கடும் இறுக்குமான கட்டுபாடுகளுக்குள் வரலாம்

காஷ்மீரில் மெக்பூபா உட்பட தலைவர்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது நிச்சயம் முன்பு அராபத்தை இஸ்ரேல் வீட்டு சிறையில் வைத்தற்கு சமமானது

ஆனால் இந்தியாவில் ஒரு குரல் வருகின்றதா என்றால் இல்லை, வராது

நிச்சயம் அந்த மனிதன் இருந்திருந்தால் இப்பொழுது எதை சரியாக எழுதவேண்டுமோ அதை மிக சரியாக முரசொலியில் எழுதியிருப்பான்

காஷ்மீரிய சிங்கம் பருக் அப்துல்லா இப்படி சொன்னார், நேரு அப்படி சொன்னார், இந்திரா இப்படி சொன்னார் என தன் அனுபவங்களை எல்லாம் கொட்டி அட்டகாசமாக எழுதியிருப்பான்

அதில் வரலாறு இருக்கும், அரசியல் இருக்கும், பல உள்விஷயம் இருக்கும் மேற்கொண்டு வருங்கால எச்சரிக்கையும் இருக்கும்

அவர் இல்லா இடம் பட்டவர்த்தனமாக தெரிகின்றது, அதை நிரப்பத்தான் யாருமிலர்

அவரின் நாற்காலியில் ஓடிசென்று அமர்கின்றார்களே தவிர, அவரின் விஸ்வரூப இடத்தை எப்படி நிரப்புவது என யாருக்கும் தெரியவில்லை

கலைஞர் என்றல்ல, ஜெய்பிரகாஷ் நாராயண், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், நம்பூதிரிபாடு இன்னும் பல புகழ்பெற்ற தலைவர்களுக்கு தகுந்த வாரிசாக ஒருவர் கூட உருவாகிவரவில்லை என்பதுதான் சோகம்..

அரசியலில் இது நிச்சயம் மாபெரும் வீழ்ச்சி

அதன் விளைவு இன்று காஷ்மீராக இருக்கலாம், நாளை பாண்டிச்சேரி கூட வலுகட்டாயமாக தமிழகத்தோடு இணைக்கபடலாம்.

எதிரி யாருமில்லா சிங்கம் தனியாக கரிஜித்து அதன் வழியில் செல்லும், தான் விரும்பியதெல்லாம் செய்யும்

அதனை எதிர்க்க இன்னொரு சிங்கம் வேண்டும் எனும் அவசியமில்லை, சிறுத்தைகளோ இல்லை செந்நாய் கூட்டமோ ஒன்றாக கூடிவந்தாலே சிங்கம் பின்வாங்கும்

எதிர்க்க யாருமில்லை எனும்பொழுது அதன் முன்னால் நிற்பவர் யார்? எவனுமில்லை

ஒருதுருவ ஆட்சி என்பது இப்படித்தான் இருக்கும், 1970களில் இந்திரா இப்படி இருந்தபொழுது எதிர்குரல் பலமாக இருந்தது

இன்று அப்படி அல்ல.. அவர்களை எதிர்கொள்ள எந்த வாரிசு தலைவனுக்கும் திறமையுமில்லை தகுதியுமில்லை

இந்தியா அதன் சுதந்திரமான சிறப்பினை இழந்து சில நாடுகளில் இருப்பது போன்ற கடும் இறுக்குமான கட்டுபாடுகளுக்குள் வரலாம்