அபிநந்தன் எப்படி பிடிபட்டார்

இந்திய தாக்குதலில் யாரும் கொல்லபடவில்லை பத்திரிகையாளருக்கு அந்த இடங்களை காட்ட தயார் என்றது பாகிஸ்தான்

பத்திரிகையாளர்களை தாக்குதல் நடத்தாத ஒரு கிராமத்தை காட்டிவிட்டு இதுதான் இந்தியா தாக்குதல் நடந்ததாக சொல்லும் இடம் என்றிருக்கின்றது

மீடியாக்கள் உஷாராகி வேறு 3 இடங்கள் தாக்கபட்டிருக்கின்றது அங்கு அழைத்து செல்லுங்கள் என சொல்லியிருக்கின்றன‌

இப்பொழுது சீஷோஷ்ண நிலை சரியில்லை இன்னொரு நாள் அழைத்து செல்கின்றோம் என கடும் வெயில் அடிக்கும் காலத்திலும் சிரிக்காமல் சொல்லியிருக்கின்றது பாகிஸ்தான்

நிச்சயம் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லபட்டிருகின்றார்கள் அந்த ஆதாரத்தை துடைக்கும் முயற்சியில் இருக்கின்றது அந்த நாடு

அதை எல்லாம் அபிநந்தனின் கைதில் மறைத்து , அவரை நன்றாக கவனிக்கின்றோம், நாங்கள் பேச வருகின்றொம் நாங்கள் உத்தமர்கள் என்கின்றது பாகிஸ்தான்

அது ஒருபுறம் இருக்கட்டும்

அபிநந்தன் எப்படி பிடிபட்டார் என்பதில் சில விஷயங்கள் வருகின்றன

பாகிஸ்தான் விமானம் தாக்க வந்தவுடன் 6 மிக் 21 ரக விமானங்கள் அனுப்பபட்டிருக்கின்றன‌

அதை கண்டதும் பாகிஸ்தான் விமானங்கள் திரும்பியிருக்கின்றன, ஆயினும் இந்திய விமானங்கள் துரத்தி அடித்திருக்கின்றன‌

அப்பொழுது எல்லையினை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியிருகின்றது இந்தியா

வீழ்த்திவிட்டு திரும்பும்பொழுதுதான் அபிநந்தனின் விமானம் வீழ்த்தபட்டு அவர் கைது செய்யபட்டிருக்கின்றார்

5 மிக் விமானங்கள் பத்திரமாக திரும்பியிருக்கின்றன‌

எப்16 தங்கள் மண்ணிலே வீழ்ந்ததை பொறுக்கமுடியா பாகிஸ்தான் அவமானத்தை மறைக்க என்னவெல்லாமொ சொல்லிகொண்டிருக்கின்றது

இந்திய விமானபடையின் கண்கள் சிவக்கின்றன‌

இந்நிலையில் பலம் வாய்ந்த இந்திய கப்பல்படை தூங்கியது போல் தெரிந்தாலும் உத்தரவு 3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை முற்றுகையிட்டு நொறுக்க கடும் தயாரிப்போடு நிற்கின்றது