சிதறல்கள்

ஏதோ பாகிஸ்தானுக்குள் சென்று அடிப்பது பாபர் மசூதியினை இடித்த கரசேவை போல எளிதானது என்றும், போட்டோஷாப் வேலைகளை போல சுகமானது என்றும் பல பக்தகோடிகள் நினைத்துகொண்டிருக்கின்றன‌

“மோடி ஆணையிட்டால் பாகிஸ்தானை சிதறடிப்பேன் என்றும், என் மேல் குண்டு கட்டிவிட்டால் பாகிஸ்தானை தூசியாக்குவேன்..” என சொல்லும் கும்பல்கள் அதிகரித்துவிட்டன‌

இவர்களை பாகிஸ்தான் எல்லையில் விட்டுபாருங்கள் , பெருக்கெடுத்து ஓடும் சிந்துநதியினை கண்டாலே ஓடிவந்துவிடுவான் என்பது வேறு விஷயம்

அந்த மலைகளின் உயரத்தை கண்டாலே அழுதுவிடுவான்

ஆளாளுக்கு பாகிஸ்தானில் புகுந்து அடிப்போம், அதை மீட்போம் இதை மீட்போம் என்றேல்லாம் கத்துகின்றார்களே தவிர, யாராவது சீனாவுக்குள் புகுந்து சிவன் வாழும் கைலாயத்தை மீட்போம் என ஒரு வார்த்தை பேசுகின்றார்களா?

பேசமாட்டார்கள்

காரணம் சீனா அப்பக்கம் சென்றால் எப்படி எங்கே மிதிக்கும் என்பது இவர்களுக்கு நன்றாய் தெரியும்

அதனால் கையாலயத்தையும் கைலாய நாதனையும் சீனனிடமே சிறையிருப்பை வைத்துவிட்டு பாகிஸ்தானை நோக்கி கத்தி கொண்டே இருப்பார்கள்

ஆம் பாகிஸ்தானில்தான் இஸ்லாமியர் இருக்கின்றான் சீனாவில் சிவனே இருக்கின்றான்,

சிவனை வைத்தா அரசியல் செய்யமுடியும்? இஸ்லாமியரை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும்

பாவம் கையாலநாதன் , ஒருநாள் சிவசேனையும் பக்த கோடிகளும் சீனனிடமிருந்து தன்னை பக்தகோடிகள் விடுவிக்கும் என பார்த்து கொண்டே இருக்கின்றான்

அவர்களோ கைலாய நாதனை மறந்துவிட்டு பாகிஸ்தானை நோக்கி கத்தி கொண்டே இருக்கின்றார்கள்

******

பாகிஸ்தானை உலக நாடுகள் எல்லாம் கண்டிக்க இரு நாடுகள் மட்டும் தாங்கி பிடிக்கின்றன, ஒன்று சைனா இன்னொன்று சவுதி அரேபியா

ஆம் தாக்குதல் நடந்த அன்று சவுதி செயல் அரசர் பாகிஸ்தானுக்கு புறப்படும் அவசரத்தில் இருந்தார், அவர் தாக்குதலை கண்டித்ததாக தெரியவில்லை அதற்கு காரணம் உண்டு

புல்வாமா தாக்குதலுக்கு சற்று முன்பாக இதே ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஒரு காரியம் செய்தது விஷயம் வில்லங்கமும் தந்திரமுமானது

அதாவது புலவாமா பாணியில் ஈரானை தாக்கி கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட ஈரான் ராணுவத்தை கொன்றிருந்தது, இது அமெரிக்க சவுதி இஸ்ரேலிய தரப்புக்கு உள்ளூர மகிழ்ச்சி கொடுத்திருந்தது

இதனால் அடுத்து இந்தியாவினை அதே ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தாக்கும்பொழுதும் இவைகளிடமிருந்து பெரிய ரியாக்சன் இல்லை, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எதிர்பார்த்தது இதுதான்

இப்பொழுது இந்தியா உலக நாடுகளிடமிருந்து பாகிஸ்தானை தனிமைபடுத்த தொடங்கியுள்ளது, உலக நாடுகள் பாகிஸ்தானில் செய்யும் முதலீடு இந்தியாவில் எப்படி தீவிரவாதத்தை வளர்க்கின்றது என்பதை ஆதாரமாக சொல்கின்றது இந்தியா

இதனால் பல நாடுகள் யோசிக்க தொடங்கிவிட்டன‌

சீனாவோ இந்தியாவில் முதலீடு செய்வதே இதற்காகத்தான் என்பது போல இருக்கின்றது

சவுதி யோசிப்பதாக தெரியவில்லை, ஈரானுக்கு அந்தபக்கம் இருக்கும் பாகிஸ்தானை தன் பரம எதிரியான ஈரானுக்கு எதிராக கொம்பு சீவும் ஆசையிலே இருக்கின்றது

முன்பே பாகிஸ்தானின் அணுகுண்டு விஷயங்களில் சவுதிக்கு பங்கு என்ற ஒப்பந்தம் அவர்களிடம் உண்டு ஆனால் அமெரிக்கா உள்ளே புகுந்து குழப்பியது

இப்பொழுது சவுதியும் பாகிஸ்தானும் குலாவுவதை கண்டால் பல நாடுகளுக்கு சந்தேக கண்கள் விழுகின்றன, அவரும் ஏகபட்ட முதலீடுகளை அறிவிக்கின்றார் அவற்றிற்கான பலன் பாகிஸ்தான் ஈரானுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் எனப்து சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆனால் அந்த தொந்தரவு ஈரானோடு மட்டும் இராது என்பது பாகிஸ்தானை தெரிந்தோருக்கு தெரியும்

அடுத்து சவுதி செயல்அரசர் இந்தியா வருகின்றார், இந்தியா எப்படி ராஜதந்திரமாக அவரை அணுகபோகின்றது என்பது இனிதான் தெரியும்

*******

எந்த நம்பிக்கையில் செல்கின்றார்கள்? எல்லாம் பாகிஸ்தான் மேலான நம்பிக்கையில்.

பாகிஸ்தானின் நம்பிக்கை என்ன?

“ஒருநாளும் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலை கொல்ல கூடாது, காரணம் இந்த கும்பலை அழித்துவிட்டால் இந்தியா உருப்பட்டு வல்லரசாக்கிவிடும்

வெளியிலிருந்து தாக்கும் நம் தீவிரவாதிகளை விட உள்ளே இருந்து நாட்டை அழிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் அழிச்சாட்டிய கும்பல் இந்தியாவிற்கு ஆபத்தானது

இந்தியாவினை அழித்து கொண்டிருக்கும் கும்பலை நாமே அழிப்பாதா? ஒருநாளும் கூடாது

அதனால் பாகிஸ்தான் ஒரு காலமும் தங்களை தொடாது என்ற மிகபெரும் நம்பிக்கையில் இருக்கின்றது இந்த ஆர்.எஸ்.எஸ்..”

********

இப்போது சிக்ஸர் அடிப்பது சித்துதான், அன்னார் காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் மொத்த மக்களையும் நாம் சாடுவது தவறு, இது தீவிரவாத செயல் என பேசியிருந்தார், இம்ரான்கானை தற்காத்து பேசியிருந்தார்

இதனால் அவர்மேல் கட்சி நடவடிக்கை எடுத்தது சில சிக்கலுக்கு ஆளானார்

விடுவாரா சித்து?

இன்று ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சாடுகின்றீர்கள்? ஆனால் காந்தகார் விமான கடத்தலில் அதன் தலைவனை இந்தியாவில் இருந்து விடுவித்தது பாஜக அரசு என கொந்தளித்துவிட்டார்

அது உண்மையும் கூட என்பதால் பாஜக பல்லை கடித்து கொண்டு சித்துவினை முறைத்து கொண்டிருக்கின்றது

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அரசியலிலும் அவர் சிக்ஸர் சித்துதான்

(பாகிஸ்தான் பஞ்சாபிலும் ஏகபட்ட சீக்கியர் உண்டு, அவர்கள் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள உறவினைரை காணவும் தொடர்பு கொள்ளவும் ஏககட்டுபாடுகள் உண்டு

அதெல்லாம் மிகபெரும்வலி, அனுபவித்தாலன்றி தெரியாது

பாகிஸ்தானுடன் அணுக்கமான உறவினை பேணுவதன் மூலம் அந்த வலியினை குறைக்கலாம் என்பது சித்துவின் கொள்கை தவிர வேறோன்றுமில்லை)