பகுத்தறிவு மூளை

“அமெரிக்கா பாகிஸ்தான்ல அடிச்சி பின்லேடன கொன்னுச்சி

ஆமாண்ணே கண்டிப்பா, கதற கதற சுட்டாங்க‌

சரி பொணத்த ஏண்டா காட்டவே இல்ல?

அண்ணே அதெல்லாம் ராஜதந்திரம், செத்த பின்லேடனா காட்டுவாரு? அதெல்லாம் உண்மைன்னே அமெரிக்கன் பொய் சொல்ல மாட்டான்

இஸ்ரேல பார்த்தியா? அடிக்கடி பாலஸ்தீன் சிரியான்னு தாக்கும்

அது அடியோ அடிண்ணே, அப்படித்தான்னே அடிக்கணும் இஸ்ரேல் அடிக்கிறது சூப்பர்ணே

நீ பார்த்த?

ஹ்ம்ம் பத்திரிகை டிவில வரும்ணே, நம்பணும்னே

இந்த சவுதி ஏமன்ல தாக்குறது

அட ஆமாண்ணே அடிக்கடி அடிப்பாங்க

அப்போ இந்தியா பாகிஸ்தான் பால்கோட்ல அடிச்சது

அட பொய்யிண்ணே

டேய் ஏண்டா?

அட ஆதாரத்த கொடுங்கண்ணே, பாகிஸ்தான் யாரும் சாகலண்ணு சொல்லுது, இம்ரான்கான் சிகப்பா இருக்காரு பொய் சொல்லமாட்டாரு

அடேய் என் நாட்டுல தீவிரவாதி இருந்தான் அவன் செத்துட்டான்னு எந்த நாடுடா சொல்லும்

அண்ணே இந்தியா சொல்லணும்னே ராத்திரி அடிச்சாங்கல ஏன் காலையில போய் படம் பிடிக்கல, எல்லாம் பொய்யுண்ணே

அடேய் உனக்கே அடுக்குமாடா? ஒருத்தன அடிச்சிட்டு அவன போய் படம்பிடிக்க முடியுமாடா? யார்டா உனக்கு இப்படி எல்லாம் யோசிக்க சொல்றது

பகுத்தறிவு மூளைன்னே, எல்லாத்தையும் கேள்வி கேளுன்னு தமிழ்நாட்டு சாக்பீஸ் சொல்லிருக்காரு

ஓகோ

ஆக இந்தியா பாகிஸ்தான்ல அடிக்கல‌

ஆதாரம் கொடுங்கண்ணே, இல்லாட்டி செத்து போன தீவிரவாதிய வந்து சொல்ல சொல்லுங்க‌

ஓஓ பின்லேடன் பாடி காட்டலன்னாலும் நம்புவீங்க‌

டெபனட்லி ஏன்னா அத நம்பித்தான் ஆகணும்

இஸ்ரேல் அள்ளிவிட்டா நம்புவீங்க‌

கண்டிப்பா

ஆனா சொந்தநாடு ஒரு காரியம் செஞ்சா உங்களுக்கு ஆதாரம் வேணும், பாகிஸ்தானுக்கு உங்கள கூட்டிட்டு போய் காட்டணும்

யெஸ் யெஸ்

நாய உன்னெல்லாம் விடவே கூடாதுடா, பாகிஸ்தான்ல 200 பேர கொன்னுருக்கோம், 201வது தீவிரவாதியா சாக போறது நீதாண்டா..”