எப்படி ஓட்டெடுப்பு நடத்த முடியும்?

விகடன் பத்திரிகை உண்மையிலே கோமாளித்தனமான செய்திகளை சொல்ல ஆரம்பித்துவிட்டது

எஸ்.எஸ் வாசன் காலத்தில் அது தேசாபிமானமும் நாட்டுபற்றும் வளர்க்கும் பத்திரிகையாக இருந்தது, திறமையான , தர்மமும் நியாயமும் நாட்டுபற்றும் ஆழ்ந்த அறிவும் கொண்ட பத்திரிகையாளரும் அதில் இருந்தனர்

இப்பொழுது அது தரம்கெட்டு போயிற்று, அதன் ஒளி அணைந்து போயிற்று

காஷ்மீர் சிக்கல் பற்றி கொஞ்சமும் புரிதல் இன்றி அரைவேக்காடாக எவனோ அங்கு ஏன் ஓட்டெடுப்பு நடக்கவில்லை என பெத்தடின் ஊசி போட்டவன் போல எழுதியிருக்கின்றான்

ஜுனாகத்தை தொடர்ந்து காஷ்மீரும் இந்தியாவுடன் இணைந்துவிடும் என அச்சபட்ட பாகிஸ்தான் அங்கு படையெடுத்து பாதியினை பிடித்துவிட்டு நகர மறுக்கின்றது, அங்கு தீவிரவாதத்தை பரப்பி வைத்திருக்கின்றது

பாகிஸ்தான் விமானமும், இந்திய விமானமும் விழுந்தபொழுது தாக்கியது ஆய்தம் தாங்கிய தீவிரவாத கூட்டமே

ஆக ஒரு காஷ்மீர் பாகிஸ்தானிடம் இருக்கும் பொழுது இங்கு நாம் மட்டும் எப்படி ஓட்டெடுப்பு நடத்த முடியும்?

அக்சாய் சின் பகுதி சீனாவிடமும் கொஞ்சம் இருக்கின்றது

இந்தியாவின் மகா முக்கிய நதிகள் முதல் பலவும் சியாச்சின் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமும் அங்கேதான் இருக்கின்றன‌

சும்மா இந்தியா விட்டுவிட முடியாது

பாகிஸ்தானும் சைனாவும் காஷ்மீரில் இருந்து வெளியேறட்டும் அதன் பின் பேசலாம்

செய்வார்களா?

அதை எல்லாம் சொல்லாமல் ஏதோ இந்தியா காஷ்மீரை வலுகட்டாயமாக பிடித்து வாக்கெடுப்பு நடத்தாமல் வைத்திருக்கின்றது என்பது போல விஷம் தோய்ந்த, புத்தியில்லா பதிவினை விகடன் வெளியிட்டிருகின்றது

காஷ்மீர் சிக்கல் தெரியவில்லை, ராணுவ நடைமுறை தெரியவில்லை, ஒரு வீரன் எதிரிநாட்டிடம் சிக்கும்பொழுது பின்பற்றும் சாதாரண நடைமுறை தெரியவில்லை

ஒரு மண்ணும் தெரியா அரைவேக்காடுகளை வைத்து கட்டுரை எழுதி மக்களை குழப்புகின்றது விகடன், தன்னை நம்பும் இந்திய குடிமக்களுக்கு தவறான செய்திகளை தருவது மன்னிக்க முடியாத குற்றம்

இது கண்டிக்கதக்கது

நல்ல அரசு என்றால் விகடனை உடனே சில நாட்களுகு தடை செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்