ஒலிம்பிக் சங்கத்தின் செயல்

பாகிஸ்தானை மிரட்டுகின்றேன் என சில காரியங்களை செய்த இந்தியா இப்பொழுது ஒலிம்பிக் சங்கத்திடம் வாங்கிகட்டி கொண்டிருக்கின்றது

அதாவது பாகிஸ்தானியருக்கு விசா இல்லை என இந்தியா சொல்லிவிட்டது, இங்கோ ஒலிம்பிக் தகுதி சுற்று நடந்துகொண்டிருக்கின்றது

துப்பாக்கி சுடும் போட்டிக்காக இரு பாகிஸ்தானியர் விசா விண்ணபிக்க இந்தியா நிராகரித்தது விஷயம் ஒலிம்பிக் கமிடிக்கு சென்றது அவர்கள் இந்தியாவினை தொடர்பு கொண்டார்கள்

விளையாட்டுதுறை உள்துறையினை கைகாட்ட உள்துறை யாரையோ கைகாட்ட கடைசிவரை விசா கொடுக்கபடவில்லை

அவ்வளவுதான் ஒலிம்பிக் சம்பந்தமான விளையாட்டுக்களில் இந்தியாவிற்கு தற்காலிக தடை என சொல்லிவிட்டது ஒலிம்பிக் கமிட்டி

இனி ஒலிம்பிக் சம்பந்தமான எந்த தடகள போட்டிகளையும் இன்னபிற விளையாட்டுக்களையும் நடத்த முடியாது

இனி இந்தியா மன்னிப்பு கோரி பிறப்பு அடிப்படையில் வீரர்களை விரட்டமாட்டோம் இது பாரதமாதா மேல் சத்தியம் என சொன்னால் மட்டுமே அனுமதிப்பார்கள்

இதுபற்றி மோடி அரசு இன்னும் கவலைபட்டதாக தெரியவில்லை, இந்திய பத்திரிகைகளும் ஒன்றும் சொல்லவில்லை

ஒருவேளை ஒலிம்பிக்கில் நாம் கிழித்த கிழி தெரியாதா? தடை இல்லாவிட்டால் மட்டும் பதக்கம் அள்ளிவிடுவோமா? என இருந்துவிட்டார்களோ?

பாஜகவினரிடம் கேட்டால் பதக்கமே பெறாத ஒலிம்பிக்கில் இருந்து இந்தியாவினை மானமாக வெளியேற்றும் மோடியின் ராஜதந்திரமிது, மோடியா கொக்கா? அவர் தெய்வம் என கன்னத்தில் போட்டுகொள்வார்கள்