ஆக என்ன முடிவுக்கு வரலாம்?

இரு வாரங்களாகவே இந்த சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது, பாகிஸ்தானுக்குள் சென்று காணாமல் போன‌ இன்னொரு விமானம் பற்றி தகவல் இல்லை

இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலிய பங்கு உண்டு என சில ஊடகங்கள் முணங்கின, சில ஊடகங்கள் அடித்து சொன்னது

விஷயம் கசிந்தது இப்படித்தான்

ஆம் அந்த முகாம்கள் பற்றிய விவரங்கள் இந்தியாவிடமில்லை, அதை கொடுத்த இஸ்ரேல் இன்னொரு உதவியினை கோரியது

அடிக்கும் பொழுது நாங்கள் கைகாட்டும் இடத்தையும் அடிக்க வேண்டும் அதாவது ஜெய்ஸ் இ முகமது இயக்கதின் முகாமினை போல இன்னும் 5 முகாம்களை அடிக்க வேண்டும் என கோரியது

பாகிஸ்தானில் 6 இடங்களில் இந்தியா தாக்கியது இப்படித்தான், ஒரு முகாம்தான் இந்தியாவின் எதிரியே தவிர மீதி 5 பற்றி யாரும் மூச்சுவிடவில்லை

இப்பொழுது அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன, இது கட்டுகதை இந்தியாவிற்கு எதிராக உலக தீவிரவாதிகளை ஒன்று சேர்க்கும் தந்திரம் என ஒரு பிரிவு சொல்கின்றது

ஒரு பிரிவோ இல்லை, தாக்குதல் நடத்த இஸ்ரேலிய விமானிகளே வந்தார்கள், அவர்கள்தான் தாக்கிவிட்டு திரும்பினார்கள், முழுக்க அவர்கள் தொழில் நுட்பமும் , டெய்சி கட்டர் குண்டுகளுமே (அதாவது தரையினை துளைத்து வெடித்து சுரங்கத்தை தகர்க்கும் குண்டுகள்) தாக்குதலுக்கு பயன்பட்டன‌

இந்திய மிராஜ் விமானங்கள் சென்றாலும் 
இஸ்ரேலிய நவீன ரக விமானமான, உலகின் மகா அச்சுறுத்தும் விமானமாக லக்கீன் மார்டின் எப் 35 மூலம் தாக்கியது என்ற செய்தியும் வந்தது

இந்திய விமானங்கள் திரும்பிவிட இஸ்ரேலிய விமானம் என்ன ஆனது என்பதுதான் மர்மம், அது மகா வேக விமானம் என்பதால் அப்படியே ஆப்கன் பக்கம் சென்று அமெரிக்க தளத்தில் இறங்கியதா, இல்லை அங்கிருந்து வந்துதான் தாக்கியதா என்பது பற்றி தகவல் இல்லை, வரவும் வராது

சொல்வது இஸ்ரேலிய பத்திரிகை என்பதுதான் இன்றைய பரபரப்புக்கு காரணம்

அது யூகம் வதந்தி என்றார்கள், இப்பொழுது மறுபடியும் விஷயம் விஸ்வரூபமாகின்றது ஆனால் இருநாடுகளுமே அமைதி

இதற்கு வாய்ப்பு உண்டா?

நிச்சயம் உண்டு, வரலாற்றில் பதில் இருக்கின்றது

1978ல் மொரார்ஜி தேசாய் காலத்திலே பாகிஸ்தான் அணுகுண்டுக்கு தயாரானது

இந்தியா அணுகுண்டு செய்தவுடன் பாகிஸ்தானும் அலறிஅடித்து அணுகுண்டு செய்ததை கண்டறிந்தது

அது இந்திய வரலாற்றில் மாபெரும் சாதனையாக கொண்டாடி இருக்கவேண்டிய நிகழ்வு ஆனால் மொரார்ஜி தேசாயால் அது தடுக்கபட்டது

ஆம் ராவின் மிகபெரிய சாதனை அது

ஓசைபடாமல் ஆப்கன் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த ரா உளவாளிகள் பாகிஸ்தானை அட்டகாசமாக உளவு பார்த்தனர்

பாகிஸ்தானின் கவுட்டா பகுதியில் மர்ம தொழிற்சாலை அமைக்கபடுவதை கவனித்த ரா உளவாளி ஒருவர் அங்கேயே சலூன் கடை அமைத்துவிட்டார்

எப்படியோ பாகிஸ்தானிய அணு விஞ்ஞானிகளுக்கும் பணியாளருக்கும் முடிவெட்டும் வாய்ப்பினை பெற்ற அவர் அந்த முடியினை கடத்தினார்

அந்த முடியில் லேசான கதிர்பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கபட்டது, இந்திய தரப்பு உஷாரானது

இதனிலும் இன்னொரு ரா உளவாளி பாகிஸ்தானின் அணுசக்தி மையத்தில் நுழைந்து அந்த அணுமின் நிலையத்து மாதிரி படத்தினையே அசாத்தியமாக கடத்தினான்

இவை எல்லாம் மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வந்தபொழுது அவரோ ராவினை மூடிவிடும் முடிவிற்கு வந்தார், அதற்கு ஒதுக்கபடும் நிதியினை குறைத்தார்

ரா அலறி கெஞ்சியது, இது பின்னாளில் பெரும் சிக்கலுக்கு இட்டு செல்லும். நீங்கள் பணம் தராவிட்டாலும் பரவாயில்லை வேறு வகையில் பணம் கிடைக்க சில சட்ட விதிகளை மாற்றுங்கள் என கெஞ்சியது

அசைந்து கொடுக்கவில்லை மொரார்ஜி தேசாய். அந்நிய நாட்டு விவகாரம் நமக்கெதற்கு என அவர்போக்கில் இருந்தார்

ராவினை பின் தொடர்ந்த இஸ்ரேலிய மொசாத்திற்கும் விஷயம் புரிந்தது, அவர்களும் அலறினார்கள்

காரணம் அணுகுண்டு தயாரிக்கபோகும் முதல் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான். ஈராக், சிரியா எல்லாம் அணுகுண்டு தயாரிக்காமல் பார்த்துகொண்ட அவர்களுக்கு பாகிஸ்தானையும் கண்காணிக்கும் அவசியம் இருந்தது

எல்லாவற்றிற்கும் மேலாக பாகிஸ்தானின் மிக லேட்டஸ்ட்டான அணுகுண்டை வாங்கி தன் பழமையான அணுகுண்டை கொடுக்கும் சீன அரசியலும் நடந்துகொண்டிருந்தது

அதாவது பாகிஸ்தானை பல நாடுகள் கண்காணித்தன, சில மேஜைக்கு கீழ் பேசின‌

அப்பொழுது ஆண்டுகொண்டிருந்த ஜியா உல்கக்கோ அமெரிக்காவினையே காசுக்காக அலைய வைத்துகொண்டிருந்தார்

இந்தியாவினை சமாளிக்க பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதை கண்டும் காணாமல் இருந்த அமெரிக்காவிற்கு சில விஷயங்களால் அதனை தடுக்கும் அவசியம் வந்தது

இஸ்ரேல் மிக தீவிரமாக இருந்தது, எவ்வளவு தீவிரம் என்றால் அவர்களின் யுத்த பிதாமகன் மோசே தயானே கெஞ்சும் அளவு இறங்கினார்கள்

அன்று பாகிஸ்தான்வரை பறக்கும் யுத்த விமானம் இஸ்ரேலிடம் இல்லை, அதனால் பாகிஸ்தான் அணு உலையினை தாக்க இந்தியா உதவி தேவைபட்டது

ஒரே ஒரு விமானம் தாருங்கள், நாங்கள் பாகிஸ்தான் அணுவுலையினை துவம்சம் செய்துவிடுவோம் என முடிந்தவரை மல்லுகட்டியது இஸ்ரேல்

ஆனால் மொரார்ஜி தேசாய் அசைந்துகொடுக்கவில்லை அத்தோடு விட்டாரா?

இதுவரை நடந்தவை பாகிஸ்தானுக்கு தெரியாது. அடிக்கடி தன்னை பல சக்திகள் தொல்லை செய்வதை தவிர்க்க பாகிஸ்தானில் இந்திய உளவுதுறை செய்த எல்லா விஷயங்களையும் உலகிற்கு சொல்லிவிட்டார் மொரார்ஜி , உளவாளி அடையாளம் உட்பட‌

நன்றி மொராய்ஜி என சுதாரித்த பாகிஸ்தான் அட்டகாசமாக அரசியல் செய்தது.

அத்தோடு தன் அணுவிவகாரங்களை அவசரமாக மறைத்து, இந்திய உளவு வலைப்பின்னலை கண்டறிந்து அனைத்து இந்திய உளவாளிகளையும் கொன்றது பாகிஸ்தான்

இஸ்ரேல் அத்தோடு ஒதுங்கியது

மொரார்ஜி தேசாய்க்கு நிசான் இ பாகிஸ்தான் விருதை வழங்கி நன்றி செலுத்தியது பாகிஸ்தான்

அன்று இஸ்ரேலிய தாக்குதலுக்கு முயற்சி எடுத்தவர் வாஜ்பாய், ஆம் அன்று அவர்தான் வெளியுறவு துறை அமைச்சர்

அன்று ஒதுங்கிய இஸ்ரேல் நேரம் பார்த்து மறுபடியும் களத்தில் இறங்கி அடித்திருக்கலாம்

பாகிஸ்தான் மேலான இந்திய தாக்குதலில் இஸ்ரேலிய பங்கும் இருக்கலாம், மறுக்க முடியாது

ஆக என்ன முடிவுக்கு வரலாம்?

“யோவ் இஸ்ரேலு, ரொம்ப கஷ்டபட்டு நாங்கதான் அடிச்சோம்ணு பெயர் வாங்கி வச்சிருக்கோம்யா, தேர்தல் நேரம்யா, உள்ள புகுந்து கெடுத்துராதய்யா” என்ற் கோரிக்கை டெல்லியில் இருந்து டெல் அவிவுக்கு சென்று கொண்டிருக்கலாம்