இலங்கை விசித்திரம்

இந்தியா பதற்றத்தில் இருப்பதில் இலங்கையருக்கு குறிப்பாக ஈழதமிழருக்கு ஏக சந்தோஷம்

ஒரு சிங்கள நண்பரை சந்திக்க முடிந்தது அவர் அமைதியாக சொன்னார்

“தீவிரவாதத்தால் எம் சிறிய நாடும் பாதிக்கபட்டது, ஒன்றும் ரகசியமல்ல எங்கள் நாட்டில் தீவிரவாதத்தினை விதைத்ததே இந்தியாதான்

இலங்கையில் இந்திய தீவிரவாதத்தால் எவ்வளவு வலி, எவ்வளவு அழுகை தெரியுமா? எவ்வளவு இழப்புகள்?

இன்று உங்களுக்கு பாகிஸ்தான்மேல் உள்ள கோபம்தானே எங்களுக்கு உங்கள் மேல் இருந்திருக்கும்?

காஷ்மீரை நீங்கள் விடுவிர்களா? முடியாதல்லவா? எம் நாட்டை மட்டும் நாங்கள் பிரிக்கவிடுவொமா?

பாகிஸ்தானாவது திருப்பி அடிக்கும் ,இந்த சின்னஞ்சிறு நாடு அழுவதை தவிர என்ன செய்யமுடியும்? வரலாற்றில் எங்களுக்கு கொடுமையான நாட்கள் அவை

அதுவும்தீவிரவாதம் ரத்தம் குடிக்க ஆரம்பித்தபின் இந்தியா காவல் இருந்தது, இந்திய தலையீடு இல்லையென்றால் 1987லே புலிகளை நாங்கள் முடித்திருப்போம்

சாத்தானை வளர்த்துவிட்ட இந்தியா அதற்கான விலையினை கொடுத்தபின்பும் இந்தியா திருந்திற்று என்றா நினைக்கின்றீர்கள்?

ராஜிவ் கொலைக்குபின் இந்தியா நினைத்தால் புலிகளை ஒழித்திருக்கலாம் செய்தார்களா? இல்லையே ஏன்?

இலங்கை நாசமாக வேண்டும் என ரகசிய ஆதரவு தந்தார்கள், இறுதியில் சீன அமெரிக்க ஒத்துழைப்புடனேதான் நாங்கள் புலிகளை ஒழித்தோம்

தீவிரவாதம் மிக ஆபத்தானது, அதை தொட கூடாது

பிந்த்ரன் வாலேவினை வளர்ந்த இந்திரா அவன் கும்பலாலும், பிரபாகரனை காத்த ராஜிவ் அவனாலே கொல்லபட்டார்

இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது, மிக சிறிய அண்டை நாடானா எங்களால் இந்தியாவினை எம்மால் பகைக்க முடியாது இனியாவது நல்லது நடக்கட்டும்

ஆனால் ஒன்று கவனித்திர்களா?

எந்த சிங்கள இனத்தை எதிர்த்து எந்த ஈழதமிழருக்காக நீங்கள் வந்தீர்களோ அவர்கள்தான் இன்று உங்கள் எதிரிகள்

ஆனால் இந்தியா வளர்த்துவிட்ட தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கபட்ட சிங்களவர்கள் இந்தியாவின் நண்பர்கள்

இலங்கை விசித்திரம் என்பது இதுதான்”