நுட்பமான தாக்குதல்

அதிர்ந்து கிடக்கின்றது உலகம், மிக நுட்பமான தாக்குதலாக இது கருதபடுகின்றது

இரவில் செயற்கை கோள் வழிகாட்டலில் லேசர் குண்டுகளை வீசும் நுட்பமும் எதிரிகளின் ரேடாரை முடக்கிவிட்டு அடிப்பதும் என்பது சாதாரண விஷயம் அல்ல.

ஒரு வல்லரசுக்கான பலத்தில் மிக துல்லியமாக அடித்திருகின்றார்கள், இந்த தாக்குதலில் பிரான்ஸின் மிராஜ் என்பது இறக்குமதி என்றாலும் செயற்கைகோள் உள்பட பல விஷயங்கள் நம் சொந்த சரக்கு

எதற்கு அடிக்கடி ராக்கெட் ஏவுகின்றது, கழிவறை இல்லா தேசத்தில் இது தேவையா என பல புரட்சியாளர் கேட்பார்கள், அவர்களுக்கான பதில் இன்று தெரிந்திருக்கின்றது

மகா முக்கிய உளவுதகவலும் கிடைத்திருக்கின்றது என்பதுதான் விஷயம்

மலைகளும் காடுகளும் நிரம்பிய பகுதியில் அதுவும் நள்ளிரவில் நடந்த மிக துல்லிய தாக்குதல் பாகிஸ்தானை நிலை குலைய வைத்திருக்கின்றது

3 இடங்களில் தாக்கி ஜெய்ஸ் இ முகமது இயக்க தலமை முகாமினை நொறுக்கியிருக்கின்றார்கள், ஏராளமானோர் பலியாகியிருக்கலாம்

அவர்களும் புல்வாமா தாக்குதலுக்கு பின் ரேடார் சகிதம் ரெடியாகத்தான் இருந்திருக்கின்றார்கள், அதை முடக்கியதைத்தான் தாங்க முடியவில்லை

அவசர கூட்டம் பிரதமர் இம்ரான்கான் முன்னிலையில் நடைபெற்றுகொண்டிருக்கின்றது, ஏற்கனவே ஏக சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான் மகா குழப்பத்தில் இருக்கின்றது

இதுவரை எத்தனை தாக்குதலை இந்தியா நடத்தினாலும் வல்லரசுகளுக்கு இணையான தரத்தில் முதல் தாக்குதலை நடத்தி அதிரவைத்திருக்கின்றது

அன்றே அதாவது புலிகளும் அமைதிபடையும் மோதும்பொழுதே இப்படி ஒரு தாக்குதலை வன்னிபக்கம் நடத்தி பிரபாகரன் மண்டையில் போட்டிருந்தால் பல விளைவுகள் நடந்திருக்காது

கைகளை கட்டிகொண்டு வெறும் துப்பாக்கி சண்டையால் வந்த வினையே அவ்வீரர்கள் சாவும் ராஜிவ் படுகொலையும்

தீவிரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது என்பதை உலகிற்கு உரக்க சொல்கின்றது இந்தியா

ஜெய்ஹிந்த்