மானத்தை வாங்குறிங்க

நேற்று அந்த விசித்திரத்தை உலகம் கண்டது

அந்த தாலிபான்களை அமெரிக்கா வேட்டையாடும் காட்சிகளை மையபடுத்தி வந்த விடியொகேமான விமான‌ சிமுலேஷன் விளையாட்டு பல தமிழ் வீடியோக்களில் ஓடிகொண்டிருந்தது

குறிப்பாக ராஜ்டிவி அதை காட்டி, மாபெரும் செய்தியாக ஒளிபரப்பிகொண்டிருந்தது, தமிழரும் இன்னும் பல இந்தியரும் ஜெய்ஹிந்த் என சொன்னபடியே சாமியாடி பார்த்துகொண்டிருந்தனர்

ஆனால் விஷயமறிந்த உலகத்தினர், என்னாயிற்று தமிழ்டிவிகளுக்கு? ஏன் வீடியோ கேம் ஆடிகொண்டு செய்தி என்கின்றனர்? ஓஓ வீடியோ கேம் விளம்பரம் போல‌ என எண்ணியவர்கள் அது உண்மையான செய்தியாக சொல்லபட தலையில் அடித்து சிரித்தனர்

ஒரு வீடியோ கேமிற்கும் அதுவும் ஆப்கன் மண்கோட்டைக்கும் பாகிஸ்தானிய காடுகளுக்கும் வித்தியாசம் தெரியா …முட்டைகளா தமிழக டிவி செய்தி பிரபலங்கள் என விக்கித்து நின்றனர்

டிவி செய்திவாசிப்பாளர்கள் வேறு அட்டகாசமாக பில்டப் கொடுத்தது உலகை சிரிக்க வைத்தது

பின்பு ஓஹொ நாடகங்களும், சினிமாக்களும் ஒளிபரப்பும் டிவிக்கள்தானே, ராணுவ தாக்குதலையும் அப்படியாக ஒளிபரப்பத்தான் செய்வார்கள் தொழில் அப்படி என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்

தமிழக டிவிக்கள் எப்படிபட்ட அரைகுறைகளிடம் சிக்கி பெரும் அவமானபட்டிருக்கின்றது என்பதற்கு இதுதான் உதாரணம்

மிக முக்கியமான, உலகம் கவனிக்கும் விஷயத்திற்கே இவர்கள் அறிவு இப்படி என்றால் அரசியல் முதல் பல விஷயங்களில் எப்படி எல்லாம் படுமுட்டாளாக இருப்பார்கள்?

இந்த லட்சணத்தில் அரசியல் விவாதம் வேறு..

பாஜக கோஷ்டி போல , நாம் தமிழர் போல அரைகுறை உணர்ச்சிகும்பல்தான் ஏதாவது கிளப்பிவிடும் என்றால் முக்கிய பொறுப்பில் அதுவும் ஊடகத்தின் மகா முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு பொறுப்பு வேண்டாமா?

கொஞ்சமாவது உண்மைதன்மையினை உறுதிபடுத்த வேண்டாமா? பொய் செய்தியினை அதுவும் பிரசித்திபெற்ற ஊடகங்கள் சொல்வது பாவம் மட்டுமல்ல தண்டனைகுரிய குற்றமுமாகும்

மாபெரும் தலைகுனிவான இந்த அவமானத்திற்கு காரணம் வேறு ஒன்றுமல்ல‌

ஆழ படிக்காமல் உலக அறிவும் பெரும் ஞானமும் இல்லாமல் டிவிட்டரும் இன்னும் பல சமூக ஊடகங்களை அவர்கள் பின் தொடர்வதே இந்த சர்வதேச அவமானத்துக்கு காரணம்

நிச்சயம் தகவல் தொடர்பு சட்டபடி இது பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இன்னொரு நாடு என்றால் டிவிக்களை முடக்கியிருப்பார்கள்

விஷயம் அவ்வளவு சீரியசானது

ஆனால் தமிழக டிவிக்கள் எல்லாமே ஆதித்யாடிவி வகையறா என உணர்ந்த மேலிடம் அமைதிகாக்கின்றது

தமிழக மக்கள் கொஞ்சமாவது அறிவுபெற விரும்பினால் உடனே கேபிளை வெட்டிவிட்டு டிஷ் ஆண்டனெக்காளை பிடுங்கி எறிய வேண்டும்

இந்த தமிழக செய்தியினை பாகிஸ்தானும் பார்த்து சிரித்து துன்பத்தில் இன்பம் கண்டிருக்க வாய்ப்பு உண்டு

(நேற்று தமிழக மானத்தை உலகறிய செய்த தமிழக டிவிக்களின் பாகிஸ்தான் தாக்குதல் வீடியோ இதுதான்

இந்த வீடியோ கேம்தான்.. )