கொடுக்கும் சீன அரசியலும் நடந்துகொண்டிருந்தது

அதாவது பாகிஸ்தானை பல நாடுகள் கண்காணித்தன, சில மேஜைக்கு கீழ் பேசின‌

அப்பொழுது ஆண்டுகொண்டிருந்த ஜியா உல்கக்கோ அமெரிக்காவினையே காசுக்காக அலைய வைத்துகொண்டிருந்தார்

இந்தியாவினை சமாளிக்க பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதை கண்டும் காணாமல் இருந்த அமெரிக்காவிற்கு சில விஷயங்களால் அதனை தடுக்கும் அவசியம் வந்தது

இஸ்ரேல் மிக தீவிரமாக இருந்தது, எவ்வளவு தீவிரம் என்றால் அவர்களின் யுத்த பிதாமகன் மோசே தயானே கெஞ்சும் அளவு இறங்கினார்கள்

அன்று பாகிஸ்தான்வரை பறக்கும் யுத்த விமானம் இஸ்ரேலிடம் இல்லை, அதனால் பாகிஸ்தான் அணு உலையினை தாக்க இந்தியா உதவி தேவைபட்டது

ஒரே ஒரு விமானம் தாருங்கள், நாங்கள் பாகிஸ்தான் அணுவுலையினை துவம்சம் செய்துவிடுவோம் என முடிந்தவரை மல்லுகட்டியது இஸ்ரேல்

ஆனால் மொரார்ஜி தேசாய் அசைந்துகொடுக்கவில்லை அத்தோடு விட்டாரா?

இதுவரை நடந்தவை பாகிஸ்தானுக்கு தெரியாது. அடிக்கடி தன்னை பல சக்திகள் தொல்லை செய்வதை தவிர்க்க பாகிஸ்தானில் இந்திய உளவுதுறை செய்த எல்லா விஷயங்களையும் உலகிற்கு சொல்லிவிட்டார் மொரார்ஜி , உளவாளி அடையாளம் உட்பட‌

நன்றி மொராய்ஜி என சுதாரித்த பாகிஸ்தான் அட்டகாசமாக அரசியல் செய்தது.

அத்தோடு தன் அணுவிவகாரங்களை அவசரமாக மறைத்து, இந்திய உளவு வலைப்பின்னலை கண்டறிந்து அனைத்து இந்திய உளவாளிகளையும் கொன்றது பாகிஸ்தான்

இஸ்ரேல் அத்தோடு ஒதுங்கியது

மொரார்ஜி தேசாய்க்கு நிசான் இ பாகிஸ்தான் விருதை வழங்கி நன்றி செலுத்தியது பாகிஸ்தான்

அன்று இஸ்ரேலிய தாக்குதலுக்கு முயற்சி எடுத்தவர் வாஜ்பாய், ஆம் அன்று அவர்தான் வெளியுறவு துறை அமைச்சர்

அன்று ஒதுங்கிய இஸ்ரேல் நேரம் பார்த்து மறுபடியும் களத்தில் இறங்கி அடித்திருக்கலாம்

பாகிஸ்தான் மேலான இந்திய தாக்குதலில் இஸ்ரேலிய பங்கும் இருக்கலாம், மறுக்க முடியாது

ஆக என்ன முடிவுக்கு வரலாம்?

“யோவ் இஸ்ரேலு, ரொம்ப கஷ்டபட்டு நாங்கதான் அடிச்சோம்ணு பெயர் வாங்கி வச்சிருக்கோம்யா, தேர்தல் நேரம்யா, உள்ள புகுந்து கெடுத்துராதய்யா” என்ற் கோரிக்கை டெல்லியில் இருந்து டெல் அவிவுக்கு சென்று கொண்டிருக்கலாம்

செத்தது 300 செல்போனா

செத்தது 300 செல்போனா என வழக்கம் போல சில இம்ரான் பாசறைகள் கிளம்பிவிட்டன‌

தாகுதலுக்கு பின் 30 தீவிரவாதிகளின் செல்போன் இயங்கவிலை என எதற்கு சொன்னார்கள்? விஷயமிருகின்றது

ஒருவரை ரகசியமாக கண்காணிக்கும் பொழுது இன்றைய மகா முக்கியமான விஷயம் செல்போன்கள்

ஒருவர் பயன்படுத்தும் எண் கிடைத்துவிட்டால் மட மடவென்று அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துவிடும் விஞ்ஞான காலமிது

முதலில் இதை பரீசிலித்த நாடு அமெரிக்கா, 1997ல் ஆப்கனில் பின்லேடன் மேல் பரிசீலித்தார்கள்

2001ல் அமெரிக்கா தாக்கபட்டபொழுது பின்லேடனை கொல்லாமல் விட்டதற்காக என்னை மன்னியுங்கள் என கிளிண்டன் மண்டியிட்டு அழுதபொழுது இந்த தாக்குதல் விவரம் உறுதிபடுத்தபட்டது

என்ன மாதிரி விஷயம் இது?

ஒருவரின் போனை கண்காணிப்பார்கள் அவர் பேசும் பொழுது இருப்பிடத்தை அறிவார்கள், சட்டென விமானமோ இல்லை ஏவுகனையோ அந்த இடத்தை குறிவைத்து தாக்கும், மனிதர் காலி

பின்லேடனை குறிவைக்க சில நிமிடம் தாமதமானது, ஆனால் சரியாக அந்த இடத்திற்கு அரபிகடலில் இருந்த கப்பலில் இருந்து ஏவுகனைகளை வீசினார்கள், பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்லேடன் உயிர்தப்பினான்

தொழில்நுட்பத்தை உள்ளங்கையில் வைத்திருந்த பின்லேடனுக்கு உண்மை புரிந்து தூர வீசினான் போனை, அதன் பின் எல்லாம் குதிரை விடு தூது, கழுதை விடு தூது அவன் சாகும் வரை அதுதான் தகவல் தொடர்பு

போனை பின் தொடர்ந்து ஒருவரை போட்டு தள்ளிய சம்பவத்திற்கு ஈழபுலி தமிழ்செல்வன் பெரும் உதாரணம்

ஆம் அவர் லண்டனோடு பேசிகொண்டிருந்தார், லண்டனில் இருந்த உளவாளிகள் கொழும்பிற்கு துரித கதியில் விஷயத்தை கடத்தினர், தமிழ்செல்வன் இருந்த பதுங்கு குழியின் துல்லிய லொக்கேஷன் கண்டறியபட்டது

விளைவு கிபீர் விமானங்கள் அந்த இடத்தை முக்கோண வடிவில் நின்று துல்லியமாக தாக்கின, பதுங்கு குழிகளில் அதிர்வினை ஏற்படுத்தி கொல்லும் வித்தியாசமான குண்டுகள் அவை

தமிழ்செல்வன் காலி, அவர் உடலை கவனித்தால் தெரியும் அது சிதையவில்லை சிதறவில்லை மாறாக அதிவிலே உள்ளுருப்புகள் சிதைந்து காதில் ரத்தம் வடிந்து செத்தார்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இம்மாதிரியான உளவு தகவல் வந்ததை அடுத்து, நன்றாக உறுதி செய்திவிட்டு இந்திய படை அதே பாணியில் நொறுக்கிவிட்டது

பின்லேடன், தமிழ்செல்வன் மேல் தொடுக்கபட்ட அதே தாக்குதல் வரிசை இது

இதனால்தான் 30 செல்போன்கள் இயங்கவில்லை என்ற விஷயம் இப்பொழுது கசிகின்றது

இது நிச்சயம் வெளிதெரிய கூடா தகவல் காரணம் இனி அடுத்த தீவிரவாத குழு உஷாராகிவிடும், ஆனாலும் நம் அரசியல்வாதிகள் இருக்கின்றார்களே…

எனினும் சில உண்மைகளை மறைக்க முடியாது, ஒருவேளை யார் செத்தார் என்ற விவரம் தங்களிடம் இருக்கின்றது என மறைமுகமாக பாகிஸ்தானுக்கு சொல்லலாம்

ஒரு விஷயம் சொல்ல வேண்டும்

லொக்கேஷன் கண்டுபிடித்து அடிப்பது நம் போனில் செய்வது போல ஈஸியானது அல்ல‌

அதற்கு மாபெரும் தொழில்நுட்பம் வேண்டும், மிக பெரிய விஞ்ஞான அறிவு வேண்டும்

இலங்கைக்கு அதை கொடுத்து தமிழ்செல்வனை கொன்றது அந்த மிகபெரிய சக்தி, நிச்சயம் அது இந்தியா அல்ல‌

ஆனால் இப்பொழுது அந்த சக்தி இந்தியாவிற்கும் உதவியிருப்பது நிஜம்

எப்படியோ பாகிஸ்தானில் இந்தியாவின் தாக்குதல் மாபெரும் வெற்றி என்பதற்கான ஆதாரங்கள் இவை

மற்றபடி எதற்கெடுத்தாலும் பூம்பூம் மாடு போல தலையாட்டுபவன் யாரும் சாகவில்லையா? 30 போன் செத்ததா என அவனாக சிரித்துகொண்டிருப்பான்

அவனை எல்லாம் பரிதாபமாக கடந்து செல்வதுதான் நல்லது