போட்டோஷாப் வேலை ஆரம்பம்

பக்த கோடிகள் வழக்கம் போல தங்கள் போட்டோஷாப் வேலையினை உணர்ச்சி பெருக்கில் தொடங்கிவிட்டார்கள்

பாகிஸ்தானின் பால்கோட்டினை நள்ளிரவில் இந்தியா தாக்கிய படம் இல்லா நிலையில், சிரியாவினை ஐ.எஸ் இயக்கமும் ரஷ்ய படைகளும் பந்தாடிய படத்தை போட்டு இதோ புல்வாமா பழிவாங்கல் என கிளம்பிவிட்டார்கள்

44 இந்திய வீரர்களுக்கு பதிலாக 40 விடுதலைபுலிகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காமெடியே இன்னும் தீரா நிலையில், சிரிய போர் காட்சிகளை இப்பொழுது இந்தியாவின் அடி என சொல்லி திரிகின்றார்கள்

நல்ல வேளையாக ஜப்பானில் வீசபட்ட அணுகுண்டு படம் இவர்களுக்கு கிடைக்கவில்லை

கிடைத்தால் இந்தியா வீசிய 1000 குண்டு இதோ என கிளம்புவார்கள்

நாம் தமிழர் தும்பிகளுக்கு ஈடுகொடுத்து காமெடி செய்ய இந்த கோஷ்டிகளை விட்டால் யாருமே இல்லை

(இப்பொழுதும் கேளுங்கள், தாக்குதல் நடத்தபட்டது அதிகாலை 3.30க்கு பாகிஸ்தானில் 3 மணிக்கே சூரியன் உதிக்குமா? இதெல்லாம் அடுக்குமா? என கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?

மோடி காலை 3 மணிக்கு எழுவார், அவரோடு சூரியனும் வந்துவிடும், இது தெரியாதா? என நம்மை பரிதாபமாக பார்ப்பார்கள்..)

பக்தாளின் நாட்டுபற்று நல்லதுதான், ஆனால் அது போர்ட்டோஷாப்பிலும் போலி வீடியோவிலும் பொங்கி பொங்கி வழிவதுதான் காமெடி

சிரியா தாக்குதல் படங்களை பாகிஸ்தான் என கண்களில் ஒற்றிகொண்டிருக்கும் பக்தாஸ்க்கு திடீரென இந்தியா தாக்கிய வீடியோவும் கிடைத்துவிட்டதாம், பரவசம் தாளவில்லை

சாவுங்கடா.. இந்தியாடா.. மோடிடா என ஒரே வசனம்

அந்த வீடியோ போர் விமானத்தின் வீடியோ அல்ல என தேடிபார்த்தால் அது அமெரிக்கா ஆப்கானில் தங்கள் அப்பாச்சி ஹெலிகாப்டரில் இருந்து தாக்கிய வீடியோவின் சிமுலேஷன் எனும் வீடியோ கேம்

தன் மேம்படுத்தபட்ட ஹாக் ரக ஏவுகனைகளை, அதாவது வளைந்து நெளிந்து இலக்குகளை தாக்கும் ஏவுகனைகளை அங்கு பரிசோதித்து பார்தது அமெரிக்கா,

அதை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்ட விளையாட்டு வீடியோவில் இருப்பது .

அந்த அமெரிக்க விளையாட்டு வீடியோவில் மோடி படத்தை போட்டு இந்த பக்தாள் ஆடும் ஆட்டம் தாளவில்லை

ஒன்றா இரண்டா பக்தாஸின் போர் தாண்டவம்

வீடியோ இணைப்பு இதோ