போர் பதற்றம்

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளரின் கதறல் இது, இப்பொழுதெல்லாம் பொறுப்பானவர்கள் டிவிட்டரில் கதறுவது வழக்கம் என்பதால் அன்னார் கதறியிருக்கின்றார்

அதாவது இந்திய விமானம் வந்ததாம், அவர்களின் பாலக்கோட் பக்கம் வந்த பொழுது விரட்டினார்களாம்

இந்திய விமானபடை தாக்குதல் எதிர்பாராதது எனும்பொழுது எப்படி விரட்டியிருப்பார்கள்? ஆக கதறல் என்பது இதுதான்

உண்மையில் 1971க்கு பின்பு முதன் முறையாக இந்திய விமானபடை எல்லை தாண்டி மிரட்டி இருக்கின்றது, நிச்சயம் சும்மா சென்று வந்திருக்காது

இனி பாகிஸ்தான் விமான எதிர்ப்பு கருவிகளை எல்லையில் நிறுத்தும் விஷயம் போர் பதற்றத்தை ஏற்படுத்தும்

இந்திய விமானபடை எல்லையில் ஏதோ செய்திருக்கின்றது, பொதுவாக எல்லா நாடும் தீவிரவாதிகளிடம் இல்லாத விஷயமான விமானபடையினையே தாக்குதல் நடத்த பயன்படுத்தும்

அப்படி இந்திய விமானபடை தீவிரவாதிகளின் முகாம்களை நொறுக்கி இருக்கலாம்

பிரான்சிடம் இருந்து வாங்கிய மிராஜ் ரக 
ரக விமானங்கள் தாக்கியிருக்கலாம் என்கின்றார்கள், கார்கில் போருக்கு பின் இவ்வகை விமானங்கள் இப்பொழுதுதான் களமிறக்கபடுகின்றது

(மிராஜும் பிரான்சின் டசால்ட் நிறுவண தயாரிப்பு என்பது குறிப்பிடதக்கது..)

ஏதோ நடந்திருப்பதை பாகிஸ்தானும் ஒப்புகொண்டிருக்கின்றது

விவரங்கள் விரைவில் வெளிவரலாம்

சங்கிகளும் பக்த கோடிகளும் பாகிஸ்தான் அழிந்தது, ரத்த வெள்ளத்தில் இம்ரான்கான் என்றெல்லாம் கதையளப்பார்கள் நம்ப வேண்டாம்