இந்தியா பதிலடி தொடக்கம்

புல்வாமாவில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடக்கின்றது, இந்திய பதிலடி தொடங்கியாயிற்று

சண்டையில் இந்திய வீரர்கள் 4 பேர் சுட்டுகொலை என செய்திகள் வருகின்றன, அப்படியே தீவிரவாதிகளின் கமாண்டரும் கொல்லபட்டிருக்கின்றார்

காஷ்மீரில் இருந்து வரும் சில செய்திகள், அதாவது உலக மீடியாக்களுக்கு கிடைக்க பெறும் செய்திகள் பாஜக கும்பலுக்கு ஆதரவாக இல்லை

காஷ்மீரில் தீவிரவாதம் மோடி ஆட்சியில் ஒடுக்கபட்டுவிட்டது என மார்தட்டவும், காஷ்மீரின் சில பகுதிகள் தீவிரவாதத்தில் இருந்துவிடுபட்டது இது மோடியின் சாதனை என சொல்ல துடியாய் துடித்திருக்கின்றார்கள்

இந்த புலவாமா பகுதி ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் கோட்டையாய் இருந்திருக்கின்றது, 2017 டிசம்பரில் அதன் கமாண்டர் நூர் என்பவரை இந்திய ராணுவம் கொன்றிருகின்றது

அவர் மகா முக்கியமானவர் என்பதால் கொஞ்ச காலம் தீவிரவாதிகள் பின் வாங்கி அமைதி காத்திருக்கின்றார்கள்

ஆனால் விளம்பர அவசியத்திலும் தேர்தல் நெருங்குவதாலும் காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியில் அமைதி என ஏகபட்ட கணக்குகளோடு எதற்கோ அவசரபட்டிருகின்றார்கள்

புலவாமா தீவிரமாதமற்ற பகுதி என அறிவிக்கபடும் நேரம் நெருங்கியும் இருக்கின்றது

ஆனால் பதுங்கிய தீவிரவாதிகள் 2017ல் தங்கள் கமாண்டருக்கு பழிவாங்கும் விதமாகவும், தாங்கள் புலவாமாவில் வலுவாக இருக்கின்றோம் என காட்டவும் மிக துல்லியமாக அடித்திருக்கின்றார்கள்

கூட்டி கழித்து பார்த்தால் வெற்று விளம்பரத்திற்கு கொடுக்கபட்ட விலையாக கூட இருக்கலாம்

ஆம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பதை அடித்த நாடு ஒரு காலமும் சொல்லாது, உக்ரைன் பக்கம் ரஷ்யா, பாலஸ்தீனில் சிரியாவில் இஸ்ரேல், ஆங்காங்கே அமெரிக்கா என எல்லா நாடுகளும் செய்ய கூடிய விஷயம் அது

அடிபட்டவர்கள் சொல்லித்தான் விஷயமே தெரியும் அதுவும் திருடனுக்கு தேள் கொட்டியது போல சில இயக்கமும் நாடுகளும் சொல்லாமலே இருக்கும்

உதாணம் சிரியா

ஆம் எங்கள் நாட்டில் தீவிரவாத முகாம் இருந்தது, அதை எதிரிநாடு அடித்தது என எந்த நாட்டாலும் சொல்லமுடியாது , ராஜதந்திர அடி அது

அடித்த நாடும் சொல்லாது சொன்னால் எல்லை கடந்த அனுமதி இல்லா தாக்குதலாகும்

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை அரசியல் காரணத்திற்காய் வெளி சொன்னது மாபெரும் தவறு, வேர் பாகிஸ்தானில் இருக்க இங்கு கிளை கமாண்டரை கொன்றுவிட்டு தீவிரவாதம் ஒழிந்தது என கொக்கரித்தது இரண்டாம் தவறு

உலகிலே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கினை அதாவது சொல்ல கூடா விஷயங்களை பெரும் சாதனை போல் சொல்லி வாங்கி கட்டி கொண்ட ஒரே அரசு பாஜக அரசுதான்