அபிநந்தன்

இந்திய பைலட் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்திருக்கின்றது இதன் பிண்ணணி தகவல்கள் ஒன்றும் மகிழ்ச்சி கொடுப்பவை அல்ல‌

விஷயம் பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதில் தொடங்கியிருக்கின்றது, பால்கோடு தாக்குதல் தொடங்கியபின் இந்திய ராணுவம் பயிற்சிகளில் இருந்தது

அப்பொழுது பாகிஸ்தானின் எப் 16 தாக்க வர பதிலுக்கு இந்திய விமானங்கள் எழும்பியிருக்கின்றன, அங்குதான் சிக்கல் இருந்திருக்கின்றது

ஆம் இந்திய ராணுவம் எப் 16ஐ எதிர்க்க பழைய மிக் 21 விமானங்களை அனுப்பியிருக்கின்றது, இதுதான் சிக்கலுக்கு முதல் காரணம்

ஏனென்றால் எப்16 என்பது லேட்டஸ்ட் கார் ரகம் என்றால் மிக் 21 அம்பாஸிடருக்கும் முந்தியரகம் பின் எப்படி சரிவரும்

இருவித தகவல்கள் வருகின்றன‌

அதாவது அவசரத்தில் மிக் 21ஐ இயக்கினார்கள் என்பது ஒரு பக்கமும் இல்லை இல்லை தாக்குதல் விமானங்களை தற்காப்புக்கு இயக்குவதில்லை அதனால் மிக் 21 தவிர வேறு வழி இல்லை என இன்னொரு தரப்பும் சொல்கின்றது

எதுவாக இருந்தாலும் இது அவமானமே

ரபேலை மிக அவசரமாக வாங்கியிருக்க வேண்டும் இந்த மிக் 21ஐ என்றோ தலைமுழுகியிருக்க வேண்டும்

இது நிச்சயம் அரசின் கோளாறு காங்கிரஸ் பாஜக என இருவருக்குமே பங்கு உண்டு

சரி இனி பிடிபட அபிநந்தன் என்னாவார்?

ஒன்றும் ஆகமாட்டார், அவரை உயிரோடு பிடித்திருக்கின்றொம் என வீடியோ சகிதம் காட்டிவிட்டார்கள்

அதனால் அவருக்கு ஆபத்தில்லை, சர்வதேச சட்டபடி அவர் ஒப்படைக்கபட்டே தீரவேண்டும்

எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன , எத்தனையோ வீரர்கள் இருபுறமும் கைதாகி விடுதலையாகியிருக்கின்றார்கள்

ஏன் இதைபோல் ஒரு இந்திய‌ விமானபடை வீரர் பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் உண்டு, அதைத்தான் மணிரத்னம் காற்று வெளியிட என படமாக எடுத்தார்

அப்படி சிறைபிடிப்புகள் எக்காலமும் உண்டு, அதில் விடுதலையும் உண்டு

நிச்சயம் அபிநந்தன் வெளிவருவார் ஆனால் தனக்கு சாதகமான விடுதலையாக அது இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பும்

அதுவும் சண்டை தவிர்க்க விரும்பும் தற்போதைய பாகிஸ்தான் நிச்சயம் விரும்பும்

அதைத்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் விரும்புகின்றார், அபிநந்தன் விவகாரத்தை வைத்து பேசி போரை தவிர்ப்பது அவரின் திட்டம்

எப்படியோ போர் நின்று போகட்டும்

பொறுப்பில்லா தீவிரவாதிகளின் செயலால் இருநாட்டு அப்பாவி மக்களும் ஏன் பாதிக்கபடவேண்டும்?

கொடும்போர் ஓயட்டும் மகிழ்ச்சி திரும்பட்டும்

இந்நேரத்தில் அபிநந்தன் குடும்பத்தினருக்கு ஆறுதலும் உறுதியும் கொடுத்து துணைநிற்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை

அவ்வகையில் இந்தியா அக்குடும்பத்திற்கு துணை நிற்கின்றது

பூட்டோவிற்கு பின் பாகிஸ்தான் கண்ட தனிபெரும் பிரதமர் இம்ரான்கான் , ஓரளவு பக்குவமும் உலக நடப்பும் தெரிந்தவர்

அவரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்று அபிநந்தனை மீட்டுவருவது இத்தேசத்தின் கடமை

இவ்விஷயம் சொல்லவருவது ஒன்றுதான்

இந்த அரசுகள் ராணுவ விவகாரங்களில் மெத்தனமாக இருந்திருப்பது தெரிகின்றது, கழிக்க வேண்டிய மிக் ரக விமானங்களை இன்னும் வைத்திருப்பது கண்டிக்க வேண்டிய ஒன்று

இனியாவது இந்திய விமானபடை பழையன கழிந்து புதியனவற்றில் புகட்டும்

பாழும் அரசியல் ஒழிந்து இனியாவது தகுந்த பலத்தை இந்திய விமானபடை பெறட்டும்