மிக துல்லிய தாக்குதல்

இந்திய ராணுவத்தை நாம் தாக்கினோம் என்றது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு

மிக துல்லியமாக அவர்களின் முகாமினை தகர்த்திருக்கின்றது இந்தியா , உலக அரங்கில் பாகிஸ்தான் வாய்பொத்தி நிற்க இதுதான் காரணம்

மிக துல்லியமான தாக்குதல், யாரும் தப்பவில்லை என்கின்றன செய்திகள்

பாகிஸ்தான் மிக அமைதியாக இருக்க இன்னொரு காரணமும் உண்டு, ஆம் உளவு அமைப்பால் அது வளைக்கபட்டிருக்கின்றது

இந்திய உளவுதுறையால் தீவிரவாத முகாம்களின் உளவுதகவலை முழுமையாக பெறமுடியவில்லை இதனால் யோசித்தது இந்தியா

இதுவரை இந்தியா தாக்காத மர்மமும் அதுதான்

ஆனால் பாகிஸ்தானை கண்காணித்த மிகபெரும் சக்தி ஒன்று தன் உளவு தகவலை இந்தியாவிற்கு கொடுத்தது, தைரியமும் கொடுத்தது, விடுமா இந்தியா?

உளவு விமானம், சாட்டிலைட் வழிகாட்டல், மிராஜ் விமானம், பாதுகாப்புக்கு சுகோய் ரகம், நடுவானில் எரிபொருள் நிரப்ப ஒரு விமானம் என பெரும் தயாரிப்போடும் சென்று கொத்தியிருக்கின்றது

போருக்கான தயாரிப்போடே சென்றிருக்கின்றது, பல நாடுகள் ரகசியமாக உதவியிருக்கின்றன, 12 நாட்களாக நடந்த ரகசிய தயாரிப்பு

ஆக பாகிஸ்தானுக்கு எதிரான சக்திகள் ஒன்று கூடியிருக்கின்றன, ஜெய்ஸ் இ முகமது இயக்கம் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளுக்கு எதிரான முகாம்களும் நொறுக்கபட்டுள்ளன‌

பல நாடுகள் சேர்ந்து இந்தியாவின் பிண்ணணியிலிருந்து தங்களை நொறுக்கியிருப்பதை உணர்ந்த பாகிஸ்தன் அமைதி காக்கின்றது

உண்மையில் 3 இடங்களில் இந்தியா தாக்கியது என சொன்னதும் பாகிஸ்தானே, அப்படியா என சிரிப்போடு ஒதுங்கிகொண்டது இந்தியா

உண்மை பாகிஸ்தான் வாயினாலே சொல்ல வைக்கபட்டது இந்தியாவின் வெற்றி

உண்மையில் பல இடங்களில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்கின்றார்கள், பெரும் சக்தி ஒன்று இந்தியா பின்னால் இருந்திருக்கின்றது

200 பேருக்கு மேல் தீவிரவாதிகள் இறந்தது உண்மையே, பாகிஸ்தானால் சொல்லமுடியா உண்மை அது, சொன்னால் சிக்கலாகும்

இன்னும் என்னென்ன இடங்கள் பற்றிய உளவுதகவல் எங்கெல்லாம் இருக்கின்றதோ, யாரை நம்ப? யாரை பகைக்க? என புரியாமல் அஞ்சி குழம்பி நிற்கின்றது அந்த தீவிரவாத தேசம்

அவர்களின் நண்பர்களே அவர்களின் முதுகில் குத்திவிட்டு கள்ள சிரிப்பு சிரிக்கும் நேரமிது

வாய்ப்பினை இந்தியா மிக சரியாக பயன்படுத்திகொண்டது

இந்திய விமானபடையின் மாபெரும் வெற்றியான தாக்குதல் இது, மறுக்கமுடியாது

ஆக ஒரே கல்லில் பலமாங்காய்கள் அடிக்கபட்டிருகின்றது, மோடிக்கும் தேர்தல் நேரத்தில் பல மாங்காய்கள் கிடைத்திருக்கின்றன

நாம் சொல்வது பாமக மாங்காய் அல்ல, அரசியல் மாங்காய்