இந்திய கடற்படை

இந்தியாவின் படைகளிலே பாகிஸ்தான் வன்மம் வைத்து அலைவது இந்திய கடற்படை, ஆம் வலுவான அப்படையே பாகிஸ்தானை உடைத்துபோட்டு கிழக்கு பாகிஸ்தானை சுதந்திர நாட்டாகிற்று

அதிலிருந்தே இந்திய கடற்படையுடன் தீரா கோபத்தில் போராய் முடிக்க தருணம் பார்க்கின்றது பாகிஸ்தான், ஆனால் இந்திய கப்பல்படை வலுவானதாலும் இன்னும் சில காரணங்களாலும் அது அமைதி

ஆம் பாகிஸ்தான் கடற்பரப்பு மிக குறுகியது இந்திய கப்பல்கள் முற்றுகையிட்டு நொறுக்கினால் சில மணிதுளிகளில் கராச்சியே சாம்பலாகும்

இதனால் சில நீர்மூழ்கிகளை வைத்து இந்தியாவினை பழிவாங்கும் முயற்சியில் அந்நாடு சிலவற்றை வைத்திருக்கின்றது

ஹாஜி கப்பலை தகர்த்த நமக்கு அவைகளை ஒடுக்க தெரியாதா?

இந்திய விமானபடை பற்றி புலம்பிகொண்டிருந்த பாகிஸ்தான் நேற்று இந்திய கடற்படை மேல் புகார் வாசித்திருகின்றது

அதாவது இந்திய நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததாகவும் அதை தான் கண்டதாகவும் ஆனால் உலக அமைதியும் சமாதானமும் தன்னிடமிருந்தே உலகம் முழுக்க சப்ளையாவதால் அது பாதிக்கபட கூடாது என்பதற்காக பக்குவமாக எடுத்து சொல்லி அதை திருப்பி அனுப்பியதாகவும் அது வாசித்தது

கூடவே தான் எடுத்த வீடியோ மற்றும் புகைபடங்களை கொடுத்தது, அதில் இந்திய கொடியுடன் நீர்மூழ்கி தெரிந்தது

இதற்கு பதிலளித்த இந்திய கடற்படை கப்பல் எங்களுடையது ஆனால் எடுத்த இடம் எது? எங்கள் எல்லையில் நின்றிருந்த நீர்மூழ்கி படத்தை எடுத்து வழக்கம் போல் பொய் சொல்கின்றீர்களா? என சொல்லிவிட்டு வந்துவிட்டது

ஆனால் பாகிஸ்தானோ சின்மயியின் மிடூ புகார் போல அதையே ஓயாமல் சொல்லிகொண்டே இருந்தது

இதை கவனித்த இந்தியா நேற்று ஒரு விஷயத்தை பட்டும் படாமலும் சொன்னது, சொன்னவர் இந்திய கடற்படை தளபதி

அவர் என்ன சொன்னார்?

இந்தியாவில் கடல்வழி தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு சிறப்பு பயிற்சிகளை பாகிஸ்தான் வழங்குகின்றது, அதை இந்தியா கண்காணிக்கின்றது, கடும் பாதுகாப்பு பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டிருக்கின்றது

இப்பொழுது பாகிஸ்தான் புகாரையும் இந்திய கடற்படை தளபதி பதிலையும் பொருத்தி பாருங்கள்

நீங்கள் எம் நண்பராக இருந்தால் எளிதில் யூகிப்பீர்கள்

ஆம் ஏதோ ஒரு கடல்தாக்குதல் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டு செய்கின்றது, அதை இந்தியா மோப்பம் பிடித்திருக்கின்றது

இதை உளவு பார்க்க நீர்மூழ்கி கப்பலை அனுப்பியிருக்கின்றது

ஆக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் விரைவில் இந்திய கடற்படையாலும் நடத்தபடலாம் இல்லையா?

அதே நேரம் இந்திய கடற்படை கராச்சியில் இருக்கும் தாவுத் போன்றவர்களை வேட்டையாடும் ஆபத்து உண்டு, இன்னும் பலரை போட்டு தள்ளும் பேராபத்து உண்டு என பாகிஸ்தானும் பலத்த எச்சரிக்கையுடன் இருக்கலாம் அல்லவா?

எல்லாவற்றிற்கும் வாய்பிருக்கின்றது

ஒரு விஷயம் உண்மை, இந்திய விமானபடை, தரைபடை, டாங்கிபடை, ஏவுகனைகளை விடுங்கள்

கட்டளையிட்டால் பாகிஸ்தானை நொறுக்கிதள்ள நம் கடற்படை ஒன்றே போதுமானது என்பதால் அதன் மேல் கொஞ்சம் வன்மத்தோடும் அதிக பயத்தோடும் சுற்றுகின்றது பாகிஸ்தான்

( இப்பொழுதும் இந்த கடற்படை சிங்களன் ராமேஸ்வரம் வீணவரை சுடும்பொழுது என்னாயிற்று என சிலதுகள் வரும்

அங்கு நடப்பது நாடுகளுக்கு இடையேயான சண்டை என்றால் கடற்படை எப்பொழுதோ களமிறங்கியிருக்கும்

அது வேறுமாதிரியான சிக்கல் மற்றும் மர்ம முடிச்சுகளை கொண்டது, பல கொடுக்கல் வாங்கல்கள் அரசுகளுக்கு இடையே இருப்பதாலும், ஒரு சில கடத்தல் புள்ளிகளின் அட்டகாசத்தாலும், இன்னும் பல விஷயங்களாலும் கடற்படை இறங்கவில்லை , ஒதுங்கி நிற்க சொல்லபட்டிருக்கின்றது )