சர்வதேச அரசியல் விளையாட்டா நதி விவகாரம்?

பாகிஸ்தானை அடித்து துவைத்து வழிக்குகொண்டுவருவதை விட , ஏராளமான உயிர்கள் பலியாகி அவர்கள் அமைதியாவதை விட மிக எளிதான குறுக்குவழி உண்டு

கத்தியின்றி ரத்தமின்றி அவர்களை கதறவைக்க முடியும்

ஆம் பாகிஸ்தானுக்கான ஒரே மற்றும் மிகபெரும் நீர் ஆதாரம் சிந்து நதி. அது ஒரே நதி அல்ல மாறாக சட்லெஜ், பியாஸ், ராவி, ஜீலம் , சிந்து என ஐந்து நதிகள் கலந்து பாகிஸ்தானுக்குள் ஓடும் பிரமாண்ட நதி

அந்நதியாலேதான் இந்நாடு இந்தியாவாகவும் அந்த நதிக்கரை மதம் இந்து மதமாகவும் ஆனது, சிந்து என நாம் சொன்னாலும் அதன் உண்மை பெயர் இந்து அல்லது இண்டஸ்

அதாவது சி எனும் சொல் சில மேற்கத்திய மொழிக்கு இ என மாறும், அப்படி அக்காலத்திலே அது இன்டஸ் நதி ஆயிற்று

சுதந்திரம் வாங்கும் வரை நம்மோடுதான் இருந்தது, பாரதி கூட சிந்து நதியின் மிசை நிலவினிலே என பாடிகொண்டிருந்தார்

அப்படிபட்ட சிந்துநதி பஞ்சாபினை வளமாக்கிய , சீக்கியர்களின் அன்னையான சிந்து நதி சுதந்திர காலத்தில் பஞ்சாப் பிரிக்கபடும் பொழுது பிரிந்தது

சட்லெஜ், பியாஸ் ராவி ஆகிய நதிகள் இந்தியாவிற்கும் சிந்துவும் , செனாப்பும் பாகிஸ்தானுக்கும் என்றும் இதில் சில ஒப்பந்தங்களுடனும் பஞ்சாயத்து செய்யபட்டது

என்னதான் ஒப்பந்தம் என்றாலும் இந்த நதிகள் இமயத்திலிருந்து அதாவது காஷ்மிர் பக்கம் இருந்து வருபவை

இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் காஷ்மீரை பிடித்து வைத்து ஆடுகின்றன என்றால் இந்த மகா முக்கியமான நீர் உற்பத்தி மையங்களுக்காக , அதுவே பிண்ணணி காரணம்

ஆம் பாகிஸ்தான் பாதி காஷ்மீரை பிடித்து வைத்திருப்பது நிச்சயம் நீருக்காக, இந்தியா காஷ்மீரை பிடித்து வைத்திருப்பதில் நீரும் ஒரு காரணம்

மிக சரியாக இந்திய நதிகளுக்கான காஷ்மிர் இந்தியாவிடமும், பாகிஸ்தான் நதிகளுக்கான மூலம் பாகிஸ்தானிடமும் இன்றும் இருக்கின்றது இரண்டும் விட்டு கொடுக்காது

ஆம் புகழ்மிக்க பாசுமதி முதல் உயர்தர கோதுமை முதல் இன்றும் சிந்து நதி தீரத்திலேதான் விளைகின்றது

மகாபாரத காலத்திலிருந்து இன்றைய காலம் வரை அள்ளி கொடுக்கும் பூமி அது

ஒப்பந்தபடி ஒரே பஞ்சாபாக இருந்து பிரிந்ததால் இந்தியா பாகிஸ்தானுக்கு இம்மூன்று நதிகளில் இருந்தும் நீர் கொடுத்தாக வேண்டும்

ஆம் அப்பக்கமும் ஒரு பஞ்சாப் உண்டல்லவா அதனால் இந்த ஏற்பாடு, இரு நாடுகளும் பிரிந்ததால் சர்வதேச சட்டபடி இந்த நீர்பகிர்வு ஒப்பந்தம் ஆனது

எத்தனையோ யுத்தங்கள் இந்தியா பாகிஸ்தானுக்கு வந்தாலும், அப்பொழுதெல்லாம் நாம் பாகிஸ்தானுக்கு நீர் கொடுக்க கூடாது என்ற கூக்குரல் வந்தாலும் இந்தியா தயங்கியது உண்டு

சந்தேகமில்லை, நொடியில் நீரை நிறுத்திவிடலாம் , தொண்டை வறண்டுவிடும் , மீதமிருக்கும் இரு நதிகளால் பாகிஸ்தானால் சமாளிக்க முடியாது

பாகிஸ்தானின் பஞ்சாப் வறண்டால் அவர்களின் நிலை மகா மோசம், விடுமா?

நிச்சயம் பாகிஸ்தான் போர் வரை வரும் அதை கூட சமாளிக்கலாம் , பாகிஸ்தானிய ஏவுகனைகள் இந்திய அணைகளை எல்லாம் தாக்கும், நாம் தமிழர் போன்றவை கூட கன்னட அணைகளுக்கு கண்ணை காட்டலாம், அவனும் மேட்டுருக்கும் மிசைல் அனுப்பி மொத்தமாக உடைப்பான் அது வேறு விஷயம்

விஷயம் சர்வதேச சிக்கலாகும், இந்தியாவில்தான் நீர் பங்கீடு சரியாக கிடையாதே தவிர உலகம் அப்படி அல்ல, ஏன் என்றால் அதில் உலக அரசியல் அட்டகாசமாக நடக்கும்

பாகிஸ்தானுக்கு நீர் இல்லையாம் பலகோடி மக்கள் பாதிக்கபடுகின்றார்களாம், இந்திய அராஜகம் ஒழிக, அவர்கள்மேல் பொருளாதார தடை என கிளம்புவார்கள்

அது அப்படியே பேசி வளர்ந்து இறுதியில் சர்வதேச கண்காணிப்பு குழு அமைப்பு அதற்கொரு பாதுகாப்பு படை அமைப்பு எனும் பெயரில் சர்வதேச படை அங்கு நிறுத்தபடும்

ஏற்கனவே காஷ்மீர் சிக்கலை காட்டி அங்கு தன் படைகளை நிறுத்த அமெரிக்காவுக்கு என்றுமே ஆசை, ஆனால் இந்தியா அதை இதுகாலம் தடுத்து , மூன்றாம் நாட்டுக்கு இங்கு வேலை இல்லை என சொல்லி முறியடித்தே வந்துள்ளது

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுப்பது மிகபயங்கர பின் விளைவுகளை ஏற்படுத்தும்

இதனால்தான் 1972 யுத்தத்தில் 1 லட்சம் வீரர்களை சிறைபிடித்து வங்கத்தை உடைத்த இந்திரா அந்த விவாகரத்தில் இறங்கவில்லை

அன்று பாகிஸ்தானிடம் அணுகுண்டு கிடையாது, நினைத்தால் நாம் தூக்கிபோட்டு மிதித்து காஷ்மீரை விட்டே அவர்களை விரட்டி இருக்கலாம், ஆனால் செய்யவில்லை ஏன்?

நொடியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிடித்து காஷ்மீர் சிக்கலுக்கு முடிவு கட்டியிருக்கலாம் , ஆனால் செய்யவில்லை, செய்தால் விளைவுகள் மகா மோசமாயிருக்கும்

வங்கத்தை உடைப்பது எளிது ஆனால் காஷ்மீர் சிரமம் என்றால் நிலமையினை உணர்ந்து கொள்ளுங்கள்

(அந்த காஷ்மீரை மீட்க முனைந்த ஒரே தலைவர் லால்பகதூர் சாஸ்திரி அவரும் மர்மமாக செத்தார்)

அதுதான் உலக அரசியல்

உலக அரசியலை விடுங்கள், காஷ்மீர் அரசியலில் நீர் பங்கீடு அரசியலே பிராதனம்

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்தால் பெரும் விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதால் இதுகாறும் இந்தியா தயங்கியது

இப்பொழுது நிதின் கட்காரி முதன்முறையாக அந்த நதி நீரில் கைவைப்போம் என்கின்றார்

இது பல சலசலப்புகளை ஏற்படுத்தும்

முதலில் அந்த மாபெரும் ஆறுகளின் நீரை யமுனை பக்கம் திருப்பினால் மழை காலங்களில் பெரும் வெள்ளம் இங்கு வந்து பெரும் அழிவு ஏற்படும்

பாகிஸ்தான் பஞ்சாபிலும் சீக்கியர் உண்டு என்பதாலும் அவர்களின் சொந்தபந்தம் இந்தியாவில் உண்டு என்பதாலும் இந்திய சீக்கியரிடம் இது மனஸ்தாபத்தை ஏற்படுத்தும்

மகா முக்கியமாக எப்பொழுது இந்தியா உலக அரங்கில் சிக்கும் என வாய்பிளந்து நிற்கும் நாடுகள் வரிந்து கட்டி வந்து பொருளாதார தடை வரை செல்லும்

இங்கு மறித்துவிட்டால் பிரம்மபுத்திராவினை சுருட்டிகொண்டு ஓடுவது சைனாவிற்கு வாய்ப்பு, பாகிஸ்தானுக்கு எதிராக நீ செய்வது நியாயம் என்றால் எனக்கு இது நியாயமே என சொல்லிவிட்டு ஒடிவிடும்

நிதின் கட்காரியின் இந்த அறிவிப்பு போர் முதல் பொருளாதார தடைவரை கொண்டுவரலாம்

வெறும் அறிவிப்போடு இது நின்றால் நல்லது, இல்லாவிட்டால் தேசம் நாசமாகும்

பதவி இழக்கும் முன் போரை தொடங்கி நாட்டினை பதற்றத்தில் வைத்து அப்படியே அவசரநிலை மூலம் ஆட்சி தொடர பாஜக திட்டமிடுகின்றதோ எனும் அச்சம் மேலெழுகின்றது

இவர்கள் ஒரு புல்லும் புடுங்க வேண்டாம், காஷ்மீர் தாக்குதலே இவர்கள் ராணுவத்தை பராமரித்த விஷயங்களை சாட்சியாக சொல்கின்றது

அரசுக்கான நாட்கள் எண்ணபடுவதால் இவர்கள் முதலில் கீழிறங்கட்டும், அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டியதை செய்யட்டும்

அதுவரை தேசத்தை ராணுவம் பார்த்துகொள்ளட்டும்

அரசியல் ஆதாயத்திற்காக செய்ய கூடாத வேலைகளை செய்வார்களாகில் அது மன்னிப்பே இல்லா பெரும் பாவமாகும்

இதன் விளைவு ஒவ்வொரு இந்தியனையும் பாதிக்கும்

ஏற்கனவே அரசியலுக்காக பாபர் மசூதி முதல் பல்வேறு கலவரங்களை நடத்தியவர்கள் இவர்கள் என்பதால் இந்த சர்வதேச அரசியல் விளையாட்டான நதி விவகாரங்களில் இவர்கள் கையினை வைக்காமல் அமைதியாக கீழே இறங்குவது நாட்டுக்கு நல்லது