பாகிஸ்தான் மேல் நடவடிக்கை

பாகிஸ்தானுடனான உரசலில் கிரிக்கெட் விளையாட்டினை நிறுத்துவதை தவிர என்ன செய்துவிட்டார் மோடி என பலர் கேட்கலாம்

உண்மையில் மோடி செய்திருக்கும் காரியங்கள் பல உண்டு

முதலாவது முக்கியத்துவ வர்த்தக கூட்டாளி எனும் நிலைப்பாட்டில் இருந்து பாகிஸ்தானை கழற்றிவிட்டது

பாகிஸ்தானில் இருந்து வந்த பொருட்களுக்கு மிகுந்த வரிவிதித்து அதன் ஏற்றுமதியினை முடக்குவது

உபரி நீரை நிறுத்துவோம் என மிரட்டியது

உண்மையில் இவை பலனளிக்கின்றன, பாகிஸ்தானின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டிருகின்றது

இம்ரான்கான் சமரசத்திற்கு வருகின்றார், மசூத்தின் அலுவலகம் மேல் நடவடிக்கை எடுக்கும் அளவு பாகிஸ்தான் தள்ளபட்டிருக்கின்றது

இந்திய பொருட்கள் நிற்குமானால் சீனாவிடம் முழு அடிமையாகும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளபடும், இப்பொழுது அரை அடிமை

ஆக மோடியின் சில நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பாதிக்கபட்டிருக்கின்றது, மோடி ஒன்றுமே செய்யவில்லை என்பதில் அர்த்தமில்லை